" எலே! செல்லம்மா, என்னபுள்ள ஆலு வரதே தெரியாம போர; ராமாயி அக்கா இருக்கானு ஞாபகம் இருக்காப்புள்ள?" என்று ராமாயி அழைத்தாள் செல்லம்மாவை. "இல்லக்கா ராவு ஆச்சியில்ல போயிதான் கஞ்சு ஆக்கனும் அதுனாலதான் அவசரமா போறேன்" என்றாள் செல்லமா. "ங்ங்ங் உன்னதான் அந்த ஆண்டவன் வாழ்கையை பாழாக்கிபுட்டான் நீயும்தான் ஒண்டிக்கட்டையா இருந்து கஷ்டப்படுறத நினைச்சாலே தூங்க முடியல செல்லமா" என்று செல்லம்மாவை பற்றி சொல்லிக்கொண்டாள் ராமாயி அக்கா. செல்லம்மாவை கண்ணாலம் கட்டின பொன்னயையன் ரொம்ப நல்லவன், அது ஆண்டவனுக்கே பொறுக்காமதான் நோவுல அழைச்சுகிட்டான். அன்னையிலேருந்து செல்லம்மா இப்படிதான் ஒத்தாளா வாழ்கையை ஓட்டுரா.
இந்த ஊரிலேயே செல்லம்மாவுக்கு துணையின்னா ராமாயி அக்காதான். ராமாயி அக்கா புருசன் பக்கத்து ஊரு சக்கரை ஆலையில வேலை, ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. " செல்லம்மா நீ ஒரு ஆலுக்கு என்ன ஆக்கப் போர ஒரு வாய் இங்கேயே சாப்புடு புள்ள" என்றாள் ராமாயி. " இல்லக்கா நேத்து வச்ச கருவாடு குழம்பு இருக்கு சோறு மட்டுதான் வைகனும் நான் வரேனக்கா" என்று புறப்பட்டாள் செல்லம்மா. "எப்பவேனாலும் பசினு வந்தா நம்ம ஊடு மாதுரி வந்து சாப்பிட்டு போ செல்லாம்மா" என்றாள் ராமாயி அக்கா.
போக்கும்போதே நினைப்பெல்லாம் ராமாயி அக்காவிற்கு தான் செய்த துரோகத்தை நினைத்தாள் செல்லம்மாள். அவளுக்குனு ஒரே ஆறுதல் ராமாயி அக்காதான், எதானாலும் ராமாயிகிட்டதான் சொல்லி அழுவா. அதுபோலதான் அன்னக்கியும் ராமாயி அக்காவை பார்க்க செல்லம்மாள் ராமாயி வீட்டுக்கு சென்றிருந்தாள் . ராமாயி வீட்டுல இல்ல அவள் புருசன் மட்டுதான் இருந்தான். "அக்கா ... அக்கா "என்று சொல்லியவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் செல்லம்மா. "ராமாயி பக்கத்து தெருவுக்கு போயிருக்கு என்ன வேனும் செல்லமா? " என்றான் ராமாயி புருசன். ராமாயி போலவே இவனும் ரொம்ப நல்ல குணம். "அக்கா இல்லையா? சரி போயிட்டு அப்பறம் வரேன்" சொல்லி புறப்பட்டாள் செல்லம்மா. எது நடக்ககூடாதோ அது அன்னக்கி நடந்துருச்சி, காற்றும் மழையும் அவளை போக விடாமல் தடுத்துவிட்டது. கண்ணாலம் ஆயி ஒரு மாசம் மட்டுமே புருசனோடு கிடைச்ச ஒன்னு இப்ப கிடைச்சதும் வேனானு சொல்ல முடியல. ராமாயி புருசனும் வேனும்னு செய்யல எல்லாம் முடிஞ்சிருச்சி. அதுக்கப்பறம் எப்பல்லாம் தனியா பாக்குரோமோ அப்பல்லாம் அது நடந்துருது. அதுக்காக அவள் அந்த சந்தர்ப்பம் எதிர்ப்பார்ப்பவளாகவே ஆக்கிவிட்டது. அந்த சம்பவம் அவளை ரொம்பவும் வாட்டியது. ராமாயி அக்காவை பார்த்தாளே, அவள் செய்யுற துரோகம்தான் அவளை வாட்டுகின்றது. அவளால் அதை தடுக்கவும் மனம் இல்லை. எல்லாத்தையும் மனதில் ஓட்டியவாரே அவள் வீட்டுக்கு சென்றாள் செல்லாமாள்.
செல்லம்மா வீட்டுக்கு முன் யாரோ நிற்பது தெரிச்சது. "யாரூ தபால் கார அண்ணனா? என்ன இந்த நேரத்துல" என்று சொல்லியவாறு வந்தாள் செல்லம்மாள். " காலையில வேலைக்கு போயிட்டியாக்கும் உனக்கு உங்க அண்ணனுகிட்டேருந்து கடுதாசி வந்துருக்கு ஏதும் அவசரம் இருக்கும் என்றுதான் கொடுத்துட்டு போலாமுனு வந்தேன் செல்லம்மா" என்றார் தபால் காரர். "நீங்களே படித்து சொல்லுங்க அண்ணே" என்று சொல்லி ஆர்வமாய் கேட்டாள்.
"செல்லம்மாவிற்கு அண்ணன் ரங்கன் எழுதியது,
செல்லம்மா நீ நல்ல இருக்கியா? நாங்கள் அனைவரும் நல்லா இருக்கோம். அப்பாதான் உடம்புக்கு முடியாம ரொம்பவும் கஷ்டப்படுது. அவருக்கு துணையா இருக்கதான் ஒரு ஆல் இல்லை. வயல் வேலைகள் அதிகமாக இருக்கு என்ன பன்னுரதுனு தெரியல. நீயும்தான் எவ்வளவு நாளைக்கிதான் தனி ஆளா இருந்து கஷ்டப்படுவ. நடந்தது நடந்து போச்சி நீ இங்கு வந்தா அப்பாவிற்கு உதவியா இருக்கும். அப்பா எப்பவும் உன் நினைப்புளதான் இருக்கார். உடனே நீ வந்தாதான் நல்லா இருக்கும். வீட்டுல இருக்க எல்லா சாமனையும் ராமாயி அக்காகிட்ட கொடுத்திட்டு நீ உடனே இங்கே வந்திரு. நீ சாவுர வரைக்கும் நானும் உதவியா இருப்பேன்.
உடன் வரவேண்டும்
ரங்கன்."
என்று தபால்காரர் படித்தவுடன் செல்லம்மாவிற்கு கண்களில் தண்ணீர் சொட்டியது. தபால் காரர் கொடுத்த தபாலை வாங்கி முந்தானையில் வைத்து கொண்டு, நல்ல முடிவு எடுத்தவளாக வீட்டிற்குள் சென்றாள் செல்லம்மாள்.........
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி
என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Sunday, June 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
அதே வாஞ்சையோடு வாழ்த்துகள்!
//புன்படாமல்//
இதென்னங்க அநியாயம்? புன்னகைக்க கூடாதா என்ன?
//பழமைபேசி said...
அதே வாஞ்சையோடு வாழ்த்துகள்!//
நன்றி பழம....
////புன்படாமல்//
இதென்னங்க அநியாயம்? புன்னகைக்க கூடாதா என்ன?//
ஆங்ங்... "ண்"
பிரச்சனையில் புண்ணாக்கிவிட்டேன் புன்னகையை..
மாற்றிவிட்டேன் நண்பா
வாழ்த்துகள் :-) இதோ படித்து விட்டு வருகிறேன் நண்பா
// Suresh said...
வாழ்த்துகள் :-) இதோ படித்து விட்டு வருகிறேன் நண்பா//
காலை வணக்கம் நண்பா
நண்பரும் கதை எழுதியாச்சா!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,
பிறகு வந்து படித்து விட்டு கதைபற்றி சொல்லுகின்றேன்.
// ஆ.முத்துராமலிங்கம் said...
நண்பரும் கதை எழுதியாச்சா!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,
பிறகு வந்து படித்து விட்டு கதைபற்றி சொல்லுகின்றேன்//
வணக்கம் நண்பா.. பொருமையா வந்து சொல்லுங்கள்
great dear. kalakkunga
// தமிழ்நெஞ்சம் said...
great dear. kalakkunga//
மிக்க நன்றி நண்பா
//வீட்டுல இருக்க எல்லா சாமனையும் ராமாயி அக்காகிட்ட கொடுத்திட்டு நீ உடனே இங்கே வந்திரு.//
என்ன தல இருக்கப் போகுது. ஒரு தட்டு, ஒரு குடம், ஒரு சட்டி, ஒரு சொம்பு
இதெ தூக்கிட்டேபோயிடலாம்.
ஏழ்மையின் கோரம் என்றும் கொடுமையானது தல.,
/// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//வீட்டுல இருக்க எல்லா சாமனையும் ராமாயி அக்காகிட்ட கொடுத்திட்டு நீ உடனே இங்கே வந்திரு.//
என்ன தல இருக்கப் போகுது. ஒரு தட்டு, ஒரு குடம், ஒரு சட்டி, ஒரு சொம்பு
இதெ தூக்கிட்டேபோயிடலாம்.
ஏழ்மையின் கோரம் என்றும் கொடுமையானது தல.,//
இருப்பது ஒரு தட்டு, ஒரு குடம், ஒரு சட்டி, ஒரு சொம்பு என்றாலும் எதுவும் எடுத்து வரவேண்டாம் நீ மட்டும் வந்தா போதும் என்ற அண்ணனின் பாசத்தை சொல்லுகின்றது நண்பா...
மிக்க நன்றி நண்பா...
வாழ்த்துகள்
// திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்//
மிக்க நன்றி திகழ்மிளிர்
எளிமை.அருமை.வெற்றி பெற வாழ்த்துகள்,ஞானசேகரன்.
அருமையான சிறு கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்
//ஷண்முகப்ரியன் said...
எளிமை.அருமை.வெற்றி பெற வாழ்த்துகள்,ஞானசேகரன்.//
நன்றி ஷண்முகப்ரியன் சார்...
//Suresh Kumar said...
அருமையான சிறு கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சுரேஷ் குமார்..
வாழ்த்துக்கள் சேகர் வெற்றி பெற....
// தமிழரசி said...
வாழ்த்துக்கள் சேகர் வெற்றி பெற....//
மிக்க நன்றி தோழி
எளிமையான கதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே.. :-)
// கார்த்திகைப் பாண்டியன் said...
எளிமையான கதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே.. :-)//
வாங்க கார்திகைப் பாண்டியன், நன்றி நண்பா...
congrats to win in the competition
நல்லாருக்கண்ணே...
// வினோத்குமார் said...
congrats to win in the competition//
நன்றி வினோத்குமார்
// வேத்தியன் said...
நல்லாருக்கண்ணே...//
வணக்கம் வேத்தியன்
மிக்க நன்றி
நண்பரே ..
ஆற அமர படித்து வந்து கருத்து சொல்றேன் ..
// குறை ஒன்றும் இல்லை !!! said...
நண்பரே ..
ஆற அமர படித்து வந்து கருத்து சொல்றேன் ..//
நன்றி நண்பா...
உங்களின் மேலான கருத்தை எதிர்ப்பார்க்கின்றேன்
(வைப்)பாட்டி கதை !
:)
இன்னும் கொஞ்சம் உரையாடல்களைச் சேர்த்து இருக்கலாம், நல்லா வட்டார வழக்கு எழுதுறிங்க. கொஞ்சம் கொஞ்சம் சறுக்குது. உதாரணத்துக்கு,
"எப்பவேனாலும் பசினு வந்தா நம்ம ஊடு மாதுரி சாப்பிட்டு போ செல்லாம்மா" என்றாள் ராமாயி அக்கா.
- இது திடிரென்று சொல்லுவது போல் எழுதப்பட்டு இருக்கு. ஏற்கனவே பழகியவர்கள் என்றோ ஒரு நாள் இதைச் சொல்லி இருப்பாங்க, அல்லது அதைச் சொல்லத் தேவையும் இருக்காது.
நல்ல முயற்சி ! பாராட்டுகள் !
// கோவி.கண்ணன் said...
(வைப்)பாட்டி கதை !
:)
இன்னும் கொஞ்சம் உரையாடல்களைச் சேர்த்து இருக்கலாம், நல்லா வட்டார வழக்கு எழுதுறிங்க. கொஞ்சம் கொஞ்சம் சறுக்குது. உதாரணத்துக்கு,
"எப்பவேனாலும் பசினு வந்தா நம்ம ஊடு மாதுரி சாப்பிட்டு போ செல்லாம்மா" என்றாள் ராமாயி அக்கா.
- இது திடிரென்று சொல்லுவது போல் எழுதப்பட்டு இருக்கு. ஏற்கனவே பழகியவர்கள் என்றோ ஒரு நாள் இதைச் சொல்லி இருப்பாங்க, அல்லது அதைச் சொல்லத் தேவையும் இருக்காது.
நல்ல முயற்சி ! பாராட்டுகள் !//
நன்றி கண்ணன்
முதல் கதை சறுக்கல் எனக்கே தெரிகின்றது. வரும் கதைகளில் தவிற்க பார்க்கின்றேன்....
இது யதார்த்த கதை அண்ணே...
நல்லா இருக்கு அண்ணே.
வட்டார மொழியில் யதார்த்தமான கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஞானசேகரன்...
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.
Top Tamil Blogs
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்கள்
நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.
வந்தேன் மீண்டும்!!
நல்லா இருக்கு ஞானசேகரன்.
எளியவகையில் சுருக்கமா சிறப்பா எழுதி இருக்கீங்க நண்பரே
மீண்டும் ஒரு வாழ்த்து!!!
Wishes Gnanaseharan.
// நையாண்டி நைனா said...
இது யதார்த்த கதை அண்ணே...
நல்லா இருக்கு அண்ணே.//
நன்றி நையாண்டி நைனா.
// புதியவன் said...
வட்டார மொழியில் யதார்த்தமான கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஞானசேகரன்...//
மிக்க நன்றி புதியவன்
//ஆ.முத்துராமலிங்கம் said...
வந்தேன் மீண்டும்!!
நல்லா இருக்கு ஞானசேகரன்.
எளியவகையில் சுருக்கமா சிறப்பா எழுதி இருக்கீங்க நண்பரே
மீண்டும் ஒரு வாழ்த்து!!!//
நன்றி நண்பா
// Muniappan Pakkangal said...
Wishes Gnanaseharan.//
மிக்க நன்றி ஐயா
// தமிழர்ஸ் - Tamilers said...
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.
Top Tamil Blogs //
Thanks
நண்பரும் களத்தில குதிச்சிட்டாரா... மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் தோழரே..
//" உழவன் " " Uzhavan " said...
நண்பரும் களத்தில குதிச்சிட்டாரா... மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் தோழரே..//
Thanks Uzhavan
வட்டர வழக்கில் எழத்து நடை நன்றாக இருக்கிறது,கோவி அவர்களின் கருத்தை மனதில் கொள்ளவும்.
//சொல்லரசன் said...
வட்டர வழக்கில் எழத்து நடை நன்றாக இருக்கிறது,கோவி அவர்களின் கருத்தை மனதில் கொள்ளவும்.//
வாங்க சொல்லரசன்
மிக்க நன்றிங்க
என்னங்க ஞானசேகரன் .. ஏகப்பட்ட வாழ்த்துக்கள் !! என்னோடதையும் சே(ஏ)த்துக்கோங்க ...
//குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னங்க ஞானசேகரன் .. ஏகப்பட்ட வாழ்த்துக்கள் !! என்னோடதையும் சே(ஏ)த்துக்கோங்க ...//
வாங்க நண்பா,
ரொம்ப நன்றிங்க
//நசரேயன் said...
நல்லா இருக்கு//
மிக்க நன்றி நண்பா
கதை நல்லா இருக்கு நண்பரே எளிமையாக..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
// vinoth gowtham said...
கதை நல்லா இருக்கு நண்பரே எளிமையாக..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பா
வாழ்த்துகள். அழகான கதை.
எளிமையாக கதை நல்லா இருக்கு நண்பா ..
//உமா said...
வாழ்த்துகள். அழகான கதை.//
வாங்க உமா, மிக்க நன்றிங்க.. என்ன நீண்ட இடைவெளி?
// கடையம் ஆனந்த் said...
எளிமையாக கதை நல்லா இருக்கு நண்பா ..//
மிக்க நன்றி நண்பா...
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே
// வலசு - வேலணை said...
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே//
இதயம்கனிந்த நன்றிகள் நண்பா
Post a Comment