_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, July 4, 2009

வென்றிடுவீர் எட்டு திக்கும்!....

வென்றிடுவீர் எட்டு திக்கும்!....

சமுகத்தில் எழுத்தாளனுக்கு ஒரு அங்கிகாரம் இருந்தாலும், அதிகார பொறுப்பில் உள்ளவர்கள் எழுதும் எழுத்திற்கு கிடைக்கும் அங்கிகாரம் போல் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைப்பதில்லை. சாமானியர்களின் எழுத்து சபைக்கு வந்து சேர்வது அவ்வளவு எளிதான விடய
மும் இல்லை. பொதுதள ஊடகங்களில் சாமானியர்களின் எழுத்து ஏற்று கொள்ளப்படுவது, இல்லை என்று சொல்லும் நிலையில்தான் உள்ளது. இன்றைய சூழலில் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைத்த பெரும் வாய்ப்புதான் இணைய பதிவுலகம். இணைய பதிவர்கள் இன்று எழுதாத விடயம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பதிவுகள் குவிந்து கிடைக்கின்றது. இன்றைக்கு இணையத்தில் தேடும் பொறியில் தகவல்களை தேடினால் வந்தடைவது மிகுதியாக பதிவின் பக்கமே.

இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா? என்பதுதான் பதிவர்களின் இன்றைய சவாலாக உள்ளது. இணைய எழுத்துலகம் பெருவாரியாக மக்களிடம் சென்றடையாத ஒருகாரணம் இணைய இணைப்பு இல்லாமை என்றாலும் சமுகத்தில் இதனின் தாக்கம் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஏதோ வெட்டியாக எழுதும் இளைஞர்களின் குழு என்று சொல்லும் சிலரும் இருக்கதான் செய்கின்றனர். ஆனால் இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. அதேபோல் மிக பெரிய தாக்கமுள்ள கட்டுரைகள் நாள்தோரும் பதிவில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் பொது ஊடகங்கள் கண்டுகொள்வதுமில்லை. யூத்புல் விகடனில் பதிவர்களுக்கு மதிப்பளிப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது.

பதிவுலம் இன்னும் மக்களிடம் சென்றடையும் தூரம் அதிகம் உள்ளது. இந்த சாவல்களை எதிர்கொள்ள நமக்கு நாமே செய்யும் ஊக்கம் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊக்கத்தின் முதல் படியாகத்தான் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி . இதன் வெற்றிக்கு பிறகு இதுபோல ஊக்கங்கள் சமுகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த போட்டியின் நோக்கம் படைப்பாளியின் ஆழ்ந்த சிந்தனையை தூண்டி சமுக கருத்துகளை நமக்கே உரிய கலாச்சாரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான். இதில் எந்த ஒரு உள்நோக்க அரசியல்கள் இல்லை என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகின்றேன்.

இந்த வாய்ப்பின் மூலம் வெற்றிபெற்று மூன்று முதல் பரிசாக சிங்கை ஒரு வார பயணம் பெற்றுடுவீர்.

போட்டியின் முழு விவரங்கள் சுட்டியை சுட்டுங்கள்
மணற்கேணி 2009

Manarkeni 2009

44 comments:

நசரேயன் said...

// ஏதோ வெட்டியாக எழுதும் இளைஞர்களின் குழு என்று சொல்லும் சிலரும் இருக்கதான் செய்கின்றனர்.//

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

// ஏதோ வெட்டியாக எழுதும் இளைஞர்களின் குழு என்று சொல்லும் சிலரும் இருக்கதான் செய்கின்றனர்.//

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்//

இல்லை எழுதி தீருங்கள் நண்பா.. ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

sakthi said...

இன்றைக்கு இணையத்தில் தேடும் பொறியில் தகவல்களை தேடினால் வந்தடைவது மிகுதியாக பதிவின் பக்கமே.

ஆமாம்

அதான் ஆளாளுக்கு குறைந்த பட்சமாய் 2 தளங்கள் வைத்திருக்கின்றோமே!!!

sakthi said...

இதன் வெற்றிக்கு பிறகு இதுபோல ஊக்கங்கள் சமுகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த போட்டியின் நோக்கம் படைப்பாளியின் ஆழ்ந்த சிந்தனையை தூண்டி சமுக கருத்துகளை நமக்கே உரிய கலாச்சாரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான்

நல்ல எண்ணம்

வாழ்த்துக்கள்

காமராஜ் said...

நல்ல முயற்சி நண்பா தொடருங்கள்.
இன்னும் அதிக கருத்துச்செரிந்த
பதிவுலகில் இடம்பெறட்டும்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆமாங்க நீங்கள் சொல்வது சரி தான்....முதல் பத்தியில் சொன்ன மாதிரி அதிகார பொருப்பில் இருப்பவர்கள் மற்றும் பிரபலம் அடைந்த எழுத்தாளர்களைத் தவிர பரவி விரவிக்கிடக்கும் நல்ல திறமையான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலை என்பது உண்மைத்தான்...இங்கு வலைப்பூவில் எல்லாரையும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் பெருந்தன்மையும் உண்டு என்றும் சொல்லிக்கலாம்.. நீங்க சொன்ன மாதிரி யூத்புல் விகடனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாகவும் இருக்கோம்...

பங்குபெறும் என் நண்பர்கள் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்...

ஆ.சுதா said...

இது உண்மையிலேயே பாராட்டதக்க முயற்சி. அதில் உங்கள் பதிவும் சிறப்பு.
நல்ல விசயம் நண்பரே.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!
நமது நோக்கம் நிறைவேற ஒன்றுபடுவோம்.
வாழ்த்துகள்!
நன்றி இரவி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!
நமது நோக்கம் நிறைவேற ஒன்றுபடுவோம்.
வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் said...

அருமையாக எழுதி இருக்கிங்க பாஸ், விதிமுறைகளின் படி என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது
:)

ஜெகதீசன் said...

:)

Kotticode said...

அருமையான முயற்சி இதை ஒழுங்கு செய்த சிங்கை பதிவர்களுக்கும் தமிழ் வெளி க்கும் என்னுடைய நன்றிகள் .

Suresh Kumar said...

அருமையான முயற்சி இதை ஒழுங்கு செய்த சிங்கை பதிவர்களுக்கும் தமிழ் வெளி க்கும் என்னுடைய நன்றிகள் .

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

இன்றைக்கு இணையத்தில் தேடும் பொறியில் தகவல்களை தேடினால் வந்தடைவது மிகுதியாக பதிவின் பக்கமே.

ஆமாம்

அதான் ஆளாளுக்கு குறைந்த பட்சமாய் 2 தளங்கள் வைத்திருக்கின்றோமே!!!//

2 தளங்களுக்கு எப்படி சங்கதி கிடைக்கின்றது சக்தி... எனக்கு கருத்து வறட்சி அதிகமாக இருக்கு...

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

இதன் வெற்றிக்கு பிறகு இதுபோல ஊக்கங்கள் சமுகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த போட்டியின் நோக்கம் படைப்பாளியின் ஆழ்ந்த சிந்தனையை தூண்டி சமுக கருத்துகளை நமக்கே உரிய கலாச்சாரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான்

நல்ல எண்ணம்

வாழ்த்துக்கள்///

மிக்க நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

நல்ல முயற்சி நண்பா தொடருங்கள்.
இன்னும் அதிக கருத்துச்செரிந்த
பதிவுலகில் இடம்பெறட்டும்.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

ஆமாங்க நீங்கள் சொல்வது சரி தான்....முதல் பத்தியில் சொன்ன மாதிரி அதிகார பொருப்பில் இருப்பவர்கள் மற்றும் பிரபலம் அடைந்த எழுத்தாளர்களைத் தவிர பரவி விரவிக்கிடக்கும் நல்ல திறமையான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலை என்பது உண்மைத்தான்...இங்கு வலைப்பூவில் எல்லாரையும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் பெருந்தன்மையும் உண்டு என்றும் சொல்லிக்கலாம்.. நீங்க சொன்ன மாதிரி யூத்புல் விகடனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாகவும் இருக்கோம்...

பங்குபெறும் என் நண்பர்கள் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்...//

உங்களுக்கும் வாழ்த்துகளும்
நன்றியும் தோழி

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

இது உண்மையிலேயே பாராட்டதக்க முயற்சி. அதில் உங்கள் பதிவும் சிறப்பு.
நல்ல விசயம் நண்பரே.//
மிக்க நன்றி ஆ.முத்துராமலிங்கம்..

ஆ.ஞானசேகரன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!
நமது நோக்கம் நிறைவேற ஒன்றுபடுவோம்.
வாழ்த்துகள்!//

நன்றியும் வாழ்த்துகளும் ஜொதிபாரதி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

அருமையாக எழுதி இருக்கிங்க பாஸ், விதிமுறைகளின் படி என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது
:)//

நன்றி பாஸ்
கலந்துகொள்ள முடியவில்லை என்றால் என்ன, கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்து சொல்லாமே பாஸ்......

ஆ.ஞானசேகரன் said...

// ஜெகதீசன் said...

:)//

வாழ்த்துகளும் நன்றியும் ஜெகதீசன்

ஆ.ஞானசேகரன் said...

// Kotticode said...

அருமையான முயற்சி இதை ஒழுங்கு செய்த சிங்கை பதிவர்களுக்கும் தமிழ் வெளி க்கும் என்னுடைய நன்றிகள் .//

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

அருமையான முயற்சி இதை ஒழுங்கு செய்த சிங்கை பதிவர்களுக்கும் தமிழ் வெளி க்கும் என்னுடைய நன்றிகள் .//

மிக்க நன்றி நண்பா

ராம்.CM said...

அருமையாக இருந்தது. நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...

அருமையாக இருந்தது. நல்ல முயற்சி.வாழ்த்துகள்.//

மிக்க நன்றி நண்பா

வினோத் கெளதம் said...

Nalla visahyam..
Aanak perum ulaipu tevai..
Basicala naan padu somberi.;)

குடந்தை அன்புமணி said...

பதிவிற்கு வாழ்த்துகள். அனைவருமே முயற்சி செய்யுங்கள். சிங்கை பதிவர் சந்திப்பு வைச்சுக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

Nalla visahyam..
Aanak perum ulaipu tevai..
Basicala naan padu somberi.;)//

வாங்க வினோத்கெளதம்
நீங்க சொல்லிட்டா சோம்பேரி இல்லை.. நாங்களும் நம்பவுமில்லை..

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

பதிவிற்கு வாழ்த்துகள். அனைவருமே முயற்சி செய்யுங்கள். சிங்கை பதிவர் சந்திப்பு வைச்சுக்கலாம்.//

வாருங்கள் நண்பா,..
அன்புடன் வரவேற்கின்றோம்....

Radhakrishnan said...

''ஆம் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் மிகவும் அவசியம். அற்புதமான கவிதைகளையும் கதைகளையும் எழுதிவிட்டு ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் மூழ்கிப்போனவர்கள் அதிகம். நிராகரிக்கப்பட்டே எழுத்துக்கள் முடக்கப்பட்டன. அங்கிகாரம் கிடைத்துவிட்டால் எது வேண்டுமெனிலும் எழுதலாம், குறை சொல்லவாவது நாலு பேர் படிப்பார்கள். எழுத்து உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்வரை எழுதிக்கொண்டே இரு, எங்காவது ஒரு இடத்தில் வெளிச்சம் கிடைக்கும்! எழுதி என்ன சாத்திதுவிட்டோம் என இறுமாந்து இருந்திடவேண்டாம், இனிமேல் என்ன எழுதபோகிறோம் புதிதாய் என சலித்துக்கொள்ளவும் வேண்டாம், விசயங்கள் நினைவுபடுத்தபட்டுக் கொண்டே இருக்க வேணடும்.''

இதுபோன்ற போட்டிகளை ஊக்குவிப்பதும், போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் சமுதாய விழிப்புணர்வினைக் கொண்டு வரும். மேலும் எழுதுவதோடு நிறுத்தாமல், தன்னலமின்றி எழுதுவதைப் போல நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 'வெட்டியாக இருக்கும் இளைஞர்கள் குழு' என்கிற மனோபாவம் அகலும்.

மிக்க நன்றி ஞானசேகரன் அவர்களே.

சொல்லரசன் said...

//இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா?//

போட்டியில் கலந்துகொள்ளும் கட்டுரைகள் இதற்கு விடை சொல்லும்

சொல்லரசன் said...

கோவி.கண்ணன் said...
அருமையாக எழுதி இருக்கிங்க பாஸ், விதிமுறைகளின் படி என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது

அப்ப நீங்களும் கலந்துகொள்ள முடியாதா?
ஏன் சிங்கை பதிவ்ர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை பயனம் இலவசம் என அறிவிப்புசெய்யலாமே!!!!!!!!!!

சி தயாளன் said...

:-)))))

ஆ.ஞானசேகரன் said...

// வெ.இராதாகிருஷ்ணன் said...

''ஆம் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் மிகவும் அவசியம். அற்புதமான கவிதைகளையும் கதைகளையும் எழுதிவிட்டு ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் மூழ்கிப்போனவர்கள் அதிகம். நிராகரிக்கப்பட்டே எழுத்துக்கள் முடக்கப்பட்டன. அங்கிகாரம் கிடைத்துவிட்டால் எது வேண்டுமெனிலும் எழுதலாம், குறை சொல்லவாவது நாலு பேர் படிப்பார்கள். எழுத்து உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்வரை எழுதிக்கொண்டே இரு, எங்காவது ஒரு இடத்தில் வெளிச்சம் கிடைக்கும்! எழுதி என்ன சாத்திதுவிட்டோம் என இறுமாந்து இருந்திடவேண்டாம், இனிமேல் என்ன எழுதபோகிறோம் புதிதாய் என சலித்துக்கொள்ளவும் வேண்டாம், விசயங்கள் நினைவுபடுத்தபட்டுக் கொண்டே இருக்க வேணடும்.''

இதுபோன்ற போட்டிகளை ஊக்குவிப்பதும், போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் சமுதாய விழிப்புணர்வினைக் கொண்டு வரும். மேலும் எழுதுவதோடு நிறுத்தாமல், தன்னலமின்றி எழுதுவதைப் போல நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 'வெட்டியாக இருக்கும் இளைஞர்கள் குழு' என்கிற மனோபாவம் அகலும்.

மிக்க நன்றி ஞானசேகரன் அவர்களே.//

உங்களின் நீண்ட கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் வணக்கம் சார்....

உங்களை போன்றோரின் பங்களிப்புகள் மகிழ்வை தருகின்றது மிக்க நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

//இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா?//

போட்டியில் கலந்துகொள்ளும் கட்டுரைகள் இதற்கு விடை சொல்லும்//

நன்றி சொல்லரசன்..

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

கோவி.கண்ணன் said...
அருமையாக எழுதி இருக்கிங்க பாஸ், விதிமுறைகளின் படி என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது

அப்ப நீங்களும் கலந்துகொள்ள முடியாதா?
ஏன் சிங்கை பதிவ்ர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை பயனம் இலவசம் என அறிவிப்புசெய்யலாமே!!!!!!!!!!//

போட்டியை நடத்தும் குழு கலந்துகொள்வது சிறப்பாகாது..

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

:-)))))//

வணக்கம் டொன் லீ பயணம் எப்படி இருக்கு....

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா தொடருங்கள்... கல்லூரி வேலைப்பளு காரணமா கொஞ்ச நாளா கடைப்பக்கம் வர முடியல.. இனிமே தொடர்ந்து கலக்குவோம்ல..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா தொடருங்கள்... கல்லூரி வேலைப்பளு காரணமா கொஞ்ச நாளா கடைப்பக்கம் வர முடியல.. இனிமே தொடர்ந்து கலக்குவோம்ல..//

வணக்கம் நண்பா..
வாங்க கலக்குங்க...
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

// Aboobakker said...

:-)//

நன்றி

வலசு - வேலணை said...

//
இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா? என்பதுதான் பதிவர்களின் இன்றைய சவாலாக உள்ளது. இணைய எழுத்துலகம் பெருவாரியாக மக்களிடம் சென்றடையாத ஒருகாரணம் இணைய இணைப்பு இல்லாமை என்றாலும் சமுகத்தில் இதனின் தாக்கம் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது.
//

பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் இப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.
போகப்போக பாருங்கள்

ஆ.ஞானசேகரன் said...

/// வலசு - வேலணை said...

//
இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா? என்பதுதான் பதிவர்களின் இன்றைய சவாலாக உள்ளது. இணைய எழுத்துலகம் பெருவாரியாக மக்களிடம் சென்றடையாத ஒருகாரணம் இணைய இணைப்பு இல்லாமை என்றாலும் சமுகத்தில் இதனின் தாக்கம் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது.
//

பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் இப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.
போகப்போக பாருங்கள்///

நீங்கள் நினைப்பதும் சரிதான் நண்பா.. அந்த முயற்சியின் முதல்படியாக இருக்க இந்த எண்ணங்கள்....

மிக்க நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

நல்ல முயற்சி என்பதோடு மட்டுமல்லாது, பதிவர்களின் திறனை வெளிப்படுத்தும் அழகிய வாய்ப்பு. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

நல்ல முயற்சி என்பதோடு மட்டுமல்லாது, பதிவர்களின் திறனை வெளிப்படுத்தும் அழகிய வாய்ப்பு. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பா...
உங்களுக்கும் வாழ்த்துகள்