_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, July 22, 2009

யாரும் யாருக்காகவும்!...

யாரும் யாருக்காகவும்!...

நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் பழமொழி " பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்" என்பது. உண்மைதான் சிலர் வேலை செய்யும் இடங்களில் " நான் இல்லை என்றால் இந்த வேலை நடக்க வாய்ப்பே இல்லை " என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள், அப்படிதான் அவர்கள் நடவடிக்கையும் இருக்கும். இதை நான் மட்டுமே சிறப்பாக செய்வேன், நான் இல்லை என்றால் ஒன்றுமே நடக்காது என்று வரிந்து வரிந்து சொல்லிக்கொள்வார்கள். அதே போல குடுப்பங்களிலும் என்னால்தான் எல்லாம், நான் இல்லை என்றால் இங்கு ஒன்றுமே நடக்காது என்ற நிலையில் பேசுவார்கள்.

இதை பார்க்கும் பொழுது நான் படித்த ஜென் கதை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு ஜென் துறவிக்கு துணையாக ஒரு சிஷியன் இருந்தான். அன்று அந்த சிஷியன் சோகமாக இருந்தான், அதை பார்த்த துறவி " ஏன் நீ இன்று சோகமாக இருக்கின்றாய்
உனக்கு என்ன பிரச்சனை " என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "குருவே எனக்கும் உங்களை போல் இயல்பு வாழ்க்கை வெறுக்கின்றது நானும் உங்களை போல துறவியாகி விடலாம் என்றே தோன்றுகின்றது" என்றான். அதற்கு அந்த துறவி " அதற்காக ஏன் சோகமாக இருக்க வேண்டும்" என்றார். " நான் துறவி ஆகதான் விருப்பம் ஆனால் என்னை நம்பிதான் என் மனைவி மக்கள் இருக்கின்றனர், என் தாய் தந்தையரை நினைத்தால் பயம் வந்துவிடுகின்றது" என்று கூறினான்.

அதற்கு அந்த துறவி" நீ அதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றாயா?" என்று கேட்டார், சரி என்று ஒப்புகொண்டான். பிறகு அவனுக்கு மரண நிலையில் இருக்கும் ஆசனம் ஒன்றை அவனுக்கு கற்றுக்கொடுத்தார். பின் அவனிடம் " நீ உன் வீட்டிற்கு சென்று இந்த ஆசனத்தை பயன்படுத்தி படுத்துக்கொள்" என்று அனுப்பிவிட்டார். அவன் வீட்டிற்கு சென்று ஆசனத்தை பயன்ப்படுத்தி படுத்துக்கொண்டான். வீட்டில் உள்ளவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அழுதுகொண்டிருந்தார்கள்.

அந்த வழியாக ஜென் துறவி வந்தார், அழுதுகொண்டிருந்தவர்களை பார்த்து " அவன் உயிர் பெற வேண்டும் என்றால் உங்களில் யாராவது உங்கள் உயிரை கொடுத்தால் போதும் நான் அவனை உயிர்ப்பெற செய்கின்றேன்" என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் வாழ வேண்டும் என்பதாக சொல்லி பின்வாங்கினார்கள்.

அதற்குள் அவன் மனைவி உரத்த குரலில் " யாரும் இவருக்காக சாக வேண்டாம், இவர் இல்லாமலே எங்களால் வாழமுடியும், அவர் இல்லாமலே காலத்தைக் கழிப்போம்" என்று கூறினாள்.

ஆம்! யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை, வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக்கொள்ளதான் மனம் தயக்கம் காட்டுகின்றதே தவிற வேறொன்றுமில்லை. நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும். இதற்கிடையில் இருப்பது தான் பந்தம், பாசம், உறவுகள் எல்லாம். தாய், தந்தை, மகன், மகள் உறவுகள் எல்லாமே ஏதோ ஒன்றை மற்றவரிடம் எதிர்ப்பார்த்துதான் வாழ்க்கையும் ஓடுகின்றது. இந்த எதிர்ப்பார்ப்பு இல்லை என்றால் உறவுகள் கூட நொருக்கிவிடுகின்றது.

யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

நன்றி யூத்புல் விகடன்

48 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல செய்தி ஞானசேகரன்.. எனக்கெண்ணவோ இது என் தமிழ் திரட்டிகளை புரக்கணிப்போம் இடுகையை நியாபகப் படுத்துகிறது.. நன்றி..

கிடுகுவேலி said...

///......நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும்....//

மிகச்சரியான ஒன்று. நாம் சார்ந்துதான் வாழ்கிறோம். ஆனால் இன்னொருவருக்காக வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

மிக நல்லச் சரியானச் செய்தி... அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

sakthi said...

ஆம்! யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை, வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக்கொள்ளதான் மனம் தயக்கம் காட்டுகின்றதே தவிற வேறொன்றுமில்லை.

உண்மை தான்

Suresh Kumar said...

நல்ல செய்தி அழக்காக ஜென் கதையோடு சொல்லியிருக்கிறீர்கள்

நையாண்டி நைனா said...

நண்பா நல்ல கருத்து அண்ட் கதை

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையாக இருந்தது கதை வடிவம்...

(இறந்த பின் இரண்டு மணித்தியாலங்கள் கூட வீட்டுக்குள் உடலை வைத்திருக்கப் பயப படுகிறார்கள் நம்மில் சிலர்.... இப்படி இருக்க யாரும் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்....)

ஆதவா said...

யாரும் யாரைச் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியமில்லை...
ஆனால்
யாவரும் யாவரையோ சார்ந்துதான் இருக்கிறோம்!!

அன்புடன்
ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல செய்தி ஞானசேகரன்.. எனக்கெண்ணவோ இது என் தமிழ் திரட்டிகளை புரக்கணிப்போம் இடுகையை நியாபகப் படுத்துகிறது.. நன்றி..//

நன்றி நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

///......நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும்....//

மிகச்சரியான ஒன்று. நாம் சார்ந்துதான் வாழ்கிறோம். ஆனால் இன்னொருவருக்காக வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.//

வணக்கம் கதியால்.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//இராகவன் நைஜிரியா said...

மிக நல்லச் சரியானச் செய்தி... அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.//

வணக்கம் நண்பா,..

நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

ஆம்! யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை, வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக்கொள்ளதான் மனம் தயக்கம் காட்டுகின்றதே தவிற வேறொன்றுமில்லை.

உண்மை தான்//

வாங்க சக்தி
நன்றிமா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல செய்தி அழக்காக ஜென் கதையோடு சொல்லியிருக்கிறீர்கள்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...

நண்பா நல்ல கருத்து அண்ட் கதை//


உங்க வருகை அண்ட் கருத்துரைக்கு நன்றி நைனா

ஆ.ஞானசேகரன் said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையாக இருந்தது கதை வடிவம்...

(இறந்த பின் இரண்டு மணித்தியாலங்கள் கூட வீட்டுக்குள் உடலை வைத்திருக்கப் பயப படுகிறார்கள் நம்மில் சிலர்.... இப்படி இருக்க யாரும் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்....)///

வணக்கம் நண்பரே..
நீங்கள் சொல்வதும் சரிதான்..

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

யாரும் யாரைச் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியமில்லை...
ஆனால்
யாவரும் யாவரையோ சார்ந்துதான் இருக்கிறோம்!!

அன்புடன்
ஆதவா//

வாங்க ஆதவா.
சார்ந்துதான் வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை,... யாருக்காகவும் வழ்வதில்லை. மற்றவர்களுக்காக வாழ்வதுபோல் நடித்துக்கொண்டு வாழ்கின்றோம். இதில் பொதுதொண்டு என்பதெல்லாம் சுய புகழுக்காகதான். ஒரு சில மகான்களை தவிற்த்து(உ.ம் அன்னை தெரசா)

CorTexT (Old) said...

இயற்கை எப்படியோ அப்படியே. இந்த இயற்கையில், இந்த உலகத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை விட, இந்த இயற்கையில் நாமும் அடக்கம் என்பதே சரியாக இருக்கும். அதில் ஒருவர் இல்லை என்றாலும், அது எவ்வளவு சிறிய மாற்றமானாலும் அது மாற்றம் தான். சில சிறிய மாற்றங்கள் பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தாலாம் (Bufferfly Effect). சிலர் சிலருக்காக வாழ்வதும் உண்டு. சிலர் இன்றி சிலரலது வாழ்கை மாறிபோவதும் உண்டு. ஆனாலும், இயற்கை எப்படியோ அப்படியே; அதை நீயோ, நானோ மாற்ற முடியாது; ஏனென்றால் அதில் நீயும் நானும் அடக்கம். இதில் ஒரு சுழற்சி (கோழி-முட்டை மாதிரி) உள்ளது; அது நம்மை குழப்புகின்றது.

S.A. நவாஸுதீன் said...

இது உண்மைதான் என்ற போதிலும் மனித மனம் மறுக்கத் தான் செய்யும்.

இன்னொரு விஷயம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் என்றே சொல்லக்கூடிய "மறதி". காரணம், பொதுவாக நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரியும்போது அல்லது இறக்கும்போது நாம் அழுத அழுகை அதே நபரை நினைத்து ஒரு வருடம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது அதே அழுகை வருவதில்லை. அதனால் இங்கு யாரும் யாருக்காகவும் இல்லை என்பது நிதர்சனம் என்றாலும், ஒத்துக்கொள்வது சங்கடமான விஷயமாகத்தான் இருக்கிறது

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

இயற்கை எப்படியோ அப்படியே. இந்த இயற்கையில், இந்த உலகத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை விட, இந்த இயற்கையில் நாமும் அடக்கம் என்பதே சரியாக இருக்கும். அதில் ஒருவர் இல்லை என்றாலும், அது எவ்வளவு சிறிய மாற்றமானாலும் அது மாற்றம் தான். சில சிறிய மாற்றங்கள் பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தாலாம் (Bufferfly Effect). சிலர் சிலருக்காக வாழ்வதும் உண்டு. சிலர் இன்றி சிலரலது வாழ்கை மாறிபோவதும் உண்டு. ஆனாலும், இயற்கை எப்படியோ அப்படியே; அதை நீயோ, நானோ மாற்ற முடியாது; ஏனென்றால் அதில் நீயும் நானும் அடக்கம். இதில் ஒரு சுழற்சி (கோழி-முட்டை மாதிரி) உள்ளது; அது நம்மை குழப்புகின்றது.//

உண்மைதான். நாமும் இயற்கையின் ஒரு அங்கம்தான். அதில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதே சமயம் இயற்கைக்கு மாறாக எற்படும் (இலங்கை தமிழர் படுகொலைகள்) சம்பவங்களை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான் புரியவில்லை...

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

இது உண்மைதான் என்ற போதிலும் மனித மனம் மறுக்கத் தான் செய்யும்.

இன்னொரு விஷயம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் என்றே சொல்லக்கூடிய "மறதி". காரணம், பொதுவாக நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரியும்போது அல்லது இறக்கும்போது நாம் அழுத அழுகை அதே நபரை நினைத்து ஒரு வருடம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது அதே அழுகை வருவதில்லை. அதனால் இங்கு யாரும் யாருக்காகவும் இல்லை என்பது நிதர்சனம் என்றாலும், ஒத்துக்கொள்வது சங்கடமான விஷயமாகத்தான் இருக்கிறது//

நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா. இன்னும் ஒன்று இறந்தவரை பார்த்து அழுகும் பொழுது நமக்கு செய்யவேண்டியதை செய்யாமல் போய்விட்டதை நினைத்துதான் அழுகுவார்கள்.. இன்னும் சிலர் செய்ததை நினைத்து நன்றியுடன் அழுகுவார்கள்...
எப்படியானாலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையில் இருக்கும் அன்பின் வழிப்பாடு உண்மையாக இருந்தால் சரிதான்

Anbu said...

மிக நல்ல சரியானச் செய்தி........

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சொல்லி இருக்கிற கதை சரிதான் நண்பா.. ஆனாலும் எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு உண்டு.. நமக்காக உயிரைத் தர மாட்டாங்க சரி.. ஆனா கண்டிப்பா நம்ம பிரிவுக்காக ஏங்குவாங்க இல்லையா.. அங்க தான வாழ்க்கையோட சூட்சுமமே இருக்கு..

கலையரசன் said...

சரியான நேரத்தில்...
தேவையான இடுகை!

வெல்டன் ஞானம்!!

ஆ.ஞானசேகரன் said...

//Anbu said...
மிக நல்ல சரியானச் செய்தி........//


மிக்க நன்றி அன்பு

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்க சொல்லி இருக்கிற கதை சரிதான் நண்பா.. ஆனாலும் எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு உண்டு.. நமக்காக உயிரைத் தர மாட்டாங்க சரி.. ஆனா கண்டிப்பா நம்ம பிரிவுக்காக ஏங்குவாங்க இல்லையா.. அங்க தான வாழ்க்கையோட சூட்சுமமே இருக்கு..//

கொஞ்சம் ஏற்றுகொள்ள கடினமான விடயம்தான் நண்பா. பிரிவு ஒரு பாதிப்புதான் என்றாலும் காலபோக்கில் சரியாககூடியதே. ஒருவருக்கொருவர் சார்ந்துதானே வாழ்கின்றோம். அதனால்தான் அந்த பாதிப்பும். மிக்க ஆழமாக யோசித்தால் அதிலும் ஒரு சுயநலம் தெரியும்...

ஆ.ஞானசேகரன் said...

//கலையரசன் said...
சரியான நேரத்தில்...
தேவையான இடுகை!

வெல்டன் ஞானம்!!//


மிக்க நன்றிங்க‌

சொல்லரசன் said...

//நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும்.//

இதை புரிந்துகொண்டால் மனிதன் மனிதனாக இருப்பான்

சங்கர் தியாகராஜன் said...

நல்ல கதை. ஆனால் எனக்கு சின்ன கருத்து வேறுபாடு. நமக்காக யாராவது உயிர் கொடுத்தால், அவரை நம்பியவரை அவர் ஏமாற்றியதாகாதா?

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...
//நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும்.//

இதை புரிந்துகொண்டால் மனிதன் மனிதனாக இருப்பான்//

வணக்கம் சொல்லரசன்
உண்மைதாங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//சங்கர் தியாகராஜன் said...
நல்ல கதை. ஆனால் எனக்கு சின்ன கருத்து வேறுபாடு. நமக்காக யாராவது உயிர் கொடுத்தால், அவரை நம்பியவரை அவர் ஏமாற்றியதாகாதா?//

வணக்கம் ..

கதையின்படி அவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவரைதான் உயிர்கொடுக்க கேட்டார். யாரும் யாருக்காவும் இவ்வாறு செய்யலாகாது என்பதுதான் கதையின் கரு. நாம் யாருக்காவும் இங்கு வாழ்வதாக அர்த்தம் இல்லை நாம் ஒருவரை ஒருவர் சார்தே வாழ்கின்றோம் என்பதுதான் இதனின் நோக்கம்..

மிக்க நன்றி நண்பரே

jothi said...

//
யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.//

என்ன அழகான தத்துவம். நல்ல பதிவு நண்பரே,.. விகடனில் வந்ததிற்கும் வாழ்த்துக்கள்

jothi said...

ஆனால் காதல் பறவைகள் மட்டும் ஒன்று சாகும் போது ஏன் அடுத்ததும் சாகிறது?? ஒவ்வொரு உயிரும் தன் மரணத்தை எதிர்த்து கடைசி வரை போராடும் போது இவைகள் மட்டும் எப்படி?? கடவுள் இவைகளுக்கு இரண்டறிவு கொடுத்ததாலா??

ஆ.ஞானசேகரன் said...

// jothi said...
//
யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.//

என்ன அழகான தத்துவம். நல்ல பதிவு நண்பரே,.. விகடனில் வந்ததிற்கும் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...
ஆனால் காதல் பறவைகள் மட்டும் ஒன்று சாகும் போது ஏன் அடுத்ததும் சாகிறது?? ஒவ்வொரு உயிரும் தன் மரணத்தை எதிர்த்து கடைசி வரை போராடும் போது இவைகள் மட்டும் எப்படி?? கடவுள் இவைகளுக்கு இரண்டறிவு கொடுத்ததாலா??
//
நீங்கள் சொல்வதும் ஞாயம்தான், எதிர்ப்பார்ப்புகளாக இருக்கலாம்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு ஞானம்...

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு ஞானம்...//

மிக்க நன்றிங்க ஜோதிபாரதி

ஹேமா said...

ஞானசேகரன்,மிக அற்புதமான குட்டிக்கதை.உண்மையில் மண்டையில் உறைக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானசேகரன்,மிக அற்புதமான குட்டிக்கதை.உண்மையில் மண்டையில் உறைக்கிறது.//

வாங்க ஹேமா மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.//

சரிதான். ஆனால் சில வீடுகளில் குடும்பத்தலைவரின் இழப்பால் அக்குடும்பமே கொடும்வறுமை நிலைக்கு வந்து வாடியதையும் பார்த்திருக்கிறேன். யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

/// " உழவன் " " Uzhavan " said...
//யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.//

சரிதான். ஆனால் சில வீடுகளில் குடும்பத்தலைவரின் இழப்பால் அக்குடும்பமே கொடும்வறுமை நிலைக்கு வந்து வாடியதையும் பார்த்திருக்கிறேன். யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்.
///
உண்மைதான் நண்பா நானும் பார்த்துள்ளேன். இதற்கான காரணதான் தெரியத ஒன்று... மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Nalla kathai Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nalla kathai Gnanaseharan.//

மிக்க நன்றி சார்...

வலசு - வேலணை said...

நான் மட்டுமே சிறப்பாகச் செய்வேன் என்பது ஆணவம். என்னாலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை. எமக்குத் தேவை தன்னம்பிக்கையே தவிர அழிவைத் தரும் ஆணவமல்ல.

நான் said...

mmm... எனக்கு ஏற்றுகொள்ள இயலவில்லை....இல்லையென்றால் ஏற்று கொள்ளகூடிய பக்குவம் வேறு மற்றவை வேறு..

ஆ.ஞானசேகரன் said...

//வலசு - வேலணை said...
நான் மட்டுமே சிறப்பாகச் செய்வேன் என்பது ஆணவம். என்னாலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை. எமக்குத் தேவை தன்னம்பிக்கையே தவிர அழிவைத் தரும் ஆணவமல்ல.
//
கண்டிப்பாக நீங்கள் சொல்வதும் உண்மைதான்

ஆ.ஞானசேகரன் said...

//கிறுக்கன் said...
mmm... எனக்கு ஏற்றுகொள்ள இயலவில்லை....இல்லையென்றால் ஏற்று கொள்ளகூடிய பக்குவம் வேறு மற்றவை வேறு..//

சில நேரங்களில் சிலவற்றை ஏற்றுகொள்ளதான் வேண்டும். நம்மால் இயலாமை என்பது நம்முடைய சமுக அமைப்பு ஒரு காரணம்..

priyamudanprabu said...

100 க்கு 100 உண்மை

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

100 க்கு 100 உண்மை//

மிக்க நன்றி நண்பா