_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, June 5, 2009

கேள்வினாவே பயம்!

ஆங்ங்... இந்த சாமானியனை மதிச்சு நம்ம சொல்லரசன் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளார்ங்க அதுவும் கேள்வி பதிலுங்க. எனக்கு கேள்வினாவே பயம் அதுவும் 32 கேள்விகள். என்னபன்னுறது சாமானியனுக்கு தெரிஞ்சதை சொல்லுறேங்க கோவப்படாதீங்க ஓகேவா............start >>>>>>>

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் அப்பா, அம்மாவைதான் கேட்கனும், ஆமாங்க என் பெயர் ஆ.ஞானசேகரன் பெயரிலாவது ஞானம் இருக்கடுமே என்று வைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சாமானியனுக்கு ஞானத்தோடு பேரு புடிக்காதா என்ன? ரொம்ப ரொம்ப புடுச்சி இருக்குங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
தெரியலங்க, எப்பொழுதாவது அழுவதுண்டு அது நல்லதுக்கும் இருக்கும் கெட்டதுக்கும் இருக்கும். வருத்தப்படுவது நிறையா............ இருக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காதாம். எனக்கு ரெண்டுமே நல்லா இல்லை ஏன்னு தெரியலங்க. என் கையெழுத்து எனக்கு பிடிக்குமுங்கோ ஏன்னா என் கையெழுத்து எனக்கு மட்டும்தான் புரியும். தலையெழுத்தைப் பற்றி அப்பறம் சொல்லுறேனுங்க.

4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா என்னை அடிக்கடி திட்டி சொல்லுவது, "உனக்கு எப்படி ஆக்கி கொடுப்பதே தெரியல எது பிடிக்குது எது பிடிக்கலனு தெரியலப்பா". இப்பவும் அப்படிதானு நினைக்கின்றேன். காய்கறிகள் அதிகம் பிடிக்கும் அம்புட்டுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்புக்காகவே பதில் சொல்லுரேன் அப்பறம் என்னங்க. உடனே இல்லாட்டியும் ஆழமா வச்சுக்குவேனுங்க.....

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
டிசம்பர் மாதப்பனியில் காலை 6 மணிக்கு ஏரியில் குளிக்க பிடிக்கும். அருவியில் குளிக்க ரொம்ப பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சந்தேகமே வேண்டாம் அவரைதான் கவனிப்பேன். கண்களை பார்த்து பேசினால் வாஞ்சையாக இருப்பதாக தெரியுமாம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது தெரியலங்க, பிடிக்காதது நிறைய இருக்கு முன்கோபம், ஆங்காரம், தன்னை மீறிய நம்பிக்கை,காரியத்தில் காலம் கடத்துதல் இப்படி எல்லாம்........

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது என்மீது உள்ள காதல். பிடிக்காதது என்மீது உள்ள சுயநலமற்ற காதல்...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
எல்லா நேரத்திலயும் இல்லை அந்தந்த சமயங்களின் இவர்கள் இல்லையேனு வருந்துவதுண்டு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இந்த கேள்வியின் அவசியம்தான் புரியல, இருந்தாலும் கரும்பச்சை நிற பேண்ட் மற்றும் கருப்பு டீ'சர்ட்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ம்ம்ம்ம் இந்த கேள்வியை பார்த்து பதிலை தட்டச்சு செய்யுறேன்பா.... என்ன கேள்வி இது?

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அதெல்லாம் முடியாதுங்க எனக்கு இந்த மானிட பிறவிதான் பிடிக்கும். அதுவும் இந்த கருப்பு நிறமே போதும்.

14.பிடித்த மணம்?
குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
1. நல்ல படைப்பாளி, நல்லப் பண்பாளர் நண்பர் பொன். வாசுதேவன் அகநாழிகை அவர்களை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். அவரைப் பற்றி அவரே சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசை.

2.கொங்கு தமிழில் பேசி, சரியான தமிழ் வளர்க்க ஆசைப்படும் நண்பர் பழமைபேசி எழிலாய் பழமை பேச... அவர்களையும் இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். கொங்கு தமிழில் அவரைப் பற்றி அவரே சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசை.

3. ஒரு திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தனது 58 வது வயதிலும் இளமையான எழுத்துகளுடன் என்னை கவர்ந்த ஐயா ஷண்முகப்ரியன் ஷண்முகப்ரியனின் படித்துறை அவர்களையும் இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள எல்லோருக்கும் ஆசை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
20 பதிவு என்றாலும் எல்லாம் சமூக ஆரோக்கியம் உள்ளது.

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கை விளையாட்டு, நான் ரசித்து விளையாடும் விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?
"ரொம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சமுக அக்கறையுள்ள திரைப்படம். அது எந்த ஆண்டு வந்த திரைப்படமுனு கேட்கக்கூடாது.

20.கடைசியாகப் பார்த்த படம்?
"அயன்" இது எந்தவகையான சமுக அக்கறையுள்ளதுன்னு கேட்ககூடாது.

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்தக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
படிப்பதை நிறுத்தி 20 வருடம் ஆகுதுங்க, இப்பதான் கொஞ்சம் பதிவுகளை படிக்கின்றேன். வாழ்க்கை சொல்லிக் கொடுக்கின்றதை படிக்கின்றேன் அம்புட்டுதானுங்க. எப்பொழுதாவது வாரப்பத்திரிக்கை படிப்பதுண்டு.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்பொழுதெல்லாம் நல்ல புகைப்படங்களை பார்கின்றேனோ, அப்பொழுதெல்லாம்........

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்ததும் பிடிக்காததும் சிரிப்புதானுங்க, இடத்திற்கு ஏற்றவாறு மாறும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கபூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இந்த கேள்விக்கு மார்க் வேண்டாம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனிதனுக்கு மனிதனால் கிடைக்கும் மரணம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நாளை என்று நாட்களை கடத்துவது.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
நான் இதுவரை பார்க்காத இடம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்-பாரதிதாசன்
போரில்ல உலகம் காண ஆசை

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பதில் மட்டுதலில் உள்ளது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப்பாடும்
கன இரும்பும் நடனமாடும்.


நான் பாஸாயிட்டேனானு சொல்லுங்கப்பா,......
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


53 comments:

Anbu said...

நீங்க பாஸ்தான் அண்ணா..

Anbu said...

பதில்கள் நன்றாக இருக்கிறது அண்ணா..

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நீங்க பாஸ்தான் அண்ணா.//

அய்ய்யா நான் பாஸ்சாயிட்டேன்

நன்றி அன்பு

அகநாழிகை said...

ஆ.ஞானசேகரன்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
//கண்ணாடி அணிபவரா?
"ரோம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....//
உங்களை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். 40 ஆனவராகத் தெரியவில்லை. மிகவும் இளையராக இருக்கிறீர்கள்.

என்னை அழைத்ததற்கு நன்றி.
இன்று பதிவர் டக்ளஸ் அவர்களும் இதே தொடர்பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

// "அகநாழிகை" said...

ஆ.ஞானசேகரன்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
//கண்ணாடி அணிபவரா?
"ரோம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....//
உங்களை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். 40 ஆனவராகத் தெரியவில்லை. மிகவும் இளையராக இருக்கிறீர்கள்.

என்னை அழைத்ததற்கு நன்றி.
இன்று பதிவர் டக்ளஸ் அவர்களும் இதே தொடர்பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

வணக்கம் வாசு...
//இன்று பதிவர் டக்ளஸ் அவர்களும் இதே தொடர்பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்.//
இருவருக்கும் சேர்த்தே எழுதிவிடுங்கள்

மிக்க நன்றி

நையாண்டி நைனா said...

/*40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்...*/

ஐய்ய... அப்ப நீங்க என்னை மாதிரி யூத்து கிடையாதா???

நையாண்டி நைனா said...

நீங்க "பாசு"தான்...
நீங்க "பாசு"தான்...
நீங்க எங்க எல்லாத்துக்கும் "பாசு"தான்

இந்த கேள்வி பதில் மூலமா உங்களுக்கு கெடச்சாச்சு "மாசு" தான்.

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

நீங்க "பாசு"தான்...
நீங்க "பாசு"தான்...
நீங்க எங்க எல்லாத்துக்கும் "பாசு"தான்

இந்த கேள்வி பதில் மூலமா உங்களுக்கு கெடச்சாச்சு "மாசு" தான்.//

வாங்க நைனா வணக்கம்,
நீங்க யூத்தானாலும் எனக்கு நீங்க நைனாவாச்சே.....

மிக்க நன்றி நண்பரே

நையாண்டி நைனா said...

/*டிசம்பர் மாதப்பனியில் காலை 6 மணிக்கு ஏரியில் குளிக்க பிடிக்கும்.*/

பிடிக்கும் அப்படிங்குரத்தை சொல்லத்தானே இது... ஆனா இப்படி செஞ்சது இல்லைல்லோ???

வேத்தியன் said...

14.பிடித்த மணம்?
குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.//

:-)

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

/*டிசம்பர் மாதப்பனியில் காலை 6 மணிக்கு ஏரியில் குளிக்க பிடிக்கும்.*/

பிடிக்கும் அப்படிங்குரத்தை சொல்லத்தானே இது... ஆனா இப்படி செஞ்சது இல்லைல்லோ???//

உண்மையில் எனக்கு பிடித்த விடயம்... 15 வயது வரை கிராமத்தின் வாழ்க்கைத்தான்.. அதுவரை நான் குளித்தது ஏரிலயும், கேணியிலயும்

நன்றி நைனா

ஆ.ஞானசேகரன் said...

// வேத்தியன் said...

14.பிடித்த மணம்?
குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.//

:-)//

வணக்கம் வேத்தியன்
மிக்க நன்றி

வேத்தியன் said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நாளை என்று நாட்களை கடத்துவது.//

நானும் சேர்ந்துக்கிறேனுங்க...
:-)

வேத்தியன் said...

அந்த 31வது கேள்விக்குரிய பதில் சூப்பர்ங்ண்ணே...
:-)

ஆ.ஞானசேகரன் said...

// வேத்தியன் said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நாளை என்று நாட்களை கடத்துவது.//

நானும் சேர்ந்துக்கிறேனுங்க...
:-)//

நண்பர்கள் வட்டம் பெரியதுதான் வாங்க பார்த்துகொள்ளலாம்....

ஆ.ஞானசேகரன் said...

// வேத்தியன் said...

அந்த 31வது கேள்விக்குரிய பதில் சூப்பர்ங்ண்ணே...
:-)///

நன்றி

நையாண்டி நைனா said...

/*மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப்பாடும்
கன இரும்பும் நடனமாடும்.
*/

மொக்கைய போட்டா மண்டைய பொளக்கும்...

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

/*மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப்பாடும்
கன இரும்பும் நடனமாடும்.
*/

மொக்கைய போட்டா மண்டைய பொளக்கும்...//

ஹிஹிஹிஹி..
மீண்டும் நையாண்டி.....

நையாண்டி நைனா said...

சரி... நண்பா... உங்களை பற்றி நெறைய தெரிஞ்சுகிட்டேன்.
நான் அப்பாலிக்கா வந்து பாக்குறேன்...இன்னைய கோட்டா இங்கே முடிஞ்சு போச்சு...

அடுத்து வேத்தியன் பதிவுலே போய் ஒரு ஆட்டம் போடுறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

சரி... நண்பா... உங்களை பற்றி நெறைய தெரிஞ்சுகிட்டேன்.
நான் அப்பாலிக்கா வந்து பாக்குறேன்...இன்னைய கோட்டா இங்கே முடிஞ்சு போச்சு...

அடுத்து வேத்தியன் பதிவுலே போய் ஒரு ஆட்டம் போடுறேன்.//

நன்றியுடன்
டாட்டா

பனையூரான் said...

//குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்//
நல்லா இருந்தது. மேலும் நன்றிகள் வலைப்பூவை தொடர்பவர் ஆகியமைக்கு. நானும் உங்கள் வலைப்பூவின் தொடர்வோரில் ஒருவன்

ச.பிரேம்குமார் said...

ஆகா, எல்லோருமே இந்தப் பதிவ வளச்சு வளச்சு போடுறாங்கப்பா.... :)

ஆ.ஞானசேகரன் said...

// பனையூரான் said...

//குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்//
நல்லா இருந்தது. மேலும் நன்றிகள் வலைப்பூவை தொடர்பவர் ஆகியமைக்கு. நானும் உங்கள் வலைப்பூவின் தொடர்வோரில் ஒருவன்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// ச.பிரேம்குமார் said...

ஆகா, எல்லோருமே இந்தப் பதிவ வளச்சு வளச்சு போடுறாங்கப்பா.... :)//

வாங்க பிரேம்குமார்

ஆதவா said...

எல்லாமே அருமையான மனம் திறந்த பதில்கள். பெயரைப் போலவே நல்ல ஞானம் (குறிப்பாக சமூகம் குறித்த) இருக்கிறது.

சொல்லரசன் போலவே உங்களுக்கும் சமூகத்தின் மீதுண்டான அக்கறை இருக்கிறது. அது உங்கள் பதில்களிலும் தொனிக்கிறது. மணம் குறித்த பதில் வித்தியாசமாகவும் இருக்கிறது.

புதியவன் said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள்
சில பதில்களில் நகைச்சுவை
இழையோடியிருப்பது பதிவின் சிறப்பு...

புதியவன் said...

//நான் பாஸாயிட்டேனானு சொல்லுங்கப்பா,......//

பாஸாயிட்டீங்க ஞானசேகரன்...வாழ்த்துக்கள்...

ஆ.சுதா said...

நீங்க பாஸாகிட்டீங்க பாஸ....!!!

ரொம்ப அழகா மனதில் உள்ளத எழுதியிருக்கீங்க நண்பரே.
நிரைய பதில்கள் சமுதாய அக்கரையுடன். நல்ல பகிர்வு+பதிவு.

சொல்லரசன் said...

உங்க மணம் பற்றிய கேள்வி அருமை, உங்கமனதையும் அறியமுடிந்தது

சொல்லரசன் said...

//நையாண்டி நைனா said...

/*40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்...*/

// ஐய்ய... அப்ப நீங்க என்னை மாதிரி யூத்து கிடையாதா??? //


சிபிராஜ் நைனாகூட இந்த மாதிரி சொன்னார் அதற்காக அவர் யூத் ஆகிவிடுவாரா? .

Anonymous said...

3.ஆமாங்க சொல்லிகிறாங்க.. நம்மதும் இதே ராசி தான்.....

6. நல்லாவேளை காலை 6 மணி சொன்னீங்க படிச்சதும் எனக்கு குளிருதுப்பா....
8. நமக்கு தகுதியிருந்தால் கர்வம் கூட அழகுதாங்க அடுத்தவரை பாதிக்காத கர்வம்
9.சுய நலமற்ற காதல் பிடிக்காத சேகரா மறுபரிசீலனை பண்ணுங்க...
14. வெகு அழகான பதில்
17. தல எங்கியோ போய்டீங்க....
24.ஹய்யோ நான் சிரிச்சே கொல்றதா என் ஃப்ரண்ஸ் சொல்வாங்களே பாவம் என்ன கஷ்டபட்டாங்களோ....
27. இன்றுவரை நான் PHD பண்ணும் டாபிக்
30.போராசை பெரிய ஆசை....

நீங்க பாஸ் ஆகிட்டீங்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

எல்லாமே அருமையான மனம் திறந்த பதில்கள். பெயரைப் போலவே நல்ல ஞானம் (குறிப்பாக சமூகம் குறித்த) இருக்கிறது.

சொல்லரசன் போலவே உங்களுக்கும் சமூகத்தின் மீதுண்டான அக்கறை இருக்கிறது. அது உங்கள் பதில்களிலும் தொனிக்கிறது. மணம் குறித்த பதில் வித்தியாசமாகவும் இருக்கிறது.//

மிக்க நன்றி ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள்
சில பதில்களில் நகைச்சுவை
இழையோடியிருப்பது பதிவின் சிறப்பு...//

வாங்க புதியவன்

//பாஸாயிட்டீங்க ஞானசேகரன்...வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...

நீங்க பாஸாகிட்டீங்க பாஸ....!!!

ரொம்ப அழகா மனதில் உள்ளத எழுதியிருக்கீங்க நண்பரே.
நிரைய பதில்கள் சமுதாய அக்கரையுடன். நல்ல பகிர்வு+பதிவு.//

வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்
மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

உங்க மணம் பற்றிய கேள்வி அருமை, உங்கமனதையும் அறியமுடிந்தது//

நன்றி சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

//நையாண்டி நைனா said...

/*40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்...*/

// ஐய்ய... அப்ப நீங்க என்னை மாதிரி யூத்து கிடையாதா??? //


சிபிராஜ் நைனாகூட இந்த மாதிரி சொன்னார் அதற்காக அவர் யூத் ஆகிவிடுவாரா? .///


ஹஹஹா...

சிபிராஜ் நைனாவும் நம்ம நைனாவும் ஒரே வயசா? அப்ப நாம யூத்பா

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

3.ஆமாங்க சொல்லிகிறாங்க.. நம்மதும் இதே ராசி தான்.....

6. நல்லாவேளை காலை 6 மணி சொன்னீங்க படிச்சதும் எனக்கு குளிருதுப்பா....
8. நமக்கு தகுதியிருந்தால் கர்வம் கூட அழகுதாங்க அடுத்தவரை பாதிக்காத கர்வம்
9.சுய நலமற்ற காதல் பிடிக்காத சேகரா மறுபரிசீலனை பண்ணுங்க...
14. வெகு அழகான பதில்
17. தல எங்கியோ போய்டீங்க....
24.ஹய்யோ நான் சிரிச்சே கொல்றதா என் ஃப்ரண்ஸ் சொல்வாங்களே பாவம் என்ன கஷ்டபட்டாங்களோ....
27. இன்றுவரை நான் PHD பண்ணும் டாபிக்
30.போராசை பெரிய ஆசை....

நீங்க பாஸ் ஆகிட்டீங்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரி

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிடித்தது என்மீது உள்ள காதல். பிடிக்காதது என்மீது உள்ள சுயநலமற்ற காதல்...//

நண்பா.. வீட்டுல இதை படிப்பாங்கன்னு இப்படி உருகுறீங்களே..நடத்துங்க

//குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.//

கொஞ்ச நாள் டியார் கூட ஏதும் சுத்துனீங்களா..?

சரி சரி.. நோ டென்ஷன்.. நல்ல பதிகள் நண்பா.. வாழ்த்துக்கள்..:-)

பழமைபேசி said...

சங்கிலித் தொடர் இடுகையின் அடுத்த வளையம் நாளை கோர்க்கப்படும், அழைப்புக்கு நன்றி நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

///கார்த்திகைப் பாண்டியன் said...

//பிடித்தது என்மீது உள்ள காதல். பிடிக்காதது என்மீது உள்ள சுயநலமற்ற காதல்...//

நண்பா.. வீட்டுல இதை படிப்பாங்கன்னு இப்படி உருகுறீங்களே..நடத்துங்க

//குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.//

கொஞ்ச நாள் டியார் கூட ஏதும் சுத்துனீங்களா..?

சரி சரி.. நோ டென்ஷன்.. நல்ல பதிகள் நண்பா.. வாழ்த்துக்கள்..:-)///


வாங்க் வாங்க , கார்த்திகைப் பாண்டியன்
i am cool... ஓகேவா
மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

சங்கிலித் தொடர் இடுகையின் அடுத்த வளையம் நாளை கோர்க்கப்படும், அழைப்புக்கு நன்றி நண்பா!//

ம்ம்ம்ம் ஆட்டம் தொடரட்டும்

தமிழ் said...

/என் அப்பா, அம்மாவைதான் கேட்கனும், ஆமாங்க என் பெயர் ஆ.ஞானசேகரன் பெயரிலாவது ஞானம் இருக்கடுமே என்று வைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சாமானியனுக்கு ஞானத்தோடு பேரு புடிக்காதா என்ன? ரொம்ப ரொம்ப புடுச்சி இருக்குங்க./

/"ரொம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....
/

இரசித்தேன்

நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

///திகழ்மிளிர் said...
/என் அப்பா, அம்மாவைதான் கேட்கனும், ஆமாங்க என் பெயர் ஆ.ஞானசேகரன் பெயரிலாவது ஞானம் இருக்கடுமே என்று வைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சாமானியனுக்கு ஞானத்தோடு பேரு புடிக்காதா என்ன? ரொம்ப ரொம்ப புடுச்சி இருக்குங்க./

/"ரொம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....
/

இரசித்தேன்

நன்றி நண்பரே///


வாங்க நண்பா,
மிக்க நன்றி

நசரேயன் said...

நீங்க பாஸ் பிக் பாஸ்(boss)

ஆ.ஞானசேகரன் said...

//நசரேயன் said...
நீங்க பாஸ் பிக் பாஸ்(boss)//

நன்றி நண்பா

முனைவர் இரா.குணசீலன் said...

/27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனிதனுக்கு மனிதனால் கிடைக்கும் மரணம்/

உண்மை தான்....

தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவு பயன்படுவதாக அமைந்தது.

ஆ.ஞானசேகரன் said...

Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

/// /27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனிதனுக்கு மனிதனால் கிடைக்கும் மரணம்/

உண்மை தான்....

தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவு பயன்படுவதாக அமைந்தது.///

வணக்கம்..
மிக்க நன்றி நண்பரே

Muniappan Pakkangal said...

Ithanai kelvikkum bathilaa/Neenga pass.a

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Ithanai kelvikkum bathilaa/Neenga pass.a//

வாங்க முனியப்பன் சார்,.

மிக்க நன்றிங்க

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பதில்கள் நன்று.உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

பதில்கள் நன்று.உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.//

மிக்க நன்றி அம்மா, உங்களின் வருகை மகிழ்ச்சி

priyamudanprabu said...

ஆஹா நீங்களும் மாட்டிகிட்டயளா??

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

ஆஹா நீங்களும் மாட்டிகிட்டயளா??//

மாட்டினாலும் நல்லாதான் இருக்கு நண்பா