மழுங்கடிக்கும் மந்தநிலை...
பிராந்திய நாடுகளில் இன்றைய பொருளியல் மந்தநிலை மீண்டு வருவதாக செய்திகள் கூறினாலும் வார்த்தகம் ஏற்றம் காண்பதுபோல் இருந்து பொய்த்து வருகின்றது. ஆசியா நாடுகளிலும் இதே நிலை என்றாலும் இந்தியாவில் இந்த பொருளியல் மந்தம் பெருவாரியாக தாக்கம் இல்லை இருப்பினும் தற்கொலைகள் அதிகமா இருப்பதும் வர்த்தகம் பொய்க்கும் காரணங்கள்தான்.
அரசாங்கம் பொருளியல் மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும், நிர்வாகங்களின் சுய லாபநோக்கமும், பொறுப்பற்ற நிலையும்தான் இந்த மந்தநிலை தீர்வுக்கு வரமுடியாமல் திணர்கின்றது என்பதுதான் என் எண்ணங்கள். இப்படியே போனால் இன்னும் ஒரு தலைமுறைக்கு இந்த தாக்கம் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அமேரிக்க அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் கூட பொய்த்து வருகின்றது. அமெரிக்காவில் மந்தநிலை மீட்டெடுக்க முடியாமல் சுனக்கம் காண்பது சாமானியனுக்கு மிகுந்த கவலைதான்.
நிர்வாகத்திடம் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படும் என்ற நம்பிக்கையில் அவற்றுக்கு பொருளியல் உதவிகள் செய்கின்றது. அதேபோல் செலவினங்களை குறைக்க உதவியாக இருக்கின்றது. இதை நிர்வாகம் சாமானியர்களிடம் முறையற்ற நடவடிக்கையாக பல நூறு ஆண்டுகளாக போராடி வாங்கிய தொழிலாளர் சமுக நலன்களை பறிக்க பயன்படுத்துகின்றது. பறிக்கப்பட்ட நலன்கள் எக்காரணத்திற்காகவும் திருப்பி தர வாய்பில்லை என்பது கவணத்தில் கொள்ளவேண்டும். இப்படியாக பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது. இந்த லாபம்தான் வர்த்தகம் ஏற்றம் காண்பதுபோல தெரிவதும் பின் இறங்குவதும். சாமானியர்கள் அடிப்படை செலவினங்களுக்கு தடுமாறும்பொழுது பொருளியல் மந்தநிலையில் ஏற்றம் காண்போம் என்பது சாத்தியம் இல்லை. இதை நாம் கவணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. இதற்கு தொடர்புள்ள என் சுட்டிகள் இங்கே ஒன்று, இரண்டு .
சாமானியனிடம் திணிக்கப்பட்ட சுமையிலிருந்து எடுக்கப்படும் லாபங்களை வைத்து நிர்வாக வளர்ச்சி பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. சாமானியர்கள் பொருளியல் வளர்ச்சிதான் அந்த தேசத்தின் வளர்ச்சியே தவிற தனிப்பட்ட நிர்வாகத்தின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது அப்படியே இருந்தாலும் அது நிரந்தரமற்ற நிலைதான். எனவே அரசாங்கம் சாமானியர்களின் பொருளியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டுவரவேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த பொருளியல் மந்தம் இன்னும் ஒரு தலைமுறைக்கு இருக்கும் என்பது இந்த சாமானியனின் எண்ணம்.
இந்த இக்கட்டாண நிலையில் சாமானியன் கவணிக்கப்படவேண்டியவைகள்
1. தேவையற்ற ஆடம்பர பொருள்களை வாங்குவதை தவிற்கவும்.
2. கடன் அட்டையை முறையாக பயன்படுத்தவும்.
3. கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி முதலீட்டை தவிற்கவும்.
4. தனிமனித சேமிப்பை அதிகப்படுத்தவும்.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Saturday, June 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
இந்த சமயத்துக்கு ஏத்த பதிவுங்க.....ஆமாங்க சாமான்யன் தான் எல்லா காலக் கட்டத்திலும் பாதிக்கப்படறான்...
கடைசியா சொன்ன 4 விஷயம் மிகச்சரி...கடன் அட்டையை தவிர்த்தாலும் நலமே....
ஆசியா நாடுகளிலும் இதே நிலை என்றாலும் இந்தியாவில் இந்த பொருளியல் மந்தம் பெருவாரியாக தாக்கம் இல்லை இருப்பினும் தற்கொலைகள் அதிகமா இருப்பதும் வர்த்தகம் பொய்க்கும் காரணங்கள்தான்.
உண்மைதான் உங்கள் கருத்து மிகவும் சரி
1. தேவையற்ற ஆடம்பர பொருள்களை வாங்குவதை தவிற்கவும்.
2. கடன் அட்டையை முறையாக பயன்படுத்தவும்.
3. கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி முதலீட்டை தவிற்கவும்.
4. தனிமனித சேமிப்பை அதிகப்படுத்தவும்.
அருமையான அறிவுரை ஆனால் முடியமாட்டேன் என்கிறது முயற்சிசெய்கிறேன்...
// தமிழரசி said...
இந்த சமயத்துக்கு ஏத்த பதிவுங்க.....ஆமாங்க சாமான்யன் தான் எல்லா காலக் கட்டத்திலும் பாதிக்கப்படறான்...
கடைசியா சொன்ன 4 விஷயம் மிகச்சரி...கடன் அட்டையை தவிர்த்தாலும் நலமே....//
வாங்க தோழி,.. உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க
// sakthi said...
ஆசியா நாடுகளிலும் இதே நிலை என்றாலும் இந்தியாவில் இந்த பொருளியல் மந்தம் பெருவாரியாக தாக்கம் இல்லை இருப்பினும் தற்கொலைகள் அதிகமா இருப்பதும் வர்த்தகம் பொய்க்கும் காரணங்கள்தான்.
உண்மைதான் உங்கள் கருத்து மிகவும் சரி//
வணக்கம் சக்தி.
மிக்க நன்றி.
//அருமையான அறிவுரை ஆனால் முடியமாட்டேன் என்கிறது முயற்சிசெய்கிறேன்...//
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை... வெற்றிக்கு வாழ்த்துகள் சக்தி
உண்மைதான் :-)
// ’டொன்’ லீ said...
உண்மைதான் :-)//
வணக்கம் நண்பா.. மிக்க நன்றி
கடன் அட்டையே தேவை இல்லைங்க...
// வினோத்கெளதம் said...
கடன் அட்டையே தேவை இல்லைங்க...//
முழுவதும் தேவை இல்லை என்று சொல்லமுடியாது. அது நுகவோர் பாதுகாப்புக்காக உள்ளதுதான். அதை முறைபடி பயன்ப்படுத்தினால் நல்லது.
//பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது//
இதுதாங்க காலம் காலமா நடந்துட்டு இருக்கு..
கடைசியா நாலு யோசன சொன்னாலும் நறுக்குனு சொன்னீங்க பாஸ்..
//தீப்பெட்டி said...
//பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது//
இதுதாங்க காலம் காலமா நடந்துட்டு இருக்கு..
கடைசியா நாலு யோசன சொன்னாலும் நறுக்குனு சொன்னீங்க பாஸ்.//
மிக்க நன்றி நண்பா
//பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது//
உண்மை
உலக கவனிப்பா பொருளியல் மந்த நிலையை எடுத்துருக்கின்றீர்கள் நண்பா.
கடைசி நாண்கும் கடைபிடிக்கவேண்டியவை.
// காமராஜ் said...
//பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது//
உண்மை//
மிக்க நன்றி தோழா
// ஆ.முத்துராமலிங்கம் said...
உலக கவனிப்பா பொருளியல் மந்த நிலையை எடுத்துருக்கின்றீர்கள் நண்பா.
கடைசி நாண்கும் கடைபிடிக்கவேண்டியவை.//
வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்
மிக்க நன்றி நண்பா
இது எப்போங்க சரியாகும்?
ஆமாம்,இந்த சாமானியன் யார் என்று வறையறுக்கவில்லையே,ஞானசேகரன்.
மக்கள் என்ற பொத்தாம் பொதுவான போர்வைக்குள்ளே நாம் எலலோரும் மறைந்து கொள்வதைப் போல,வறையறுக்கப் படாத வார்த்தைகளின் பின்னே எல்லோரும் குளிர் காய்கிறோம் என்பதே உண்மை.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
இது எப்போங்க சரியாகும்?//
வாங்க நண்பா,
பொறுபுடன் அரசும் நிர்வாகமும் மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் கூடியவிரைவில் மீழப்படலாம் எனபது என் எண்ணங்கள்
//ஷண்முகப்ரியன் said...
ஆமாம்,இந்த சாமானியன் யார் என்று வறையறுக்கவில்லையே,ஞானசேகரன்.
மக்கள் என்ற பொத்தாம் பொதுவான போர்வைக்குள்ளே நாம் எலலோரும் மறைந்து கொள்வதைப் போல,வறையறுக்கப் படாத வார்த்தைகளின் பின்னே எல்லோரும் குளிர் காய்கிறோம் என்பதே உண்மை.//
வணக்கம் சார்..
பொதுவான போர்வைக்குள்ளே நாம் எலலோரும் மறைந்து கொள்கின்றோம் என்பதை நானும் ஒப்புக்கொள்கின்றேன்.
நான் இங்கு கூறிக்கொள்ளும் சாமானியன் நடுத்தர மக்களைதான். இவனுக்கு வாங்கும் சக்தியை கொண்டுதான் பொருளாதாரம் மீழ்ச்சிக்கு கொண்டுசெல்ல முடியும்.
ஒரு சாமானியனின் பார்வையில் படம் சிறப்பு என்று சொல்லும் பச்சத்தில் அந்தப் படம் வெற்றி அடைய முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும்தானே.... உங்களின் தாழ்மையான கருத்து என்னை மகிழச்செய்கின்றது சார். மிக்க நன்றி சார்
Nalla pathivu Gnanaseharan on economic slowdown & ur tips.
//Muniappan Pakkangal said...
Nalla pathivu Gnanaseharan on economic slowdown & ur tips.//
Thanks Dr. sir
கடன் அட்டை பக்கம் போறதே இல்லைங்க!!
இப்போதைக்கு உங்களது 4வது ஷரத்து மட்டுமே எல்லாவிதத்திலும் நல்லது.அதே பொருளாதார மந்த நிலைதான்.மாற்றங்கள் ஒண்ணும் கண்ணுக்குத் தெரியல.
//thevanmayam said...
கடன் அட்டை பக்கம் போறதே இல்லைங்க!!//
வணக்கம் டாக்டர் தேவன் சார்,.
கடன் அட்டை தேவையில்லை என்று சொல்வதிற்கில்லை. முறையாக பயன்படுத்தினால் நன்மையே ஆனால் அதற்கு சுயகட்டுப்பாடும் தேவை என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி சார்
//ராஜ நடராஜன் said...
இப்போதைக்கு உங்களது 4வது ஷரத்து மட்டுமே எல்லாவிதத்திலும் நல்லது.அதே பொருளாதார மந்த நிலைதான்.மாற்றங்கள் ஒண்ணும் கண்ணுக்குத் தெரியல.//
வணக்கம் ராஜ நடராஜன்,
மிக்க நன்றிங்க, நிர்வாகங்களின் பொறுப்பற்ற நிலைபாடு நீடிக்கும் வரை பொருளியல் மந்த நிலை ஒரு தலைமுறைக்கு மாறாது என்பதுதான் என் எண்ணம். எனவே அரசு சாமானியனை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. நிர்வாகங்களை மட்டுமே நம்புவதால் பயன் ஏதுமில்லை.......
அப்போ இப்போதைக்கு இல்லேன்னு சொல்றீங்க!!!
// குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்போ இப்போதைக்கு இல்லேன்னு சொல்றீங்க!!!//
1998 மற்றும் 2001ல் வந்த மந்தநிலையைவிட தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் மந்தநிலையின் தாக்கம் அதிகம் உள்ளதால் காலம் ஆகும்..
// நசரேயன் said...
நல்ல பகிர்வு//
மிக்க நன்றி நண்பா
ஒருமுறை ஒரு பெரிய பணக்காரர் ஒருத்தர் ஷாப்பிங் போகும்போது, கடையில ஒரு பேனாவைப் பார்த்தாராம். பர்த்த உடனே அவருக்குப் பிடிச்சிருந்த்தால, உடனே அந்த பேனாவை எடுத்து விலையைப் பார்த்தாராம். விலையைப் பார்த்த உடனே வேண்டாம்னு உடனே இருந்த இடத்திலேயே வச்சிட்டாராம். கூட வந்த உதவியாளர் ஏன் சார் பேனாவை வாங்கலனு கேட்டபோது, அந்தப் பேனாவுக்கு அந்த விலை ரொம்ப ரொம்ப அதிகம். பணம் இருக்குறதால, அவ்வளவு விலை கொடுத்து அதை வாங்க வேண்டிய அவசியம் இல்லைனு சொன்னாராம்.
இன்னொரு கதை.. இது பொதுவா பெண்களுக்கு :-)
அவசியமான ஒரு பொருள், அந்த நேரத்துல விலை கொஞ்சம் அதிகம்னாலும் ஆண்கள் வாங்கிக்கிடுவாங்களாம்.. ஆனா, தேவையே இல்லாத ஒரு பெருள், விலை குறைவா ஏதாவது ஆஃபர்னு சொல்லிக் கொடுத்தா, அதை பெண்கள் உடனே வாங்கிடுவாங்களாம்.
ஹலோ.. பேசிக்கிட்டு இருக்கும்போதே அங்க யாருப்பா ஷாப்பிங் போறது? :-))
//" உழவன் " " Uzhavan " said...
ஒருமுறை ஒரு பெரிய பணக்காரர் ஒருத்தர் ஷாப்பிங் போகும்போது, கடையில ஒரு பேனாவைப் பார்த்தாராம். பர்த்த உடனே அவருக்குப் பிடிச்சிருந்த்தால,>>>>>>>>>//
வாங்க உழவன்,... நல்ல கதைகளுடன் உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பா
Post a Comment