எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?

தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம்.
1. அலைபேசியை அணைத்து விடுவது.
2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.
3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.
4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.
இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.
"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."
இன்னும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.