_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, July 26, 2008

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர்

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர்

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 120 கோடி. இதில், 85 சதவீதம் பேர் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் இந்தியா 'முன்னணி'யில் உள்ளது.இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு சர்வே நடத்தியது. பல நாடுகளில் இன்னமும் கழிப்பிட வசதி, அடிப்படை சுகாதார வசதி போதுமான அளவில் இல்லை. இதற்கு திறந்தவெளிக் கழிப்பிடங்களே ஆதாரமாக இருக்கின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

என்று தினமலர் செய்தியில் கூறப்படுகின்றது. மனிதனின் முக்கிய தேவைகளின் முதன்மையானது கழிப்பிடம். இந்தக் கழிப்பிடம் சுகாதார முறையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் கழிப்பிடமேன்றி திறந்தவெளி தேடிச் செல்ல வேண்டிய அவலம் உலகெங்கும் காணப்படுவது. மனிதன் வளர்ச்சியின் பின்னடைவை காட்டுகிறது.

கிராமங்களில் அதிகமாக திறந்தவெளி தேட வேண்டிய நிலையும், மேலும் நகரங்களிலும் இப்படிப்பட்ட நிலையும் காணப்படுவதும் உண்டு. இதில் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகவும் இல்லை. தேர்தல் வாக்குருதியில் டீவி தருகிறொம், தருசு நிலம் தருகிறோம் என்று ஏமாற்று வேலையில்தான் எல்லா கட்சினரும் செயல்படுகின்றனர். வருகிற தேர்தலில் முக்கிய வாக்குரியாக வீடுதோரும் கழிப்பிடம் மற்றும் பாதால சாக்கடையமைப்பு செய்து தருகிறோம் என்று சொல்லுவார்களா? ...........

தினமலரில் பார்க்க

சொடுக்கவும் //www.dinamalar.com/fpnnews.asp?News_id=1373&cls=row3


திறந்தவெளியில் ஒதுங்குவோர் 120 கோடி
புதுடில்லி: கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 120 கோடி. இதில், 85 சதவீதம் பேர் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் இந்தியா 'முன்னணி'யில் உள்ளது.இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு சர்வே நடத்தியது. பல நாடுகளில் இன்னமும் கழிப்பிட வசதி, அடிப்படை சுகாதார வசதி போதுமான அளவில் இல்லை. இதற்கு திறந்தவெளிக் கழிப்பிடங்களே ஆதாரமாக இருக்கின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வளரும், ஏழை நாடுகளில் இன்னமும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. கணிசமான பேர், திறந்தவெளியை தான் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில், கழிப்பறை வசதிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை.எல்லா நாடுகளிலும் கணக்கெடுத்ததில், மொத்தம் 120 கோடி பேர், திறந்தவெளியை தான் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 85 சதவீதம் 13 நாடுகளில் உள்ளவர்கள்.நூறு கோடியைத் தாண்டிய இந்தியாவில் 66 கோடி பேர், திறந்தவெளியில், சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்.

இந்தியாவை அடுத்து இந்தோனேசியாவில் ஆறு கோடியே 60 லட்சம் பேர், எத்தியோபியாவில் ஐந்து கோடியே 60 லட்சம் பேர், பாகிஸ்தானில் ஐந்து கோடி பேர், சீனாவில், மூன்று கோடியே 70 லட்சம் பேர், நைஜீரியாவில் இரண்டு கோடியே 90 லட்சம் பேர், பிரேசிலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர்.உலகம் முழுவதும் 18 சதவீதம் பேருக்குக் கழிப்பிட வசதி இல்லை; திறந்தவெளியில் தான் தங்கள் காலைக் கடனை கழித்து வருகின்றனர்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் கிராமத்தினர் தான் அதிகம். 100 கோடிக்கு மேல் இப்படி பயன்படுத்துகின் றனர். நகர மக்களை விட ஆறு மடங்கு அதிகமாக கிராமத்தினர் அடிப்படை வசதியின்றி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டுக்குள் பல வளரும் நாடுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்தியாவில் 31 சதவீதம் பேர் திறந்தவெளியை கழிப் பிடமாகப் பயன்படுத்தி வந்தனர். 2006ம் ஆண்டில் இந்த சதவீதம் 23 ஆக குறைந்துள்ளது. எனினும், போதிய அளவில் கிராமங்களில் இன்னமும் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படவில்லை பல தொற்றுநோய்களுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடப் பிரச்னை தான் காரணம் என்பதால், எல்லாருக்கும் கழிப்பிட வசதி அளித்து, அடிப்படை சுகாதாரத்தை மேற்கொள்ள எல்லா நாடுகளும் முன் வர வேண்டும். இவ்வாறு சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

6 comments:

ers said...

வருகிற தேர்தலில் முக்கிய வாக்குரியாக வீடுதோரும் கழிப்பிடம் மற்றும் பாதால சாக்கடையமைப்பு செய்து தருகிறோம் என்று சொல்லுவார்களா? ...........

இதுக்கு அரசு திட்டம் போட்டு கிராமப்புறங்களில் கழிப்பிடம் கட்ட கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 5 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கியது. மத்திய அரசால் வழங்கப்பட்ட இந்த கடனை பலர் கட்டவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் வீட்டில் கழிப்பிடமே கட்டாமல் லோன் தொகையை லபக் செய்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியுட்டும் உண்மை

Unknown said...

அருமையான பதிவு, அடிப்படி வசதி கூட இல்லாத நிலையில் வாழும் எம்மவரான அடிமட்ட ஏழைகளுக்கு தீர்வு தான் எப்போது!

இந்தப் பதிவின் சுருக்கத்தை கடந்த 22ஆம் தேதி "களத்துமேடு" பதிவேற்றி விட்டது.
http://kalamm.blogspot.com/2008/07/1020.html

Anonymous said...

அது இன்னங்கோ கழிப்பிடம்??

இஸ்கூலிலே கூட்டல் கழித்தல் போட்டது ஞாபகம் வருது. அது சிலேட்டிலே அப்புறம் கொப்பியிலே

இதுக்கு என்னா இடமில்லே சொல்றீங்க்கோ??

பீ பேல இடமில்லை அதுவா இது

ஆ.ஞானசேகரன் said...

//இதுக்கு அரசு திட்டம் போட்டு கிராமப்புறங்களில் கழிப்பிடம் கட்ட கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 5 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கியது. மத்திய அரசால் வழங்கப்பட்ட இந்த கடனை பலர் கட்டவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் வீட்டில் கழிப்பிடமே கட்டாமல் லோன் தொகையை லபக் செய்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியுட்டும் உண்மை//
உண்மைதான் ஆனால் கழிப்பிடத்தைவிட இன்னும் தெவைகள் பூர்த்தியாகதலும், அரசு செயல்முறையில் ஓட்டையும் காரணம்தானே?,.....

ஆ.ஞானசேகரன் said...

//அருமையான பதிவு, அடிப்படி வசதி கூட இல்லாத நிலையில் வாழும் எம்மவரான அடிமட்ட ஏழைகளுக்கு தீர்வு தான் எப்போது!

இந்தப் பதிவின் சுருக்கத்தை கடந்த 22ஆம் தேதி "களத்துமேடு" பதிவேற்றி விட்டது.//
உங்கள் பதிவில் பார்த்தேன், அருமை

ஆ.ஞானசேகரன் said...

//அது இன்னங்கோ கழிப்பிடம்??

இஸ்கூலிலே கூட்டல் கழித்தல் போட்டது ஞாபகம் வருது. அது சிலேட்டிலே அப்புறம் கொப்பியிலே

இதுக்கு என்னா இடமில்லே சொல்றீங்க்கோ??

பீ பேல இடமில்லை அதுவா இது//

அம்மாங்கோ! அந்த இஸ்கூல்லகூட பீ பேல நல்ல வசதி தரப்படவில்லை(அரசு பள்ளிகளிலும்) சிலேட்டுலதான் கழிக்கனும்