_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 27, 2008

சாதிக ளில்லையடி பாப்பா

சாதிக ளில்லையடி பாப்பா



சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி
இது ஓளவையாரின் திருமொழி




சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்.

சாதிக ளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
இது பாரதியாரின் ஆசை வரிகள்
இப்படி ஓளவையார் காலம் முதல் பாரதி, பெரியார், டாக்டர் அம்பேத்கார் போன்றோர் சாதிக்கொடுமைகளை சாடியும் ,பேசியும், போராடியும் இருக்கின்றனர். இருப்பினும் தற்ப்பொது நவினக்காலத்தில் சாதியைப்பற்றி நம்மில் என்ன நினைக்கின்றோம்.
அனேக பதிவர்கள் சாதியைப்ப்ற்றி எழுதியும் வருகின்றனர். இருப்பினும் வலைப்பதிவர்களிடன் சாதிச்சண்டைகளும் சாடல்களும் காணமுடிகிறது.
மலேசியா, சிங்கபூர், இலங்கை பொன்ற வெளிநாட்டில் வாழும் நம்மவர்களிடமும் சாதிபூசல்கள் காணமுடிகிறது.
நம்மில் பலர் சதியைப்பற்றி என்னதான் நினைக்குறோம்.
80கள் வரை சாதியும் தீண்டாமையும் கொடூரமாக இருந்ததை பார்க்க முடியும் இது அனுபமுறையில் காணவேண்டும். கிராமங்களில் பொங்கல் தீபாவளி பொன்ற பண்டிகைகளில் தாழ்ந்த வகுப்பினர் உயர்ந்த பிரிவினர்க்கு, தான் வீட்டில் வளர்த்த கோழியை கொடுக்க வேண்டும் என்ற முறையிருந்தது. கோழியை வாங்கிவிட்டு அவர்கள் தன் வீட்டில் இருக்கும் மீதிமிச்ச பண்டங்களை கொடுப்பார்கள். இதை வாங்கும்போதும் காலில் விழுந்துதான் வாங்க வேண்டும்.(தஞ்சை மாவட்டங்களில் அதிகமாக இருந்தது) இந்த முறைகளை ஒழித்த பெருமை கம்னிஸ்டுகளைதான் சாரும். பிறகு" தீண்டமை" டீ கடைகளில் தனித் டம்லர் முறை இன்னும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் இருப்பதாக சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
தற்ப்பொது தீண்டாமை இல்லை என்று சொல்வதற்கில்லை. மறைமுகமாக காணமுடிகிறது என்பதும் கொடுமைதான். தமிழகத்தில் புரட்சித் தலைவர் MGR அவர்கள் எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் இலவச மின்சார ஒரு விளக்கு முறை அமுல்ப்படுத்தினார். இதனால் கிராமங்கள் நகராங்கலுடன் தொடர்பு அதிகமானதால், தனித் டம்லர் முறையில் எதிர்ப்புகள் அதிகமானது அதனால்தான் தற்ப்பொது பல இடங்களில் தனி டம்லர் இல்லை. மேலும் அரசு சட்டங்களும் காரணம்தான். ஆனால் தாழ்ததப்பட்டவர் நடத்தப்படும் கடைகளில் சாப்பிடுவது சிந்தித்து சொல்லுங்கள்.
என்னை பொருத்தவரை சாதிகள் இன்னும் ஒளிந்தபாடில்லை மறைமுகமாக எல்லா மனங்களிலும் இருக்கதான் செய்கின்றது. அதுவும் வெறித்தனமான வன்முறைகளும் காணமுடிகிறது.
விஜய் தொலைகாட்சியில் நடத்தப்பட்ட நீயா? நானா? நிகழ்ச்சியில் காதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்துவைப்பது விவாதத்தில், ஒரு பெண் சொல்வார் நான் அய்யங்கார் பெண் அய்யங்க்காரா பிறந்தது பூர்வஜென்ம பயன் என்றும் அய்யங்காரராய் பிறந்ததில் பெருமையும் அய்யங்கார பையனைதான் திருமணம் செய்வேன் என்று கூறுவார். இதிலிருந்து சாதி நம்மில் எந்த அளவிற்க்கு வேருன்றியிருப்பது தெரிகிறது.

2 comments:

Anonymous said...

Bharati himself wore puunuul; and put one on a dalit boy. According to him, to be a paarppaan is a noblest thing.

So, it is hyporcrisy on the part of all to say that jaathis wont go on forever.

ஆ.ஞானசேகரன் said...

.Anonymous said...
Bharati himself wore puunuul; and put one on a dalit boy. According to him, to be a paarppaan is a noblest thing.

So, it is hyporcrisy on the part of all to say that jaathis wont go on forever.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றீ...