_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, April 22, 2009

பெண்ணொன்று கண்டேன்...

பெண்ணொன்று கண்டேன்...


எனக்கு எங்கள் வீட்டின் அருகில் உள்ள தாத்தாக்களிடம் கதை கேட்பது ரொம்ப பிடித்தமான விடயம். சில சமயங்களில் தாத்தாக்கள் இரண்டு நான்கு பேர்கள் சேர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் விடுகதை, துணுக்கு என்று அசத்தலாக பேசுவார். நான் அப்பொழுதெல்லாம் சிறுவனாய் இருபேன், என் வயதிற்கு மீறிய கதைகளையும் காதுகொடுத்து கேட்பதும் உண்டு.

அதேபோல் அன்று ஒரு தாத்தா சொன்ன கதை " தன் நண்பனுக்காக பெண்பார்க்க செல்கின்றான் ஒருவன், பெண்ணோ ரொம்ப அழகாக இருந்தாள், அந்த பெண் தன் நண்பனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாள் ஆனால் அந்த பெண்ணின் மீது இவனுக்கு ஆசை வந்துவிடுகின்றது. எனவே இவன் ஒரு சூழ்ச்சி செய்கின்றான். பெண்வீட்டில் கொடுத்த புகைப்படத்தை நண்பனிடம் காட்டுகின்றான், நண்பனும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகின்றான் எப்படி? " என்று கேட்டார்... மற்ற தாத்தாக்களும் தெரியவில்லை என்றனர். "ஏய் பேராண்டி நீ சொல்லு பார்க்கலாம்?" என்றார்.. தாத்தா எனக்கும் தெரியவில்லையே, நீங்களே சொல்லிவிடுங்கள் என்றேன். பின் தாத்தா சொன்ன விடை பெண்ணின் புகைப்படத்தில் ஒரு சிறிய குச்சியால் சுண்ணாம்பை எடுத்து ஒரு கண்ணில் பொட்டு போல வைத்து நண்பனிடம் காட்டினான், நண்பனோ அவளுக்கு ஒரு கண் சரியாக தெரியாது என்று நினைத்து இந்த பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்றார்.

என் மனதிற்குள் அய்யே எச்சில் வைத்து துடைத்தால் போயிரும் இத தாத்தா பெருசா சொல்லுகின்றாரே என்று நினைத்துக்கொண்டேன். ( இந்த காலத்தில் photo shop கொண்டு பல சித்தவேலைகள் செய்யலாம் அது வேறு விடயம்)

நடிகர் திலகம் சிவாஜி சார் நடித்தபடம் "படித்தால் மட்டும் போதுமா" இவருடன் பாலாஜி சாரும் பட்டம் பெற்ற தம்பியாக நடித்துள்ளார். சிவாஜியோ படிக்காதவர் இருவருக்கும் வீட்டில் பெண் பார்க்கின்றனர், இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்யலாம் என்பதுதான் வீட்டாரின் எண்ணம். சிவாஜிக்காக படிக்காத நல்ல பெண் வரனும், பாலாஜிகாக படித்த நல்ல பெண் வரனும் வருகின்றது. பெண்ணை பார்க்க இருவரும் ஒரு திட்டம் போடுகின்றார்கள் சிவாஜிக்காக உள்ள பெண்ணை பாலாஜியும், பாலாஜிகாக உள்ள பெண்ணை சிவாஜியும் பார்த்துவிட்டு பின் சம்மதம் சொல்லலாம் என்றனர். பெண்ணை பார்த்த பிறகு " நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை நான் பார்த்தப் பெண்ணை நீ பார்க்கவில்லை " என்று இருவரும் பாட்டு பாடி சொல்லிக் கொள்கின்றனர். இதில் பாலாஜி பார்த்த பெண் சிவாஜிகாக, ஆனால் அந்த பெண் இவருக்கு பிடித்துவிட சுழ்ச்சியில் அந்த பெண்ணையே திருமணம் செய்கின்றார். (மீதி படத்தில்)

"நீ வருவாய் என" என்ற படத்தில் அஜித் ராணுவ வீரணாக இருப்பார், இவருக்காக வீட்டில் பெண்பார்த்து வைத்திருப்பார்கள். அஜித் விடுமுறையில் வந்த பிறகு பெண்ணை மாப்பிள்ளையும், மாப்பிள்ளையை பெண்ணும் பார்த்த பின் சம்மதம் செய்யலாம் என்பதுதான் வீட்டார்களின் எண்ணம். அந்த படத்தில் அஜித் விடுமுறையில் வந்ததும், முன்அறிவுப்பு இல்லாமால் பெண்ணை(தேவயானி) பார்த்து விட்டு அவளுடன் கலகல என பேசிவிட்டு பிறகு பெண்ணின் வீட்டிற்கே சென்று பெண்ணின் அப்பா அம்மாவிடமும் நன்றாக பேசி கலகலப்பாக இருப்பார். பின்னர் அஜித் அவர்களிடம் "நான் மாப்பிள்ளை என்னை பிடிச்சி இருக்கா? பிடிச்சிருந்தா சொல்லி அனுப்புங்கள் அம்மா அப்பா வந்து நிச்சயம் செய்வார்கள் என்று சொல்லிவிட்டு விடைபெறுவார்". ( இதுவும் மீதி படத்தில்)

இப்படி பெண்பார்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. மேலை நாடுகளில் நம்மை போல் பெண்பார்ப்பது இல்லை என்றாலும் பெண்ணிடம் சம்மதம் பெறுவது என்ற நோக்கம் ஒன்றாகதான் இருக்கும். முறைகள்தான் வேறாக தெரிந்தாலும் எண்ணங்களும் செயலும் ஒன்றுதான்.

ஒரு முறை நண்பன் ஒருவனுக்காக பெண்பார்க்க குடும்பத்துடன் சென்றோம். பிடித்திருந்தால் உடன் சம்மதமும் சொல்லிவிடலாம் என்பதுதான் திட்டம். மாப்பிள்ளையும் எங்களுடன் வந்திருந்தார், பெண்ணை பார்த்தாகிவிட்டது. பெண்ணை மாப்பிள்ளைக்கு அவ்வளவாக பிடித்தமில்லை மேலும் சிலருக்கும் அப்படியே. எனவே பெண்வீட்டாரிடம் நாங்கள் வீட்டில் சிலருடன் கலந்துகொண்டு பதில் அனுப்புகின்றோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம். வீட்டிற்கு வந்ததும் எல்லோருடைய பேச்சுகள், பேச்சின் முடிவு வேண்டாம் என்றெ சொல்லிவிடலாம் என்பதுதான். அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு" என்றார்.. இவர் சொல்லின் ஞாயத்தை பார்த்தாலும் பிடிக்காமல் எப்படி மணம் முடிப்பது? என்ற குழப்பமும்.

இதன் இடையில் என் தங்கையின் பதிலாய் பெண் என்றால் நாலுபேர் பார்க்கதான் வருவார்கள். வருபவர்கள் எல்லாருமே நமக்கு பிடித்தவர்களாக இருக்கவும் மாட்டார்கள். என்னையும் நான்கு பேர் பெண்பார்க்கதான் வந்தார்கள், அதில் எல்லொருக்குமா என்னை பிடித்தது? என்னை பிடித்திருக்கு என்று சொன்னவரை எனக்கும் பிடிச்சிருக்கும் என்று எப்படி சொல்ல முடியுமா? ஏதோ ஒன்றை பெற்று ஒன்றை இழந்துதான் வாழ்ந்து வருகின்றோம். இதில் எல்லாமே சரியாகத்தான் இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையே இருக்காது. எனக்கு பிடிக்காதவர்களும் என்னை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கும் இருந்தது. இதுதான் எதார்த்தம் , இதை எல்லாம் கடந்தால்தான் வாழ்க்கை. எல்லா பெண்களும் இந்த நிலையை கடந்துதான் வருகின்றார்கள். இதில் பிடிக்காத சில செயல்களை தூக்கி எரிந்தால்தான் வாழ்க்கை அனுபவிக்க முடிமே தவிற. முறையற்ற பேச்சுகளால் ஒன்றும் புண்ணியமில்லை. என்று கூறியதும் வீட்டில் சில வினாடிகள் அமைதியாக இருந்தது.

மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம்
அன்புடன் ஆ.ஞானசேகரன்.

28 comments:

ஆ.சுதா said...

அது என்னமோ பெண் மட்டுமே பார்க்கிறோம் 'ஆண்' பார்ப்பதில்லை!

//அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு"//

இதில் எனக்கு உடண்பாடில்லை
ஒருவரை வீடுவரை சென்று பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொலவது ஒரு வகையில் ஏமாற்றமும் அப்பெண்ணிற்கோ பையணிற்கோ பெரும் வறுத்தமாகதான் இருக்கும்.
ஆனால் மனதிற்கு பிடிக்க வில்லை என்றால் அப்படி சொல்லிவிடுவது நல்லெதென்றே படுகின்றது. விருப்பம் இல்லாமல் மணந்து கொண்டால் வாழ்வு நிராயாக இருக்காது என்று நினைகிறேன்.

கிரி said...

எங்கள் ஊர் பக்கம் எல்லாம் எல்லாம் முடிவு செய்து பிறகு ஒரு சம்பிராதயத்திற்காக சென்று வருவார்கள் அவ்வளோ தான்.

இருவரையும் கோவிலிலோ அல்லது வேறு எங்காவது பார்க்க ஏற்பாடு செய்து, இருவருக்கும் தர்ம சங்கடம் வராமல் பார்த்து கொள்வார்கள்.

இந்த பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு எஸ்கேப் ஆகுற வேலை எல்லாம் எங்கள் பக்கம் இல்லை (எங்கள் பக்கம் = கோபி)

ஆ.சுதா said...

கிரி said...
எங்கள் ஊர் பக்கம் எல்லாம் எல்லாம் முடிவு செய்து பிறகு ஒரு சம்பிராதயத்திற்காக சென்று வருவார்கள் அவ்வளோ தான்.

இருவரையும் கோவிலிலோ அல்லது வேறு எங்காவது பார்க்க ஏற்பாடு செய்து, இருவருக்கும் தர்ம சங்கடம் வராமல் பார்த்து கொள்வார்கள்.
-----------------------------

எங்க ஊர் பக்கமும் இப்படிதான் செய்வார்கள்,

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அது என்னமோ பெண் மட்டுமே பார்க்கிறோம் 'ஆண்' பார்ப்பதில்லை!

//அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு"//

இதில் எனக்கு உடண்பாடில்லை
ஒருவரை வீடுவரை சென்று பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொலவது ஒரு வகையில் ஏமாற்றமும் அப்பெண்ணிற்கோ பையணிற்கோ பெரும் வறுத்தமாகதான் இருக்கும்.
ஆனால் மனதிற்கு பிடிக்க வில்லை என்றால் அப்படி சொல்லிவிடுவது நல்லெதென்றே படுகின்றது. விருப்பம் இல்லாமல் மணந்து கொண்டால் வாழ்வு நிராயாக இருக்காது என்று நினைகிறேன்.//

வாங்க நண்பா!.. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு... இன்னும் நிறைய அலசி பார்க்க வேண்டியதும் அதே சமயம் ஒரு எதார்த்த போக்கையும் பார்க்கனும் என்பதுதான் பதிவின் நோக்கம்..

ஆ.ஞானசேகரன் said...

//கிரி said...
எங்கள் ஊர் பக்கம் எல்லாம் எல்லாம் முடிவு செய்து பிறகு ஒரு சம்பிராதயத்திற்காக சென்று வருவார்கள் அவ்வளோ தான்.

இருவரையும் கோவிலிலோ அல்லது வேறு எங்காவது பார்க்க ஏற்பாடு செய்து, இருவருக்கும் தர்ம சங்கடம் வராமல் பார்த்து கொள்வார்கள்.

இந்த பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு எஸ்கேப் ஆகுற வேலை எல்லாம் எங்கள் பக்கம் இல்லை (எங்கள் பக்கம் = கோபி)//

உங்கள் ஊர் கோபி க்கு ஒரு சலூட் நண்பா....

அதே வேலையில் இந்த கோவில் பக்கம் பர்ப்பதிலும்... ஒரு குழப்பத்தை உண்டாக்குவதும் உண்டு.. அப்படி அந்த பெண்ணை கோவிலில் பார்க்க ஏற்பாடு செய்யப்படுவதாக இருந்தால். எப்படியும் அந்த பெண்ணிற்கு அரசல் புரசலாக தெரிந்துவிடும்.. பிறகு என்ன வெளியில் கேட்க முடியாத ரிசல்டாக இருக்கும்.... ok என்றால் மகிழ்ச்சி. எதிர்பதம் என்றால் மனதில் குழப்பம்..... நன்றி கிரி

ஆ.ஞானசேகரன் said...

பழமைபேசி said...

என்ன சார் பிழைகளை எடுக்க கூடை தேடுகின்றீர்களா

ஆதவா said...

அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? ஒருவேளை நமக்குப் பிடிக்காத பெண் நம்மிடம் "உங்களைப் பிடித்துவிட்டது " என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய??? ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?

இப்படி பல கேள்விகள் உண்டு!! பெண் பார்ப்பதிலும் பல சிக்கல்கள் உண்டு!

கார்த்திகைப் பாண்டியன் said...

பெண் பார்க்கும் விஷயத்தில் இருக்கும் ஒரு சில சங்கடங்களை பற்றி சொல்லி உள்ளீர்கள் நண்பா.. இன்னும் நெறைய இருக்கு.. இதை ஒரு விவாதமா எடுத்து எல்லாரும் அவங்கவங்க கருத்தை முன்வைக்கலாமே..

ஹேமா said...

என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் படலம் தொடங்கியாச்சா உங்களுக்கு.அதுதான் இவ்வளவு ஆதங்கமோ !

உண்மைதான் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்பது மன வேதனையாகத்தான் இருக்கும்.
உங்கள் தங்கை சொன்ன யதார்த்தமான அத்தனையும் சரியே.
நானும் அதில் உடன்பட்டுக்கொள்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...
அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? ஒருவேளை நமக்குப் பிடிக்காத பெண் நம்மிடம் "உங்களைப் பிடித்துவிட்டது " என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய??? ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?

இப்படி பல கேள்விகள் உண்டு!! பெண் பார்ப்பதிலும் பல சிக்கல்கள் உண்டு!//

வாங்க ஆதவா, உங்களின் அவசரம் எனக்கு புரிகின்றது.

//ஒரு பெண்ணிடம் "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்று எப்படிச் சொல்ல?//
அந்த பெண்ணிடன் என்ன பிடிக்கவில்லை என்று கேட்டால் பதில் சரியாக சொல்ல முடியுமா? அதிலும் ஒரு சிக்கல் தான். தனியாக பேசி உன்னை பிடிக்கும் இல்லை பிடிக்கல என்று சொல்லும் சந்தர்ப்பத்தை தவிர்த்துவிடுங்கள் ஆதவா.... அது நன்றாக இருக்காது. இங்கு பெரியவர்களின் ஆலோசனை நல்லது....

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
அதைவிடுங்க.. பெண் பார்த்த பிறகு, பெண்ணிடம் தனியே முதலில் என்ன பேச? //
அடுத்து வரும் பகுதியில் இதைப்பற்றி சொல்லுகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பெண் பார்க்கும் விஷயத்தில் இருக்கும் ஒரு சில சங்கடங்களை பற்றி சொல்லி உள்ளீர்கள் நண்பா.. இன்னும் நெறைய இருக்கு.. இதை ஒரு விவாதமா எடுத்து எல்லாரும் அவங்கவங்க கருத்தை முன்வைக்கலாமே..//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
என்ன ஞானசேகரன் பொண்ணு பார்க்கும் படலம் தொடங்கியாச்சா உங்களுக்கு.அதுதான் இவ்வளவு ஆதங்கமோ !///

வணக்கம் ஹேமா என் பையனுக்குதான் பெண்பார்க்கனும்... ஹிஹிஹி நல்லவர்கள் ஆசியில் 9 வயதில் பையன் மற்றும் 5 வயதில் பொண்ணு இருகின்றார்கள்...

//உண்மைதான் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்பது மன வேதனையாகத்தான் இருக்கும்.
உங்கள் தங்கை சொன்ன யதார்த்தமான அத்தனையும் சரியே.
நானும் அதில் உடன்பட்டுக்கொள்கிறேன்.//

ஒரு பெண்ணாக நீங்கள் சொல்வது பாராட்டக் கூடியது. விவாததிற்காக எதைவேனாலும் சொல்லலாம் நடைமுறையில் என்ன செய்யமுடியும் என்பதையும் பார்க்க வேண்டும்..... அடுத்த பகுதியில் இன்னும் சில பகிரலாம்... உங்களின் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் ஹேமா..... நன்றிமா

Anonymous said...

அனுபவஸ்தர்கள் விவாதம் நடத்தினால் தான் எங்களுக்கு என்னவென்று தெரியும். நடத்துங்கள். யார் அங்கே... இவருக்கு பூ மாலை போட்டு விவாத்தை ஆரம்பித்து வையுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
அனுபவஸ்தர்கள் விவாதம் நடத்தினால் தான் எங்களுக்கு என்னவென்று தெரியும். நடத்துங்கள். யார் அங்கே... இவருக்கு பூ மாலை போட்டு விவாத்தை ஆரம்பித்து வையுங்கள்.//
வணக்கம் நண்பா.. யாரும் விவாதத்திற்கு தயாராஇல்லை என்றே நினைக்கின்றேன்.... நீஙகளே ஆரம்பிங்கள்..

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............

ஆ.ஞானசேகரன் said...

//முனைவர் சே.கல்பனா said...
பெண் பார்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? என்னை முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே என் இனிய துணையானதால் ............//

வணக்கம் அம்மா. நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு வாழ்த்துகள். பெண் பார்ப்பதில், பெண்களுக்கு மட்டும்தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் பிரச்சனைகள் அதிகம்..அதைப்பற்றியும் பின் பேசலாம் என்ற எண்ணம் இருக்கின்றது.. நன்றி அம்மா

VIKNESHWARAN ADAKKALAM said...

எண்ணங்கள் இனியவை... தொடருங்கள்... :)

ஆ.ஞானசேகரன் said...

// VIKNESHWARAN said...
எண்ணங்கள் இனியவை... தொடருங்கள்... :)//

வணக்கம் விக்கி, உங்கள் வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி..

சொல்லரசன் said...

//நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு//

அட நீங்களும் நம்ம போலதானா!

நண்பரே நம்ம பதிவுக்கு வாங்க ஒரு சந்தோசமான செய்தி.

சொல்லரசன் said...

//வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?//

கார்த்திகைப் பாண்டியன்க்கு
ஒன்னா ரெண்டா எடுத்து சொல்ல!
சங்கடங்களை சொன்னேன் நீங்க திருமணம் என தவறாக நினைக்கவேண்டாம்.

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...
//நீங்களும் என்னைபோல் கொடுத்து வைத்தவர்கள்தான்.. முதல் பெண்பார்த்ததில் இனிய வாழ்க்கை அமைந்தமைக்கு//

அட நீங்களும் நம்ம போலதானா!//

ம்ம்ம்ம் ஆனா நம்ம கதை கொஞ்சம் சுவாரிசமாக இருக்கும் நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

///சொல்லரசன் said...
//வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... நிறைய சங்கடங்கல் உள்ளது. நீங்கள் பார்த்த சந்தித்த சங்கடங்கலை சொல்லுங்கள் தலைவா? உங்களுக்கு திருமணம் ஆச்சா நண்பா?//

கார்த்திகைப் பாண்டியன்க்கு
ஒன்னா ரெண்டா எடுத்து சொல்ல!
சங்கடங்களை சொன்னேன் நீங்க திருமணம் என தவறாக நினைக்கவேண்டாம்///

சுவராசியமாக இருந்தால் ஒன்றை சொல்லலாமே

ஆ.சுதா said...

ஞானசேகரன்ணா... பட்டாம்பூச்சி விருத்துக்கு வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
ஞானசேகரன்ணா... பட்டாம்பூச்சி விருத்துக்கு வாழ்த்துகள்.//

நன்றி.. ஆ. முத்துராமலிங்கம்... ஆம்மாம் பட்டாம்பூச்சியை நான் மூன்று நபருக்கு கொடுகனுமாமே.... யார் இன்னும் வாங்காதவங்க கையை தூக்குங்க...

"உழவன்" "Uzhavan" said...

பிடிக்கலேனா பிடிக்கலேனே சொல்றது நல்லதுதான்.. ஆனால், சில நேரங்களில் ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்கும். ஆனா வரதட்சனை பேரத்துல சில சமயம் திருமணம் நின்னு போகும். இப்படி நடந்தாதான் கொடுமை.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
பிடிக்கலேனா பிடிக்கலேனே சொல்றது நல்லதுதான்.. ஆனால், சில நேரங்களில் ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்கும். ஆனா வரதட்சனை பேரத்துல சில சமயம் திருமணம் நின்னு போகும். இப்படி நடந்தாதான் கொடுமை.//

உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...