ஹேமா அவர்கள் என் இடுகைகளை படித்துவிட்டு என்றுமே பாராட்ட தயங்காத தோழி. வாங்க உப்புமடச் சந்திக்கு கதைப் பேசலாம் என்று அழைத்து என்னை இந்த தொடர் பதிவுக்கு வித்திட்டார். அழகு,காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய உங்களின் நினையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. முதலில் அந்த ஐவரை அழைத்துவிட்டு பின்னர் அழகு, காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய என் நிலையில் நான் நினைப்பதையும் சொல்லி விடுகின்றேன்.
1.அகநாழிகை-பொன்.வாசுதேவன்
2.சில கவிதைகள்-உமா
3.லக லக லக- நையாண்டி நைனா
4.அன்புடன் அருணா-அருணா
5.அடர் கருப்பு-காமராஜ்
முதலில் இந்த தொடருக்கு அழைப்பு விடுத்த தோழி ஹேமாவிற்கு வணக்கங்களும் நன்றியும். முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும். அழகின் தலையில் அன்பை வைக்கவேண்டும், காதல் தலையில் அன்பை வைக்கவேண்டும், பணத்தின் தலையில் அன்பை வைக்கவேண்டும், கடவுளின் தலையில் அன்பை வைக்கவேண்டும். இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.
அழகு: ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது. உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும். அதே போல என்னதான் அழகானவளா, அழகானவணா இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு இல்லை என்றால் நம்முடைய கால் தூசிக்கு சமமானதே.
காதல்:
காலை முதல் மாலை வரை..
எப்பொழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்.
கண்ணுரங்கும் பொழுதிலும்..
அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்...
நான் நடந்த கால் சுவடுகளில்..
அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்..
ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....
காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களை விட கல்யாணம் செய்து காதலிப்பவர்களிடம் அதிகம் அன்பு இருப்பதுபோல நான் உணர்கின்றேன். நானும் கல்யாணம் செய்து காதலிப்பவன் என்பதாலோ என்னவோ!. காதல் இல்லா உயிரும் இல்லை அதைவிட அன்பில்லா காதலுமில்லை. வெறும் காதல் மட்டும் வீடு வந்து சேராது, வீதியிலேயே போய்விடும். காதலுக்காக வாழ்கின்றோம் என்று சொல்வதை விட காதலில் வாழ்கின்றோம் என்பதுதான் நிஜம்.கண்ணுரங்கும் பொழுதிலும்..
அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்...
நான் நடந்த கால் சுவடுகளில்..
அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்..
ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....
பணம்: பொய்யான உருவதிற்கு மதிப்பையும் கொடுத்து அதன் பின்னால் நாம் செல்கின்றோம் என்பது ஒரு வேடிக்கையான விடயம்தான். பண மதிப்பை பற்றிய முந்தய இடுகை சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு. பணம் எல்லோரிடம் இருக்கலாம் பண இருப்பவர்கள் மதிக்கப்படலாம் ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.
கடவுள்: என்னை பொருத்தவரை கடவுள் என்பது ஒரு நிருபிக்க முடியாத ஒரு கற்பனை, அது ஒரு அலுவுனியாட்டம். இந்த அழுவுனியாட்டம் பற்றிய என் முந்தய இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம். கடவுளை பற்றிய நிருபணமும் இல்லை அதே போல் இல்லை என்பதற்கும் நிருபணமும் இல்லை. கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். அன்புக்கு நிகரான கடவுளை பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.
என்றும் உங்களுடன்.
ஆ.ஞானசேகரன்
60 comments:
விளக்கம்
அருமை
//திகழ்மிளிர் said...
விளக்கம்
அருமை//
நன்றி நண்பா
கண்டேன் நண்பரே... அழைப்பை... நன்றி.
தொடர்கிறேன்....
தங்கள் விளக்கமும் பார்த்தேன். பரவசம் கொண்டேன்.
// நையாண்டி நைனா said...
தங்கள் விளக்கமும் பார்த்தேன். பரவசம் கொண்டேன்.//
மிக்க நன்றி நண்பா
அழகா சொல்லியிருக்கீங்க..பூங்கொத்து!..மாட்டி விட்டுட்டீங்களே!..ம்ம்ம் எழுதறேன்.
//அன்புடன் அருணா said...
அழகா சொல்லியிருக்கீங்க..பூங்கொத்து!..மாட்டி விட்டுட்டீங்களே!..ம்ம்ம் எழுதறேன்.//
வாங்க அருணா வாழ்த்துகள்
//என்னை இந்த தொடர் பதிவுக்கு//
என்னை இந்த தொடர் இடுகைக்கு...
அருமையா விளக்கம் சொல்லி இருக்கீங்க!
// நிஜமா நல்லவன் said...
அருமையா விளக்கம் சொல்லி இருக்கீங்க!//
வணக்கம் நண்பா மிக்க நன்றிங்க
அழகு பற்றி சொல்லி இருப்பது மிகப் பிடித்திருக்கிறது!
// பழமைபேசி said...
//என்னை இந்த தொடர் பதிவுக்கு//
என்னை இந்த தொடர் இடுகைக்கு..//
வணக்கம் நண்பா,...
நீங்கள் சொல்வதும் சரிதான்.. மாற்றி விடுகின்றேன்
//நிஜமா நல்லவன் said...
அழகு பற்றி சொல்லி இருப்பது மிகப் பிடித்திருக்கிறது!//
மிக்க நன்றி நண்பா
//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துருநாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்//
ஞானம்,
25 வயதைக் கடந்த பின்புதான் சொற்களுக்கான சரியான அர்த்தம் புரியத்தொடங்குகிறது.
"அழகு,காதல்,பணம், கடவுள்?" தொடர் இன்னும் கூட விரிவு படுத்தி எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.
நல்லாயிருக்கு.பரிசாக (தொடரில் பதிந்துள்ள) பூங்கொத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பி.கு: ஒரு சில தட்டச்சுப் பிழைகள் இருக்கு.(துருநாற்றம்=துர்நாற்றம்,கர்ப்பனை=கற்பனை...இன்னும் இருக்கு. சரி செஞ்சிடுங்களே.)
// சத்ரியன் said...
//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துருநாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்//
ஞானம்,
25 வயதைக் கடந்த பின்புதான் சொற்களுக்கான சரியான அர்த்தம் புரியத்தொடங்குகிறது.
"அழகு,காதல்,பணம், கடவுள்?" தொடர் இன்னும் கூட விரிவு படுத்தி எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.
நல்லாயிருக்கு.பரிசாக (தொடரில் பதிந்துள்ள) பூங்கொத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பி.கு: ஒரு சில தட்டச்சுப் பிழைகள் இருக்கு.(துருநாற்றம்=துர்நாற்றம்,கர்ப்பனை=கற்பனை...இன்னும் இருக்கு. சரி செஞ்சிடுங்களே.)///
மிக்க நன்றி நண்பா,
பிழைகளை சரி செய்துவிட்டேன் நன்றி,
உங்களின் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
அருமை
அருமையான விளக்கங்கள்
// கடையம் ஆனந்த் said...
அருமை//
மிக்க நன்றி நண்பா
// Suresh Kumar said...
அருமையான விளக்கங்கள்//
மிக்க நன்றி நண்பா
இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும்]]
மிக வித்தியாசமான அருமையான சிந்தனை நண்பரே.
இதிலே உங்கள் அன்பு விளங்குகிறது.
மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். ]]
ஆம்! அழியட்டும்.
// நட்புடன் ஜமால் said...
இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும்]]
மிக வித்தியாசமான அருமையான சிந்தனை நண்பரே.
இதிலே உங்கள் அன்பு விளங்குகிறது.//
வாங்க நண்பா,...
மிக்க நன்றிபா
// நட்புடன் ஜமால் said...
மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். ]]
ஆம்! அழியட்டும்.//
ம்ம்ம் சரிதான் அழியட்டும்
மறுபடியுமா? முடியல...
பாத்து செய்யுங்க பாஸ்..
// கலையரசன் said...
மறுபடியுமா? முடியல...
பாத்து செய்யுங்க பாஸ்..//
வாங்க நண்பா,.. முடிந்தவரை பாத்து செய்யலாம் நண்பா....
திரு. ஞானசேகரன். அற்புதம். மிக மிக அருமையான் சிந்தனை.மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மிக அழகான விடயங்களைப் பற்றி என்னை எழுதவைக்கிறீர்கள். மிக்க நன்றி. ஓவ்வொன்றைப் பற்றிய்ம் நீங்கள் எழுதியிருப்பதை பாராட்ட எனக்கு வார்த்தையே இல்லை. மேலும் மேலும் அற்புதமான விடயங்கள் பற்றி எழுத என் வாழ்த்துக்கள்.
அன்புடன் உமா.
//உமா said...

அன்புடன் உமா.//
வாங்க உமா,.. வாழ்த்துகள்
உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க
விளக்கம் மிகவும் அருமையாக இருக்கு
// Mrs.Faizakader said...
விளக்கம் மிகவும் அருமையாக இருக்கு//
மிக்க நன்றிங்க...
உங்களின் முதல் வருகைக்கும் நன்றி
அருமையான விளக்கம் சேகரன்
அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும்.
நல்ல சிந்தனை
//முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது.//
ஞானம் காலை வணக்கம்.நீங்கள் மேல் சொன்னதுபோல மிக எளிதான் விடயம்போல இருந்தாலும் ஆழமாக யோசித்தால் வாழ்வையே ஆட்டி வைக்கும் தேவையான விஷயங்களாகவே இருகிறது.
நிறைவான உங்கள் மனதை அறியக்கூடியதாகவும் இருக்கு.நன்றி ஞானம்.தேர்ந்தெடுத்த அத்தனை பேரும் முத்துக்கள்.கலக்குவார்கள்.
// sakthi said...
அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும்.
நல்ல சிந்தனை//
வணக்கம் சக்தி..
மிக்க நன்றிங்க
// ஹேமா said...
//முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது.//
ஞானம் காலை வணக்கம்.நீங்கள் மேல் சொன்னதுபோல மிக எளிதான் விடயம்போல இருந்தாலும் ஆழமாக யோசித்தால் வாழ்வையே ஆட்டி வைக்கும் தேவையான விஷயங்களாகவே இருகிறது.
நிறைவான உங்கள் மனதை அறியக்கூடியதாகவும் இருக்கு.நன்றி ஞானம்.தேர்ந்தெடுத்த அத்தனை பேரும் முத்துக்கள்.கலக்குவார்கள்.//
வணக்கம் ஹேமா,..
இந்த தொடர் இடுகைக்கு அழைத்த உங்களுக்கு என் நன்றிகள்...
உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். ///
நல்ல தெளிவான விளக்கம்!!
இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.
வித்தியாசமான சிந்தனை. அருமை, நண்பரே
பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.
நல்ல விளக்கம்.
ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.
நிதர்சனம்
அருமையான விளக்கங்கள்
குறிப்பா அழகுக்கான விளக்கம்....
அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்
// S.A. நவாஸுதீன் said...
இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.
வித்தியாசமான சிந்தனை. அருமை, நண்பரே//
வணக்கம் நண்பா,... உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க
//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.
நல்ல விளக்கம்.//
நன்றி நன்றி
//ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.
நிதர்சனம்//
மிக்க நன்றி
// தேவன் மாயம் said...
உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். ///
நல்ல தெளிவான விளக்கம்!!//
மிக்க நன்றி தேவன் சார்...
// பிரியமுடன்...வசந்த் said...
அருமையான விளக்கங்கள்
குறிப்பா அழகுக்கான விளக்கம்....//
மிக்க நன்றி நண்பா
// வலசு - வேலணை said...
அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்//
உங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பா
கொஞ்சம் லேட்டா வந்தேன்..ஆனா அதுக்குள்ள இத்தனை வாழ்த்துக்கள்!!
நானும் சேர்ந்து கொள்கிறேங்க!!!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
கொஞ்சம் லேட்டா வந்தேன்..ஆனா அதுக்குள்ள இத்தனை வாழ்த்துக்கள்!!
நானும் சேர்ந்து கொள்கிறேங்க!!!//
வாங்க நண்பா வணக்கம்
மிக்க நன்றிபா
அனைத்திற்கும் அடிப்படை அன்பு நன்று....திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்பார்.....அன்பிருந்தால் எதனையும் பெறலாம்.......
பரிபாடலில் ஒரு பாட்டு இறைவனிடத்து வேண்டும் புலவர் யாம் இரப்பவை பொன்னோ பொருளோ போகமோ அல்ல நின் பால் அன்பும் அருளும்,அறனும் என்பார்.
நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.
// முனைவர் சே.கல்பனா said...
அனைத்திற்கும் அடிப்படை அன்பு நன்று....திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்பார்.....அன்பிருந்தால் எதனையும் பெறலாம்.......
பரிபாடலில் ஒரு பாட்டு இறைவனிடத்து வேண்டும் புலவர் யாம் இரப்பவை பொன்னோ பொருளோ போகமோ அல்ல நின் பால் அன்பும் அருளும்,அறனும் என்பார்.
நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.//
வணக்கம்...
நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டு இருப்பதாகவே இருக்கட்டும் அந்த சக்தி மானுடம் காக்க வேண்டும் என்பதே என் ஆசைகள்..
மிக்க நன்றிங்க
//கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். //
உங்கள் இடுகையின் இந்தப் பகுதி என்னைக் கவலைப் படுத்தியது. நீங்கள் கடவுள் வேறு மதங்கள் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுக்கு அழும் பிள்ளைக்கு நாங்கள் சூப்பியைக் கொடுப்பது போல்தான் இது . பால் தான் கடவுள் இந்த சூப்பிதான் மதம்.
/// ஜெஸ்வந்தி said...
//கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். //
உங்கள் இடுகையின் இந்தப் பகுதி என்னைக் கவலைப் படுத்தியது. நீங்கள் கடவுள் வேறு மதங்கள் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுக்கு அழும் பிள்ளைக்கு நாங்கள் சூப்பியைக் கொடுப்பது போல்தான் இது . பால் தான் கடவுள் இந்த சூப்பிதான் மதம்.///
வணக்கம்ங்க,..
நீங்கள் சொல்வதையும் ஏற்றுகொண்டால்.. கடவுளின் பெயரால் மதங்கள் அடித்துக்கொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை... அதாவது மானிடம் அடித்துகொள்கின்றது மதத்தின் பெயரால்..
Nalla aarambam Gnanaseharan.
// Muniappan Pakkangal said...
Nalla aarambam Gnanaseharan.//
மிக்க நன்றி சார்
அருமையான விளக்கம்
// கதிர் - ஈரோடு said...
அருமையான விளக்கம்//
மிக்க நன்றி நண்பா
கடவுள் விசயத்தில் இருவரும் ஒத்து போகிறோம்!
//ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது.//
நாவும், கண்களும் புலன் உருப்புகள். அவை குறிப்புகளை மின்னலையாக மூளைக்கு அனுப்புகின்றன. அனைத்து உணர்ச்சிகளும் மூளையிலே நிகழ்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவிய சில உணவுகளை சுவையாகவும், சிலவற்றை (ஆணின் சில அம்சங்கள், பெண்ணின் சில அம்சங்கள், இயற்கையின் சில தோற்றங்கள்) அழகாகவும் நம் மூளை உணர்த்துகின்றது.
சுவை, அழகு, அன்பு, காதல் எல்லாம் மூளையின்-உணர்ச்சி-பகுதியில் உணரப்படும் உணர்வுகள். கடவுள் என்ற கருத்து பல உணர்ச்சிகளை பயன்படுத்தி நம்மை ஆட்படுத்தும் ஒருவகையான மது. மூளை உணர்த்தும் அனைத்து உணர்ச்சிகளும் 100% நல்லதென்று சொல்வதற்கில்லை. அதனால் தான், பரிணாம வளர்ச்சியில் நாம் அறிவையும் பெற்றுள்ளோம். ஆனால், அறிவை எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. அதிகமான சீனி, உடலுக்கு நல்லதல்ல என்று மூளையின்-அறிவு-பகுதி சொன்னாலும், நம்மால் மூளையின்-உணர்ச்சி-பகுதியை எளிதாக மாற்ற இயலாது. கடவுளுக்கும் மதுவுக்கும் அடிமையான பிறகு, அதிலிருந்து தெளிவடைவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் முற்றிலும் அடிமையாகாமல் அளவாக அவற்றை பயன்படுத்துகின்றனர்; அதில் சில நன்மைகளும் இருக்கின்றன. அளவிற்கு அதிகமானால், காதலும் நம்மை அடிமைப்படுத்தும். காதலை மிகைப்படுத்தி, புனிதப்படுத்தாமல், அதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது உகந்தது; அது காதல்-துயரங்களையும், காதல்-மனநிலை-பாதிப்புகளையும், காதல்-தற்கொலைகளையும் குறைக்கும்.
// வால்பையன் said...
கடவுள் விசயத்தில் இருவரும் ஒத்து போகிறோம்!//
இருக்கட்டும் நண்பா,..
ஏதாவது ஒத்துப்போனாதானே நண்பர்கள்னு சொல்ல முடியும்..
மிக்க நன்றிபா
/// RajK said...
//ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது.//
நாவும், கண்களும் புலன் உருப்புகள். அவை குறிப்புகளை மின்னலையாக மூளைக்கு அனுப்புகின்றன. அனைத்து உணர்ச்சிகளும் மூளையிலே நிகழ்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவிய சில உணவுகளை சுவையாகவும், சிலவற்றை (ஆணின் சில அம்சங்கள், பெண்ணின் சில அம்சங்கள், இயற்கையின் சில தோற்றங்கள்) அழகாகவும் நம் மூளை உணர்த்துகின்றது.
சுவை, அழகு, அன்பு, காதல் எல்லாம் மூளையின்-உணர்ச்சி-பகுதியில் உணரப்படும் உணர்வுகள். கடவுள் என்ற கருத்து பல உணர்ச்சிகளை பயன்படுத்தி நம்மை ஆட்படுத்தும் ஒருவகையான மது. மூளை உணர்த்தும் அனைத்து உணர்ச்சிகளும் 100% நல்லதென்று சொல்வதற்கில்லை. அதனால் தான், பரிணாம வளர்ச்சியில் நாம் அறிவையும் பெற்றுள்ளோம். ஆனால், அறிவை எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. அதிகமான சீனி, உடலுக்கு நல்லதல்ல என்று மூளையின்-அறிவு-பகுதி சொன்னாலும், நம்மால் மூளையின்-உணர்ச்சி-பகுதியை எளிதாக மாற்ற இயலாது. கடவுளுக்கும் மதுவுக்கும் அடிமையான பிறகு, அதிலிருந்து தெளிவடைவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் முற்றிலும் அடிமையாகாமல் அளவாக அவற்றை பயன்படுத்துகின்றனர்; அதில் சில நன்மைகளும் இருக்கின்றன. அளவிற்கு அதிகமானால், காதலும் நம்மை அடிமைப்படுத்தும். காதலை மிகைப்படுத்தி, புனிதப்படுத்தாமல், அதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது உகந்தது; அது காதல்-துயரங்களையும், காதல்-மனநிலை-பாதிப்புகளையும், காதல்-தற்கொலைகளையும் குறைக்கும்.///
உங்களின் ஆழமான கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜ்
//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.//
அருமையான வரிகள் நண்பா. தொடர் ஒடுகையில் அடர் கருத்துக்கள். நன்று
//" உழவன் " " Uzhavan " said...
//பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும்.//
அருமையான வரிகள் நண்பா. தொடர் ஒடுகையில் அடர் கருத்துக்கள். நன்று//
மிக்க நன்றி நண்பா
Post a Comment