_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 26, 2009

மொழியில் "களை" எடுப்போமா!...

மொழியில் "களை" எடுப்போமா!...

என்மகளுக்கு வயது நான்கு அவள் பேசிகொண்டுள்ளதை நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். பல வார்த்தைகள் அவள் வயதிற்கு மிகுந்த வார்த்தைகளை சொன்னாள். உதாரணமாக "ஏய் இங்க பாரு வினோதமான பூச்சியை" " இதை பார்க்க அபூர்வமாக இருக்கே" இப்படி பல. அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளை கண்டிப்பாக எங்களிடம் கற்றுகொள்ளவில்லை நாங்கள் இப்படி பேசியதும் கிடையாது. பிறகுதான் புரிந்துக்கொண்டேன் இது எல்லாம் சுட்டி தொலைக்காட்சியின் மகிமை என்று. ஆமாங்க ஒரு தொலைக்காட்சி மூலமாகவோ, வானொலி மூலமாகவோ, பத்திரிக்கைகள் மூலமாகவோ புதினங்களை சுலபமாக பதியவைக்க முடியும் என்பது உண்மை.

இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும் ஆனால் ஏன் செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை. நாம் எப்படி எப்படியோ திட்டமிட்டு தமிழில் கலந்துள்ள வடமொழி சொல் மற்றும் ஆங்கில சொற்களை களைவது என்பது காலம் கைகொடுக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்களால் முடியும் அதற்கு அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். சும்மானாச்சிக்கும் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதெல்லாம் வெற்று பிதற்றல். தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்று ஒரு துறை இருக்கின்றது, அந்த துறை இதுபோல பரிந்துரைகளை செய்தால் நன்றாக இருக்குமே.

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது. இதிலிருந்தது என்னால் உணரமுடிந்தது அரசு முனைப்பாக தமிழ் சொற்களை பரிந்துரை செய்தால் மொழி கலப்பில் இருக்கும் வார்த்தைகளை மனங்களிலிருந்து களைந்து தூய தமிழை உருவாக்க முடியும். சட்டங்கள் தேவையில்லை முனைப்பான பரிந்துரை செயலாக்கம் போதுமானதே.

பல தமிழ் நாளிதழ்கள் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருப்பதால், அப்படிபட்ட நாளிதழ்களில் வடமொழி சொற்களை கையாண்டு மறைமுகமாக தமிழை மெல்ல அதன் சிறப்பை இழக்க வைக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்ககூடியது. இவற்றையெல்லாம் அரசு கவணத்தில் கொண்டு சிறப்பான செயல்பாடுகளால் தூய தமிழை கொண்டுவர முடியும் என்பது என் எண்ணம்.

Pant ன் மேல வேட்டியை கட்டிக்கொண்டும் சும்மா ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு செய்தி வாசித்தால் மட்டும் பத்தாது தமிழ் வார்த்தைகளை உர‌க்க சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள். இவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டாலும் மொக்கைகள் என்ற பெயரில் ஆங்கில சொற்களை கையாண்டும் வருகின்றோம். இவற்றைகளையும் தவிர்க்க உறுதி எடுத்தல் நல்லது.

மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்..

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

67 comments:

Muniappan Pakkangal said...

Mozhi enbathu avanin adaiyaalam-Nandri Gnanaseharan nalla pathivirku.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Mozhi enbathu avanin adaiyaalam-Nandri Gnanaseharan nalla pathivirku.//

மிக்க நன்றி சார்..

பழமைபேசி said...

நன்றிங்க ஐயா!

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

நன்றிங்க ஐயா!//

வணக்கம் நண்பா

Joe said...

நல்ல இடுகை, எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்

கவணித்துக்கொண்டு
ஆமங்க
சுழபமாக
வரி விளக்கு

இலாக்கா என்பதே ஹிந்தி வார்த்தை தானே?

ஆ.ஞானசேகரன் said...

// Joe said...

நல்ல இடுகை, எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்

கவணித்துக்கொண்டு
ஆமங்க
சுழபமாக
வரி விளக்கு

இலாக்கா என்பதே ஹிந்தி வார்த்தை தானே?//

மிக்க நன்றி நாண்பா..

இலாக்கா என்பதை துறை என்று மாற்றிவிட்டேன்..

இப்படிதான் அரசும் ஊடகமும் தமிழில் இல்லாத வார்த்தைகள மூளையில் திணித்து விடுகின்றது

வினோத் கெளதம் said...

நல்ல பதிவு தல..

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

நல்ல பதிவு தல..//

மிக்க நன்றி கெளதம்

ஹேமா said...

ஞானசேகரன்,நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.இப்போதுள்ள குழந்தைகளின் அறிவுத்திறமை-தேடல் அதிசயம்.

எங்கள் நிலாவும்"சுகமாக இருக்கிறீங்களோ" என்றால் நான் நல்லாயிருக்கிறேன் என்கிறாள்.
நாங்கள் வடிவு என்னும் சொல்லைப் பாவிப்போம்.அவள் அழகு என்கிறாள்.காரணம் இந்தியத் தொலைக்காட்சி.

ஊடகங்களால் நல்லதையும் செய்யமுடியும்.கெட்டதையும் செய்யமுடியும்.அதனால்தானே இலங்கையில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் தடை.எப்பிடி ?

ஞானசேகரன் குறை விளங்க வேண்டாம்.முக்கியமான சில சொற்கள் எழுத்துப் பிழையாகக் காண்கிறேன்.திருத்திவிடுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானசேகரன்,நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.இப்போதுள்ள குழந்தைகளின் அறிவுத்திறமை-தேடல் அதிசயம்.

எங்கள் நிலாவும்"சுகமாக இருக்கிறீங்களோ" என்றால் நான் நல்லாயிருக்கிறேன் என்கிறாள்.
நாங்கள் வடிவு என்னும் சொல்லைப் பாவிப்போம்.அவள் அழகு என்கிறாள்.காரணம் இந்தியத் தொலைக்காட்சி.

ஊடகங்களால் நல்லதையும் செய்யமுடியும்.கெட்டதையும் செய்யமுடியும்.அதனால்தானே இலங்கையில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் தடை.எப்பிடி ?

ஞானசேகரன் குறை விளங்க வேண்டாம்.முக்கியமான சில சொற்கள் எழுத்துப் பிழையாகக் காண்கிறேன்.திருத்திவிடுங்கள்.//

மிக்க நன்றி ஹேமா...
பிழையை பார்த்து திருத்திவிடுகின்றேன். மிக்க நன்றி

கிடுகுவேலி said...

ம்ம்ம் மிக கரிசனையான பதிவு. அதிகார பீடங்கள் சிலவற்றை இறுக்கமாக செய்யவேண்டும். தொடரட்டும் வாழ்த்துக்கள்...!

CorTexT (Old) said...

இந்த உலகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கின்றது. அதை தடுக்கவும் முடியாது; தடுப்பதும் நல்லதல்ல. ஆனால், அதை நல்ல திசையை நோக்கி திருப்ப முயற்சிக்கலாம். அன்னிய மொழி சொற்கள் தமிழில் கலப்பதில் எனக்கு எந்த உருத்தலும் இல்லை. அதுவே ஒரு மொழிக்கும் நல்லதென்று நினைக்கின்றேன். ஆனால், எந்தவித தேவையும் இல்லாமல், வெட்டியாக தமிங்கிலிஸில் பேசுவது, எழுதுவது உருத்துகின்றது. தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் பாதி ஆங்கில வார்த்தைகள் மட்டுமல்ல, முழு வாக்கியங்களும் கூட; கேட்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது.

Admin said...

நல்லதொரு பதிவு நண்பரே நன்றிகள்.....

இன்று தமிழ் மொழியோடு வேற்று மொழிகள் கலந்து பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. இன்று தமிழ் மொழியை பாதுகாக்கவேண்டியவர்களே. தமிழ் மொழியினை கொலை செய்கின்றார்கள். ஊடகங்களால் எதனையும் சாதிக்க முடியும். தமிழை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு அதிகமாகவே இருக்கின்றது. சில ஊடகங்கள் தமிழை வளர்த்தாலும் பல ஊடகங்கள் நவீனம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கில மோகத்தில் செயற்படுவதுதான் கவலைக்குரிய விடயம்....

மீண்டும் உங்கள் தமிழ் மொழி பற்றுக்கும், இடுகைக்கும் நன்றி நண்பா....

தமிழ் said...

/இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள். இவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டாலும் மொக்கைகள் என்ற பெயரில் ஆங்கில சொற்களை கையாண்டும் வருகின்றோம். இவற்றைகளையும் தவிர்க்க உறுதி எடுத்தல் நல்லது.

மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்../

உண்மை நண்பரே

Admin said...

//ஹேமா said...

ஊடகங்களால் நல்லதையும் செய்யமுடியும்.கெட்டதையும் செய்யமுடியும்.அதனால்தானே இலங்கையில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் தடை.எப்பிடி ?//

இலங்கையில் ஊடகத்துக்கும், ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே. ஆனால் தமிழ் மொழி பயன்பாட்டிலே தடை இல்லாமலே தானாகவே நாகரிக மோகத்தில் பல ஊடகங்கள் ஆங்கிலம் கலந்த தமிழை பயன் படுத்துவதே உண்மை. நான் ஒரு ஊடகவியலாளர்தான் ஆனால் தமிழ் மொழி பயன் பாட்டிலே எந்த தடை வந்ததாக தெரிய வில்லை... எல்லா ஊடகங்களும் தாங்களாகவே நாகரிகத்தின்பால் ஈர்க்கப்பட்டு மாறியதே உண்மை...

Admin said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

உண்மைதான்..,

சென்னைத்தமிழையும் கோவைத்தமிழையும் எல்லோருக்கும் எடுத்துச் சென்றதில் திரையுலகிற்கு பெரும்பங்கு உண்டு

Admin said...

இலங்கையில் தமிழ்மொழி பயன்பாட்டிலே பல விதங்களிலே தடை இருந்தாலும் ஊடகத்துறையினருக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்க்க முடியும் என்பதே உண்மை...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி .. நல்லதொரு பதிவுக்கு..

கிரி said...

//இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும்//

உண்மை

Anonymous said...

உண்மைத் தான் சேகர்...கிட்டதட்ட தமிழை நாம் மறந்து வரும் நிலையில் ஊடகங்கள் வாயிலாகவும் நல்ல தூய தமிழ் சொற்கள் அறிமுகம் என்பது நல்ல முயற்சியே சம்பந்தபட்டவர்கள் முயன்றால் நலமே.... நல்ல பதிவு சேகர் வித்தியாசமான கருத்துக்களை கொண்ட பதிவுகளையே தொடர்ந்து தருகிறீர்கள்..வாழ்த்துக்கள்பா..

Raju said...

நல்ல பதிவு சேகர் அண்ணே...

மாதேவி said...

நல்ல பதிவு. ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதே.

யூர்கன் க்ருகியர் said...

நல்ல விடயத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி !

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

ம்ம்ம் மிக கரிசனையான பதிவு. அதிகார பீடங்கள் சிலவற்றை இறுக்கமாக செய்யவேண்டும். தொடரட்டும் வாழ்த்துக்கள்...!//

நீங்கள் சொல்வதும் சரிதான் நண்பா
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

இந்த உலகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கின்றது. அதை தடுக்கவும் முடியாது; தடுப்பதும் நல்லதல்ல. ஆனால், அதை நல்ல திசையை நோக்கி திருப்ப முயற்சிக்கலாம். அன்னிய மொழி சொற்கள் தமிழில் கலப்பதில் எனக்கு எந்த உருத்தலும் இல்லை. அதுவே ஒரு மொழிக்கும் நல்லதென்று நினைக்கின்றேன். ஆனால், எந்தவித தேவையும் இல்லாமல், வெட்டியாக தமிங்கிலிஸில் பேசுவது, எழுதுவது உருத்துகின்றது. தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் பாதி ஆங்கில வார்த்தைகள் மட்டுமல்ல, முழு வாக்கியங்களும் கூட; கேட்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது.//

நீங்கள் சொல்வதைபொல் மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் இருக்கின்றது. இதை இயற்கையாக ஏற்றுகொண்டாலும் அதுவே அந்த மொழியை சாகடைக்கும் நிலை வந்தால் நாமும் அதற்காக ஏதாவது செய்தே ஆகவேண்டுமே... மிக்க நன்றி ராஜ்

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்லதொரு பதிவு நண்பரே நன்றிகள்.....

இன்று தமிழ் மொழியோடு வேற்று மொழிகள் கலந்து பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. இன்று தமிழ் மொழியை பாதுகாக்கவேண்டியவர்களே. தமிழ் மொழியினை கொலை செய்கின்றார்கள். ஊடகங்களால் எதனையும் சாதிக்க முடியும். தமிழை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு அதிகமாகவே இருக்கின்றது. சில ஊடகங்கள் தமிழை வளர்த்தாலும் பல ஊடகங்கள் நவீனம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கில மோகத்தில் செயற்படுவதுதான் கவலைக்குரிய விடயம்....

மீண்டும் உங்கள் தமிழ் மொழி பற்றுக்கும், இடுகைக்கும் நன்றி நண்பா....//

நல்லதொரு கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

/// திகழ்மிளிர் said...

/இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள். இவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டாலும் மொக்கைகள் என்ற பெயரில் ஆங்கில சொற்களை கையாண்டும் வருகின்றோம். இவற்றைகளையும் தவிர்க்க உறுதி எடுத்தல் நல்லது.

மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்../

உண்மை நண்பரே///

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

/// சந்ரு said...

//ஹேமா said...

ஊடகங்களால் நல்லதையும் செய்யமுடியும்.கெட்டதையும் செய்யமுடியும்.அதனால்தானே இலங்கையில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் தடை.எப்பிடி ?//

இலங்கையில் ஊடகத்துக்கும், ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே. ஆனால் தமிழ் மொழி பயன்பாட்டிலே தடை இல்லாமலே தானாகவே நாகரிக மோகத்தில் பல ஊடகங்கள் ஆங்கிலம் கலந்த தமிழை பயன் படுத்துவதே உண்மை. நான் ஒரு ஊடகவியலாளர்தான் ஆனால் தமிழ் மொழி பயன் பாட்டிலே எந்த தடை வந்ததாக தெரிய வில்லை... எல்லா ஊடகங்களும் தாங்களாகவே நாகரிகத்தின்பால் ஈர்க்கப்பட்டு மாறியதே உண்மை...//

ஊடகவியலாளர் என்ற முறையில் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுகொள்கின்றோம் நண்பா. அதே வேலையில் ஊடகங்களிம் நாகரிகத்தின்பால் ஈர்க்கப்பட்டு மொழியை சிதைப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதே.. இதை கவனத்தில கொண்டு செயல்ப்பட்டால் நன்றாக இருக்கலாம்... மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

உண்மைதான்..,

சென்னைத்தமிழையும் கோவைத்தமிழையும் எல்லோருக்கும் எடுத்துச் சென்றதில் திரையுலகிற்கு பெரும்பங்கு உண்டு//

உண்மைதான் நண்பா...மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

இலங்கையில் தமிழ்மொழி பயன்பாட்டிலே பல விதங்களிலே தடை இருந்தாலும் ஊடகத்துறையினருக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்க்க முடியும் என்பதே உண்மை...//

மிக்க மகிழ்ச்சியான செய்தி

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி .. நல்லதொரு பதிவுக்கு..//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

//இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும்//

உண்மை//

முற்றிலும் உண்மை மிக்க நன்றிங்க கிரி

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

உண்மைத் தான் சேகர்...கிட்டதட்ட தமிழை நாம் மறந்து வரும் நிலையில் ஊடகங்கள் வாயிலாகவும் நல்ல தூய தமிழ் சொற்கள் அறிமுகம் என்பது நல்ல முயற்சியே சம்பந்தபட்டவர்கள் முயன்றால் நலமே.... நல்ல பதிவு சேகர் வித்தியாசமான கருத்துக்களை கொண்ட பதிவுகளையே தொடர்ந்து தருகிறீர்கள்..வாழ்த்துக்கள்பா..//

நன்றி தமிழரசி

ஆ.ஞானசேகரன் said...

// டக்ளஸ்... said...

நல்ல பதிவு சேகர் அண்ணே..//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...

நல்ல பதிவு. ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதே.//

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// யூர்கன் க்ருகியர் said...

நல்ல விடயத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி !//

உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா

குடந்தை அன்புமணி said...

உண்மைதான் நண்பா. சுட்டி தொலைக்காட்சியை குழந்தைகள் விரும்பி பார்ப்பதால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் மேலும் முயற்சியெடுத்தால் சிறப்பாக குழந்தைப்பருவத்திலேயே தமிழை அவர்களிடத்தில் வளர்க்க முடியும்.

நல்ல இடுகை. வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

உண்மைதான் நண்பா. சுட்டி தொலைக்காட்சியை குழந்தைகள் விரும்பி பார்ப்பதால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் மேலும் முயற்சியெடுத்தால் சிறப்பாக குழந்தைப்பருவத்திலேயே தமிழை அவர்களிடத்தில் வளர்க்க முடியும்.

நல்ல இடுகை. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி நண்பா

உமா said...

வணக்கம் ஞானசேகரன். மிக நல்லப் பதிவு. வாழ்த்துக்கள். மக்கள் தொலைக்காட்சியில் மிக இயல்பாக தமிழ் பேசுவார்கள். யாழினியின் இலங்கைத் தமிழ் மிக அருமையாக இருக்கும். 'தமிழ் பேசு தங்க காசு'ஜேம்ஸ் வசந்தன் அருமையாகத் தமிழ் பேசுவார்.வணிகம், பங்குச் சந்தைப் பற்றிக்கூட ஆங்கிலக் கலப்பில்லாமல் உரையாடுவார்கள். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் ஏராளம். சுட்டி டீவி யில் தமிழ் பேசினலும் கீச்சுக்குரலில் ஆங்கிலம் கலந்தே வரும். மொழிபெயர்ப்பாக வரும் எந்தத் தொடருமே நன்றாக இருப்பதில்லை. திரைப்பட காட்சிகளில்லாமல் தூயத்தமிழில் எல்லோரும் விரும்பத்தக்க வகையில் பல தொடர்களை இயக்கமுடியும் என்பதைப் பல ஆண்டுகளாக காட்டிவருகிறார்கள். முடிந்தால் குழந்தைகளை மக்கள் தொலைக்காட்சி பார்க்கச்செய்யுங்கள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு தலைவரே.. நேற்றைக்கு இரவு உங்களை தொடர்பு கொள்ள முயன்றேன்... number not in use என்று வந்தது.. என்னப்பா ஆச்சு..

ஹேமா said...

ஞானசேகரன் "உறக்க" என்பது
"உரக்க" என்றுதானே வரணும்.

நாணல் said...

நல்ல பதிவு...

ஆதவா said...

நீங்கள் சொல்வது சரிதான்..... உடன், வீட்டில் உள்ளவர்களும் ஆங்கிலமில்லாத தமிழில் பேசப்பேச குழந்தை தமிழை நன்கு உள்வாங்கும்.

பழைய னா, லை போன்ற எழுத்துக்கள் இன்றும் வெகுசிலரிடம் (அந்த காலம் பயின்றவர்கள்) உள்ளது. என் அம்மாவின் கையெழுத்தில் அப்படி மறைந்த எழுத்துக்கள் கிடக்கின்றன.!!!

எழுத்துரு யுனிகோடில் பழைய னா, னை போன்றவைகள் இல்லை.. ஆனால் யுனிகோட் தவிர்த்த சில உருக்களீல் உண்டு!!

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
வணக்கம் ஞானசேகரன். மிக நல்லப் பதிவு. வாழ்த்துக்கள். மக்கள் தொலைக்காட்சியில் மிக இயல்பாக தமிழ் பேசுவார்கள். யாழினியின் இலங்கைத் தமிழ் மிக அருமையாக இருக்கும். 'தமிழ் பேசு தங்க காசு'ஜேம்ஸ் வசந்தன் அருமையாகத் தமிழ் பேசுவார்.வணிகம், பங்குச் சந்தைப் பற்றிக்கூட ஆங்கிலக் கலப்பில்லாமல் உரையாடுவார்கள். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் ஏராளம். சுட்டி டீவி யில் தமிழ் பேசினலும் கீச்சுக்குரலில் ஆங்கிலம் கலந்தே வரும். மொழிபெயர்ப்பாக வரும் எந்தத் தொடருமே நன்றாக இருப்பதில்லை. திரைப்பட காட்சிகளில்லாமல் தூயத்தமிழில் எல்லோரும் விரும்பத்தக்க வகையில் பல தொடர்களை இயக்கமுடியும் என்பதைப் பல ஆண்டுகளாக காட்டிவருகிறார்கள். முடிந்தால் குழந்தைகளை மக்கள் தொலைக்காட்சி பார்க்கச்செய்யுங்கள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//

மிக நல்ல செய்தியை பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி உமா. இங்கே சிங்கபூரில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி மட்டுமே காணமுடியும்.... மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல பதிவு தலைவரே.. நேற்றைக்கு இரவு உங்களை தொடர்பு கொள்ள முயன்றேன்... number not in use என்று வந்தது.. என்னப்பா ஆச்சு..//

மிக்க நன்றி நண்பா,.. முடிந்தால் இன்று நான் தொடர்புக்கொள்கின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன் "உறக்க" என்பது
"உரக்க" என்றுதானே வரணும்.//

நன்றி ஹேமா.. மாற்றிவிடுகின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

//நாணல் said...
நல்ல பதிவு...
//

மிக்க நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
நீங்கள் சொல்வது சரிதான்..... உடன், வீட்டில் உள்ளவர்களும் ஆங்கிலமில்லாத தமிழில் பேசப்பேச குழந்தை தமிழை நன்கு உள்வாங்கும்.

பழைய னா, லை போன்ற எழுத்துக்கள் இன்றும் வெகுசிலரிடம் (அந்த காலம் பயின்றவர்கள்) உள்ளது. என் அம்மாவின் கையெழுத்தில் அப்படி மறைந்த எழுத்துக்கள் கிடக்கின்றன.!!!

எழுத்துரு யுனிகோடில் பழைய னா, னை போன்றவைகள் இல்லை.. ஆனால் யுனிகோட் தவிர்த்த சில உருக்களீல் உண்டு!!//

உண்மைதான் ஆதவா,.. மாற்றப்பட்ட எழுத்துகளில் பயனாகதான் இருக்கின்றது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடையே இருக்கு என்பதுதான் என் எண்ணங்கள். இந்த மாற்றங்களை மொழியை தூய்மைப்படுத்தவும் பயன்படுத்தலாமே... இதை அரசு பரிதுரைக்க வேண்டுகின்றேன்.... மிக்க நன்றி ஆதவா

வலசு - வேலணை said...

//
இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும்
//
உண்மை தாங்க.

யதார்த்தத்தை விளக்கும் பதிவு

ஆ.ஞானசேகரன் said...

///வலசு - வேலணை said...
//
இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும்
//
உண்மை தாங்க.

யதார்த்தத்தை விளக்கும் பதிவு///

வணக்கம் நண்பா.
மிக்க நன்றிங்க‌

HK Arun said...

நல்ல கருத்துக்கள். பொருப்பானவர்கள் தகுந்த கவனம் எடுப்பானார்களானால் நன்று.

ஆ.ஞானசேகரன் said...

//HK Arun said...
நல்ல கருத்துக்கள். பொருப்பானவர்கள் தகுந்த கவனம் எடுப்பானார்களானால் நன்று.
//
உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே

priyamudanprabu said...

///
நல்ல பதிவு...
நானும் பதிவிடுகிறேன் என்று பலர் மொக்கை பதிவுகள் இட்டுகொண்டிருக்க நிறைய பயனுள்ள பதிவுகள் இட்டுவரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் , தொடருங்கள்

கொஞ்சம் முயற்ச்சித்தால் தூய தமிழில் பேச முடியும்
நல்ல தமிழ் பேசவும் எழுதவும் கற்றுகொண்டே இருக்கிறேன்
(இப்போ ப்யர்பாக்ஸ் மாற்றிவிட்டேன் படிப்பதில் தடையில்லை)

"உழவன்" "Uzhavan" said...

அருமையான அவசியமான பதிவு நண்பா.
தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். சற்று எழுத்துப்பிழைகளில் கவனம் செலுத்துங்கள். எழுதிமுடித்தபின் ஒரு முறை படித்தாலே சரிசெய்துவிடலாம். :-)

கோவி.கண்ணன் said...

//மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்..

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.
//

மிகவும் சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். இது தெரியாத சில புண்ணாக்குகள் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு கருவி தானே என்பார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

///
நல்ல பதிவு...
நானும் பதிவிடுகிறேன் என்று பலர் மொக்கை பதிவுகள் இட்டுகொண்டிருக்க நிறைய பயனுள்ள பதிவுகள் இட்டுவரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் , தொடருங்கள்

கொஞ்சம் முயற்ச்சித்தால் தூய தமிழில் பேச முடியும்
நல்ல தமிழ் பேசவும் எழுதவும் கற்றுகொண்டே இருக்கிறேன்
(இப்போ ப்யர்பாக்ஸ் மாற்றிவிட்டேன் படிப்பதில் தடையில்லை)//

மிக்க நன்றி பிரபு

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

அருமையான அவசியமான பதிவு நண்பா.
தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். சற்று எழுத்துப்பிழைகளில் கவனம் செலுத்துங்கள். எழுதிமுடித்தபின் ஒரு முறை படித்தாலே சரிசெய்துவிடலாம். :-)//

மிக்க நன்றி நண்பா... எழுத்து பிழைகளுக்கு சரிப்படுத்த முயற்சிகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

//மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்..

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.
//

மிகவும் சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். இது தெரியாத சில புண்ணாக்குகள் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு கருவி தானே என்பார்கள்.//

உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கண்ணன்

சொல்லரசன் said...

//இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள்.//

உண்மைதான் நண்பா,நல்ல பதிவு

ஆ.ஞானசேகரன் said...

/// சொல்லரசன் said...
//இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள்.//

உண்மைதான் நண்பா,நல்ல பதிவு///

மிக்க நன்றி சொல்லரசன்

சம்பத் said...

நல்ல இடுகை தோழரே!

ஆ.ஞானசேகரன் said...

// சம்பத் said...

நல்ல இடுகை தோழரே!//

மிக்க நன்றி நண்பரே

Admin said...

உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...

உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..//

மிக்க நன்றி நண்பா.. நட்பை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடீர்கள்

Suresh Kumar said...

நண்பா மிக அருமையான பதிவை நான் கவனிக்காமல் விட்டு விட்டேனே . நீங்கள் சொல்வது போல் சில கட்டுபாடுகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் ......... மக்கள் மனதில் தூய தமிழ் பதிய வேண்டும் .

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நண்பா மிக அருமையான பதிவை நான் கவனிக்காமல் விட்டு விட்டேனே . நீங்கள் சொல்வது போல் சில கட்டுபாடுகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் ......... மக்கள் மனதில் தூய தமிழ் பதிய வேண்டும் //

வணக்கம் சுரேஷ் குமார்.. உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க