_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, June 29, 2009

ஒன்று மட்டும் உண்மை!....

ஒன்று மட்டும் உண்மை!....

நாம் சிலரை பார்த்திருப்போம், "அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்டால் " ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் சொல்லுவார்கள். இவர்கள் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.

குதிரை ஓட்டத்தில் 50 குதிரைகள் ஓடுவதாக வைத்துக்கொண்டால் அதில் ஒன்றுமட்டும்தான் வெற்றிபெரும் என்பதுதான் நியதி. அந்த ஒன்றை மட்டுமே நம்பி பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்களை என்னவென்று நினைப்பது. மீதி 49 குதிரைகள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

ஒருவன் லாட்டரி சீட்டு வாங்குபவன் அவனிடம் ஒருவன் "நீ வாங்கும் லாட்டரிக்கு பரிசு விழாது விழுந்தால் நான் 500 ரூபாய் உனக்கு தருகின்றேன், விழவில்லை என்றால் நீ எனக்கு 50 ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான். அவனோ மறுத்துவிடுகின்றான். நம்பிக்கை இல்லா ஒரு வருமாணத்திற்காக ஏங்கி இருக்கும் மனிதர்கள் நிலை ??????

நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை. ஒரு ஜென் துறவி தன்னுடைய பழைய நண்பனை பார்க்க சென்றார். அந்த நண்பன் ஒரு விவசாயி. துறவியை பார்த்த அந்த நண்பன் இவரை துறவி என தெரியாது " நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்? எப்படி இருக்கின்றாய் என்று சாதாரணமாக கேட்டான்.

அதற்கு அந்த துறவி " நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார். அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.

அந்த விவசாயி நண்பன் துறவியிடம் சொன்னதுதான் நாம் நமக்காக சொல்ல வேண்டியது.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

53 comments:

Suresh said...

//நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" /

நல்ல மெசேஜ் யோட ஒரு சூப்பர் கதைய சொல்லி இருக்கிங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh said...

//நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" /

நல்ல மெசேஜ் யோட ஒரு சூப்பர் கதைய சொல்லி இருக்கிங்க நண்பா//

மிக்க நன்றி சுரேஷ்

பழமைபேசி said...

நல்லா இருக்கூ...நல்லா இருக்கூ....

//குடுப்பமும் //

என்னாதிது? நடுநிசியில இடுகை இடுறதால...இஃகிஃகி!

தமிழ் said...

உண்மை தான் நண்பரே

தேவன் மாயம் said...

அதற்கு அந்த துறவி " நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார். அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.
///
அருமையான கதை நண்பரே!!!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...

நல்லா இருக்கூ...நல்லா இருக்கூ....

//குடுப்பமும் //

என்னாதிது? நடுநிசியில இடுகை இடுறதால...இஃகிஃகி!//

நன்றி நண்பா மாற்றிவிட்டேன்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ்மிளிர் said...

உண்மை தான் நண்பரே//
நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// thevanmayam said...

அதற்கு அந்த துறவி " நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார். அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.
///
அருமையான கதை நண்பரே!!!//

வாங்க தேவன் சார்
மிக்க நன்றிங்க

Anonymous said...

முதல் வார்த்தை முத்தாய்ப்பு ஆம் இந்த பழக்கம் பலரிடம் காண்கிறோம் ...எப்படியோ இருக்கேன்னு சொன்னா என்னமோ அதை கேட்டவங்க சொன்னவனுக்கு வாரி வழங்கப் போவதில்லை அது தேவையும் இல்லை..மரியாதை நிமித்தம் கேட்கும் அந்த வார்த்தைக்கு அதே பரிவோடு நல்லாயிருக்கேன் சொல்லும் போதே துயர் இருப்பின் கூட ஒரு தெம்பு வரும்... நல்லாச் சொல்லியிருக்கீங்க சேகர்....

Anbu said...

நல்ல கருத்துள்ள பதிவு அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

முதல் வார்த்தை முத்தாய்ப்பு ஆம் இந்த பழக்கம் பலரிடம் காண்கிறோம் ...எப்படியோ இருக்கேன்னு சொன்னா என்னமோ அதை கேட்டவங்க சொன்னவனுக்கு வாரி வழங்கப் போவதில்லை அது தேவையும் இல்லை..மரியாதை நிமித்தம் கேட்கும் அந்த வார்த்தைக்கு அதே பரிவோடு நல்லாயிருக்கேன் சொல்லும் போதே துயர் இருப்பின் கூட ஒரு தெம்பு வரும்... நல்லாச் சொல்லியிருக்கீங்க சேகர்....//
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நல்ல கருத்துள்ள பதிவு அண்ணா//

நன்றி அன்பு..

சொல்லரசன் said...

//உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.//

உழைப்புதான் கடவுள் என்ற நம்பிக்கை வேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

//உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.//

உழைப்புதான் கடவுள் என்ற நம்பிக்கை வேண்டும்//

வணக்கம் சொல்லரசன்
கருத்துரைக்கு நன்றிங்க

நையாண்டி நைனா said...

Good Post Mappi.

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

Good Post Mappi.//

Thans nainaa

Suresh Kumar said...

தினம் ஒரு நல்ல கருத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் உங்கள் பதிவுகள் அமைந்து வருகிறது . அனைவரும் உழைக்க வேண்டும் உழைத்தால் அதன் பலன் கிடைக்கும் என்பதை எல்லோரும் உணரும் காலம் வரும் வரை இந்த மாதிரியான பதிவுகள் வேண்டும் . நல்ல பதிவு

"உழவன்" "Uzhavan" said...

உழைப்பவர்களுக்கு என்றுமே உழைப்பாளர்கள் தினம்தான். முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்னு சும்மாவா சொன்னாரு...

Muniappan Pakkangal said...

Hard work is the base for life.You've pointed out it in a nice manner.Nandri Gnanaseharan for a good post.

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...
தினம் ஒரு நல்ல கருத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் உங்கள் பதிவுகள் அமைந்து வருகிறது . அனைவரும் உழைக்க வேண்டும் உழைத்தால் அதன் பலன் கிடைக்கும் என்பதை எல்லோரும் உணரும் காலம் வரும் வரை இந்த மாதிரியான பதிவுகள் வேண்டும் . நல்ல பதிவு//

உங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி நண்பா. மேலும் மனம்கனிந்த நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
உழைப்பவர்களுக்கு என்றுமே உழைப்பாளர்கள் தினம்தான். முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்னு சும்மாவா சொன்னாரு...//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Hard work is the base for life.You've pointed out it in a nice manner.Nandri Gnanaseharan for a good post.//

Thanks Dr.Muniappan sir...

குடந்தை அன்புமணி said...

கதை நல்லா இருக்கு நண்பா! இனிமே யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை//

-:) Super

தீப்பெட்டி said...

நல்ல பதிவு..

பிறரை குற்றம் காணாமல் உழைக்க வேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...
கதை நல்லா இருக்கு நண்பா! இனிமே யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!//

அப்படியிருந்தால் நல்லது, மிக்க நன்றி அன்புமணி

ஆ.ஞானசேகரன் said...

/// பித்தன் said...
//நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை//

-:) Super///
மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...
நல்ல பதிவு..

பிறரை குற்றம் காணாமல் உழைக்க வேண்டும்//

உஙகள் கருத்துரைக்கு மகிழ்ச்சி ...
மிக்க நன்றி நண்பா

வினோத் கெளதம் said...

அருமையான கருத்து.

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

அருமையான கருத்து.//

நன்றி வினோத்

CorTexT (Old) said...

அடிப்படையில் இந்த உலகம் முழுவதும் ஒரு சில எளிய‌ விதிகளை கொண்டு இயங்குகின்றது. ஆனால் அது உருவாக்கும் உலகம் அவ்வளவு எளிதல்ல‌. அதில் நாமும் அடக்கம். இந்த அண்டத்திலுள்ள அனைத்து பொருள்களுக்கும் ஒரே ஈர்ப்பு விசை; ஆனால் அது உருவாக்கிய சூரிய மண்டலமும், கோடான கோடி நடசத்திரங்களை கொண்ட பல்வேறு அண்டங்களும் அவ்வளவு எளிதல்ல‌. வெப்ப‌ இயக்கவியல் விதிகள் எளிதானவை தான்; ஆனால் பூமியின் வேறுபட்ட தட்ப வெப்ப சூழ்நிலைகள் அவ்வளவு எளிதல்ல. மனிதர்களும் சில எளிய பரிமாண விதிகளை கொண்டு உருவாக்கப் பட்ட எந்திரங்கள் தான்; ஆனால் அதன் ஆசா பாசங்கள், குணாதிசியங்கள் அவ்வளவு எளிதல்ல. வாழ்விற்கு பெரிதாக அர்த்தங்கள் ஒன்றும் இல்லை தான்; ஆனாலும் வாழ்கை அவ்வளவு எளிதல்ல. உங்கள் கருத்துக்களை ஆமோதித்தாலும், அதன் அனுகுமுறையில் வேறுபடுகின்றேன். மனவியலில் உள் உணர்ச்சிக்கு உண்மையாக இருத்தல் என்ற கருத்து உண்டு. அடுத்த முறை, யாராவது "ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் வாழ்கையில் பிடிப்பில்லாமல் சொன்னால், அவரை எடைபோடாமல் "என்ன விச‌யம்?" என்று கேட்டுபாருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...

அடிப்படையில் இந்த உலகம் முழுவதும் ஒரு சில எளிய‌ விதிகளை கொண்டு இயங்குகின்றது. ஆனால்...........................உங்கள் கருத்துக்களை ஆமோதித்தாலும், அதன் அனுகுமுறையில் வேறுபடுகின்றேன். மனவியலில் உள் உணர்ச்சிக்கு உண்மையாக இருத்தல் என்ற கருத்து உண்டு. அடுத்த முறை, யாராவது "ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் வாழ்கையில் பிடிப்பில்லாமல் சொன்னால், அவரை எடைபோடாமல் "என்ன விச‌யம்?" என்று கேட்டுபாருங்கள்.//

ஒரு இடுக்கை அளவிற்கு இட்டு சென்றுள்ளீர்கள் நன்றி. உங்களின் கருத்துகளுக்கும் உடன்படுகின்றேன். ஆனால் நான் இங்கு குறிப்பிட்ட ம்ம்ம்ம்ம்ம் என்பது வெறுமனே ஒன்றை எதிர்பார்ப்பவர்களை. நீங்கள் சொல்லும் ம்ம்ம்ம்ம்ம் தோல்விகளின் விரக்தியாக கூட இருக்கலாம்... அவர்களைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை...

சி தயாளன் said...

ம். உண்மைதான்

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

ம். உண்மைதான்//

நன்றி டொன் லீ...

உங்கள் புகைப்படம் நல்லா இருக்கு...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல பதிவு.எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

நல்ல பதிவு.எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.//

மிக்க நன்றிங்க

காமராஜ் said...

படிப்பதனால் அனுவளவாவது மூளைக்குள் ஏற வெண்டும்.
அப்படிப்பட்ட பதிவுகள் தேடினால் அதிலொன்று அப்பா அம்மா.
பெயரைப்போலவே அர்த்தமுள்ளது வாழ்த்துக்கள்.

உமா said...

அருமையான கருத்து. தோல்வி இல்லாத மனிதன் யார். அந்த நேரத்திலும் யாராவது எப்படியிருக்கிறிர்கள் என்றுக் கேட்டால், நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிப்பாருங்கள். நம் மனமே அதை நம்ப ஆரம்பித்துவிடும். தோல்வி சற்றே துவண்டுப் போகும்.

வாழ்க்கையின் ஆதாரமான சில கருத்துகள் நிறைய ஜென் கதைகளில் இருக்கும்.

அற்புதமான பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...
படிப்பதனால் அனுவளவாவது மூளைக்குள் ஏற வெண்டும்.
அப்படிப்பட்ட பதிவுகள் தேடினால் அதிலொன்று அப்பா அம்மா.
பெயரைப்போலவே அர்த்தமுள்ளது வாழ்த்துக்கள்.
//
மகிழ்ச்சி கடலில் ....மிதந்தேன்
மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
அருமையான கருத்து. தோல்வி இல்லாத மனிதன் யார். அந்த நேரத்திலும் யாராவது எப்படியிருக்கிறிர்கள் என்றுக் கேட்டால், நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிப்பாருங்கள். நம் மனமே அதை நம்ப ஆரம்பித்துவிடும். தோல்வி சற்றே துவண்டுப் போகும்.

வாழ்க்கையின் ஆதாரமான சில கருத்துகள் நிறைய ஜென் கதைகளில் இருக்கும்.

அற்புதமான பதிவு.//

உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி உமா

ராம்.CM said...

நல்ல கருத்து.

ஆ.ஞானசேகரன் said...

ராம்.CM said...
நல்ல கருத்து.

Thanks raam

sakthi said...

உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.

அப்படியே என்னை பத்தி சொல்லிட்டிங்க போங்க....

sakthi said...

நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை.

ஞானம் சார் இந்த வரிகள் சூப்பர்ப்...

sakthi said...

நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.

அருமையாக வாழ்கைத் தத்துவத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்....

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.

அப்படியே என்னை பத்தி சொல்லிட்டிங்க போங்க....//

நல்லாதான் காமடி பன்னிரிங்க சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை.

ஞானம் சார் இந்த வரிகள் சூப்பர்ப்...// sakthi said...
நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை.

ஞானம் சார் இந்த வரிகள் சூப்பர்ப்...//

மிக்க நன்றி சக்தி

நசரேயன் said...

//நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்"//

ம்ம்ம்ம்ம்ம்

priyamudanprabu said...

///
நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்"
////

நல்ல சேதி

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

//நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்"//

ம்ம்ம்ம்ம்ம்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

///
நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்"
////

நல்ல சேதி//

நன்றி பிரபு

வலசு - வேலணை said...

//
நாம் சிலரை பார்த்திருப்போம், "அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்டால் " ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் சொல்லுவார்கள். இவர்கள் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.
//

உண்மை தான்...:-)
அர்த்தமுள்ள பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

//
நாம் சிலரை பார்த்திருப்போம், "அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்டால் " ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் சொல்லுவார்கள். இவர்கள் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.
//

உண்மை தான்...:-)
அர்த்தமுள்ள பதிவு///

மிக்க நன்றி நண்பா