_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, August 5, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

நீரும் நீரின் ஆதரங்கள் மற்றும் தேவைகளை பற்றி முந்தய பகுதிகளில் பார்த்தோம். அதே போல நிலந்தடிநீரின் முக்கியதுவம் பற்றியும் நிலத்தடிநீரை பாதுக்காக்க வேண்டியதின் கடமையையும் பற்றியும் தெரிந்துக்கொண்டோம்.

அந்த காலங்களில் ஒரு நாட்டின் அரசன் மந்திரியாரைப் பார்த்து "மந்திரியாரே நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..?" என்று கேட்பாராம் அதற்கு மந்திரியார் "அரசே மாதம் மும்மாரிப் பொழிகிறது நாட்டில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்" என்று சொல்வதிலிருந்து மழையின் முக்கியத்துவம் நமக்கு புரிவதுடன், நாட்டில் விவசாயமும் நன்றாக உள்ளது என்பது புலணாகின்றது.

அதே போல மக்கள் மழையை தெய்வமாக கருதினார்கள். மழை இல்லாத காலங்களில் மழைக்காக பூஜைகள் செய்வதும் உண்டு. இவர்களின் நம்பிக்கை சில நேரங்களில் பலித்துவிடுவதும் உண்டு. நான் சிறுவானாய் இருந்த பொழுது எங்கள் ஊரில் நீண்ட நாட்களாக மழையின்றி பயிர்கள் வாடின, மக்கள் குடிப்பதற்கு நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஊரில் உள்ள பெரியவர்கள் யோசனையில் வைக்கோலில் ஒரு பொம்மை செய்யப்பட்டது, சாய்ங்காலம் பொழுதில் அந்த பொம்மையை ஒரு பாடையில் வைத்து மழைபகவாண் இறந்துவிட்டதுபோல் நினைத்து பெண்கள் கூடி அழுவார்கள் பின்னர் பாடையில் எடுத்து சென்று ஊர் கோடியில் தீயிட்டு கொழுத்தி விடுவார்கள். இதுபோல் செய்தால் மூன்று நாட்களுக்குள் மழை வரும் என்பது நம்பிக்கை. இவர்கள் நம்பிக்கையோ என்னவோ சில நேரங்களில் மழை வருவதும் உண்டு.

இப்படிப்பட்ட சடங்குகளிலிருந்து மக்கள் மழையையும் மழை நீரையும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது தெரிகின்றது. சில ஊர்களில் கழுதைக்கு கல்யாணம் செய்தால் மழை வரும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதேபோல் வெறு எந்த தெய்வங்களை வணங்காத ஒரு பெண் கணவனை வணங்கியவளாக இருந்தால் அவள் பெய் என்றால் மழை பெய்யும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ( இவற்றின் நோக்கம் எப்படியோ மழையின் மேன்மை புரிகின்றது)

1980 துகளில் நடந்த சம்பவம் வறட்சியின் காரணமாக சென்னையில் குடிநீர் பிரச்சனை அதிகரித்தது. வயலின் வித்துவான் குன்னகுடி வைத்ய நாதன் செம்பரம் பாக்கம் ஏரியில் மழை பெய்யும் பொருட்டு மழைக்கான ராகத்தில் வயலின் வாசித்தாரம் (ராகம்: ஹம்சவர்த்தினி). மழையும் சிறிது பெய்ததாக நண்பர்கள் சொன்னதுண்டு.

மேலும் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னையின் வறட்சியை போக்க செயற்கை மழையை செயல்படுத்தினார். ஒரு மணி நேரம் மழையும் பெய்து சிறிது வறட்சியையும் சரியானது. சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜவின் திரைப்படம் கருத்தம்மா படப்பிடிப்புக்காக (தென்மேற்கு பருவகாற்று பாடலுக்காக) செயற்கை மழையை உருவாக்கியதாக செய்திகள் வந்ததுண்டு.

செயற்கை மழை என்றால் என்ன? எப்படி உருவாக்கப்படுகின்றது?:
செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்குவது என்பதல்ல
வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும். இதனை சாதாரணமாக செய்துவிட முடியாது அதற்காக இரண்டு மூன்று நாட்கள் கடினமாக உழைத்து பெறக்கூடியது, செலவும் அதிகம். இப்படி கடினமாக அரும்பாடுபட்டு ராக்கெட்டுகள் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் மூலமாக மழையைக் உருவாக்கும்படி மேகங்களைத் தூண்டுகின்றனர். அதாவது உப்பு, சில்வர் அயோடைடு போன்ற ஐஸ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

உலகெங்கும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கை மழையை வரவழைக்க முயன்று கொண்டிருந்தாலும் சீனாவில் தான் பெரிய அளவில் செயற்கை மழையை உருவாக்கிகொண்டுள்ளார்கள்.

இப்படி அந்த காலங்கள் முதல் இன்றைக்கு வரை மழைக்காக மனிதன் அவனின் திரனுகேற்றப்படி வேண்டுதலுகளும் எதிர்ப்பார்ப்புகளும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படி கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தி வருகின்றோமா? என்ற கேள்விகளுடன் இந்த இடுகை யோசிக்க வைக்கப்படுகின்றது.

இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.

23 comments:

Suresh Kumar said...

நீரின் தேவைகளை அறிந்து அருமையான தகவல்களை தெரிவித்து வருகிறீர்கள் .

ஆ.ஞானசேகரன் said...

சோதனை பின்னூட்டம்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நீரின் தேவைகளை அறிந்து அருமையான தகவல்களை தெரிவித்து வருகிறீர்கள் .//

மிக்க நன்றி நண்பா

சொல்லரசன் said...

//இப்படி கிடைப்பட்ட மழை நீரை வீனாக்காமல் சேமித்து பயன்படுத்தி வருகின்றோமா?//

யோசிக்கவைக்கும் கேள்வி,மிக அருமையான இடுக்கை நண்பா.

கிடுகுவேலி said...

நன்றாக உள்ளது. நிச்சயமாக நாம் இயற்கையை வீணாக்குகிறோம் என்பதற்கு மழைநீரை சேமிப்பதில்லை என்பதில் இருந்து புலனாகும். தேவையான ஒரு பதிவுத் தொடர்.

தேவன் மாயம் said...

ஒவ்வொரு வருடமும் சென்னையில் கடலில் கலக்கும் நீரை சேமித்தால் 1 வருடத்துக்குப் போதுமாம்.

ஆ.ஞானசேகரன் said...

/// சொல்லரசன் said...

//இப்படி கிடைப்பட்ட மழை நீரை வீனாக்காமல் சேமித்து பயன்படுத்தி வருகின்றோமா?//

யோசிக்கவைக்கும் கேள்வி,மிக அருமையான இடுக்கை நண்பா.///

மிக்க நன்றி சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

நன்றாக உள்ளது. நிச்சயமாக நாம் இயற்கையை வீணாக்குகிறோம் என்பதற்கு மழைநீரை சேமிப்பதில்லை என்பதில் இருந்து புலனாகும். தேவையான ஒரு பதிவுத் தொடர்.//

உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

ஒவ்வொரு வருடமும் சென்னையில் கடலில் கலக்கும் நீரை சேமித்தால் 1 வருடத்துக்குப் போதுமாம்.//

உண்மைதான் தேவன் சார். மிக்க நன்றிங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சமுதாய சிந்தனை பகிர்வு.. நன்றி ஞானசேகரன்...

Admin said...

நல்லதொரு இடுகையின் மூலமாக பல விடயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல சமுதாய சிந்தனை பகிர்வு.. நன்றி ஞானசேகரன்...//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...
நல்லதொரு இடுகையின் மூலமாக பல விடயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் நண்பா...//

தாங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே மிக்க நன்றி நண்பா

காமராஜ் said...

தரமான பதிவு நண்பா. அரிய தகவல்கள்.
நீரின்றி அமையாது உலகு.
குன்னக்குடியும் பாரதிராஜாவும் கூட
இந்தப்பதிவுக்குள் வந்தது சூப்பர்.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

தரமான பதிவு நண்பா. அரிய தகவல்கள்.
நீரின்றி அமையாது உலகு.
குன்னக்குடியும் பாரதிராஜாவும் கூட
இந்தப்பதிவுக்குள் வந்தது சூப்பர்.//

வணக்கம் நண்பா
மிக்க நன்றிங்க.. நீண்ட நாட்களாய் இந்த பக்கம் வரவில்லை வேலை பழுவா?

குடந்தை அன்புமணி said...

இப்போதுதான் தங்களின் நான்கு இடுகைகளையும் ஒருசேர படித்தேன். நல்ல இடுகை. அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும். இனி தண்ணீரை பயன்படுத்தும்போது ஒரு கணம் யோசியுங்கள். நான்கூட வீட்டில் அனைவரிடமும் சொல்வதுண்டு. தண்ணீரை வீணாக்காதீர்கள். வெளியே செல்லும்போது தண்ணீர் குழாய், மின்சாரம் முதலியவற்றை சரிபார்த்த பிறகே செல்லுங்கள் என்று.அரசாங்கம் தான் எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் நாமும் நம்மால் முடிந்தவரை தண்ணீரை சேமிக்க என்னவெல்லாம் முடியுமே அனைத்தையும் செய்ய வேண்டும்.

செயற்கை மழை உருவாகும் விதம் பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். நன்றி நண்பா.

CorTexT (Old) said...

Weather Modification (WM) என்ற கருத்து ஒன்று உண்டு. அதில் செயற்கை மழை என்பது ஒரு சிறிய பகுதி. WM என்பது, சுற்றுச்சூழலை மாற்றுவதன் மூலம் நமக்கு தகுந்த தட்ப வெப்ப நிலையை அமைத்து கொள்வது. இதற்கு பலவகையான வழிகள் உண்டு. Global Warming-ஐ குறைக்ககூட சில எளிய வழிகள் உண்டு. ஆனால், பிரச்சனை என்னவென்றால், அதன் பின்விளைவுகளை பற்றி நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். மேலும், அது பூமியின் சில பகுதிகளுக்கு நன்மையாகவும், மற்ற பகுதிகளுக்கு கெடுதலாகவும் அமையலாம். அதற்கெல்லாம் யார் பொருப்பேற்பது?

ஒரு நாட்டில் WM செய்தால் (அதில் செயற்கை மழையும் அடங்கும்), அது மற்ற நாடுகளை பாதிக்கலாம், பாதிக்கும். இதனால் ஐ-நா வில் ஒரு சட்டம் உண்டு; அதன் படி எந்த நாடும் WM பண்ணக்கூடாது; இதையெல்லாம் சைனா கண்டுகொள்வதில்லை; US-ல் கூட ஆராய்சிக்காக சிலவகை WM பண்ணுவதாக சொல்வதுண்டு.

அடுத்த நூற்றாண்டுகளில் WM சர்வ சாதாரணமாக நடக்கலாம்! யார் கண்டது, செவ்வாயின் தட்பவெப்பநிலையை மாற்றி அங்கு நாம் குடியேர ஆயத்தமும் நடக்கலாம்! எது எப்படியோ, இன்றைக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் சிலர் சாகலாம்.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

இப்போதுதான் தங்களின் நான்கு இடுகைகளையும் ஒருசேர படித்தேன். நல்ல இடுகை. அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும். இனி தண்ணீரை பயன்படுத்தும்போது ஒரு கணம் யோசியுங்கள். நான்கூட வீட்டில் அனைவரிடமும் சொல்வதுண்டு. தண்ணீரை வீணாக்காதீர்கள். வெளியே செல்லும்போது தண்ணீர் குழாய், மின்சாரம் முதலியவற்றை சரிபார்த்த பிறகே செல்லுங்கள் என்று.அரசாங்கம் தான் எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் நாமும் நம்மால் முடிந்தவரை தண்ணீரை சேமிக்க என்னவெல்லாம் முடியுமே அனைத்தையும் செய்ய வேண்டும்.

செயற்கை மழை உருவாகும் விதம் பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். நன்றி நண்பா.//

வணக்கம் நண்பா,..
தாங்களின் மேலான கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

Weather Modification (WM) என்ற கருத்து ஒன்று உண்டு. அதில் செயற்கை மழை என்பது ஒரு சிறிய பகுதி. WM என்பது, சுற்றுச்சூழலை மாற்றுவதன் மூலம் நமக்கு தகுந்த தட்ப வெப்ப நிலையை அமைத்து கொள்வது. இதற்கு பலவகையான வழிகள் உண்டு. Global Warming-ஐ குறைக்ககூட சில எளிய வழிகள் உண்டு. ஆனால், பிரச்சனை என்னவென்றால், அதன் பின்விளைவுகளை பற்றி நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். மேலும், அது பூமியின் சில பகுதிகளுக்கு நன்மையாகவும், மற்ற பகுதிகளுக்கு கெடுதலாகவும் அமையலாம். அதற்கெல்லாம் யார் பொருப்பேற்பது?

ஒரு நாட்டில் WM செய்தால் (அதில் செயற்கை மழையும் அடங்கும்), அது மற்ற நாடுகளை பாதிக்கலாம், பாதிக்கும். இதனால் ஐ-நா வில் ஒரு சட்டம் உண்டு; அதன் படி எந்த நாடும் WM பண்ணக்கூடாது; இதையெல்லாம் சைனா கண்டுகொள்வதில்லை; US-ல் கூட ஆராய்சிக்காக சிலவகை WM பண்ணுவதாக சொல்வதுண்டு.

அடுத்த நூற்றாண்டுகளில் WM சர்வ சாதாரணமாக நடக்கலாம்! யார் கண்டது, செவ்வாயின் தட்பவெப்பநிலையை மாற்றி அங்கு நாம் குடியேர ஆயத்தமும் நடக்கலாம்! எது எப்படியோ, இன்றைக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் சிலர் சாகலாம்.

August 6, 2009 2:44 PM//

தாங்களின் நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி...

Muniappan Pakkangal said...

Nalla thodar Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Nalla thodar Gnanaseharan.
//

Thanks sir.

ஹேமா said...

ஞானசேகரன்,தண்ணீரைப் பற்றிச் சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா !ஆர்வமாகப் படிக்கிறேன் நன்றி.அப்பாடி.

நீங்க எழுதிக் களைக்க நாங்கள் வாசிச்சுக் களைக்கிறோம்.யாராச்சும் தண்ணி தாங்கப்பா.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானசேகரன்,தண்ணீரைப் பற்றிச் சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா !ஆர்வமாகப் படிக்கிறேன் நன்றி.அப்பாடி.

நீங்க எழுதிக் களைக்க நாங்கள் வாசிச்சுக் களைக்கிறோம்.யாராச்சும் தண்ணி தாங்கப்பா.//

வாங்க ஹேமா
மிக்க நன்றிங்க