தமிழே! தமிழே! மின்நூலகம்,..... ஏன் நம்மால் முடியாது?
வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்.. என்ற தலைப்பில் தமிழ் மின்நூலகம் பற்றி அறிமுகம் செய்தேன். அதில் பெயரில்லா நண்பர் ஒருவர் நூலகம் ஒன்றை தெரியப்படுத்தினார். அவற்றை பார்வையிட இங்கே சுட்டவும் . ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சியாக அந்த மின்நூலகம் இருக்கின்றது. 3129புத்தகங்கள் காண கிடைக்கின்றது. இவற்றில் ஈழத்து மக்களின் பண்பாடு மற்றும் நாகரிகம் அறிந்துக்கொள்ள நல்ல பயன் உள்ள முயற்சியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இதைப் பார்த்ததும்தான் எனக்குள் எத்தனை கேள்விகள்? தமிழே தாய்மொழியாக கொண்டு, மேலும் தாய்மொழியெலேயே கல்விப் பயின்று பெரிய பெரிய நிர்வணங்களில் பணியாற்றியும், மேலும் பெரிய பெரிய அரசு பதவிகளிருந்தும்,... தமிழ்நாட்டை வாழ்விடமாக வைத்துக்கொண்டு, நாம் ஏன் "தமிழ் மொழி மின்நூல் நூலகம்" பெரிய வடிவில் உருவாக்காமல் இருக்கின்றோம்?........ இந்தியர்கள் உலக அளவில் கணணி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் முன்னனியில் உள்ளார்கள் என்பதன் விளக்கம்தான் புரியவில்லை. படித்து முடித்துவிட்டு மிக பெரிய கார்ப்ரேட் நிர்வணத்தில் வேலை செய்வதைதான், நமக்கு கிடைக்கும் பேரின்பமாக நிலைகின்றார்களா? என்பதுதான் என் கேள்வியாக இருந்தது. நம்மால் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் ஏதாவது இருக்கின்றதா? அதற்காக நம் அரசும் ஏதாவது செய்கின்றதா? அங்கொன்றும் இங்கொன்றும் சாதனைகள் இருந்தாலும், சொல்லிக்கொள்ளுபடி இல்லை என்றே நினைக்க தோன்றியது.
மேலும் தமிழ்நாட்டில்தான் பெருவாரியான கணணி மற்றும் தொலைத்தொடர்பு துறை வல்லுனர்கள் அதிகம் என்றே நினைக்கின்றேன். இவர்கள் யாரோ கண்டுபிடித்த உருவாக்கிய மின்பொருளைதான் கையாள பயன்படுகின்றார்களே தவிர தான் ஒரு புதிய மின்பொருள் உருவாக்கவோ? அல்லது புதிய ஒரு கணணி சார் சாதணங்களை உருவாக்கவோ முயலாதது ஏன்? என்ற கேள்விகள் எனக்குள்ளே வந்துசென்றது.. இதற்காக இங்கே இருக்கும் தமிழ் காவலர்கள் ஊக்கப்படுத்தாமல் தன் சுயலாபத்தை மட்டுமே எண்ணமாக உள்ளதும் வருத்தப்பட வேண்டியதாகின்றது. என் எண்ணங்களில் தவறுகள் இருக்கலாம், இருப்பினும் வளர்ச்சிகளை எதிர்பார்ப்பது தவறில்லையே?...
என் ஆசைகளும் வேண்டுகோள்களும்!...... தமிழில் கோடான கோடி புத்தகங்கள் இருப்பதில் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சியடைய வேண்டியது. சிறுவர்கள் புத்தகம் முதல் இலக்கியம், கதைகள், கட்டுரைகள் போன்ற அனைத்து புத்தகங்களும் மின்நூல் வடிவில் உருவாக்குவது இயலாததுதான், இருப்பினும் ஒரு கூட்டு முயற்சியால் முடியும் என்றே தோன்றுகின்றது. யூ டியுப் போன்று ஒரு தளம் உருவாக்கி உலகில் உள்ள தமிழர்களின் கூட்டு முயற்சியால் ஒரு மிகப் பெரிய தமிழ் மின்நூலகம் உருவாக்கலாம் என்ற தமிழனின் ஆசையை வைக்கின்றேன். இதில் காப்புரிமை பிரச்சனை வரலாம் எனினும் நம்மால் இதை சாதிக்க முடியும் என்றே தோன்றுகின்றது. வலைப்பதிவர்களில் 90சதம் நண்பர்கள் கணணிசார் திரனாளர்கள் என்றே நினைக்கின்றேன், நீங்கள் முயற்சித்தால் முடியும், மேலும் சட்டம் சார்ந்த பதிவர்களின் உதவியால் காப்புரிமை பற்றிய பிரச்சனைகளையும் சமாளிக்கலாம்......
விரைவில் ஒரு மிகபெரிய தமிழ் மின்நூலகம் வேண்டி....
தமிழன் ஆ.ஞானசேகரன்.
Thursday, March 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா... நான் கூட மின் நூலகம் பற்றி நினைத்திருந்தேன்.. ஆனால் காலசூழ்நிலை ஒத்துவருவதில்லை... எனக்கான பொழுது போக்கு நேரங்கள் என் எண்ணங்களை வெளியிடுவதில் சரியாக இருக்கிறது... இன்னும் சொல்லப் போனால், இப்போது மணி 11.30 வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். இப்பொழுது நான் வலைப்பக்கத்தில் உலாவிக்கொண்டும், ஒரு கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டுமிருக்கிறேன்...
என்னாலான உதவியை தமிழுக்குச் செய்ய காத்திருக்கிறேன்....
என் பதிவுக்கு வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி ஐயா.. அடிக்கடி வாருங்கள்... ஒரு நல்ல இலக்கிய கட்டுரைகளைத் தர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்...
உங்கள் வலைப்பதிவை நான் பின் தொடருகிறேன்... நன்றி
மிக அருமையான யோசனை நண்பரே. ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் முடியாததுயில்லை நாளை நனவாக வாழ்த்துகள்.
//ஆதவா said...
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா... நான் கூட மின் நூலகம் பற்றி நினைத்திருந்தேன்.. ஆனால் காலசூழ்நிலை ஒத்துவருவதில்லை... எனக்கான பொழுது போக்கு நேரங்கள் என் எண்ணங்களை வெளியிடுவதில் சரியாக இருக்கிறது... இன்னும் சொல்லப் போனால், இப்போது மணி 11.30 வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். இப்பொழுது நான் வலைப்பக்கத்தில் உலாவிக்கொண்டும், ஒரு கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டுமிருக்கிறேன்...//
நன்றி ஆதவா! ஒரு கூட்டு முயற்சியாக இலாப நோக்காற்ற இருந்தால் நன்றாக இருக்கும், உங்கள் சக பதிவர்களின் உதவியை கேட்டு பாருங்கள்.. என்னால் முடிந்ததையும் செய்வதற்கு தயாராக உள்ளேன்....
// சொல்லரசன் said...
மிக அருமையான யோசனை நண்பரே. ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் முடியாததுயில்லை நாளை நனவாக வாழ்த்துகள்.//
நன்றி சொல்லரசன், உங்களால், உங்கள் சக பதிவர்களால் முடிந்தமட்டும் முயச்சி செய்து பாருங்கள்.. முயன்றால் முடியாதது எது? ஒரு கூட்டு முயற்சியாக இருக்கட்டுமே!
www.viruba.com
http://ta.wikisource.org/wiki/Main_Page பார்த்தீர்களா
விக்கிசோர்ஸ்
please see thamizhstudio.com
www.thamizhstudio.com
நன்றி!
புருனோ Bruno
விக்கிசோர்ஸ்
ஆதவன்
.... உங்கள் வருகைக்கும், தொடர்புக்கும் நன்றி! நீங்கள் அறிமுகப்படுத்திய இணைதளத்தை பார்த்த பிறகு மெலும் சொல்லுகின்றேன்.. இருப்பினும் உங்களின் தமிழ் பணி சிறப்புக்கு வாழ்த்துக்கள்
//புருனோ Bruno said...http://ta.wikisource.org/wiki/Main_Page //
பார்த்தேன்.. நன்றாக உள்ளது,
இதுவும் நான் இதில் சொன்ன மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்பு திட்டத்தின் கீழ்தான் உள்ளது.. நன்றிகள் கோடி.... நான் விரும்புவது இன்னும் விரிவான தலமோ அல்லது இதை மேலும் விரிவாகவோ இருந்தால் தமிழுக்கு நன்றாக இருக்கும்...
//மிக அருமையான யோசனை நண்பரே. ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் முடியாததுயில்லை நாளை நனவாக வாழ்த்துகள்.//
ரிப்ப்ப்பபீட்ட்டுடுடு....
//ராம்.CM said...
//மிக அருமையான யோசனை நண்பரே. ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் முடியாததுயில்லை நாளை நனவாக வாழ்த்துகள்.//
ரிப்ப்ப்பபீட்ட்டுடுடு...//
வணக்கம் ராம், வருகைக்கு நன்றி!
நல்ல சிந்தனை நண்பரே, சொன்ன விதம் மிக அருமை.
//தேனியார் said...
நல்ல சிந்தனை நண்பரே, சொன்ன விதம் மிக அருமை.//
வணக்கம்! நண்பரே!
உங்கள் வருகைக்கு நன்றி!
உங்கள் கனவு நனவாக எங்கள் வாழ்த்துக்கள்
// louis said...
உங்கள் கனவு நனவாக எங்கள் வாழ்த்துக்கள்//
நன்றி! நண்பரே! உங்கள் வாழ்த்தும்.. நம்முடைய கனவும் நனவாகட்டும்
மேற்படி மின்னூலகத்தை செய்துவரும் நண்பர்கள் தற்போது பணநெருக்கடியில் உள்ளார்கள். தொடர்ந்து நூல்களை தரவேற்றம் பண்ண அவர்களுக்கு பண உதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்தால் அவர்களுக்கு சிறு உதவிகளையாவது செய்யுங்கள்.(பணமாகவன்றி வேறுவகையிலும் உதவலாம்). அவர்கள் தங்களை தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகளை அதில் பிரசூரித்துள்ளனர்.
//அச்சுதன் said...
மேற்படி மின்னூலகத்தை செய்துவரும் நண்பர்கள் தற்போது பணநெருக்கடியில் உள்ளார்கள். தொடர்ந்து நூல்களை தரவேற்றம் பண்ண அவர்களுக்கு பண உதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்தால் அவர்களுக்கு சிறு உதவிகளையாவது செய்யுங்கள்.(பணமாகவன்றி வேறுவகையிலும் உதவலாம்). அவர்கள் தங்களை தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகளை அதில் பிரசூரித்துள்ளனர்.
//
நன்றி அச்சுதன் உதவிகளுடன் முயற்சிக்கின்றோம்.. இதை பார்க்கும் நண்பர்களும் முயற்சிப்பார்கள் என்ரு ந்ம்புவோம்
Post a Comment