_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, October 7, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...

சென்ற பகுதியின் பின்னூட்டத்தில் ஷண்முகப்ரியன் அவர்கள் சொன்ன கருத்து எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது.
ஷண்முகப்ரியன் said...

ஏழ்மைக்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
பொருளாதார முறைகேடுகள்,சமூகவியல் காரணங்கள்,இயற்கையின் சீற்றங்கள்,ஆன்மீகத் தேறுதல்கள்,ஜோதிடக் கணிப்புக்கள்,மக்களின் அறிவின்மை,மனிதர்களின் ஆற்றலின்மை,விதியின் கொடுமைகள் இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் ஏழை மட்டும் ஏழையாகவே இருக்கிறான்.

இவற்றிக்கு விடைத்தேடும் தேடல்தான் இந்த பகிர்வு. எத்தனை காரணங்கள் இருந்துவிட்டு போகட்டும் சாதாரண மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் அரசு குற்றவாளிதான். ஒரு நாட்டின் மிக பெரிய சொத்து இந்த மண் மற்றும் அந்த மண்ணின் மைந்தன் இவை இரண்டும் பொதிந்து கிடக்கும் பாரதத்தில் பட்டினிகளும் பட்டினிச்சாவுகளும் இருக்கின்றது என்றால் நிச்சயம் ஒரு மாபெரும் முறைகேடுக்கு அரசு துணைபோகின்றது என்பதுதான் உண்மை.
ஏழ்மையிலிருந்து சாமானியன் விடுபட வேண்டும் என்றால், அவனுக்கு தேவை தரமான கல்வி. அந்த கல்வி தற்பொழுது வியாபாரமாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். காமராஜர் கொண்டுவந்த இலவச கல்வி மற்றும் மதிய உணவுத்திட்டம் எல்லாம் மூடப்பட்டுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை சாமானிய ஏழைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்காமலே இந்த அரசாங்கமும் இருந்து வருகின்றது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுவது எத்தனை சாமானியனுக்கு தெரிந்துள்ளது. அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். அதே போல் அந்த கல்விக் கடன் பெறுவதும் சுலபமாக்கப்படவில்லை. தற்பொழுது வந்துள்ள செய்தி வட்டி இல்லாத கல்விக் கடன் பெறுவதில் சிக்கல் : தவிக்கும் மாணவ மாணவியர்

பொதுவாக இந்தியாவிலும் முக்கியமாக தமிழகத்திலும் சமீபகாலமாக வேலையிடங்களில் நேர்மை குறைந்துள்ளதும் அதனால் அவர்கள் வேலையிழப்புக்கு ஆழாவதும் காணமுடிகின்றது. இவ்வாறு அவர்களாகவே ஏழ்மையை தேடிச்செல்லும் அவலங்களும் நடந்துக்கொண்டுதான் உள்ளது. உழைப்பை சுரண்டி திண்ணும் பெரிச்சாலிகளுக்கு மத்தியில் உழைக்க மறுக்கும் சோம்பேரிகளும் இருக்கதான் செய்கின்றனர். இதனால் பிச்சை எடுக்கும் அவலங்களும் பெருகி வருகின்றது. காலம் காலமாக நம்மோடு கலந்தே வருவது இந்த ஏழ்மையும் ஒன்று, இதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிலரை மட்டும் குறை சொல்வது என்பது சரியாகுமா? என்ற கேள்வியும் இருக்கதான் செய்கின்றது. ஒரு மனிதனின் இரண்டு கைகள் அவனின் உழைப்பும் இந்த நாட்டின் மிக பெரிய சொத்து. அதை இந்த நாடும் இந்த நாட்டு அரசும் முறையாக பயன்படுத்திக்கொண்டாலே ஏழ்மை பறந்தோடி போகும். வேலை என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதைவிட வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

பணம், தங்கம், போன்ற செல்வ மதிப்புகள் எல்லாம் மாயையானது. ஆனால் இந்த மண்ணின் மதிப்பு நிரந்தரமானது. இந்த மண் அரசுடைமையாக்கப்பட வேண்டும். முறையான நில பட்டாக்கள் வழங்கப்பட்டாலே இந்தியாவின் ஏழ்மை பறந்தோடும் என்பதுதான் உண்மை. நிலம் யாருக்கும் முழு சொந்தமாக்கக்கூடாது எல்லாம் அரசுக்குதான் சொந்தம் அவற்றை பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும் அதற்கான வரிகள் வசூல் செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களால் நிலபிரபுகளிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான நிலங்களை சாமானிய எழைகள் பயன்படுத்த முடியும். இதனால் அவர்களின் ஏழ்மை விரட்டப்படும்.

ஒருவன் பசி என்று வருகின்ற பொழுது அவனுக்கு ஒரு மீன் துண்டை கொடுப்பதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும். என்பது பைபிளின் வாசகம், ஒருவனுக்கு இலவசமாக கொடுக்க வேண்டியது கல்வியும் வேலைக்காண வாய்ப்பும் ஆகும். அதை விட்டுவிட்டு கவர்ச்சிகரமான இலவசங்களை தவிற்கப்பட வேண்டும்.

இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


40 comments:

தேவன் மாயம் said...

இப்போதைக்கு ஓட்டு மட்டும்! தமிலிஷ் ஓட்டுப்பட்டை எங்கே? மண்ற்கேணி போட்டிப் பதிவுகளை இனி வலையில் பதிவிடலாமா?

கலையரசன் said...

உண்மைதான் தோழரே...
ஓட்டும் போட்டாச்சு!!

ஈரோடு கதிர் said...

//வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.//

சரியா சொன்னீர்கள்

பொருள் பொதிந்த இடுகை

வால்பையன் said...

விழிப்புணர்வின்மையே முக்கிய காரணம் என்பது என் கருத்து!

அரசிடம் உதவி வாங்க கூட விழிப்புணர்வு தேவை!

Robin said...

// இந்த மண் அரசுடைமையாக்கப்பட வேண்டும். // இதற்கு நேர்மையான திறமையான அரசாங்கம் தேவை. நம் நாட்டில் இது சாத்தியமில்லை!

//தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.// தன்னலமில்லா சர்வாதிகாரம் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம். அதிகார போதை தலைக்கேரும்போது மனிதன் தன்னிலை இழந்து விடுகிறான்.

மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நிலை என்று வருகிறதோ, அன்று தான் நம் நாடு உருப்படும்.

S.A. நவாஸுதீன் said...

தரமான கல்வி நிச்சயம் தேவை. இன்றைய சூழ்நிலையில் அரசு வழங்கும் சலுகைகள் மட்டுமல்ல அதனைக் குறித்த செய்திகள் கூட பல கிராமங்களை எட்டுவதில்லை நண்பா.

K.R.அதியமான் said...

///இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை///

இல்லை நண்பரே. மிக தவறான அனுமானம். எவ்வகை சர்வாதிகாரமும் (அது தொழிலாளார் வர்க சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி) எதிர்மறையான விளைவுகளைதான் எற்படுத்தும். வறுமையை களைய முடியாது. வறுமை ஒழிப்பு பற்றிய எமது பழைய பதிவு :

http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

இப்போதைக்கு ஓட்டு மட்டும்! தமிலிஷ் ஓட்டுப்பட்டை எங்கே? மண்ற்கேணி போட்டிப் பதிவுகளை இனி வலையில் பதிவிடலாமா?..//

வணக்கம் டாக்டர்...

மணற்கேணி கட்டுரைகளை உங்கள் பதிவுகளில் பதிவிடலாம்...


அவற்றைப்பற்றிய விளக்கம் இங்கு பார்க்கவும்

ஆ.ஞானசேகரன் said...

// கலையரசன் said...

உண்மைதான் தோழரே...
ஓட்டும் போட்டாச்சு!!//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

//வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.//

சரியா சொன்னீர்கள்

பொருள் பொதிந்த இடுகை//

வணக்கம் கதிர்.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

விழிப்புணர்வின்மையே முக்கிய காரணம் என்பது என் கருத்து!

அரசிடம் உதவி வாங்க கூட விழிப்புணர்வு தேவை!//

முற்றிலும் உண்மையான கருத்து.... விழிப்புணர்வு தேவைதான் வாலபையன்.. உங்களின் கருத்திற்கு மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[ Robin said...

// இந்த மண் அரசுடைமையாக்கப்பட வேண்டும். // இதற்கு நேர்மையான திறமையான அரசாங்கம் தேவை. நம் நாட்டில் இது சாத்தியமில்லை!]]

அப்படிப்பட்ட நிலையைதான் நாம் எதிர்நோக்கியுள்ளோம்

[[ //தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.// தன்னலமில்லா சர்வாதிகாரம் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம். அதிகார போதை தலைக்கேரும்போது மனிதன் தன்னிலை இழந்து விடுகிறான்.]]

நீங்கள் சொல்ல்வதில் உண்மை இருக்கின்றது.ஆகவேதான் சிறிதுகாலம் மட்டுமே வேண்டும் என்று சொல்லுகின்றேன். ஒரு புரட்சிக்கு பின் விடிவு பிறக்கலாம் என்ற நற்பாசைதான்... மிக்க நன்றி நண்பா

மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நிலை என்று வருகிறதோ, அன்று தான் நம் நாடு உருப்படும்.

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

தரமான கல்வி நிச்சயம் தேவை. இன்றைய சூழ்நிலையில் அரசு வழங்கும் சலுகைகள் மட்டுமல்ல அதனைக் குறித்த செய்திகள் கூட பல கிராமங்களை எட்டுவதில்லை நண்பா.//

ம்ம்ம் அப்படிப்பட்ட சூழலில்தான் இருக்கின்றோம் நண்பா. வால்பையன் சொல்வதை போல் எல்லாவற்றிக்கும் விழிப்புணர்வு தேவைதான்.

ஆ.ஞானசேகரன் said...

[[ K.R.அதியமான் said...

///இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை///

இல்லை நண்பரே. மிக தவறான அனுமானம். எவ்வகை சர்வாதிகாரமும் (அது தொழிலாளார் வர்க சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி) எதிர்மறையான விளைவுகளைதான் எற்படுத்தும். வறுமையை களைய முடியாது. வறுமை ஒழிப்பு பற்றிய எமது பழைய பதிவு :

http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்]]

உங்களின் இடுகையும் படித்தேன் நண்பா பாராட்டுகள். எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான். அதற்க்காகதான் சிறிது காலம் மட்டும் தேவை என்று குறிப்பிட்டுள்ளேன். முதலாளித்துவ பொருளாதார கொள்கையும் நம்நாடிற்கு ஏற்புடையதாக இருக்காது, பணம்படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றது. மிக்க நன்றி நண்பா..

பழமைபேசி said...

ஞானியார்...சிந்தனை இடுகைகள்...நன்றி!

ஷண்முகப்ரியன் said...

நான் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன்,ஞானசேகரன்.
ஏழை ஏழையாக இருப்பதற்குக் காரணம் ஏழைதான்.
வாய்ப்பின்மை,படிப்பின்மை போன்ற இல்லாமைகளில் இருக்கும் இருவரில் ஒருவன் மட்டும் பணக்காரனாகிறானே எப்படி?
சமமான துயரங்களில் இருந்து சிலர் மட்டும் விடுபடுகிறார்களே,எப்படி?

அறிவின்மை என்பதுதான் ஒரே பதிலாய் எனக்குத் தோன்றுகிறது.
வாழ்க்கையைச் சரியாகப் பார்க்காத,பயன் படுத்திக் கொள்ளாத அறிவு.

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

ஞானியார்...சிந்தனை இடுகைகள்...நன்றி!//

வணக்கம் நண்பா... உங்களின் வருகை மகிழ்ச்சியே....

ஆ.ஞானசேகரன் said...

[[ ஷண்முகப்ரியன் said...

நான் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன்,ஞானசேகரன்.
ஏழை ஏழையாக இருப்பதற்குக் காரணம் ஏழைதான்.
வாய்ப்பின்மை,படிப்பின்மை போன்ற இல்லாமைகளில் இருக்கும் இருவரில் ஒருவன் மட்டும் பணக்காரனாகிறானே எப்படி?
சமமான துயரங்களில் இருந்து சிலர் மட்டும் விடுபடுகிறார்களே,எப்படி?

அறிவின்மை என்பதுதான் ஒரே பதிலாய் எனக்குத் தோன்றுகிறது.
வாழ்க்கையைச் சரியாகப் பார்க்காத,பயன் படுத்திக் கொள்ளாத அறிவு.//

உங்களின் எண்ணங்களும் சிந்திக்க வைக்கின்றது ஷண்முகப்ரியன் சார்.. உங்கள் சிந்தனைக்கு நான் மதிப்பழிப்பதுண்டு அதுபோல இதுவும். மிக்க நன்றி சார்.

ஹேமா said...

ஞானம் நிறைவான பதிவு.
சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தி செயல்பட வைத்தலே மிகச்சிறப்பு.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் நிறைவான பதிவு.
சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தி செயல்பட வைத்தலே மிகச்சிறப்பு.//

வாங்க ஹேமா..
சம்பந்தப்பட்டவர்கள ஒரு சிலரேனும் மாற வேணடும் என்பதே எல்லோருடைய எண்ணங்கள்... மிக்க நன்றி ஹேமா

கார்த்திகைப் பாண்டியன் said...

நிஜமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

நிஜமானால் எத்தனை நன்றாக இருக்கும்?//

வணக்கம் கார்த்திகை பாண்டியன்..
என்னுடைய ஆசைகளும் அதுதான்

Suresh Kumar said...

நல்ல கருத்துக்கள் நண்பா . இது போன்ற இடுகைகள் தான் மிக avasiyam

K.R.அதியமான் said...

//உங்களின் இடுகையும் படித்தேன் நண்பா பாராட்டுகள். எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான். அதற்க்காகதான் சிறிது காலம் மட்டும் தேவை என்று குறிப்பிட்டுள்ளேன். முதலாளித்துவ பொருளாதார கொள்கையும் நம்நாடிற்கு ஏற்புடையதாக இருக்காது, பணம்படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றது. மிக்க நன்றி நண்பா.. ///

இல்லை. தற்காலிக சர்வாதிகாரம் சாத்தியமில்லை. தற்காலிகம், நிரந்தரமாகிவிடும். பாக்கிஸ்தான் போல. இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் இங்கு முழு ஜனனாயகம் இல்லாதுதான் பிரச்சனை. தீர்வு அதை முழுமையாக்குவதுதான்.

முதலாளித்வம் பற்றி நிறைய அறியாமை இருக்கிறது. அதனால் தான் இது போன்ற கருத்துக்கள். எனது பதிவில் ஜப்பான், ஜெர்மனி, தைவான் போன்ற நாடுகள் வறுமையை வெகுவாக குறைத்த விந்தை பற்றி எழுதியிருந்ததை பார்த்த பிறகும் இப்படி ஒரு ‘மூட நம்பிக்கை’ !!!

மாற்று வழிகள் இல்லை. அவை எதிர்மறையான விளைவுகளைதாம் ஏற்படுத்தும் என்பதே வரலாறு தரும் பாடம். மேலும்..

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...
நல்ல கருத்துக்கள் நண்பா . இது போன்ற இடுகைகள் தான் மிக avasiyam//

மிக்க நன்றி சுரேஷ் குமார்.

ஆ.ஞானசேகரன் said...

[[ K.R.அதியமான் said...
//உங்களின் இடுகையும் படித்தேன் நண்பா பாராட்டுகள். எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான். அதற்க்காகதான் சிறிது காலம் மட்டும் தேவை என்று குறிப்பிட்டுள்ளேன். முதலாளித்துவ பொருளாதார கொள்கையும் நம்நாடிற்கு ஏற்புடையதாக இருக்காது, பணம்படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றது. மிக்க நன்றி நண்பா.. ///

இல்லை. தற்காலிக சர்வாதிகாரம் சாத்தியமில்லை. தற்காலிகம், நிரந்தரமாகிவிடும். பாக்கிஸ்தான் போல. இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் இங்கு முழு ஜனனாயகம் இல்லாதுதான் பிரச்சனை. தீர்வு அதை முழுமையாக்குவதுதான்.]]
இதேல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லைதான். முன்னால் பிரதமர் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரக்கால திட்டம் இந்தியாவில் சில மாறுதல்கள் உருவாகின என்பதும் உண்மைதானே. அதுபோல ஒரு மாற்றத்தினால்தான் பதுக்கல் பெரிச்சாலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும். சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள கள்ளப்பணத்தை எந்த ஜனநாயக சட்டத்தால் மீட்டேடுக்க முடியும்.. சாந்தியம் இல்லை என்றாலும் தேவைப்போல் தெரிகின்றது நண்பா..


[[முதலாளித்வம் பற்றி நிறைய அறியாமை இருக்கிறது. அதனால் தான் இது போன்ற கருத்துக்கள். எனது பதிவில் ஜப்பான், ஜெர்மனி, தைவான் போன்ற நாடுகள் வறுமையை வெகுவாக குறைத்த விந்தை பற்றி எழுதியிருந்ததை பார்த்த பிறகும் இப்படி ஒரு ‘மூட நம்பிக்கை’ !!!

மாற்று வழிகள் இல்லை. அவை எதிர்மறையான விளைவுகளைதாம் ஏற்படுத்தும் என்பதே வரலாறு தரும் பாடம். மேலும்..]]

முதலாளித்துவ கொள்கை முழுமையாக வெற்றி என்று சொல்வதிற்கில்லை. இன்று ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலையை போக்க ஏதோ ஒரு நாட்டுடன் சண்டைக்கு தயாராகி கொண்டுள்ளது. அப்படி பார்த்தால் அமேரிக்காவில் ஏழைகள் இல்லை என்று சொல்ல முடியுமா? சோம்பேரிகள் எங்கிருந்தாலும் ஏழைகள்தான்.,,
உங்களின் அருமையான் கருத்துரைக்கு நன்றி நண்பா....பாராட்டுகள்

கிரி said...

சரியாக திட்டமிடாததும் ஒரு காரணம்..கடும் உழைப்பு மட்டுமே ஒருவனை முன்னேற்றி விடாது..அதற்க்கு நமது புத்திசாலிதனத்தையும் பயன்படுத்தணும்

ஆ.ஞானசேகரன் said...

//கிரி said...
சரியாக திட்டமிடாததும் ஒரு காரணம்..கடும் உழைப்பு மட்டுமே ஒருவனை முன்னேற்றி விடாது..அதற்க்கு நமது புத்திசாலிதனத்தையும் பயன்படுத்தணும்//

சரியாக சொன்னீங்க கிரி

வினோத் கெளதம் said...

கொஞ்சம் உண்மையை நினைக்க கஷ்டமாக தான் இருக்கிறது நண்பரே..
ஏழை எழையாக தான் உள்ளனர்..

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
கொஞ்சம் உண்மையை நினைக்க கஷ்டமாக தான் இருக்கிறது நண்பரே..
ஏழை எழையாக தான் உள்ளனர்..//

வணக்கம் நண்பா,.. உஙகளின் வருகை மகிழ்ச்சியே..

CorTexT (Old) said...

உங்களுடைய ஆதங்கம் தெரிகின்றது. அதே நேரம், உங்களுடைய குழப்பமும் தெரிகின்றது. அரசை குற்றம் சொல்லுகின்றீர்கள்; கூடவே அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் என்கின்றீர்கள். அடுத்து சர்வாதிகாரம் வேண்டும் என்கின்றீர்கள். நாட்டில் கொலை குற்றங்களை கண்டிக்கவே போதுமான செயல்முறை இல்லாதபோது, வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்கின்றீர்கள்; அது அவனவன் விருப்பம்.

நீங்கள் கூறியவைகள் நடைமுறைக்கு ஒத்துவராத, நிலையற்ற அமைப்பையே உருவாக்கும். மனதுக்கு சரியென்று படுவதெல்லாம் சரியான வழிகள் அல்ல. அதற்கு முறையான ஆராய்ச்சி தேவை. பல அறிஞர்கள் அதை செய்துள்ளனர்; செய்து கொண்டும் உள்ளனர். குறைகள் அற்ற எந்த வழிகளும் இல்லையென்றாலும், இப்பொழுதைக்கு மனிதகுலத்திற்கு தெரிந்த, நடைமுறைக்கு உகந்த வழிகள்: அரசியலில் ஜனநாயகமும், பொருளாதாரத்தில் தனியுடமை/முதலாளித்துவமும் தான். இது இந்தியா உட்பட எல்லா சமூகத்திற்கும் ஏற்றது.

ஆ.ஞானசேகரன் said...

[[RajK said...
உங்களுடைய ஆதங்கம் தெரிகின்றது. அதே நேரம், உங்களுடைய குழப்பமும் தெரிகின்றது. அரசை குற்றம் சொல்லுகின்றீர்கள்; கூடவே அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் என்கின்றீர்கள். அடுத்து சர்வாதிகாரம் வேண்டும் என்கின்றீர்கள். நாட்டில் கொலை குற்றங்களை கண்டிக்கவே போதுமான செயல்முறை இல்லாதபோது, வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்கின்றீர்கள்; அது அவனவன் விருப்பம்.]]

ஆதங்கமும் ஆசைகளும் என்று வைத்துக்கொள்ளலாமே,... வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் குறைய வேண்டும் என்றால் சில மாற்றங்கள் வந்துதானே ஆகவேண்டும். அதேபோல் வேலை என்பது அடிப்படை உரிமையாக்க படும்பொழுது வேலை செய்யாமல் இருப்பதற்கு காராணங்களை சொல்லிதான் ஆகவேண்டும் அப்படி சரியான காரணம் இல்லை என்றால் அரசால் கொடுக்கப்படும் உரிமை எதற்கு.?

[[நீங்கள் கூறியவைகள் நடைமுறைக்கு ஒத்துவராத, நிலையற்ற அமைப்பையே உருவாக்கும். மனதுக்கு சரியென்று படுவதெல்லாம் சரியான வழிகள் அல்ல. அதற்கு முறையான ஆராய்ச்சி தேவை. பல அறிஞர்கள் அதை செய்துள்ளனர்; செய்து கொண்டும் உள்ளனர். குறைகள் அற்ற எந்த வழிகளும் இல்லையென்றாலும், இப்பொழுதைக்கு மனிதகுலத்திற்கு தெரிந்த, நடைமுறைக்கு உகந்த வழிகள்: அரசியலில் ஜனநாயகமும், பொருளாதாரத்தில் தனியுடமை/முதலாளித்துவமும் தான். இது இந்தியா உட்பட எல்லா சமூகத்திற்கும் ஏற்றது.]]

இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்திருந்தால் இன்றைய ஒன்றுப்பட்ட இந்தியாவை பார்க்க முடியாதே! இன்றும் குட்டி குட்டி ராஜியங்களாகத்தான் இருந்திருக்கும். அதுபோல் லஞ்சம், பதுக்கல்களில் சிதைந்த இந்தியாவை மீட்டெடுக்க ஒரு புரட்சி தேவைப்படுவதைதான் சொல்லியுள்ளேன். மற்றப்படி ஆராட்சி தேவை என்பதை ஒப்புகொள்கின்றேன்..

உங்களின் சிறப்பான கருத்துரைக்களுக்கு மிக்க நன்றிபா..

CorTexT (Old) said...

//இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்திருந்தால் இன்றைய ஒன்றுப்பட்ட இந்தியாவை பார்க்க முடியாதே! இன்றும் குட்டி குட்டி ராஜியங்களாகத்தான் இருந்திருக்கும்.//

ஒரு நிலம், இந்திய மாநிலங்களாகவோ, ஐரோப்பிய நாடுகளாகவோ நிர்வகிக்கப்படலாம்; மேலும் அவை ஒன்று கூடி இந்தியா என்ற நாடாகவோ, யூரோ என்ற பொருளாதார ஒருங்கினைப்பாகவோ செயல்படலாம். வெளிச்சந்தை மற்றும் உலகமயமாக்கலில் மாநிலங்களின், நாடுகளின் எல்லைக் கோடுகள் வெறும் நிர்வாக கோடுகளாக மாறிகொண்டுள்ளன. அப்படிப்பட்ட நாடுகளே முன்னேறுகின்றன.

ஒரு நாட்டில் ஜனநாயக அமைப்பை கொண்டுவருவது அவ்வளவு எளிய காரியம் அல்ல; அதுவும் இந்தியா போன்ற பல்வை பிரிவினைகளை கொண்ட நாட்டில்! அதை இன்று நாம் வெற்றிகரமாக நடத்தி வருவதே ஒரு நல்ல சாதனை தான். சில மாற்றங்களை ஒரு கம்பெனியில் கொண்டுவருவதே கடினமாக உள்ளது. இன்றைய இந்தியாவிற்கு, சில மாற்றங்கள் தேவைதான் என்றாலும், அதற்கு புரட்சி எல்லாம் தேவையில்லை; மக்களுக்கு மன முதிர்ச்சி, அறிவு வளர்ச்சி தேவை.

அபரிதமான தீடீர் பொருளாதார வளர்ச்சியும் நல்லதல்ல. அது நிலையாக இருக்காது. உடனடியாக ஏழ்மையை போக்க வேண்டுமானால் ஏதாவது மேஜிக் அல்லது கடவுள் தான் வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்திருந்தால் இன்றைய ஒன்றுப்பட்ட இந்தியாவை பார்க்க முடியாதே! இன்றும் குட்டி குட்டி ராஜியங்களாகத்தான் இருந்திருக்கும்.//

ஒரு நிலம், இந்திய மாநிலங்களாகவோ, ஐரோப்பிய நாடுகளாகவோ நிர்வகிக்கப்படலாம்; மேலும் அவை ஒன்று கூடி இந்தியா என்ற நாடாகவோ, யூரோ என்ற பொருளாதார ஒருங்கினைப்பாகவோ செயல்படலாம். வெளிச்சந்தை மற்றும் உலகமயமாக்கலில் மாநிலங்களின், நாடுகளின் எல்லைக் கோடுகள் வெறும் நிர்வாக கோடுகளாக மாறிகொண்டுள்ளன. அப்படிப்பட்ட நாடுகளே முன்னேறுகின்றன.]]

உண்மைதான் இப்படிபட்ட மாற்றங்களை கொண்டுவர சில அந்தரங்கமான செயல்களும் தேவையாகின்றது. அதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

[[ஒரு நாட்டில் ஜனநாயக அமைப்பை கொண்டுவருவது அவ்வளவு எளிய காரியம் அல்ல; அதுவும் இந்தியா போன்ற பல்வை பிரிவினைகளை கொண்ட நாட்டில்! அதை இன்று நாம் வெற்றிகரமாக நடத்தி வருவதே ஒரு நல்ல சாதனை தான். சில மாற்றங்களை ஒரு கம்பெனியில் கொண்டுவருவதே கடினமாக உள்ளது. இன்றைய இந்தியாவிற்கு, சில மாற்றங்கள் தேவைதான் என்றாலும், அதற்கு புரட்சி எல்லாம் தேவையில்லை; மக்களுக்கு மன முதிர்ச்சி, அறிவு வளர்ச்சி தேவை.]]

முதிர்ச்சி அறிவு தேவையானாலும் பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கதான் செய்யும். அவற்றையெல்லாம் கலைவதும் கடினமே. இருப்பினும் திடீர் மாற்றங்களால் சாத்தியமாக்கபடுகின்றது.

[[அபரிதமான தீடீர் பொருளாதார வளர்ச்சியும் நல்லதல்ல. அது நிலையாக இருக்காது. உடனடியாக ஏழ்மையை போக்க வேண்டுமானால் ஏதாவது மேஜிக் அல்லது கடவுள் தான் வேண்டும்.]]

சரியான கூற்று மிக்க நன்றிபா

Muniappan Pakkangal said...

You are travelling in a nice path Gnanaseharan-Social thinking,keep it up.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
You are travelling in a nice path Gnanaseharan-Social thinking,keep it up.
//

thanks sir..

அன்புடன் நான் said...

ஒருவன் பசி என்று வருகின்ற பொழுது அவனுக்கு ஒரு மீன் துண்டை கொடுப்பதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும்.//

தங்களின் இந்த பொறுப்பான அக்கறையுள்ள பதிவுக்கு என் பாராட்டுக்கள் . பதிவு தெளிவாகவும்.ஆழமாகவும் உள்ளது பாராட்டுக்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

[[சி. கருணாகரசு said...
ஒருவன் பசி என்று வருகின்ற பொழுது அவனுக்கு ஒரு மீன் துண்டை கொடுப்பதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும்.//

தங்களின் இந்த பொறுப்பான அக்கறையுள்ள பதிவுக்கு என் பாராட்டுக்கள் . பதிவு தெளிவாகவும்.ஆழமாகவும் உள்ளது பாராட்டுக்கள் நண்பா.
]]


வாங்க நண்பா, நலமா? உங்களின் பாராட்டுகளுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க‌

ரோஸ்விக் said...

//இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.//

இந்த இடுகை முழுவதும் சிந்திக்க கூடியது....என் கருத்துக்களோடு உடன் படுகிறது...
மேல உள்ள வாசகம் நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பது...சிங்கப்பூர்-ல் நடப்பது சர்வாதிகாரத்தோடு கூடிய ஜனநாயகம் அல்லது ஜனநாயகத்தோடு கூடிய சர்வாதிகாரம். அது தான் சிறப்பாக உள்ளது...நாமும் இதை விரைவில் அமுல் படுத்துவோம் நண்பரே......

http://thisaikaati.blogspot.com

ஆ.ஞானசேகரன் said...

[[ ரோஸ்விக் said...

//இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.//

இந்த இடுகை முழுவதும் சிந்திக்க கூடியது....என் கருத்துக்களோடு உடன் படுகிறது...
மேல உள்ள வாசகம் நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பது...சிங்கப்பூர்-ல் நடப்பது சர்வாதிகாரத்தோடு கூடிய ஜனநாயகம் அல்லது ஜனநாயகத்தோடு கூடிய சர்வாதிகாரம். அது தான் சிறப்பாக உள்ளது...நாமும் இதை விரைவில் அமுல் படுத்துவோம் நண்பரே......]]

என் எண்ணங்களையும் சரியாக புரிந்துக்கொண்டீர்கள் நண்பரே.. மிக்க நன்றி