_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, June 26, 2009

சட்டங்கள் இருப்பதை போல அதன் அமுலாக்கம் இருப்பதில்லை!..

சட்டங்கள் இருப்பதை போல அதன் அமுலாக்கம் இருப்பதில்லை!..

வணக்கம் நண்பர்களே! சென்ற இடுக்கைக்கு
காசுகேத்த கல்வியாம்!.. ஆதரவாக தமிழிஸில் வாக்குகளை (26 வாக்குகள்) அள்ளிக்கொடுத்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சமர்ப்பணம். மேலும் யூத்புல் விகடனுக்கும் நன்றிகள் பல. அதேபோல் பின்னூட்டதில் ஊக்கமழித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!


சென்ற இடுக்கையின் சாரமாக வாணிப மயமாக்கப்பட்ட கல்வியும் மருத்துவமும் எல்லாருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கிடைக்க வேண்டும் என்பதை வழியுருத்தினேன். அதை பலர் ஆதரவாக பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி இருந்தனர். இதன் மூலம் பரவலான பாதிப்பு இருப்பது உறுதியாகின்றது. இதை அரசு கவணிக்குமா? அல்லது ஏதோ ஒரு புரட்சிக்கு இட்டு செல்லுமா? என்பது தெரியாது. மண்டைய பிய்த்துக்கொள்ள வைக்கும் இந்த கல்வி நன்கொடை (கையூட்டு என்றே சொல்லலாம்) ஒரு நாள் வெடிக்கதான் செய்யும். டாஸ்மாக் கையில் எடுக்கும் அரசு கல்வியையும், கல்வியின் சீரமைப்பையும் எப்பொழுது கவணிக்க போகின்றது என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய கவலையாகும்......

இன்றைய தினமலர் செய்தியில் மருத்துவம் மற்றும் கல்வி சம்மந்தமாக அரசு எடுப்பதாக இருக்கும் நடவடிக்கை மகிழ்வை தருகின்றது. அதே போல் சட்டங்களும் அதன் செயலாக்கத்தில் உள்ள இந்திய குறைபாடுகள் நம்மை மகிழ்ச்சியிலிருந்து விடுபட வைக்கின்றது. நல்ல சட்டங்கள் இருந்து எந்த புண்ணியமும் இல்லை அதை செயல்படுத்தும் முறைகளிலும் செயல்படுத்தும் வேகத்திலும் உள்ளது.

1.
பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து?: மாணவர்கள் சுமையை குறைக்க திட்டம்
2.மருத்துவமனைகளில் எல்லாருக்கும் இலவச சிகிச்சை

மேற்கண்ட இரண்டு செய்திகளும் கொஞ்சம் நம்மை மகிழ்ச்செய்தாலும் அதன் செயல்வடிவம் முழுமையாக வந்தடையுமா? என்பதுதான் கேள்வியாகும். அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்? அரசு பள்ளிகளில் போதிய இடம் இல்லாமை, போதிய ஆசிரியர் இல்லாமை அப்படியே ஒரு ஆசிரியர் இருந்தாலும் பள்ளிக்கு வராமை எல்லாமே நம்மை வாட்டும் கவலைதான். சமிபத்தில் தமிழக முதல்வர் முதுகுவலி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையைதான் தேர்ந்தெடுத்துள்ளார். இதிலிருந்தே தெரிகின்றது அரசு மருத்துவ மனைகளில் போதிய வசதி இல்லை என்று. மேலும் அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம் அதை இந்த இரு திட்டங்களுக்கு நினைவில் கொண்டு செயல்ப்படுத்தினால் நன்றாக இருக்கும். கல்வியும், மருத்துவமும் ஞாயமான முறையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் எல்லோருக்கு கிடைக்க அரசியல் அமைப்பில் சட்டம் இருக்கவேண்டும் என்பதே என் ஆசைகள் எல்லோருடைய ஆசைகளும்.

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

36 comments:

நையாண்டி நைனா said...

sarithaan...

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

sarithaan...//

வணக்கம் நண்பா,
மிக்க நன்றிங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//டாஸ்மாக் கையில் எடுக்கும் அரசு கல்வியையும், கல்வியின் சீரமைப்பையும் எப்பொழுது கவணிக்க போகின்றது என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய கவலையாகும்......
//

நியாயமான கவலை..

ஆ.சுதா said...

அப்புறம் வாரேன்!!

தீப்பெட்டி said...

சட்டங்கள் அமல்படுத்துவதில் மக்களுக்கும் சமூகசீர்திருத்த ஆர்வலர்களுக்கும் குறிப்பாக ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.. அவர்களால் தட்டிகழிக்கப்படும் போது அரசு இயந்திரம் துருப்பிடிக்கிறது..

ஆ.ஞானசேகரன் said...

// ச.செந்தில்வேலன் said...
//டாஸ்மாக் கையில் எடுக்கும் அரசு கல்வியையும், கல்வியின் சீரமைப்பையும் எப்பொழுது கவணிக்க போகின்றது என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய கவலையாகும்......
//

நியாயமான கவலை..//

வாங்க ச.செந்தில்வேலன்
மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்புறம் வாரேன்//


வந்து சொல்லிட்டு போங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...
சட்டங்கள் அமல்படுத்துவதில் மக்களுக்கும் சமூகசீர்திருத்த ஆர்வலர்களுக்கும் குறிப்பாக ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.. அவர்களால் தட்டிகழிக்கப்படும் போது அரசு இயந்திரம் துருப்பிடிக்கிறது..//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. ஊடங்கள் ஏன் இதை தட்டிகழிக்கின்றது? புரியவில்லை... மக்கள் மத்தியில் ஒரு புரட்சி ஏற்பட்டால்தான் மாற்றம் வருமா என்ன?

சொல்லரசன் said...

//மேற்கண்ட இரண்டு செய்திகளும் கொஞ்சம் நம்மை மகிழ்ச்செய்தாலும் அதன் செயல்வடிவம் முழுமையாக வந்தடையுமா?//

சந்தேகம்தான்,சட்ட அமுலாக்கம் பற்றிய விழிப்புனர்வு மக்களுக்கு தேவை.

வால்பையன் said...

உண்மை தான் நண்பரே!

சட்டத்தை சிலர் பைசாக்கு மட்டுமே மதிக்கிறார்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...
//மேற்கண்ட இரண்டு செய்திகளும் கொஞ்சம் நம்மை மகிழ்ச்செய்தாலும் அதன் செயல்வடிவம் முழுமையாக வந்தடையுமா?//

சந்தேகம்தான்,சட்ட அமுலாக்கம் பற்றிய விழிப்புனர்வு மக்களுக்கு தேவை.//

வணக்கம் சொல்லரசன்..
மக்களுக்கு மட்டுமில்லை அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவர்களிம் பொறுபின்மையால்தான் நாம் பல இழந்துவருகின்றோம்...

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//வால்பையன் said...
உண்மை தான் நண்பரே!

சட்டத்தை சிலர் பைசாக்கு மட்டுமே மதிக்கிறார்கள்!//

வாங்க நண்பா, உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது... அதுதான் வேதனையான‌ ஒன்று..

மிக்க‌ ந‌ன்றி ந‌ண்பா

Muniappan Pakkangal said...

Nice.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nice.//

Thanks sir

வலசு - வேலணை said...

//
சமிபத்தில் தமிழக முதல்வர் முதுகுவலி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையைதான் தேர்ந்தெடுத்துள்ளார். இதிலிருந்தே தெரிகின்றது அரசு மருத்துவ மனைகளில் போதிய வசதி இல்லை என்று. மேலும் அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம்
//

நன்றாகச் சொன்னீர்கள். உரியவர்களுக்கு உறைக்குமா?

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

//
சமிபத்தில் தமிழக முதல்வர் முதுகுவலி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையைதான் தேர்ந்தெடுத்துள்ளார். இதிலிருந்தே தெரிகின்றது அரசு மருத்துவ மனைகளில் போதிய வசதி இல்லை என்று. மேலும் அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம்
//

நன்றாகச் சொன்னீர்கள். உரியவர்களுக்கு உறைக்குமா?//

வாங்க நண்பா,
உறைத்தால்தான் நல்லது...
மிக்க நன்றி நண்பா

ராம்.CM said...

அழகாக சொல்லியுள்ளீர்கள்.

Suresh Kumar said...

ஊழல்கள் லன்ச்னகள் ஒளிந்து நல்லாட்சி ஏற்பட்டால் மட்டுமே இவைகள் சாத்திய மாகும்

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...

அழகாக சொல்லியுள்ளீர்கள்.//

நன்றி ராம்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

ஊழல்கள் லன்ச்னகள் ஒளிந்து நல்லாட்சி ஏற்பட்டால் மட்டுமே இவைகள் சாத்திய மாகும்//

உண்மைதான் நண்பா,.. அந்த நல்ல காலம் எப்பொழுது கிடைக்கும்? அதற்கு ஒரு புரட்சி ஏற்படதான் வேண்டும்
மிக்க நன்றி சுரெஷ் குமார்

குடந்தை அன்புமணி said...

//அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. //

அவரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களை நினைத்தால்...

Anonymous said...

நல்ல சமூதாய நல சிந்தனையுள்ள பதிவு... நம்மை மாதிரி பொது மக்கள் உணர்கிறோம் அவசியம் அறிந்தவர்களாய் ஆனால் அரசியல்?

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

//அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. //

அவரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களை நினைத்தால்...//


நினைத்தால் கோபம்தான் வருகின்றது நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

நல்ல சமூதாய நல சிந்தனையுள்ள பதிவு... நம்மை மாதிரி பொது மக்கள் உணர்கிறோம் அவசியம் அறிந்தவர்களாய் ஆனால் அரசியல்?//

அரசியல்?????? என்னப்பன்னுறது நம்ம நாட்டு அரசியல் அப்படி

மிக்க நன்றிங்க

ஆ.சுதா said...

என்பதுதான் கேள்வியாகும். அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்? //

வெகுவான உண்மை. இவைகளை எல்லாம் கவணிக்க அரசு அக்கரை கொள்ளும் என்பது தற்போதைக்கு வெரும் கனவே!

//சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம் //

இதுவே முக்கியம்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...

காமராஜ் said...

நல்ல பதிவு நண்பா, கலக்கறீங்க.

priyamudanprabu said...

///
அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்?
///

எங்கள் ஊர் பள்ளியில் கழிவரை வசதியே இல்லை
1&2 எல்லாம் வெட்ட வெளியிலேயே

குடிக்கும் நீரில் பாசான்கள் இருக்கும்

இதெல்லாம் எப்போதிருமோ?????????

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

என்பதுதான் கேள்வியாகும். அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்? //

வெகுவான உண்மை. இவைகளை எல்லாம் கவணிக்க அரசு அக்கரை கொள்ளும் என்பது தற்போதைக்கு வெரும் கனவே!

//சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம் //

இதுவே முக்கியம்.//
வாங்க ஆ.முத்துராமலிங்கம்
உங்களின் கருத்துரைக்கும் நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...//

வணக்கம் நண்பா
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுக்குரது போல நடிக்குதுங்க அதுதான் பிரச்சனையே

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

நல்ல பதிவு நண்பா, கலக்கறீங்க.//

மிக்க நன்றி காமராஜ்

ஆ.ஞானசேகரன் said...

/// பிரியமுடன் பிரபு said...

///
அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்?
///

எங்கள் ஊர் பள்ளியில் கழிவரை வசதியே இல்லை
1&2 எல்லாம் வெட்ட வெளியிலேயே

குடிக்கும் நீரில் பாசான்கள் இருக்கும்

இதெல்லாம் எப்போதிருமோ?????????///

வாங்க பிரபு
இப்படிபட்ட அவலநிலை இருக்கும் வரை தனியார் பள்ளிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கு. லாபமும் அதிகமாக இருக்கு.... என்ன பன்னுரதுங்க?

ராஜ நடராஜன் said...

சிறந்த தலைப்பும் யதார்த்தமான தலைப்பும் கூட.தலைப்புக்கும் தலைக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

சிறந்த தலைப்பும் யதார்த்தமான தலைப்பும் கூட.தலைப்புக்கும் தலைக்கும் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

ஆட்சியும் அதிகாரமும் கையில் கிடைத்த உடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் கடவுள் என்னும் எண்ணம் எப்போது அரசியல்வாதிகளூக்கு இல்லாமல் போகிறதோ அப்போதுதான் மக்கள் ஆட்சி மலரும்.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
ஆட்சியும் அதிகாரமும் கையில் கிடைத்த உடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் கடவுள் என்னும் எண்ணம் எப்போது அரசியல்வாதிகளூக்கு இல்லாமல் போகிறதோ அப்போதுதான் மக்கள் ஆட்சி மலரும்.//

முற்றிலும் சரியான வாதம். மக்களால் தேர்ந்தெடுக்கும்பொழுது ஏன் மக்களால் அவர்களின் பதவியை பறிக்க சட்டம் இல்லை? நல்ல கருத்துரை நன்றிங்க