முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
சென்ற பகுதியின் பின்னூட்டத்தில் ஷண்முகப்ரியன் அவர்கள் சொன்ன கருத்து எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது.

பொதுவாக இந்தியாவிலும் முக்கியமாக தமிழகத்திலும் சமீபகாலமாக வேலையிடங்களில் நேர்மை குறைந்துள்ளதும் அதனால் அவர்கள் வேலையிழப்புக்கு ஆழாவதும் காணமுடிகின்றது. இவ்வாறு அவர்களாகவே ஏழ்மையை தேடிச்செல்லும் அவலங்களும் நடந்துக்கொண்டுதான் உள்ளது. உழைப்பை சுரண்டி திண்ணும் பெரிச்சாலிகளுக்கு மத்தியில் உழைக்க மறுக்கும் சோம்பேரிகளும் இருக்கதான் செய்கின்றனர். இதனால் பிச்சை எடுக்கும் அவலங்களும் பெருகி வருகின்றது. காலம் காலமாக நம்மோடு கலந்தே வருவது இந்த ஏழ்மையும் ஒன்று, இதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிலரை மட்டும் குறை சொல்வது என்பது சரியாகுமா? என்ற கேள்வியும் இருக்கதான் செய்கின்றது. ஒரு மனிதனின் இரண்டு கைகள் அவனின் உழைப்பும் இந்த நாட்டின் மிக பெரிய சொத்து. அதை இந்த நாடும் இந்த நாட்டு அரசும் முறையாக பயன்படுத்திக்கொண்டாலே ஏழ்மை பறந்தோடி போகும். வேலை என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதைவிட வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
பணம், தங்கம், போன்ற செல்வ மதிப்புகள் எல்லாம் மாயையானது. ஆனால் இந்த மண்ணின் மதிப்பு நிரந்தரமானது. இந்த மண் அரசுடைமையாக்கப்பட வேண்டும். முறையான நில பட்டாக்கள் வழங்கப்பட்டாலே இந்தியாவின் ஏழ்மை பறந்தோடும் என்பதுதான் உண்மை. நிலம் யாருக்கும் முழு சொந்தமாக்கக்கூடாது எல்லாம் அரசுக்குதான் சொந்தம் அவற்றை பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும் அதற்கான வரிகள் வசூல் செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களால் நிலபிரபுகளிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான நிலங்களை சாமானிய எழைகள் பயன்படுத்த முடியும். இதனால் அவர்களின் ஏழ்மை விரட்டப்படும்.
ஒருவன் பசி என்று வருகின்ற பொழுது அவனுக்கு ஒரு மீன் துண்டை கொடுப்பதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும். என்பது பைபிளின் வாசகம், ஒருவனுக்கு இலவசமாக கொடுக்க வேண்டியது கல்வியும் வேலைக்காண வாய்ப்பும் ஆகும். அதை விட்டுவிட்டு கவர்ச்சிகரமான இலவசங்களை தவிற்கப்பட வேண்டும்.
இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.
இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
ஏழ்மைக்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
பொருளாதார முறைகேடுகள்,சமூகவியல் காரணங்கள்,இயற்கையின் சீற்றங்கள்,ஆன்மீகத் தேறுதல்கள்,ஜோதிடக் கணிப்புக்கள்,மக்களின் அறிவின்மை,மனிதர்களின் ஆற்றலின்மை,விதியின் கொடுமைகள் இப்படி எத்தனையோ காரணங்கள்.
ஆனால் ஏழை மட்டும் ஏழையாகவே இருக்கிறான்.