அவரவர் மொழியில் பேசி....
"மொழி" ஒருவனின் உணர்வை எண்ணத்தை வெளிப்படுத்தும் நிலை. தன் பிறப்பின் மூலம் தாய்வழியாக புகட்டிய மொழிதான் அவனின் அவளின் தாய்மொழி. தாய்மொழியை யாரும் பிறக்கும்போதே நிர்ணயம் செய்வதில்லை அது தாயின் வழிதான் பெரும்பாலும் புகட்டப்படுகின்றது. தன் தாய்மொழியை அதன் உணர்வை புரிந்துகொள்ளாதவன், அவன் தன்னையும் தன் கலாச்சரம் மற்றும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவன் என்றுதான் அர்த்தம்.
அவரவர் தாய்மொழி அவர்களுக்கு சிறந்ததாகவும் உணர்வுகளை பரிமார எழிமையாகவும் இருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இதில் ஒருவர் மாற்று மொழிகாரர்கருடன் பழகும்பொழுது பொதுமொழியை அல்லது இருவருக்கும் புரிந்த மொழியை பயன்படுத்துகின்றது இயல்பான விடயம். மற்றொன்று மூன்று மேற்பட்ட பேர்கள் குழுமும்பொழுது, சில சிக்கல்களும் எரிச்சல்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்...
"சரோஜா" திரைப்பட காட்சியில் SPசரண் மற்றும் நண்பர்கள் நான்கு பேர் முக்கியமாக பேசும்பொழுது SPசரண் தெலுங்கில் பேசுவார், தெலுங்கு மற்ற இருவருக்கு தெரியாது எனவே அந்த இருவர் எரிச்சலடைவார்கள்.. இப்படி பல இடங்களில் மாற்று மொழி பேசும் பொழுது எரிச்சல் வருவது சாதாரணம் என்றே தோன்றுகின்றது. மேலும் புரியாத மொழி தொடர்ந்து கெட்கப்படும்பொழுது பல சந்தர்ப்பங்களில் எரிச்சல் வருவது எதனால்? அதை எப்படி தடுக்கலாம்?.
என் நண்பர் ஒருவர் முஸ்லீம் அவர்கள் வீட்டில் உருதுதான் பேசிக்கொள்வார்கள். அவர்களின் தாய்மொழி உருதாக இருந்தாலும் தமிழ்தான் எல்லாம். இப்படிதான் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லீம் நண்பர்கள் நிலையும் என்றே நினைக்கின்றேன். நான் அடிக்கடி அந்த நண்பர் வீட்டுக்கு செல்வது வழக்கம், நான் இருக்கும் பொழுது எல்லோரும் தமிழில்தான் பேசுவோம். ஆனால் திடீர் என்று சொந்த கதையொ அல்லது எனக்கு தெரியக்கூடாத விடயமோ பேசும்பொழுது உருதில் பேசுவார்கள்....... இந்த நேரத்தில் எரிச்சல் வருமா? இல்லையா? உங்கள் நிலை என்னவா இருக்கும்?.... எனக்கும் எரிச்சல் வரும் நிலைதான் வரும் அதே வேலை நான் அவர்களிடம் "கொஞ்சம் காமடி கலந்து ஏன் திடீர் என்று சண்டை போடுகின்றீர்கள் சாமாதானமா பேசுங்கள்" என்று என்நிலைக்கு திருப்பிவிடுவேன்... இது எல்லா நேரங்களிலும் முடிவதில்லை பல நேரங்களில் ???????
இதே போல் மலையாளி நண்பர்கள் எனக்கு அதிகம். பொதுவாக மலையாளி இருவர் சேரும்பொழுது அவர்கள் மொழிதான் பேசுவார்கள்... கொஞசநாள் எரிச்சலும் பிறகு அனுசரிக்ககூடிய மனபோக்கும் வந்துவிட்டது. பிறகு என்ன அவர்கள் மலையாளம் பேசினால் நான் தமிழில் பதில் சொல்வேன்....
தற்பொழுது சிங்கையில் வேலை, என்னுடன் சீனர்கள் அதிகம் வேலை செய்கின்றார்கள். பொதுமொழி ஆங்கிலமாக இருந்தாலும் பல சமயங்களில் நாம் அருகில் இருக்கும்பொழுது சீன மொழியில் பேசிக்கொள்வார்கள்... சீன மொழி முற்றிலும் புரியாததால் எரிச்சல் அதிகமே வரும். அந்த நேரங்களில் சேனல் மாற்றுங்கள் என்று கையில் சைகை காட்டி காமடிப் பன்னுவேன். இதன் மூலம் அந்த எரிச்சலிருந்து விளக்கி கொள்வேன்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒருவகை உணர்வும், சத்தமும் உண்டு. பங்களாதேஷ் மொழிக்காரர்கள் பேசும்பொழுது சத்தம் அதிகமாக இருக்கும். பலசமயம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் அலைப்பேசியில் பங்களாதேஷ் நபர்கள் பேசினால் சத்தம் அதிகம் இருக்கும், போகபொகதான் புரிந்தது இது அந்த மொழியின் இயல்பான சத்தம் என்று.. இதுவும் ஒருவைகை எரிச்சலை கொடுத்தது. அலைபேசி மணிஅடித்தாலே நகர்ந்துவிடுவேன்.
எந்த அளவிற்கு மொழிப்பற்று இருக்கின்றதோ, அந்த அளவிற்கு மாற்று மொழி பேசும் பொழுது இடத்திற்கு ஏற்றவாறு எரிச்சலும் வருகின்றது என்பது உண்மையை ஒத்துகொள்ளவேண்டி வருகின்றது. இதில் நாம் தமிழ் மொழியில் பேசும் பொழுது அடுத்த மொழிப் பேசுபவர்களுக்கும் எரிச்சல் கொடுப்பதும் உண்டு.. இதிலிருந்து ஓரளவிற்காவது தவிற்பது நாம் ஒவ்வொருடைய சுயக்கட்டுப்பாடு பொது இடங்களில் வேண்டும் என்பதையும் புரிந்துக்கொள்ளவேண்டும்........
இதில் யாரையும் குறைசொல்லவில்லை..... தவிற்கபடவேண்டியதை கூறுகின்றேன்.......
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்
Saturday, March 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment