_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, July 6, 2009

" இயற்கையோடு மனிதன்"-துவரங்குச்சியோடு சில நினைவுகள்...

"இயற்கையோடு மனிதன்"-துவரங்குச்சியோடு சில நினைவுகள்...



ஆன்-லைன்' வர்த்தக தடை நீக்கம் : துவரம் பருப்பு விலை கிடு கிடு உயர்வு (08-07-2009)

மனிதன் வாழனும் அதற்காக எப்படிவேனாலும் வாழலாம் என்று சொல்லவில்லை. அவனுக்கென்று ஒரு கலாச்சாரம் பண்பாடு எல்லாம் இருக்கு என்பதை நானும் ஒத்துகொள்கின்றேன். நாகரிக வளர்ச்சியில் நாம் இயற்கையிலிருந்து தொலைதூரம் வந்துவிட்டோமோ என்றே எனக்குள் ஒரு அச்சம். மனிதன் வாழ மிக முக்கியம்னா உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இதுதானுங்க. இதற்கெல்லாம் இயற்கையோடு வாழ்ந்த காலங்களே போதுமானது தான்.

இப்ப அதையெல்லாம் தாண்டி விஞ்ஞான வளர்ச்சி அபாரமான கட்டமைபில் செல்கின்றது. இது எல்லாம் தேவையா என்றால் தேவைதான் ஆனால் அதனோடு நம்மில் உள்ள இயற்கையின் கட்டமைப்பை தொலைத்து விடுகின்றோம் என்பதில் தான் நம்முடைய கவலைகள். சாதணரமாக மனிதனின் தேவைகளுக்கு அப்பால் தொலைதொடர்பு, தொலைப்பயணம், பொழுதுப்போக்கு என விரிந்துசெல்லும் விஞ்ஞான கட்டமைப்புகள் நம்மிடையே இருக்கும் இயற்கையான வாழ்க்கையை இழக்க செய்துவிட்டது. வரும் காலங்களுக்கு மாபெரும் பசுமைப்புரட்சி தேவையாகிவிட்டது.

தொடர்ந்து வரும் நோய்கள், பூமியின் வெப்பமயமாக்கம், அழிந்துவரும் இயற்கை, காணாமல் போன பருவகாலங்கள் இவற்றையெல்லாம் பார்க்கின்றபொழுது நாம் வந்த வழிகளில் விட்டு சென்ற தடயங்கள் கவணிக்கப்படுகின்றது. அப்படி கவணித்த தடங்களில் ஒன்று இந்த துவரையும் கிராம வாழ்க்கையும்.

துவரை பேபேஸி இனத்தை சார்ந்த தாவரம். துவரை புஞ்சை காடுகளில் பயிரிடப்படுகின்றது. துவரை செடிகள் பாத்தி பாத்தியாக வளர்க்கப்படுகின்றது. இவற்றுடன் நிலகடலையும் பயிரிடப்படும். கடலைப்பற்றிய என் முந்திய பதிவு..
அம்மா நான் கடலை ஆயப்போறேன்... கடலை அறுவடைக்கு பின் துவரை அறுவடையாகும்.

துவரை பூ அவரைப்பூ போன்ற இருக்கும், அளவில் சிறியது. துவரங்காய் சிறிய
அவரைக்காய் போலவே இருக்கும், ஒரு காயில் 5 முதல் 6 பருப்புகள் இருக்கும். முதிர்ந்த பருப்பு கரும்சிகப்பு நிறத்தில் இருக்கும். தோல் இல்லா பருப்பை சமையலுக்கு பயன்ப்படுத்துகின்றோம். துவரங்காயை உப்பிட்டு வேகவைத்து திண்கின்ற காலம் இன்னும் என் நினைவில் இருக்கின்றது. இதுபோன்ற நினைவுகள் என் பிள்ளைகளுக்கு வருமா? என்றால் அய்யமே!...

துவரங்காய் முதிர்ந்ததும் பாத்தி பாத்தியாக பயிரிட்ட செடியை சிறிய அரிவாள் கொண்டு வெட்டி கட்டு கட்டாக அடுக்கி எடுத்து வந்து, விட்டு தோட்டத்தில் உலர்த்தி துவரம் பருப்பை எடுப்பார்கள். இப்படி எடுத்த பருப்பு கரும் சிகப்பு நிறத்தில் தோலுடன் இருக்கும். துவரம்ப்பருப்பில் உள்ள தோலை எடுத்துதான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.

துவரம்பருப்பில் உள்ள தோலை எடுக்க ஒருவகை செம்மண்ணுடன் பருப்பை குழைத்து காயவைத்து பின் திருகையில் இட்டோ அல்லது எந்திரத்தில் இட்டோ பருப்பில் உள்ள தோலை எடுப்பார்கள். திருகையில் இட்ட பருப்பு முழு பருப்பாக இருக்கும். எந்திரத்தில் இட்ட பருப்பு அரைப்பருப்பாக இருக்கும்.

துவரங்குச்சியை பொதுவாக அடுப்பெரிக்கலாம், பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும். வீட்டுக்கு முன் படல்(முல் இல்லா வேலி) அடைக்கவும் பயன்படும்.

துவரம் பருப்பில் புரதமும், வேதிப்பொருள்களும் அடங்கிய உணவு. மேலும் துவரையில் மருத்துவ குணங்களும் இருக்கின்றது. துவரை வேர் மூல நோயை குணப்படுத்துமாம். அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள் மூலத்தை துரத்தும் துவரை வேர்

மேலும் துவரையிலிருந்து இயற்கையான ஷாம்பும் தயாரிக்கலாமாம். அதன் சுட்டியும் இதோ இயற்கையான ஷாம்பு

துவரை
ஆசியாவில் முதலில் பயிரப்பட்டதாக கருதப்பட்டாலும், இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் பருப்பு ஒரு முக்கிய உணவாக அமைகிறது.

இயற்கையோடு அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


46 comments:

நசரேயன் said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்

தமிழ் said...

அருமையான இடுகை


வாழ்த்துகள்

sakthi said...

இது எல்லாம் தேவையா என்றால் தேவைதான் ஆனால் அதனோடு நம்மில் உள்ள இயற்கையின் கட்டமைப்பை தொலைத்து விடுகின்றோம் என்பதில் தான் நம்முடைய கவலைகள்


உண்மைதான்....

எல்லாவற்றையும் அழகிய கட்டுரையாக வடிப்பதற்கு வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

துவரையை பற்றி நல்லா அறிமுகப்படுத்திட்டீங்க..!!

ஆனா இப்ப துவரம்பருப்பு வாங்க கூடிய விலையில் இல்லை. முனபு ரூ.40 தே அதிகம் என்று இருந்தது தற்போது அதன் விலை 75 தாண்டிவிட்டது.!!!

நல்ல கட்டுரை நண்பா!

ராமலக்ஷ்மி said...

நல்ல கட்டுரை ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நசரேயன்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ்மிளிர் said...

அருமையான இடுகை


வாழ்த்துகள்//

நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

இது எல்லாம் தேவையா என்றால் தேவைதான் ஆனால் அதனோடு நம்மில் உள்ள இயற்கையின் கட்டமைப்பை தொலைத்து விடுகின்றோம் என்பதில் தான் நம்முடைய கவலைகள்


உண்மைதான்....

எல்லாவற்றையும் அழகிய கட்டுரையாக வடிப்பதற்கு வாழ்த்துக்கள்//

உங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பின் நன்றிகள் சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

துவரையை பற்றி நல்லா அறிமுகப்படுத்திட்டீங்க..!!

ஆனா இப்ப துவரம்பருப்பு வாங்க கூடிய விலையில் இல்லை. முனபு ரூ.40 தே அதிகம் என்று இருந்தது தற்போது அதன் விலை 75 தாண்டிவிட்டது.!!!

நல்ல கட்டுரை நண்பா!//

வணக்கம் ஆ. முத்துராமலிங்கம்
இயற்கையின் கட்டமைப்பை தொலைத்துவிட்ட காரணமாக கூட இருக்கலாம் இந்த விலையேற்றம்...

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

நல்ல கட்டுரை ஞானசேகரன்.//

மிக்க நன்றி நண்பா

கோவி.கண்ணன் said...

//தமிழர் சமையலிலும் பருப்பு ஒரு முக்கிய உணவாக அமைகிறது.//

தமிழர்கள் அதனால் தான் முக்கியமான யாரையும் 'இவரு பெரிய பருப்பு' என்கிறார்களோ.
:)

மலையாளத்துல பருப்பு 'பரிப்பு' என்று சொல்லப்படும்.

ஆ.ஞானசேகரன் said...

/// கோவி.கண்ணன் said...

//தமிழர் சமையலிலும் பருப்பு ஒரு முக்கிய உணவாக அமைகிறது.//

தமிழர்கள் அதனால் தான் முக்கியமான யாரையும் 'இவரு பெரிய பருப்பு' என்கிறார்களோ.
:)

மலையாளத்துல பருப்பு 'பரிப்பு' என்று சொல்லப்படும்.///

"பெரிய பருப்பு" இருக்கலாம் என்றே தோன்றுகின்றது(பருப்பு இல்லா சாம்பாரா)


"பரிப்பு" தகவலுக்கு நன்றி கண்ணன்

வால்பையன் said...

ஈரோட்டில் மண்ணு கட்டிய பருப்பு என்று ஒருவகை துவரை கிடைக்கிறது!

இயந்திரம் அல்லாது வீட்டிலேயே தோலை உரிக்க நீங்கள் சொன்ன முறை தான்!
சாம்பாரும் அருமை!

தகவலுக்கு நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

ஈரோட்டில் மண்ணு கட்டிய பருப்பு என்று ஒருவகை துவரை கிடைக்கிறது!

இயந்திரம் அல்லாது வீட்டிலேயே தோலை உரிக்க நீங்கள் சொன்ன முறை தான்!
சாம்பாரும் அருமை!

தகவலுக்கு நன்றி!//

உங்களின் தகவலுக்கும் நன்றி நண்பா

குடந்தை அன்புமணி said...

சுவையான சாம்பார் வைக்க பயன்படும் துவரை பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி தோழரே.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

சுவையான சாம்பார் வைக்க பயன்படும் துவரை பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி தோழரே.//

வாங்க நண்பா...
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நன்றி!

Suresh Kumar said...

இயற்கையோடு கலந்து எழுதியிருக்கிறீர்கள் அருமையான இடுகை

தீப்பெட்டி said...

பயனுள்ள இடுகை..
நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

இயற்கையோடு கலந்து எழுதியிருக்கிறீர்கள் அருமையான இடுகை//

நன்றி சுரெஷ் குமார்

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...

பயனுள்ள இடுகை..
நன்றி..//

நன்றி நண்பா

தேவன் மாயம் said...

அவரை துவரை எல்லாம் துறந்து
ஆவாரம் தாவாரமெல்லாம் மறந்து
அந்தச்சீமையிலே வாழுறியே ராசா!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

அவரை துவரை எல்லாம் துறந்து
ஆவாரம் தாவாரமெல்லாம் மறந்து
அந்தச்சீமையிலே வாழுறியே ராசா!!//

திரைகடல் ஓடி திரவியம் தேடுனு சொன்னாங்களேன்னு வந்துடேங்க தேவன் சார்...

சொல்லரசன் said...

அருமையான‌ இடுக்கை, நம் குழந்தைகள் வரும்காலங்களில் பருப்பை பற்றி இதுபோன்று படித்து தெரிந்துகொள்ளும் நிலை
ஏற்படும் போல்தான் இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

அருமையான‌ இடுக்கை, நம் குழந்தைகள் வரும்காலங்களில் பருப்பை பற்றி இதுபோன்று படித்து தெரிந்துகொள்ளும் நிலை
ஏற்படும் போல்தான் இருக்கிறது.//

ஆமாங்க சொல்லரசன்... அதன் பாதிப்புதான் இந்த இடுக்கை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் "துவரை கொடியில்தானே விளைகின்றது" என்று கேட்டதன் விளைவுதான் இந்த இடுக்கை...

மிக்க நன்றிங்கோ

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய தகவல்கள்.. தொடருங்கள் நண்பா.. வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan.

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. கலக்குறீங்க.. உங்களின் பதிகளைப் படிக்கும்போது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
நிறைய தகவல்கள்.. தொடருங்கள் நண்பா.. வாழ்த்துகள்//

வணக்கம் கார்திகைப் பாண்டியன்,..

மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nalla pathivu Gnanaseharan.//

வணக்கம் சார்

மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
நண்பா.. கலக்குறீங்க.. உங்களின் பதிகளைப் படிக்கும்போது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது//

வாங்க நண்பா,
உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி நண்பா

Dhanabal said...

"துவரை செடி"கொடி இல்லை நல்ல தகவல் நண்பா!


நன்றி
வாழ்த்துகள்
தனபால்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும்//

-:(

ஆ.ஞானசேகரன் said...

//Dhanabal said...
"துவரை செடி"கொடி இல்லை நல்ல தகவல் நண்பா!


நன்றி
வாழ்த்துகள்
தனபால்//

நன்றி தனபால்

ஆ.ஞானசேகரன் said...

// பித்தன் said...
//பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும்//

-:(
//


நன்றிங்க

காமராஜ் said...

என்ன அழகான தகவல்கள்.
அதுவும் இயற்கையோடு
ஓவ்வொரு சொல்லும் பள்ளி
நாட்களைப்பதியன் போட்ட
காடுகளுக்கு கூட்டிச்செல்கிறது.
அருமை நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

என்ன அழகான தகவல்கள்.
அதுவும் இயற்கையோடு
ஓவ்வொரு சொல்லும் பள்ளி
நாட்களைப்பதியன் போட்ட
காடுகளுக்கு கூட்டிச்செல்கிறது.
அருமை நண்பா.//

மிக்க நன்றி தோழரே

கடவுள் said...

இயற்கையோடு கலந்து ஒரு நல்ல பதிவு. அம்சமாக புள்ளி விவரத்துடன் விளக்கியிருக்கீங்க. ஞானசேகரனுக்கு ஒரு சபாஸ் போடலாம்.

ஆ.ஞானசேகரன் said...

// கடவுள் said...
இயற்கையோடு கலந்து ஒரு நல்ல பதிவு. அம்சமாக புள்ளி விவரத்துடன் விளக்கியிருக்கீங்க. ஞானசேகரனுக்கு ஒரு சபாஸ் போடலாம்.//


நன்றிங்க

ஹேமா said...

எனக்கு துவரம்பருப்பு சாம்பார் என்றால் நிறையப் பிடிக்கும்.துவரை பற்றிய நிறைந்த தகவல்.நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

எனக்கு துவரம்பருப்பு சாம்பார் என்றால் நிறையப் பிடிக்கும்.துவரை பற்றிய நிறைந்த தகவல்.நன்றி.//

வாங்க ஹேமா நல்லாயிருக்கிங்களா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

வலசு - வேலணை said...

//
பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும்.
//
ஆகா!
நல்ல பயன்பாடு :-)

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

//
பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும்.
//
ஆகா!
நல்ல பயன்பாடு :-)//

வணக்கம் நண்பா குரும்புக்காக குரும்பாக ஒரு அடிதானே...

1-5 வயதுவரை பாசம்
6-10 கண்டிப்பு (சில நேரங்களின் சிறிது அடியும்)
10-15 தோழமை
15-20 நண்பன்
20-25 சில அறிவுறை மட்டுமே
25-30 நாம் குழந்தை......

நன்றி நண்பா

S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு பதிவு. உங்களின் முந்தைய பதிவுகளும் படிக்கணும், இனி தொடர்ந்து வருவேன். நன்றி வலைச்சரம்.

cheena (சீனா) said...

அன்பு நண்ப

வலைச்சரம் மூலம் வந்தேன் - அருமையான இடுகை - அரிய தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி நண்ப

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு பதிவு. உங்களின் முந்தைய பதிவுகளும் படிக்கணும், இனி தொடர்ந்து வருவேன். நன்றி வலைச்சரம்.//
மிக்க நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அன்பு நண்ப

வலைச்சரம் மூலம் வந்தேன் - அருமையான இடுகை - அரிய தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி நண்ப//

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா