தடுக்கி விழுந்தால் விதி என்ன செய்யும்?...சிந்தனை சிதறல்கள்
எனக்குள் இருக்கும் இந்த விதியை பற்றிய சிந்தனையில் விதியை படைத்தவன் யார்? கடவுளா? இல்லை மனிதனா? கண்டிப்பாக மனிதன்தான். கண்ணுக்கு தெரியாத ஒன்றையும் மனிதனுக்கு புலப்படாத ஒன்றையும் கூறிக் கொள்வதிற்குதான் மனிதன் இந்த விதி பயன்படுத்துகின்றான். விதிக்கு கடவுளை போல எல்லையில்லை அப்படி எல்லை வகுத்துக் கொள்வோமேயானால் விதியும் கடவுளும் நம் கைகளில்தான். எல்லையில்லா விதியை வெல்வது கடினம்தான் அதுவும் சமயத்திற்கு ஏற்றார்போல நகரும் விதியை சுத்தமாக வெல்லவே முடியாது.
விதியைப் பற்றி சொல்லாத அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஜோதிட வல்லுனர்கள் சிலர் இதேல்லாம் விதிக்கப்பட்ட விதி என்று சொல்வதுண்டு. சிலர் விதி என்பது இயலாமைக்கு சொல்லும் சப்பைக்கட்டு என்று சொல்வதும் உண்டு. சிலர் விதியை மதியால் வெல்லுவது விதியே என்றும் சொல்லுவர். ஆனால் நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த விதி ஒரு குழப்பம். விதியை பற்றி யார் என்ன சொன்னாலும் ஆமாம் சரிதான் என்றே சொல்ல வைத்துவிடும். ஏனெனில் விதியை பற்றிய குறிப்பு சரியாக வகுக்கப்படாததுதான்.
விதிக்கும் கடவுளுக்கும் ஒரு முரண்பாடு தெரியும். எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால், மனித வாழ்க்கை எல்லாம் முன்பே வகுக்கப்பட்ட விதி என்றால் மனிதன் கடவுளை வணங்குது எதற்காக? இதை சிலர் விதியின் வலியை தாங்கிக்கொள்ள என்றும் சொல்லுவார்கள். அப்படியானால் விதியின் வலியை தாங்க கடவுளை வணங்குதலும் விதியா? அப்போ விதிக்கு கடவுளைவிட வலிமை அதிகமா? எல்லாம் விதிப்படி நடந்தால் நம்முயற்சிக்கு என்னதான் பயன்? கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தானே? என்னை பொருத்தவரை இந்த விதியை மொழியிலிருந்து எடுத்துவிட்டால் நல்லது. ஓ வார்த்தையை எடுத்துவிட்டால் உணர்வை என்ன செய்யமுடியும்? அதுவும் ஞாயமான கேள்வி. நான் கேட்பது இந்த விதியால் ஏதேனும் பயன் உண்டா? ஒன்று மட்டும் உண்டு முயற்சியின் தோல்வியை எல்லாம் விதி என்று ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.
சமீபத்தில் நான் படித்த கதை இதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். சுவாமி சுகபோனந்தா அவர்கள் எழுதிய "மனசே ரிலாக்ஸ் ப்லீஸ்" என்ற தொடரில் புத்தமத கதை ஒன்றை எழுதியுள்ளார். ஒரு கிராமத்து சிறுவன் விளையாட ஏரிக்கரைக்கு செல்கின்றான், அங்கே "என்னை காப்பாற்றுங்கள்! என்னை காப்பாற்றுங்கள்!" என்ற குரல் கேட்கின்றது. கரையோரத்தில் தண்ணீரில் கட்டப்பட்ட வலையில் சிக்கிய முதலை ஒன்று பரிதாபமாக சிறுவனிடம் "என்னை காப்பாற்று " என்று கண்ணீர் வடிக்கின்றது. சிறுவனோ "நான் உன்னை காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாய்" என்று மறுக்கின்றான். "நீ என்னை காப்பாற்றினால் சத்தியமாக உன்னை விழுங்கமாட்டேன்" என்று முதலை அழுதது. முதலையின் பேச்சை கேட்ட சிறுவனும் வலையை அறுத்து காப்பாற்ற முயற்சிகின்றான். அதற்குள் முதலை சிறுவனை பிடித்துவிடுகின்றது. "இது என்ன நியாயம் உன் பேச்சை நம்பிதானே காப்பாற்றினேன்" என்று முதலையிடம் வாதிடுகின்றான். அதற்கு அந்த முதலை " இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை!" என்று சொல்லி விழுங்க தொடங்குகின்றது. சிறுவனுக்கு தன் சாவைப் பற்றிக்கூட கவலையில்லை பொய் சொன்ன முதலையின் சித்தாந்தம்தான் ஏற்றுகொள்ளமுடியவில்லை.
முதலையின் வாய்க்குள் போகின்ற சிறுவன் அருகில் மரத்தில் உள்ள பறவைகளை கேட்க்கின்றான். "பறவைகளே முதலை சொல்வதுபோல இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்பது சரியா" என்றான். பறவைகளும் "முதலை சொல்வது சரிதான் நாங்கள் பாதுகாப்பாக முட்டையிடுகின்றோம் எங்கிருந்தோ வந்த பாம்புகள் முட்டையை குடித்துவிடுகின்றது எனவே முதலை சொல்வது சரிதான்" என்றது.
சிறுவனால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை அருகில் மேய்ந்த கழுதையை கேட்டான். கழுதையும் "நாங்கள் இளமையா இருந்த பொழுது என் எசமான் அழுக்கு துணியை ஏற்றி வேலை வாங்கினான் இப்பொழுது வயதாகிவிட்டது எங்களுக்கு தீனி தாராமல் விரட்டி விட்டான் எனவே முதலை சொல்வதும் சரிதான் இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்" என்றது.
அப்பொழுதும் சிறுவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை அருகில் வந்த முயலிடம் கேட்டான். முயல் '' இல்லை இல்லை முதலை பிதற்றுகின்றது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது " என்றது. முதலையும் கோபத்தில் வாதிட்டது அதற்கு முயல் "நீ சொல்வது புரியவில்லை வாயில் இருக்கும் பையனை வெளியே விட்டு விட்டு பேசு" என்றது. அதற்கு "முடியாது சிறுவன் ஓடிவிடுவான்" என்றதும் " புத்தியில்லா முதலையே உன் வாலின் பலம் உனக்கு தெரியாதா? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அடித்துவிடலாம்" என்று ஞாபகப்படுத்த சிறுவனை வெளியில் விட்டது. உடனே முயல் சிறுவனிடம் "ஓடிவிடு ஓடிவிடு" என்றது . சிறுவனும் ஓடிவிட்டான் சிறுவனை அடிக்க வாலை எடுக்குபொழுதுதான் முதலைக்கு புரிகின்றது வால்பகுதியில் வலையை எடுக்கும் முன்பே சிறுவனை விழுங்க ஆறம்பித்துவிட்டோம் என்று. கோபத்துடன் முதலை முயலைப் பார்த்தது, முயல் " இப்பொழுது புரிகின்றதா இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை " என்றது.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்திரை அழைத்து வந்தான். அவர்கள் முதலையை கொன்று விட்டனர். அதற்குள் அவர்களுடன் வந்த நாய் அந்த முயலை விரட்டியது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் நாய் முயலை கொன்றுவிட்டது. சிறுவனோ" இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை" என்று பெருமூச்சுவிடுகின்றான்...
மேற்சொன்ன கதையில் விதியாக என்ன சொல்லப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் விதியை காரணம் காட்டி வாழ்க்கை ஓட்டினால் வாழ்வில் ஒன்றும் சுவராசியம் இருக்காது. நம் வாழ்வில் நடக்கும் பல விடயங்களுக்கு அர்த்தம் தெரிவதில்லை அதற்கெல்லாம் விதிதான் என்றால் நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை. என்னை பொருத்தவரை விதினால் எந்த பயனும் இருக்கவில்லை எனவே விதியை ஒரு பொருட்டாக பார்க்க ஆரம்பித்தால் சாதனைகள் வந்து சேராது. முடிந்தவைக்கு காரணம் தேடுவதைவிட நடக்கும் நாட்களுக்கு அர்த்தம் தேடினால் நல்லது.
முதுகுவலியால் நான் மருத்துவரிடம் சென்றேன், MRI scan எடுக்க சொன்னார்கள். முடிவில் L4 L5 க்கும் இடையில் டிஸ்க் நழுவிவிட்டது என்றார். நான் "இது எதனால் வருகின்றது" என்று கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார். அவர் சொல்வதும் சரிதானே, அதன்படி அவர் ஆலோசனைகளை கேட்டு பயன் அடைந்தேன்.
எல்லாவற்றிக்கும் விதியை காரணம் காட்டி சும்மானு இருக்காம வாழ்க்கையை வாழ்கையாக வாழ இந்த சாமானியனின் எண்ணச் சிதறல்கள்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார்//
இது எதனால் வந்தது எனத் தெரிந்தால் மீண்டும் வராமல் தடுக்கலாம் இல்லையா?
// Anonymous said...
அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார்//
இது எதனால் வந்தது எனத் தெரிந்தால் மீண்டும் வராமல் தடுக்கலாம் இல்லையா?//
வணக்கம் நண்பரே! சில வியாதிகளுக்கு இதுமட்டுமே காராணம் என்று சொல்ல முடியாது. எனவேதான் மருத்துவர்கள் அப்படி சொல்லுவார்கள். வரும் முன் காப்பதுதான் நல்லது. வந்த பின் நிவாரணம்தான் உத்தமம்.
மிக்க நன்றீங்க
Nalla pathivu Gnanaseharan.Vithikku Muthalai kathai arumaiyaana vilakkam.Nivaaranamum mukkiyam,meendum varaamal thaduppathum mukkiyam.Vithisellum vazhiye mathi sellum.
அண்ணே.. கலக்குறீங்க.. என்னமோ எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்
//Muniappan Pakkangal said...
Nalla pathivu Gnanaseharan.Vithikku Muthalai kathai arumaiyaana vilakkam.Nivaaranamum mukkiyam,meendum varaamal thaduppathum mukkiyam.Vithisellum vazhiye mathi sellum.//
மிக்க நன்றி சார்
// குறை ஒன்றும் இல்லை !!! said...
அண்ணே.. கலக்குறீங்க.. என்னமோ எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்//
வணக்கம் நண்பா.....
உங்களின் வருகை மகிழ்ச்சி,.. நன்றியும்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்....
நன்றாகவே எழுதுவிங்க என்பது உங்கள் விதி எழுதுங்க.....
அத படிக்கணும் என்றது எங்க விதி. படிக்கிறான்...
//சந்ரு said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்....
நன்றாகவே எழுதுவிங்க என்பது உங்கள் விதி எழுதுங்க.....
அத படிக்கணும் என்றது எங்க விதி. படிக்கிறான்...//
உங்கள் வருகை எனக்கு மகிழ்வு நன்றி நண்பா
//
முடிந்தவைக்கு காரணம் தேடுவதைவிட நடக்கும் நாட்களுக்கு அர்த்தம் தேடினால் நல்லது.
//
நன்றாகச் சொன்னீர்கள்
// வலசு - வேலணை said...
//
முடிந்தவைக்கு காரணம் தேடுவதைவிட நடக்கும் நாட்களுக்கு அர்த்தம் தேடினால் நல்லது.
//
நன்றாகச் சொன்னீர்கள்//
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
முதுகுவலியால் நான் மருத்துவரிடம் சென்றேன், MRI scan எடுக்க சொன்னார்கள். முடிவில் L4 L5 க்கும் இடையில் டிஸ்க் நலுவிவிட்டது என்றார். நான் "இது எதனால் வருகின்றது" என்று கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார். அவர் சொல்வதும் சரிதானே, அதன்படி அவர் ஆலோசனைகளை கேட்டு பயன் அடைந்தேன்.
//
நம்பிக்கையுடன் செயல்பட்டீர்கள்!! பயன் அடைந்தீர்கள்!!
// தேவன் மாயம் said...
முதுகுவலியால் நான் மருத்துவரிடம் சென்றேன், MRI scan எடுக்க சொன்னார்கள். முடிவில் L4 L5 க்கும் இடையில் டிஸ்க் நலுவிவிட்டது என்றார். நான் "இது எதனால் வருகின்றது" என்று கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார். அவர் சொல்வதும் சரிதானே, அதன்படி அவர் ஆலோசனைகளை கேட்டு பயன் அடைந்தேன்.
//
நம்பிக்கையுடன் செயல்பட்டீர்கள்!! பயன் அடைந்தீர்கள்!!//
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி டாக்டர்......
விதி என்பதை விதிமுறை எனப் பொருள் கொண்டால் எல்லாமே எளிதில் விளங்கும்.,
மழை பெய்வது விதி, அதிலிருந்து காத்துக்கொள்ள குடைபிடிப்பது மதி, வெள்ளம் வருவது விதி, அதை தேக்கி விவசாயம், மின்சாரம் எடுப்பது மதி,
இதேபோல் தனிமனித வாழ்வில் நடப்பவற்றை விதியாய் ஏற்றுக்கொண்டு, தனக்கும் பிறர்க்கும் நன்மையாய் இருப்பது மதி.,
அருமையான கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறீர்கள் அந்த கதை மிகவும் அருமை
// நிகழ்காலத்தில்... said...
விதி என்பதை விதிமுறை எனப் பொருள் கொண்டால் எல்லாமே எளிதில் விளங்கும்.,
மழை பெய்வது விதி, அதிலிருந்து காத்துக்கொள்ள குடைபிடிப்பது மதி, வெள்ளம் வருவது விதி, அதை தேக்கி விவசாயம், மின்சாரம் எடுப்பது மதி,
இதேபோல் தனிமனித வாழ்வில் நடப்பவற்றை விதியாய் ஏற்றுக்கொண்டு, தனக்கும் பிறர்க்கும் நன்மையாய் இருப்பது மதி.,//
உண்மைதான் விதி என்பது ஒரு விதிமுறை என்ற பொருள் சரிதான். ஆனால் நடக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம் இந்த விதி என்று சொல்லும் போக்கு மாற்றபடதான் இந்த பதிவு...
மிக்க நன்றி நண்பா
// Suresh Kumar said...
அருமையான கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறீர்கள் அந்த கதை மிகவும் அருமை//
வணக்கம் சுரேஷ்
மிக்க நன்றிபா
விதி வலியதா? மதி வலியதா? என யோசிக்கவைத்து விட்டீர்கள்
// ஐந்தினை said...
விதி வலியதா? மதி வலியதா? என யோசிக்கவைத்து விட்டீர்கள்//
இது சிந்திங்க தூண்டும் சிதறல்கள்தான்.. மிக்க நன்றி நண்பரே
இடுகை நல்லாவே இருக்குது.'இடையில' சிம்ரான் எதுக்கு:)
முதுகுவலி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.முதுகுவலி இல்லாம இருந்தா முதுகுவலி வராம இருக்க என்ன செய்யலாமுன்னு மருத்துவம் சொல்லலாம்.நீங்க டிஸ்க்ன்னுல்லாம் சொல்றபோது மருத்துவரின் உதவியே நல்லது.
(கணினியில் அதிக நேரம் கூட முதுகுவலிக்கு காரணமென்று நினைக்கிறேன்.இப்பவே முதுகு ட்ரிங்க்ன்னு டெலிபோன் செய்யறமாதிரி உணர்வு.யம்மா)
ஜோதிட வல்லுனர்கள் சிலர் இதேல்லாம் விதிக்கப்பட்ட விதி என்று சொல்வதுண்டு. சிலர் விதி என்பது இயலாமைக்கு சொல்லும் சப்பைக்கட்டு என்று சொல்வதும் உண்டு. சிலர் விதியை மதியால் வெல்லுவது விதியே என்றும் சொல்லுவர். ஆனால் நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த விதி ஒரு குழப்பம். விதியை பற்றி யார் என்ன சொன்னாலும் ஆமாம் சரிதான் என்றே சொல்ல வைத்துவிடும்.
ஆமாங்க
என்னவோ ஒன்னுமே புரியறதில்லை இந்த உலகத்திலே....
முரண்பாடு
குரல்
தீனி
நழுவிவிட்டது
எழுத்துப்பிழைகள் மாற்றிவிடுங்களேன்
சேகரன் சார்
// ராஜ நடராஜன் said...
இடுகை நல்லாவே இருக்குது.'இடையில' சிம்ரான் எதுக்கு:)//
இடுக்கை விதியை பார்த்து பயம்கொள்ளாமல் எதார்த்தமாக இருக்கட்டுமே என்றுதான் நண்பா....
//முதுகுவலி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.முதுகுவலி இல்லாம இருந்தா முதுகுவலி வராம இருக்க என்ன செய்யலாமுன்னு மருத்துவம் சொல்லலாம்.நீங்க டிஸ்க்ன்னுல்லாம் சொல்றபோது மருத்துவரின் உதவியே நல்லது.//
நன்றிங்க நண்பா
//(கணினியில் அதிக நேரம் கூட முதுகுவலிக்கு காரணமென்று நினைக்கிறேன்.இப்பவே முதுகு ட்ரிங்க்ன்னு டெலிபோன் செய்யறமாதிரி உணர்வு.யம்மா)//
இதுவும் ஒரு காரணம்தான்..
உங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா
// sakthi said...
ஜோதிட வல்லுனர்கள் சிலர் இதேல்லாம் விதிக்கப்பட்ட விதி என்று சொல்வதுண்டு. சிலர் விதி என்பது இயலாமைக்கு சொல்லும் சப்பைக்கட்டு என்று சொல்வதும் உண்டு. சிலர் விதியை மதியால் வெல்லுவது விதியே என்றும் சொல்லுவர். ஆனால் நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த விதி ஒரு குழப்பம். விதியை பற்றி யார் என்ன சொன்னாலும் ஆமாம் சரிதான் என்றே சொல்ல வைத்துவிடும்.
ஆமாங்க
என்னவோ ஒன்னுமே புரியறதில்லை இந்த உலகத்திலே....//
வாழ்கை என்பது வாழ்வதுதானே, உண்மை என்பது அப்படியே இருப்பதுதானே..... எனவே விதியைப்பற்றிய கவலை தேவையில்லா ஒன்றுங்க....
மிக்க நன்றி தோழி
/// sakthi said...
முரண்பாடு
குரல்
தீனி
நழுவிவிட்டது
எழுத்துப்பிழைகள் மாற்றிவிடுங்களேன்
சேகரன் சார்///
நன்றி நன்றி நன்றி மாற்றியாச்சுங்க
சிந்தனைச் சிதறல் சிறப்பாக இருந்தது.....
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு....
//சப்ராஸ் அபூ பக்கர் said...
சிந்தனைச் சிதறல் சிறப்பாக இருந்தது.....
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு....//
வாருங்கள் தம்பி உங்களுக்கும் வாழ்த்துகள்..
உங்களின் வருகைக்கு நன்றி
உங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை வைத்து நன்றாக விலக்கி உள்ளிர்கள் நண்பரே..
// வினோத்கெளதம் said...
உங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை வைத்து நன்றாக விலக்கி உள்ளிர்கள் நண்பரே..//
வணக்கம் வினோத்கெளதம்..
மிக்க நன்றிபா
பல நேரங்களில் விதி இயலாமை, முயற்சியின்மை, மற்றும் சோம்பேறித்தனத்துக்கு நொண்டிச் சாக்காய்ப் போய்விடுகிறது..
// பாச மலர் said...
பல நேரங்களில் விதி இயலாமை, முயற்சியின்மை, மற்றும் சோம்பேறித்தனத்துக்கு நொண்டிச் சாக்காய்ப் போய்விடுகிறது..//
உண்மைதான் நண்பரே...
மிக்க நன்றிங்க
உழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது அப்பொழுது உழையும் உப்பக்கம் காண்பர் இப்பொழுது..........முயற்சி இருந்தால் உழைப்பிருந்தால்
// முனைவர் சே.கல்பனா said...
உழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது அப்பொழுது உழையும் உப்பக்கம் காண்பர் இப்பொழுது..........முயற்சி இருந்தால் உழைப்பிருந்தால்//
தாங்களின் கருத்துரைக்கும் நன்றிங்க
நல்ல பதிவுஎழுதும்போது சிம்ரன் படத்தை போட்ட எல்லாம் வந்து படிப்பார்கள்
என நீங்க நினைச்சிங்க பாருங்க அதானுங்கோ விதி
ஞானசேகரன்,விதியை நம்பியும் நம்பாமலுமே வாழ்க்கை ஓடுகிறது.விதியை நம்பச்சொல்லும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
// சொல்லரசன் said...
நல்ல பதிவுஎழுதும்போது சிம்ரன் படத்தை போட்ட எல்லாம் வந்து படிப்பார்கள்
என நீங்க நினைச்சிங்க பாருங்க அதானுங்கோ விதி//
நன்றிங்க.. அதையும் பார்க்க கொடுத்துவைத்த எதார்த்தம்
// ஹேமா said...
ஞானசேகரன்,விதியை நம்பியும் நம்பாமலுமே வாழ்க்கை ஓடுகிறது.விதியை நம்பச்சொல்லும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.//
நன்றி ஹேமா
புடிச்சிருக்கோ இல்லையோ.. படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ...
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_19.html
// குறை ஒன்றும் இல்லை !!! said...
புடிச்சிருக்கோ இல்லையோ.. படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ...//
நீங்கள் சொல்வதும் சரிதாங்க. ஆனா பாருங்கோ இந்த விதி நினைத்து நினைத்து நொந்து போராதும். நாளைய விதிக்காக இன்றைய மகிழ்ச்சியை இழப்பதும்தான் வேடிக்கை. இதிலிருந்து விழிப்படையதான் இந்த பதிவு
Post a Comment