_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 7, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

நீரையும் நிலத்தையும் பற்றி சொல்லிகொண்டே போனால் முடிவுக்கு வருவது சிரமம்தான், ஆனாலும் இதற்கு மேல் சொல்லிக்கொண்டே போனாலும் அலுப்பு வந்துவிடும். அதனால் இந்த பகுதியை இறுதியாக வைத்துக்கொள்வதுதான் உத்தமம். இருந்தாலும் சமயம் கிடைக்கும் பொழுது மேலும் யோசிக்கலாமே!.....

பூமியில் உள்ள உயிர்கள் தோற்றதிற்கு ஆதாரமே நீர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் நீரின் தேவைகள் இன்று அதிகரித்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததே ( அனுபவித்துக் கொண்டுள்ளோம்). ஒவ்வொரு துளி நீரும் ஏதோ ஒரு உயிர் அணுவை இயக்கிகொண்டுதான் இருக்கின்றது. "ஆக்கமும் பெண்ணாலே அழிவும் பெண்ணாலே" என்ற ஒரு பழமொழி வழக்கில் இருக்கின்றது அதுபோல உயிரின் ஆக்கத்திற்கும் நீரே, உயிரின் முடிவிலும் நீரே என்று எண்ணங்கள் இருக்கின்றது.

எனக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது என் அம்மாச்சி(அம்மாவின் அம்மா) பத்து காசு கொடுத்தார்கள். என்னிடம் பத்துகாசு கொடுத்ததும் மிக மகிழ்ச்சியாக நான் விளையாடினேன். எனக்கு சின்ன பொருள்களை வாயில் போட்டு விளையாடும் பழக்கம் இருந்திருக்கின்றது, அதேபோல் அந்த பத்து காசையும் வாயில் போட்டு விளையாடும் பொழுது விழுங்கிவிட்டேன். விழுங்கிய காசு தொண்டையில் படுக்கை வசமாக நின்று விட்டது. என்ன செய்தும் காசை எடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் ஓடியது. என் அதிஸ்ட்டம் (தமிழில் சொல்லுங்களேன்) பத்து காசின் ஓரங்களில் வலைவுகள் இருக்கும், அதனால் நீர் ஆகாரங்கள் உள்ளே செல்லமுடிந்தது. அந்த நீர்தான் என்னை இப்பொழுதும் உங்ளுடன் பேச வைத்துள்ளது என்றால் நீரின் முக்கியத்துவம் புரிகின்றது. பின்னர் மருத்துவமனையில் அந்த காசை எடுத்துவிட்டார்கள் என்பது வேறு விடயம்.

வயதானவர்களுக்கு திட உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு செறிமானம் ஆக சிரமம் வந்துகொண்டு இருக்கும். அதனால் அதிகம் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுவார்கள். அதே போல் உயிர் போகும் நிலையில் இருக்கும் வயதானவர்கள் சிறிது பால் அல்லது நீரே ஆகாரமாக கொண்டு சிலநாட்கள் வாழ்வார்கள். அந்த நீரும் நின்று போனால் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஒரு மனிதன் வாழ்வில் கடைசி மூச்சு இருக்கும் வரை நீரே ஆதாரமாக இருக்கின்றது. இப்படி மனித வாழ்வில் ஒட்டியே வரும் நீரை நமக்கு பின் உள்ள சந்ததினர்களுக்கு எப்படிப்பட்ட நிலையில் விட்டு செல்கின்றோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியது நம் கடமை.

இயற்கையை நாம் என்னதான் கட்டி காப்பாற்றினாலும் ( அப்படி இல்லை என்பது வேறு விடயம்) அவற்றின் சில மாற்றங்களை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சுனாமி போன்ற மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பருவ சூழ்நிலை காரணிகள்தான் ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாகின்றது. அப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் நாம் ஏற்றுக்கொண்ட மனித பாத்திரமும். ஒவ்வோரு காரணிகளின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியில் சில மாறுதல்கள் இருப்பதை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இன்று நம் குழந்தைகளின் அறிவுத்திரண் நாம் அந்த வயதில் இல்லை என்பதும் உண்மைதானே.

மாறி வரும் பருவக்காலங்கள், உலகின் வெப்பம் அதிகரித்தல், குடிநீரின் பற்றாகுறை இப்படி பல காரணிகளால் நாளைய பரிணாம வளர்ச்சியில் என்ன மாற்றங்களை நாம் (மனிதன்) காண போகின்றோமோ????? யார்கண்டது! மாறிவரும் பருவ காலங்களால் உடலில் உரோமங்கள் அதிகரிக்கலாம். வெப்பத்தின் அதிகரிப்பால் தலையில் கொம்புகள் முளைக்கலாம். குடிநீரின் பற்றாகுறையால் ஒட்டகம் போல முதுகில் நீர்ப்பையுடன் பிறக்கலாம். கணனியில் உற்கார்ந்து உற்கார்ந்து கூனி குறுகி மீண்டும் நான்கு கால்களில் நடக்கலாம்..

கவலையை விடுங்கள் இப்படிபட்ட பரிணாம மாற்றங்கள் காண பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்... இருந்தாலும் நாம் இயற்கை கொடுத்த கொடைகளை நாம் தீண்டாதவரை இயற்கையும் நமக்காகவே இருக்கும்.... இயற்கை இயற்கையாக

அதற்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு பசுமை புரட்சியை பற்றி பேசவேண்டாம். காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம். நாம் வீணாக செலவழிக்கும் நீரின் ஒரு துளியும் நாளைய உலகின் சொத்து என்பதை கவணத்தில் கொள்வது நல்லது. வீட்டு தோட்டங்களின் இன்றைக்கு ஒரு மரமாவது நட்டுவையுங்கள். வீட்டின் தோட்டத்தில் காரைத்தளங்களை எடுத்துவிட்டு புள்வெளிகளை உருவாக்குங்கள் மழைநீர் சேமிக்கப்படும். என்னை பொருத்தவரை மனிதன் நினைத்தால் கல்லும் கவிபாடும்! கன இரும்பும் நடனமாடும்!..... ஆம் தோழர்களே! நீரை சேமித்து நாளைய உலகை வளமாக்குவோம்!....

தினமலரில் வந்த சில ஆவணப்புகைப்படம்....



ஒரு காணோளி பகிர்வு...




என்று அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(அடுத்து எதைப்பற்றி அலசல் ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் நட்புகளே!)

26 comments:

வலசு - வேலணை said...

//
அதற்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு பசுமை புரட்சியை பற்றி பேசவேண்டாம். காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
//

உண்மைதான். எங்களது வாழ்க்கையே பெரும்பாலான நேரங்களில் பிறரைக் குறை சொல்வதிலேயே கழிந்து விடுகிறது. எமது குறைகளைப் பற்றியோ, அல்லது எவ்வாறு நிறைவான செயல்களைப் புரிவது என்கின்ற சிந்தனைகளையோ நாம் தவறவிட்டு விடுகின்றோம்.

ஆ.ஞானசேகரன் said...

// வலசு - வேலணை said...

//
அதற்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு பசுமை புரட்சியை பற்றி பேசவேண்டாம். காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
//

உண்மைதான். எங்களது வாழ்க்கையே பெரும்பாலான நேரங்களில் பிறரைக் குறை சொல்வதிலேயே கழிந்து விடுகிறது. எமது குறைகளைப் பற்றியோ, அல்லது எவ்வாறு நிறைவான செயல்களைப் புரிவது என்கின்ற சிந்தனைகளையோ நாம் தவறவிட்டு விடுகின்றோம்.///


வாங்க நண்பா,..
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க

சொல்லரசன் said...

//எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம்//

கண்டிப்பாக,நல்லதொரு பதிவுகள் ஞான்ஸ் இந்த காலத்திற்கு ஏற்ற அவசியமான பல தகவல்களை சமூக சிந்தனையுடனும்,சாமானியன் ஏக்கத்துடனும் சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சமூக சிந்தனையுள்ள பதிவுங்க... வாழ்த்துகள்.. வாழ்க..

ஆ.ஞானசேகரன் said...

//// சொல்லரசன் said...

//எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம்//

கண்டிப்பாக,நல்லதொரு பதிவுகள் ஞான்ஸ் இந்த காலத்திற்கு ஏற்ற அவசியமான பல தகவல்களை சமூக சிந்தனையுடனும்,சாமானியன் ஏக்கத்துடனும் சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள்.////

மிக்க நன்றிங்க சொல்லரசன்..
உங்களின் ஊக்கம் என்னை வழப்படுத்தும்... மீண்டும் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சமூக சிந்தனையுள்ள பதிவுங்க... வாழ்த்துகள்.. வாழ்க..//

மிக்க நன்றி நண்பா

Suresh Kumar said...

காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம் /////////////


நல்ல கருத்து வெறுமனே குற்றம் சொல்வதை விட்டு நாம் என்ன செய்தோம் என சிந்திக்கவும் வேண்டும் . இப்படி ஒவ்வெருவரும் சிந்தித்தால் அரசாங்கங்களும் பயனுள்ள வகையில் சிந்திக்கும் . நம் சிந்தனைகள் அதிகார வர்க்கங்களை சிந்திக்க வைப்பதாக அமைய வேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

/// Suresh Kumar said...

காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம் /////////////


நல்ல கருத்து வெறுமனே குற்றம் சொல்வதை விட்டு நாம் என்ன செய்தோம் என சிந்திக்கவும் வேண்டும் . இப்படி ஒவ்வெருவரும் சிந்தித்தால் அரசாங்கங்களும் பயனுள்ள வகையில் சிந்திக்கும் . நம் சிந்தனைகள் அதிகார வர்க்கங்களை சிந்திக்க வைப்பதாக அமைய வேண்டும்///

ஆம் நண்பா.. உங்களின் கருத்தையும் வரவேற்கின்றேன்... மிக்க நன்றி நண்பா..

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல சிந்தனை ,காலத்தின் தேவைக்கு ஏற்ற பதிவு,ஒவ்வொரு தனி மனிதனும் இதனைச் சிந்திக்க வேண்டும்.......

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

நல்ல சிந்தனை ,காலத்தின் தேவைக்கு ஏற்ற பதிவு,ஒவ்வொரு தனி மனிதனும் இதனைச் சிந்திக்க வேண்டும்.......//

மிக்க நன்றிங்க

ஷண்முகப்ரியன் said...

இன்றுதான் உங்கள் பதிவே எனக்கு வழிவிட்டது,ஞானசேகரன்.நீரும்,நிலமும் பற்றிப் பொறுப்புடன் எழுதி இருக்கிறீர்கள்.
நீங்கள் சொலவதைப் போலத் தனி மனிதர்கள் திருந்தாவிட்டால் எந்த சமூகமும் உய்யாது.
வாழ்த்துக்கள்,ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

இன்றுதான் உங்கள் பதிவே எனக்கு வழிவிட்டது,ஞானசேகரன்.நீரும்,நிலமும் பற்றிப் பொறுப்புடன் எழுதி இருக்கிறீர்கள்.
நீங்கள் சொலவதைப் போலத் தனி மனிதர்கள் திருந்தாவிட்டால் எந்த சமூகமும் உய்யாது.
வாழ்த்துக்கள்,ஞானசேகரன்.//

வணக்கம் ஷண்முகப்ரியன் சார்.
மிக்க நன்றிங்க

Muniappan Pakkangal said...

Nalla thodar & Kanolihal.Hats off Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nalla thodar & Kanolihal.Hats off Gnanaseharan.//

மிக்க நன்றி சார்... உங்களின் ஊக்கம் என்னை மேலும் மேலும் வளப்படுத்தும்

Admin said...

உங்கள் நீர் தொடர்பான இடுகைகள் நல்ல பயனுள்ள விடயங்களைத் தாங்கி வந்தது. இன்னும் பல கருத்தாழமிக்க இடுகைகளை தரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

ஹேமா said...

சிந்தனைகள் விரிந்து செயலாகட்டும்.
இயற்கை வளங்களைக் காக்க எல்லோருமே கை கோர்ப்போம்.
எதிர்காலம் சிறக்கட்டும்.அருமையான் தண்ணீர் பற்றிய தொகுப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி ஞானம்.(பெயரைச் சுருக்கிடேன்)

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...

உங்கள் நீர் தொடர்பான இடுகைகள் நல்ல பயனுள்ள விடயங்களைத் தாங்கி வந்தது. இன்னும் பல கருத்தாழமிக்க இடுகைகளை தரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.///

உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சந்ரு... நல்ல இடுகைகள் கொடுக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கின்றது...

ஆ.ஞானசேகரன் said...

///ஹேமா said...

சிந்தனைகள் விரிந்து செயலாகட்டும்.
இயற்கை வளங்களைக் காக்க எல்லோருமே கை கோர்ப்போம்.
எதிர்காலம் சிறக்கட்டும்.அருமையான் தண்ணீர் பற்றிய தொகுப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி ஞானம்.(பெயரைச் சுருக்கிடேன்)///

உங்களின் கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஹேமா...
மேலும் பெயரை மட்டும் சுருக்கியதிற்கு மிக்க நன்றி

sakthi said...

ஏன் தொடரை அதற்குள் முடித்துவிட்டீர்கள்....

சேகரன்

அருமையான பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

ஏன் தொடரை அதற்குள் முடித்துவிட்டீர்கள்....

சேகரன்

அருமையான பதிவு//

வாங்க சக்தி...
இதற்கு மேல் சொல்லிக்கொண்டே போனாலும் அலுப்பு வந்துவிடும். அதனால் இந்த பகுதியை இறுதியாக வைத்துக்கொள்வதுதான் உத்தமம். மெலும் சமயம் கிடைக்குபொழுது பேசலாம்...
மிக்க நன்றி சக்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு..:-))))

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு..:-))))//
மிக்க நன்றி நண்பா...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஞாபகங்களை அசைபோடும்
ஞானம்!


பதிவுகள் அருமை!

ஆ.ஞானசேகரன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஞாபகங்களை அசைபோடும்
ஞானம்!


பதிவுகள் அருமை!//

மிக்க நன்றிங்க ஜோதிபாரதி

"உழவன்" "Uzhavan" said...

நீரின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொன்னீர்கள் நண்பா. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் :-)

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

நீரின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொன்னீர்கள் நண்பா. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் :-)//

மிக்க நன்றி நண்பா..