_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, March 4, 2009

தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்..

தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்..
மனிதனின் கலை, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் ஒன்றுசேர வைகைப்படுத்துவது என்றால் அவைகள் புத்தகங்கள்தான் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு புத்தகம் மனிதனின் வாழ்வியலில் பின்னப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதனின் நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறைகள், அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மூலம் அறியப்படுகின்றது. நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் புத்தகம் எழுதுவது, படிப்பது என்பது நம்மிடம் இன்றுவரை பழக்கத்தில் உள்ளது. இன்றும் பல பழமையான நூல்களின் மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவசரமான உலகில் நூலகம் சென்று படிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும், பலர் படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.


இப்படிப்பட்ட சிரமமான சூழல்களை கருத்தில் கொண்டு, பல புத்தகம் மின்நூல் வடிவில் கொடுக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இப்படி முயற்சி எடுக்கும் அறிஞர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்...... இதுபோல் தமிழ் இலக்கிய புத்தகங்களும் அறிஞர்கள் சிலரால் மின்நூல் வடிவில் கொடுத்து தொண்டாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட தமிழ் இலக்கிய மின்நூல்கள் இணையத்தில் என் கண்ணில் பட்டவைகளை இங்கே சுட்டியுடன் இணைத்துள்ளேன், .. உபயோகப்படும் என்பது என் எண்ணம்......


மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்-அகர வரிசைப் பட்டியல் கீழ் உள்ள சுட்டியை அமுக்கி தேவையான புத்தகங்களை இறக்கி, படித்துக் கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசமாக இருப்பது மேலும் மகிழ்ச்சியாகும்.....>>>இங்கே சுட்டவும்



மேலும்

முனைவர் அ.அ.மணவாளன் முன்னால் தமிழ்த்துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம் அவர்களின் தலைமையில் தமிழ் வெர்சுவல் பல்கலைக்கழகம் சென்னை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மின்நூலகம் இணையத்தில் மிக அழகாகவும், நுலைவாயில் பார்ப்பதற்கு நூலகம் போன்ற அமைப்பும் சிறப்பாக உள்ளது. இதில் பண்பாட்டு காட்சியகம் ஒலி ஒளி வடிவிலும் கிடைக்கின்றது. இதன் சுட்டி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.... இதன் சுட்டியை அமுக்கி எண்ணற்ற புத்தகங்களை படித்து பயன்பெறுங்கள்....>>>>இங்கே சுட்டவும் .
மேலும் பல வரலாற்று புத்தகம், கதை கவிதை புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள் பலவும் ஒருங்கே காணகிடைப்பது சென்னை நூலகம்.காம்..... இதில் உங்கள் நூல்களையும் வெளியிடலாம் என்பது தனி சிறப்பாக இருக்கின்றது. ஆனால் புத்தகங்களை இறக்கிகொள்ள முடியவில்லை மற்றும் பல புத்தகங்கள் இலவச சேவை இல்லை.... ஒருமுறை சுட்டியை சுட்டி பார்க்கவும்..... >>>>>இங்கே சுட்டவும்
புத்தக பிரியர்களுக்கு மகிழ்ச்சியும் பயனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..
ஆ.ஞானசேகரன்....

2 comments:

Anonymous said...

More than 3000 Eelam Tamil books available in E-book format

Please visit to Project noolaham
www.noolaham.net

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...
More than 3000 Eelam Tamil books available in E-book format

Please visit to Project noolaham
www.noolaham.net//

நன்றி... நன்றாக உள்ளது