நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).
அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.
ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.
வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.
நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.
வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...
நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....

அன்புடன்...
ஆ.ஞானசேகரன்