மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு..
அறிஞர் அண்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி. என்.அண்ணாதுரையின் 100வது பிறந்தநாள் இன்று(15-09-2008) சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தமிழக அரசும் செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
அறிஞர் அண்ணாவைப்பற்றி மேலும் அறிய கீழெ உள்ள சுட்டியை அமுக்கி பார்க்கவும்....
அறிஞர் அண்ணாவைப்பற்றிய அனைத்து செய்திகள்
அண்ணாவின் பொன்மொழிகள்
=>கடமை கன்னியம் கட்டுப்பாடு
=>எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
=>மறப்பொம் மன்னிப்போம்
=>தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
=>மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
அறிஞர் பட்டம் பாரதிதாசனால் அண்ணாவிற்க்கு கொடுக்கப்பட்டது.
1967 வரை காங்கிரஸ்சின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் அண்ணாவின் ஈர்ப்பால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடித்தது, அதற்கு பின்னர்
இன்றுவரை சுமார் 37 வருடங்கள் திராவிட இயக்கத்தின் வழிவந்த கட்சிகளே உறுதியாகத் தமிழகத்தை ஆண்டுவருவதும், அவைகள் அனைத்துமே அண்ணாதுரையையே முன்நிறுத்தி அரசியல் நடத்திவருவதும், அண்ணாவின் வழிமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
1967 தேர்தல் வாக்குறுதியாக படி அரிசி ஒரு ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அண்ணாவால் நிறைவேற்ற முடியவில்லை. அவர் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் புற்று நோயின் காரணமாக பிப்ரவரி 3-1969 ல் காலமாணார்.
இன்று அண்ணாவின் 100 வது பிறந்தநாள், அதன் நினைவாக முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று ரேசன் கடைகளில் வாழங்கப்படுகிறது.
Monday, September 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு//
ஒரு காலத்தில் நான் நமமுடைய என குறுகிய சிந்தனைகளில் இருந்த என்னை திரு. அண்ணாவின் இந்த வைரவரிகள் தான் மேம்பட்ட சிந்தனைக்கு என்னை அழைத்து சென்றது.
நாசா விஞ்ஞானிகளையே மெய்சிலிர்க்க வைத்த ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற கணியின் பூங்குன்றனாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகளுக்கு இணையானது இந்த வரிகள்.
பலரும் பல பதிவுகளை எழுதிக்கொண்டிருக்க அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் // மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு// என்ற வரிகளில் அவரை தனிமைப்படுத்தி காண்பித்ததற்கு எனது கம்பீர வணக்கங்கள்.
திரு. அண்ணாவின் வைரவரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான் கூட அவரது நூற்றாண்டு நாளில் எனது பதிவில் நினைவூட்டி பார்க்க வில்லையே என்பது தங்களின் பதிவை பார்வையிட்ட பின் எனது மனதுக்குள் வந்த நெருடல். நன்றி.
அறிவகம் said//கம்பீர வணக்கங்கள்.
திரு. அண்ணாவின் வைரவரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான் கூட அவரது நூற்றாண்டு நாளில் எனது பதிவில் நினைவூட்டி பார்க்க வில்லையே என்பது தங்களின் பதிவை பார்வையிட்ட பின் எனது மனதுக்குள் வந்த நெருடல். நன்றி.//
வருகைக்கும் உங்களின் வணக்கத்திற்கும் நன்றிகள் கோடி......
Post a Comment