காசுகேத்த கல்வியாம்!..
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் முக்கியமாக கல்வியும் மருத்துவமும் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயதுவரை கல்வியை தரமாகவும் இலவசமாகவும் கொடுக்கவேண்டும் என்பது இந்திய அரசின் கடமை என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் இன்றைய நிலைமை பாலர் கல்விக்கும், ஆரம்பக்கல்விக்குமே பெரும் செலவு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றொம்.
நாட்டில் எல்லொருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கைக்கொடுக்காததால். அன்றைய பிரதமர் ஜவர்கலால் நேரு தொண்டு நிர்வணங்களுக்கு அழைப்பு விடுத்தார். நேரு இட்ட அழைப்புக்கு முதலில் செவிக்கொடுத்தது கிருஸ்துவ ஸ்தாபணம். அவ்வாறு கிடைத்த அழைப்பின் படி இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். தமிழ் நாட்டை பொருத்தவரை காமராஜர் காலத்தில்தான் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது. மேலும் இலவச மதிய உணவுத்திட்டமும் இருந்தது. இப்படி இலவசமாக கிடைத்த கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை டாக்டர் MG ராமச்சத்திரனையே சாரும். இதற்கு பின் வந்த அரசுகளும் கல்வியில் காசுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கல்வி நிர்வணங்கள் வியாபார தளமாக மாற்றப்பட்டுவிட்டது.
உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது. தற்பொழுது உள்ள சூழலில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை விட அதிகமாக உள்ளது. காசு உள்ள யார் வேண்டுமானாலும் கல்வி நிர்வணங்களை ஆரம்பித்து வாணிபம் செய்யலாம் என்ற நிலைமைதான் இன்று. எல்லா அமைச்சர்களுக்கும் சொந்தமாக ஒரு கல்வி நிர்வணம் உண்டு, சேவை செய்வதற்காக இல்லை பொருளீட்டுவதற்காகதான்.
எங்கள் பள்ளியில் தரமான கல்வித் தருகின்றோம் என்று சொல்லி காசை பிடுங்குவதுதான் நிர்வாகங்களுக்கான வேலை. நாமும் அப்படிதான் ஆகிவிட்டொம், கல்வி என்பது அறிவின் தேடல் என்பதை மறந்துவிட்டு பொருளீட்டுவதற்காண முதலீடு என்றுதான் கல்வியை பார்க்கின்றோம். அப்படிதான் இன்றைய கல்விமுறையும் இருக்கின்றது.
கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்? வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்லவும் முடியாது. கல்வி என்பது அறிவின் தேடல், அந்த தேடலின் வெற்றிதான் வாழ்க்கையின் வெற்றியாக இருக்கும். மதிப்பெண்ணுக்காவும் பொருளீட்டுவதற்காகவும் கொடுக்கப்படும் கல்வி வெற்றியை கொடுக்காது என்பதுதான் உண்மை. இப்படி பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது.
அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவணம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவணம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. இன்னும் சில அரசியல் பூச்சிகள் "கள்" எடுக்க அங்கிகாரம் கேட்கின்றார்கள். ஆக மொத்தம் கல்வியை சாகடித்து விடுவார்கள் என்றே தோன்றுகின்றது.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
59 comments:
super pathivu nanbaa...
//உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். //
வெக்கப்பட வேண்டிய உண்மை.
//அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவனம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவனம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.//
முட்டாளாக இருந்தால் தானே பிச்சை போட்டே ஓட்டு வாங்க முடியும்.
மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாது, அரசு சாரா தொண்டு நிருவனங்கள் தான் செய்ய வேண்டும்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
// நையாண்டி நைனா said...
super pathivu nanbaa...//
நன்றி நண்பா,...
// உமா said...
//உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். //
வெக்கப்பட வேண்டிய உண்மை.
//அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவனம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவனம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.//
முட்டாளாக இருந்தால் தானே பிச்சை போட்டே ஓட்டு வாங்க முடியும்.
மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாது, அரசு சாரா தொண்டு நிருவனங்கள் தான் செய்ய வேண்டும்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.//
உங்கள் கருத்துகளுக்கும் நன்றி உமா,..
//மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாது, அரசு சாரா தொண்டு நிருவனங்கள் தான் செய்ய வேண்டும்.//
என்ன கொடுமை பாருங்க
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு புரிவதில்லையா?
அரசாங்கம் யோசித்தால் பல அவசியங்களும் அத்தியாவசியங்களும் பயனடையும்..சிறந்த பதிவு சேகர்....
எல்லா அமைச்சர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கல்வி நிறுவனங்களை வைத்திருக்கும் போது அவர்கள் மீண்டும் மீண்டும் எதையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பார்கள் .
மக்கள் மத்தியில் சுயநலம் தாண்டிய விழிப்புணர்வுகள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்
கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்?
அருமையான கேள்வி
அருமையான பதிவும் கூட
வாழ்த்துக்கள்
நான் இன்று இதை பற்றித்தான் எழுத நினைத்தேன் ....
/கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்? வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்லவும் முடியாது. கல்வி என்பது அறிவின் தேடல், அந்த தேடலின் வெற்றிதான் வாழ்க்கையின் வெற்றியாக இருக்கும். மதிப்பெண்ணுக்காவும் பொருளீட்டுவதற்காகவும் கொடுக்கப்படும் கல்வி வெற்றியை கொடுக்காது என்பதுதான் உண்மை. இப்படி பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது./
இங்கு இன்னொன்றையும் நாம் கவனித்தாக வேண்டும்! 10ம் வகுப்பு முடித்த அனைவருக்கும் விரும்பிய பாடத்தில் 11ம் வகுப்பில் இடம்கிடைக்கிறதா? அல்லது போதுமான இடங்கள் இருக்கின்றனவா?
அதுபோலவே மேற்கல்விக்கும், கல்லூரிக்கும்! அதனால் மதிப்பெண்கள் என்ற பந்தயத்தில் கலந்துகொண்டு மாணவர்கள் தம் பிடித்து ஓடவேண்டியிருக்கிறது!
பிள்ளைகள் நினைத்த(பெற்றோர்கள் நினைத்த!?) துறைகளில் சிறந்த கல்லூரிகளில் (அல்லது குறைந்த செலவில் அரசுக் கல்லூரிகளில்) இடம் பிடிக்க வேண்டுமென்ற போட்டியில் பிள்ளைகளைத் தள்ளிவிட்டு, எப்படியேனும் பிள்ளை ஜெயிக்க வேண்டுமே என்று எவ்வளவு செலவு செய்தேனும் சிறந்த பள்ளியில் (நல்ல ரேங்க் கொடுக்கும் பள்ளிகளில்) சேர்த்து விடுகின்றனர்!
பேதுமான அளவு கல்லூரி இடங்கள் இல்லாமைதான் இதற்குக் காரணம்!
// தமிழரசி said...
அரசாங்கம் யோசித்தால் பல அவசியங்களும் அத்தியாவசியங்களும் பயனடையும்..சிறந்த பதிவு சேகர்....//
மிக்க நன்றிங்க..
Nalla pathivu.Privatization of Education has helped a lot in Engineering courses.But in other courses the institutes are benefited than the students.As u have pointed out the quality of education should be followed,but who cares for it ?
// Suresh Kumar said...
எல்லா அமைச்சர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கல்வி நிறுவனங்களை வைத்திருக்கும் போது அவர்கள் மீண்டும் மீண்டும் எதையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பார்கள் .
மக்கள் மத்தியில் சுயநலம் தாண்டிய விழிப்புணர்வுகள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்//
நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா, எது எல்லாம் லாபம் வ்ருமோ அதை எல்லாம் தனியாரிடம் கொடுப்பதுதான் வேடிக்கை..
மிக்க நன்றி நண்பா
// sakthi said...
கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்?
அருமையான கேள்வி
அருமையான பதிவும் கூட
வாழ்த்துக்கள்
நான் இன்று இதை பற்றித்தான் எழுத நினைத்தேன் ....//
நன்றி சக்தி..
இன்னும்கூட எழுதவேண்டியுள்ளது எனவே எழுதுங்கள் சக்தி
// நாமக்கல் சிபி said...இங்கு இன்னொன்றையும் நாம் கவனித்தாக வேண்டும்! 10ம் வகுப்பு முடித்த அனைவருக்கும் விரும்பிய பாடத்தில் 11ம் வகுப்பில் இடம்கிடைக்கிறதா? அல்லது போதுமான இடங்கள் இருக்கின்றனவா?
அதுபோலவே மேற்கல்விக்கும், கல்லூரிக்கும்! அதனால் மதிப்பெண்கள் என்ற பந்தயத்தில் கலந்துகொண்டு மாணவர்கள் தம் பிடித்து ஓடவேண்டியிருக்கிறது!
பிள்ளைகள் நினைத்த(பெற்றோர்கள் நினைத்த!?) துறைகளில் சிறந்த கல்லூரிகளில் (அல்லது குறைந்த செலவில் அரசுக் கல்லூரிகளில்) இடம் பிடிக்க வேண்டுமென்ற போட்டியில் பிள்ளைகளைத் தள்ளிவிட்டு, எப்படியேனும் பிள்ளை ஜெயிக்க வேண்டுமே என்று எவ்வளவு செலவு செய்தேனும் சிறந்த பள்ளியில் (நல்ல ரேங்க் கொடுக்கும் பள்ளிகளில்) சேர்த்து விடுகின்றனர்!
பேதுமான அளவு கல்லூரி இடங்கள் இல்லாமைதான் இதற்குக் காரணம்!//
விரிவாண அலசல் பாராட்டுகள் நண்பா. போதுமான அளவு கல்லூரி, இடங்கள் இல்லை என்பதும் அதற்கான காரணமும் உண்மையும் கூட...
நன்றி நண்பா
இவர்கள் கல்வி முறையையும் மாற்ற மாட்டார்கள், காசு வாங்குவதையும் நிறுத்தமாட்டார்கள். இதற்கு விடிவு காலம் எப்போது, எப்படி வருமென்பதுதான் ஏழைகளின் ஏக்கம்!
//Muniappan Pakkangal said...
Nalla pathivu.Privatization of Education has helped a lot in Engineering courses.But in other courses the institutes are benefited than the students.As u have pointed out the quality of education should be followed,but who cares for it ?//
thanks sir..
// குடந்தை அன்புமணி said...
இவர்கள் கல்வி முறையையும் மாற்ற மாட்டார்கள், காசு வாங்குவதையும் நிறுத்தமாட்டார்கள். இதற்கு விடிவு காலம் எப்போது, எப்படி வருமென்பதுதான் ஏழைகளின் ஏக்கம்//
வணக்கம் நண்பா,
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி ...
Atleast Govt. must have to take some steps to educate(basic things)poor people..Bcoz they r suffering a lot without education..
Good1..
// வினோத்கெளதம் said...
Atleast Govt. must have to take some steps to educate(basic things)poor people..Bcoz they r suffering a lot without education..//
உங்களின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
என் இனிய நன்பர்க்கு
கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து
டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவது
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி நல்ல விழிப்புணர்வுகள்
பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது
நன்றி நண்பா
தனபால்
மிகச் சிறந்த பதிவு....
//என் இனிய நன்பர்க்கு
கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து
டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவது
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி நல்ல விழிப்புணர்வுகள்
பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது
நன்றி நண்பா
தனபால்//
வணக்கம் தனபால்,
உங்களின் கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி..
உங்களின் பின்னூட்டத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி பாராட்டுகளுடன் நன்றி
//அன்புடன் அருணா said...
மிகச் சிறந்த பதிவு....//
ரொம்ப நன்றிங்க
//உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும்//
-:)
nalla pathivu
நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். ///
உண்மைதாங்க!! தனியார் மருத்துவக்கல்லூரிகள் வரக்கூடாது என்று போராடிய மருத்துவ மாணவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவு அப்போது இல்லை....
//பித்தன் said...
//உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும்//
-:)
nalla pathivu//
நன்றி நண்பா
// thevanmayam said...
நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். ///
உண்மைதாங்க!! தனியார் மருத்துவக்கல்லூரிகள் வரக்கூடாது என்று போராடிய மருத்துவ மாணவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவு அப்போது இல்லை....//
வணக்கம் டாக்டர் தேவன் சார்..
நீங்கள் கூறும் கூற்றும் உண்மைதாங்க... பொதுமக்களுக்கும் இதில் விழிப்புணர்வு வேண்டும்.
வருத்தப் படவேண்டிய விஷயம்
// நசரேயன் said...
வருத்தப் படவேண்டிய விஷயம்//
வணக்கம் நசரேன்..
நன்றிபா
அருமையா சொல்லி இருக்கீங்க.
நீங்க குறிப்பிட்டு இருப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. ரொம்ப வருத்தபட வேண்டிய விசயம்.
மக்கள் குடித்தால் மந்திரிகளுக்கு நல்லது.
மக்கள் படித்தால் அவர்களுக்கு ஆபத்து.
அதனால்தான் இந்தக் கீழ்த்தரமான நிலைமை,ஞனசேகரன்.
absolutely correct.
//கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது.
super post boss - awareness required.
நல்ல பதிவு ஞானசேகரன்.
//இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.//
நிச்சயமாக.
//நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள்.//
உண்மை:(! இது குறித்த எனது பதிவு: கல்விச் சந்தை
நல்ல பதிவு,..
/அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவனம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவனம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.//
ரொம்ப நல்ல பதிவு .....
இதை இன்னும் சத்தம் போட்டு எல்லோரும் சொல்ல வேண்டும் .
// ஆ.முத்துராமலிங்கம் said...
அருமையா சொல்லி இருக்கீங்க.
நீங்க குறிப்பிட்டு இருப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. ரொம்ப வருத்தபட வேண்டிய விசயம்.//
வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்
மிக்க நன்றி நண்பா. இதற்கு நாமும் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருப்பதும் நல்லதுதானே
// ஷண்முகப்ரியன் said...
மக்கள் குடித்தால் மந்திரிகளுக்கு நல்லது.
மக்கள் படித்தால் அவர்களுக்கு ஆபத்து.
அதனால்தான் இந்தக் கீழ்த்தரமான நிலைமை,ஞனசேகரன்.//
வணக்கம் ஷண்முகப்ரியன் சார்.
நீங்கள் சொல்வதுதான் முழுக்க உண்மை, இருந்தாலும் நம்மிடமும் விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். ரொம்ப நன்றி சார்.
// தமிழ்நெஞ்சம் said...
absolutely correct.
//கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது.
super post boss - awareness required.//
நன்றி நண்பா
//ராமலக்ஷ்மி said...
நல்ல பதிவு ஞானசேகரன்.
//இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.//
நிச்சயமாக.
//நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள்.//
உண்மை:(! இது குறித்த எனது பதிவு: கல்விச் சந்தை//
மிக்க நன்றிங்க
உங்க பதிவும் நன்றாக உள்ளது பாராட்டுகள்
// jothi said...
நல்ல பதிவு,..//
மிக்க நன்றிங்க
// malar said...
/அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவனம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவனம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.//
ரொம்ப நல்ல பதிவு .....
இதை இன்னும் சத்தம் போட்டு எல்லோரும் சொல்ல வேண்டும் .//
மிக்க நன்றிங்க
அருமை.. இதைப் பற்றி நான் ஒரு பதிவு போடவேண்டும் என நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள். இதைவிட நான் என்ன எழுதிவிடப் போகிறேன்.
கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படுவது சற்றுக் கடினம்தான்
/// " உழவன் " " Uzhavan " said...
அருமை.. இதைப் பற்றி நான் ஒரு பதிவு போடவேண்டும் என நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள். இதைவிட நான் என்ன எழுதிவிடப் போகிறேன்.
கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படுவது சற்றுக் கடினம்தான்///
உங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா..
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை அரசுடமையாக அறிவித்தால் என்ன?
அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்க ஊதியமளிக்க இயலாதென நினைக்கிறார்களா..
இல்லை அவற்றையெல்லாம் திறம்பட அரசால் நடத்த முடியாதென நினைக்கிறார்களா..
என்ன நடக்கிறது என்று அலசுவதை விட அரசும்,மக்களும் என்ன செய்யலாமென அலசுவது நல்லதென நான் நினைக்கிறேன்..
// தீப்பெட்டி said...
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை அரசுடமையாக அறிவித்தால் என்ன?
அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்க ஊதியமளிக்க இயலாதென நினைக்கிறார்களா..
இல்லை அவற்றையெல்லாம் திறம்பட அரசால் நடத்த முடியாதென நினைக்கிறார்களா..
என்ன நடக்கிறது என்று அலசுவதை விட அரசும்,மக்களும் என்ன செய்யலாமென அலசுவது நல்லதென நான் நினைக்கிறேன்..//
நச்சுன்னு சொல்லியுள்ளீர்கள் நண்பா.
அரசு செய்யவேண்டியதுதான் நிறைய இருக்கு. மக்களுக்கும் இதைப்பற்றிய எண்ணம் இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்
உங்கள் பதிவு என்னை மிகவும் வருந்த வைத்தது..
இப்போது கல்விக்கட்டணம் கட்டவே லோன் வாங்கும் அளவுக்கு நமது கல்வி விற்பனை மையங்கள்(பள்ளிகள், கல்லூரிகள்) முன்னேறி விட்டன..!!
இதில் ஏழை மாணவர்களுக்கு என்ன பயன் வரப்போகிறது..!!
ஆழ்ந்த வருத்தங்களுடன்
ரங்கன்
அருமையான பதிவு.சட்டமன்றத்தில் கேட்கவேண்டிய கேள்விகள்?????
//ரங்கன் said...
உங்கள் பதிவு என்னை மிகவும் வருந்த வைத்தது..
இப்போது கல்விக்கட்டணம் கட்டவே லோன் வாங்கும் அளவுக்கு நமது கல்வி விற்பனை மையங்கள்(பள்ளிகள், கல்லூரிகள்) முன்னேறி விட்டன..!!
இதில் ஏழை மாணவர்களுக்கு என்ன பயன் வரப்போகிறது..!!
ஆழ்ந்த வருத்தங்களுடன்
ரங்கன்//
வணக்கம் ரங்கன்.
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க
//ராம்.CM said...
அருமையான பதிவு.சட்டமன்றத்தில் கேட்கவேண்டிய கேள்விகள்?????//
வாங்க ராம் சட்டமன்றத்தில் கேட்கவேண்டியவர்கள் கேட்காததால்தான் இங்கு இடுக்கையில் கேட்கவேண்டியுள்ளது
மிக்க நன்றி நண்பா
உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும்.
neththi adi, super
// காமராஜ் said...
உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும்.
neththi adi, super//
மிக்க நன்றி காமராஜ்
வாழ்த்துகள்,
உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...
// கலையரசன் said...
வாழ்த்துகள்,
உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...//
நன்றி கலையரசன்...
யூத்புல் விகடன் நிர்வாக குழுவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்
உங்களின் வாழ்த்துக்கு நன்றி...
இருவரின் கருத்துக்களும் வெளிக்கொணர்வது ஒரே உணர்வைத்தான். நாட்டின் நிலை நிச்சயம் திருந்தும். நம்புவோம்.
//Thamizhan said...
உங்களின் வாழ்த்துக்கு நன்றி...
இருவரின் கருத்துக்களும் வெளிக்கொணர்வது ஒரே உணர்வைத்தான். நாட்டின் நிலை நிச்சயம் திருந்தும். நம்புவோம்.//
நன்றி நண்பா
அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவணம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவணம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. இன்னும் சில அரசியல் பூச்சிகள் "கள்" எடுக்க அங்கிகாரம் கேட்கின்றார்கள். ஆக மொத்தம் கல்வியை சாகடித்து விடுவார்கள் என்றே தோன்றுகின்றது.
////
என்ன செய்ய
என்னோடு பள்ளியில் படித்த நல்ல அறிவுள்ள மானவர்கள் பலர் வறுமை காரணமாக 7& 8 வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்கள்
//அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவனம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவனம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.//
முட்டாளாக இருந்தால் தானே பிச்சை போட்டே ஓட்டு வாங்க முடியும்.
படிப்பே சரியாக வராத ஒருவன் என் புருசனும் சந்தைக்கு போரான் என்று கல்லுரிவரை படித்து இப்போ அமேரிக்காவில் இருக்கானாம் , காரணம் அவன் அப்பாவின் பணம்...
எங்களை போன்ற அன்றாடம் சாம்பாரித்து சாப்பிடுபவர்களுக்கு வாழ்வின் திசையை நிர்ணயிக்கும் உரிமை இல்லை
என் மாமாவின் உதவியால் டிப்ள்மோ படித்தேன்
இல்லையென்றால் மேலே சொன்ன நன்பர்களை போல் 10 ம் வகுப்போடு நிருத்தி கட்டிட கூலியாகி இருப்ப்பென்
இப்போது அந்த நன்பர்களில் சிலர் அப்படித்தான் உள்ளனர்
//பிரியமுடன் பிரபு said...

இப்போது அந்த நன்பர்களில் சிலர் அப்படித்தான் உள்ளனர்//
வணக்கம் பிரபு
நாட்டின் அவல நிலையை உங்களின் வாழ்கை அனுபவங்கள் மூலம் எடுத்து கூறி பதியவைத்துவிட்டீர்கள் மிக்க நன்றி நண்பா.
வெற்றிகளுக்கு
பாராட்டுகள்
உண்மையான பதிவு.
// முனைவர் சே.கல்பனா said...
உண்மையான பதிவு.//
மிக்க நன்றி
Post a Comment