_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, July 18, 2008

வம்பு!....

வம்பு!....

குருவானவர் சொல்வதை செய்யுங்கள்,
செய்வதை செய்யாதீர்கள்!.....


http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1308&cls=row4 (நன்றி தினமலர்)



கோவை பிஷப் ஹவுஸ் வளாகத்தில் மோதல்: பாதிரியாருக்கு அடி
ஜூலை 18,2008,00:00 IST
கோவை: கோவை பிஷப் ஹவுஸ் வளாகத்தில் நடந்த மோதலில், பாதிரியாருக்கு உதடு கிழிந்தது; டிரைவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது; நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்து வருகிறது.கோவை, பெரியக் கடை வீதியில் புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது. இதன் பின்பகுதியில், கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் குடியிருப்பும், அலுவலகங்களும் அமைந்துள்ளன. தற்போது கோவை மறை மாவட்ட பிஷப்பாக தாமஸ் அக்வினாஸ் உள்ளார்.பிஷப்புக்கு அடுத்த அதிகாரம் பெற்றவராகக் கருதப்படும் முதன்மை குரு (விகர் ஜெனரல்) என்ற பொறுப்பில் குருசாமி என்ற பாதிரியார் உள்ளார்.
புகார் கிளம்பியது: கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் 126 பாதிரியார்கள், பங்குத்தந்தை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளனர்.இவர்களில் சமீபத்தில் 32 பேரை வேறு இடங்களுக்கு மாற்றி பிஷப் தாமஸ் அக்வினாஸ் உத்தரவிட்டார். இதற்கு அந்தந்த பங்குகளில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மாறுதல் உத்தரவுகளை வாபஸ் பெற பிஷப் ஹவுஸ் நிர்வாகம் மறுத்து விட்டது.இடமாறுதல் வழங்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக பாதிரியார்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. முதன்மை குருவுக்கு நெருங்கிய பாதிரியார்களை பெரிய பங்குகளிலும், மற்ற பாதிரியார்களை தொலைதூரப் பகுதிக்கும் மாற்றியதாக புகார் கிளம்பியது.
மடத்துக்குளம் பங்குத்தந்தையாக இருந்த மரியஜோசப் என்ற பாலு, துரை வில்லியம்ஸ் உள்ளிட்ட பல பாதிரியார்கள் தங்களது மாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; அவர்கள் பிஷப்பை சந்தித்து முறையிட கோவை பிஷப் ஹவுசுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பங்குகளைச் சேர்ந்த பாதிரியார்களும் அங்கு கூடினர்.
அனைவரும் சேர்ந்து கடந்த திங்கட்கிழமையிலிருந்து உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். முதன்மை குரு, மறை மாவட்ட பொருளாளர் ஆகியோரால் மறை மாவட்ட நிர்வாகத்தில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதால், அவர்களை மாற்ற வேண்டுமென்று பகிரங்கமாக கோரிக்கை வைத்தனர். இதற்கு, பிஷப் ஒப்புக் கொள்ளவில்லை.பாதிரியார்களுக்கும் மறை மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையில் நடந்துவந்த மோதலில் தீர்வு ஏற்படாத நிலையில், புனித மிக்கேல் அதிதூதர் பேராலய பங்கைச் சேர்ந்த சிலர், பிஷப் ஹவுசுக்குள் புகுந்துள்ளனர். அங்கு போராட்டம் நடத்தி வந்த பாதிரியார்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பாதிரியார் மரிய ஜோசப்பை சிலர் தாக்கியுள்ளனர். இதில் அவரது உதடு கிழிந்தது. தாக்குதலில் காயமடைந்த அவரை, மற்றவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாபு என்ற டிரைவரும் மண்டை உடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிரியார் மரிய ஜோசப் கண்ணாடி டம்ளரை எறிந்ததால் மண்டை உடைந்ததாக பாபு புகார் தெரிவித்தார்.தகவல் அறிந்ததும், பேராலய வளாகத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்.
பிஷப் ஹவுஸ் சார்பில் பேராலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன், அங்கு வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.மறை மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை மறைத்து, தங்கள் மீது குற்றச்சாட்டுகளைத் திருப்புவதாகக் கூறும் பாதிரியார்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த மோதல் மேலும் வெடிக்கும் என்று தெரிகிறது.பாதிரியார்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிது புதிதாக பல சபைகள் உருவாகவும் இது முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், பதவி, அதிகாரம், போராட்டம், அடிதடி, மோதல் என, அரசியல்வாதிகளுக்கு இணையாக பாதிரியார்களும் நடந்து கொள்வது ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் உள்ள கிறிஸ்தவ மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.பழி வாங்கினரா பாதிரியார்கள்?: கோவை மறை மாவட்டத்துக்குச் சொந்தமாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணி நியமனம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முதன்மை குரு, பேராலய பங்குத்தந்தைக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் தரப்படுவதாகவும், புகார்கள் கூறப்படுகின்றன.
புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில் ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட மோதலில், மூன்றாண்டுகளுக்கு முன்பு, பல நாட்களாக புனித அந்தோணியார் தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி திருப்பலி, வழிபாடு எதுவும் நடக்கவில்லை. பாதிரியார் மரிய ஜோசப் அங்கு சென்று திருப்பலி நடத்தினார். அதிலிருந்து அவரை பழிவாங்க அதிகாரத்திலுள்ள சில பாதிரியார்கள் திட்டமிட்டதாகவும், தற்போது நடந்த மோதலைப் பயன்படுத்தி அவரைத் தாக்கியுள்ளதாகவும், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் ஏற்பாடு : பாதிரியார் மரிய ஜோசப்பிடம் கேட்டபோது, ""மறை மாவட்ட நிர்வாகத்தில் தவறுகள் நடப்பதை சுட்டிக்காட்டி, நிர்வாகத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி 80 பாதிரியார்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தோம். இன்று காலையில் திடீரென சிலர் தாக்குதல் நடத்தினர். முதன்மை குரு ஆலோசனைப்படி, மிக்கேல் ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் என்னைத் தாக்கியுள்ளனர்,'' என்றார்.
வாடிகன் தூதர் மறுப்பு: இது தொடர்பாக, பிஷப் ஹவுஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது, பேராலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் கூறியதாவது:ஆண்டுக்கு ஒரு முறை பாதிரியார்களை மாற்ற பிஷப்புக்கு அதிகாரம் உண்டு. மொத்தம் 32 பாதிரியார்களை மாற்றியதில் 29 பேர் மாறிச் சென்றுவிட்டனர். மரியஜோசப் என்ற பாலு, துரை வில்லியம்ஸ் உட்பட மூன்று பேர் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 30 பாதிரியார்கள் உள்ளனர். முதன்மை குரு, பொருளாளரை மாற்ற வேண்டுமென இவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுபற்றி டில்லியிலுள்ள வாடிகன் தூதரை பிஷப் தொடர்பு கொண்டு கூறியபோது, அவர் மறுத்து விட்டார்.
பாதிரியார் பாலு, மதுரை, நெல்லை மாவட்டங்களின் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளராக இருப்பதால், ஆன்மிகப் பணிகளைக் கவனிப்பதில்லை. எனவேதான் அவரை எருத்தேன்பதிக்கு பிஷப் இடம்மாற்றினார்.இவ்வாறு பாதிரியார் ஆல்பர்ட் நெல்சன் தெரிவித்தார்.

இவர்கள்தான் நம்மை வழிநடத்தி கடவுளிடம் ஒப்புதல் கொடுப்பவர்கள்..................................................... (ஒருவர்கொருவர் சமாதானத்தை எப்படி தெரியப்படுத்துவது கடவுளுக்கே வெளிச்சம்)

2 comments:

இனியா said...

Neengal thanjai mavattaththil entha oor? Naanum thanjai mavattamthaan...

ஆ.ஞானசேகரன் said...

//ஷெபின் said...
Neengal thanjai mavattaththil entha oor? Naanum thanjai mavattamthaan...//

நவலூர் என்ற சிறிய கிராமம் நண்பரே.