_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, March 17, 2009

தாலாட்டு பாடலாம்....

தாலாட்டு பாடலாம்....

குழந்தைகள் என்றால் எல்லொருக்கும் நினைவில் வருவது அவர்களின் சின்ன சின்ன சுட்டிதனம். அப்பறம் அந்த சின்னதாய் சிரிப்பு. இப்படிதான் என் குழந்தகளின் சுட்டிதனங்கள்....

குழந்தைகளைப்பற்றி சொல்லபோனால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். முக்கியமா இசையும் தாலாட்டும் சொல்லவேண்டியது. என் மகன் தவழும் நிலை முன்பெல்லாம் சன் தொலைக்காட்சியில் " நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டீவின் தமிழ் மாலை" என்று ஒரு இசையுடன் வரும் தற்பொழுது மாற்றிவிட்டார்கள். இந்த இசை கேட்டால் என் மகன் இசை வரும் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு செல்வான்.. ஒவ்வொரு முறையும் இதேபோல்தான். எனக்கு ஆச்சரியமாய் இருக்கும் எனவே என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன், அவர்களும் அந்த இசையில் ஒரு வசீகரம் குழந்தைகளுக்கு இருப்பதுபொல் தெரிகின்றது என் குழந்தையும் ஆர்வமாக கேட்கும் என்றனர்.

எனக்குகென்னவோ.. கருவுற்ற பெண்களில் டீவி பார்க்கும் பழக்கம் இருக்கும். கருவில் குழந்தைக்கு 5 மாதம் முதல் காதுக் கேட்க ஆரம்பித்து விடுமாம். கருவில் கேட்ட அந்த இசை குழந்தைக்கு பதிந்துவிட்டதால் பிறந்த பின்னும் அந்த இசை பிடித்துவிட்டதாக தெரிகின்றது.

குழந்தைகளுக்கு ஒருவிதமான மெல்லிய இசை பிடித்துவிடும். தாய்மார்கள் பாடும் தாலாட்டில் மயங்கி தூங்காத குழந்தை இல்லை என்றே சொல்லலாம். இதில் வரும் "ராரிரேரோ ராராரோ" என்ற ஒரு ராகம் தூக்கத்தை வரவைத்துவிடும்.... தாலாட்டில் தனது சொந்தம், வீரம், குடும்ப பெருமை எல்லாம் சொல்லப்படும்.. எனக்கு பிடித்த தாலாட்டு என் அம்மா அடிக்கடி பாடும் பாட்டு..

ராராரோ ராரிரரோ
ராரிரேரோ ராராரோ

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிஞ்சார சொல்லியழு

மாமனடிச்சானோ
மல்லிகப்பூ செண்டாலே
அத்தையடிச்சாளோ
அமுதூட்டும் கையாலே (ரா..)

அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச்சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்

வெண்ணையில விலங்குசெய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம் (ரா..)

கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட வெண்ணையபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே! (ராராரோ..)

என் அம்மா எனக்கு பாடிய இதே தாலாட்டை என் பிள்ளைக்கும் பாடுவார்கள்...... தாலாட்டின் பெருமையை சொல்வதை விட அதை கேட்டால் தான் புரியும்....

நீங்கள் தாலாட்டு பாடியுள்ளீர்களோ இல்லையோ நான் என் குழந்தையை தூங்க வைக்க பாடிய பாடல் ஒரு சினிமா பாடல். கமல் சார் நடித்த வெற்றிப்படம் "நாயகன்" இந்த படத்தின் பாடல் "தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே" என்ற பாடல்தான். இந்த பாடலை நான் பாடி முடிப்பதற்குள் என் மகன் தூங்கிவிடுவான் (தூங்கவில்லை என்றால் தூங்கும்வரை திரும்ப திரும்ப பாடுவேன் எனவே தூங்கி விடுவான்). இந்த பாடலில் எனக்கு ஒரு சக்தி இருப்பதாக தெரியும் ஏன் என்றால் நானும் தூங்கிவிடுவேன். பல முறை நான் பாடும்பொழுது என் மகன் நீங்கள் அப்பா பாட்டை பாடவேண்டாம் என்பான் (அந்த பாட்டை அப்பா பாட்டு என்றுதான் கூறுவான்). ஏன் பாடவேண்டாம் என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று சொல்லுவான். என் மகனுக்கு பின் என் மகளுக்கு இதே பாடல்தான் இவளும் இந்த பாடலில் தூங்கிவிடுவாள். சில சமயம் இருவர்களும் தூங்கிவிடுவார்கள், சொல்லபோனால் எங்கள் குடும்பமே தூங்கிவிடும். எனவே அந்த பாடலுக்கு குடும்ப பாட்டு என்றே சொல்லுவோம்..

இசைஞானி இளையராஜா இசையில் ஒரு இயற்கை இருக்கும் என்பார்கள், அதை இந்த பாடல் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது... இளையராஜாவின் முதல் பாடலே (அன்னக்கிளி படத்தில் சொந்தமில்லை பந்தமில்லை என்ற பாடல்) தாலாட்டு வகை சேர்ந்ததே......

தாலாட்டுக்கு என்றே ஒரு இலக்கியமும், கிராம மக்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் உணர்வும் தெரியும்.. இந்த நவின காலங்களில் தாலாட்டு மறைந்து வருகின்றது.... இன்று குழந்தைகளுக்கு கிடைக்காத தாலாட்டு பின் வரும் சுட்டிகளில் உள்ளது...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

20 comments:

ஆதவா said...

/////கருவில் குழந்தைக்கு 5 மாதம் முதல் காதுக் கேட்க ஆரம்பித்து விடுமாம்////

உண்மைதான்....

தாலாட்டு குறித்த உங்கள் கட்டுரை அருமை (விகடனுக்காகவே எழுதுகிறீர்களா...ஹி ஹி ஹி. சும்மா கேட்டேன்.. எல்லா கட்டுரகளும் தரமாகவே இருக்கிறது)

இசைஞானி குறித்த உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...

உண்மைதான்....

தாலாட்டு குறித்த உங்கள் கட்டுரை அருமை (விகடனுக்காகவே எழுதுகிறீர்களா...ஹி ஹி ஹி. சும்மா கேட்டேன்.. எல்லா கட்டுரகளும் தரமாகவே இருக்கிறது)

இசைஞானி குறித்த உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.//

நன்றி ஆதவா, உங்களின் பாராட்டுகள் என்னை மேலும் சிந்திக்க வைகின்றது....

ராம்.CM said...

தாலாட்டின் பெருமையை சொல்வதை விட அதை கேட்டால் தான் புரியும்.... ///

நல்லா சொன்னீர்கள்!

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
தாலாட்டின் பெருமையை சொல்வதை விட அதை கேட்டால் தான் புரியும்.... ///

நல்லா சொன்னீர்கள்!//

வணக்கம் ராம், தாலாட்டு கெட்காத தமிழன் இல்லை என்றே சொல்லலாம்.. ஆனால் தற்போதைய சூழல் எப்படி என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்... இன்றய மங்கையர்கள் தாலாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா என்பது சந்தேகம்தான்.. ஒரு குழந்தையின் எண்ணங்களை தாலாட்டில் பதிவு செய்ய முடியும்....

Anonymous said...

LOUIS SAID ஐயா உங்கள் தாலாட்டு அனுபவம் மிகவும் இனிமை

ஆ.ஞானசேகரன் said...

//Anonymous said...
LOUIS SAID ஐயா உங்கள் தாலாட்டு அனுபவம் மிகவும் இனிமை//


வணக்கம் லூயிஸ்...
வருகைக்கு நன்றி!

priyamudanprabu said...

///
(தூங்கவில்லை என்றால் தூங்கும்வரை திரும்ப திரும்ப பாடுவேன் எனவே தூங்கி விடுவான்).
////

பயபுள்ள பயந்து தூங்கிடுறான்

priyamudanprabu said...

தாலாட்டு எப்பாவுமே சுகம்தான்
இன்னனும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்லிய பாடல்களை கேட்டபடி தூங்க பிடிக்கும்

priyamudanprabu said...

நல்லா எழுதுறீங்க நிறைய எழுதுங்க

ஆ.ஞானசேகரன் said...

/// பிரியமுடன் பிரபு said...
///
(தூங்கவில்லை என்றால் தூங்கும்வரை திரும்ப திரும்ப பாடுவேன் எனவே தூங்கி விடுவான்).
////

பயபுள்ள பயந்து தூங்கிடுறான்///

வேற வழியில்லாம துங்கிடிவான்....

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...
தாலாட்டு எப்பாவுமே சுகம்தான்
இன்னனும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்லிய பாடல்களை கேட்டபடி தூங்க பிடிக்கும்//
தாலாட்டின் சுகத்தை அனுபவிக்குறீங்க பிரபு.....

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...
நல்லா எழுதுறீங்க நிறைய எழுதுங்க//

உங்கள் வாழ்த்துகளுக்கு வணங்குகின்றேன்... உங்களின் வருகைக்கு நன்றி பிரபு,.. அடிக்கடி வந்து போங்க..ஹிஹிஹி..

ஹேமா said...

உண்மைதான்.குழந்தை கருவில் இருக்கும்போதே கேட்கும் சக்தியோடுதான் வளர்கிறது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனால்தான் தாயாகும் பெண்களை நல்ல பாடல்களைக் கேட்கவும்,நல்ல புத்தகங்களை உரத்து வாசிக்கவும் வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

CorTexT (Old) said...

நன்றாக உள்ளது. உனக்கு எப்படி முழு பாட்டும் தெரியும்?

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
உண்மைதான்.குழந்தை கருவில் இருக்கும்போதே கேட்கும் சக்தியோடுதான் வளர்கிறது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனால்தான் தாயாகும் பெண்களை நல்ல பாடல்களைக் கேட்கவும்,நல்ல புத்தகங்களை உரத்து வாசிக்கவும் வைத்தியர்கள் கூறுகிறார்கள்.//

நன்றி ஹெமா,,,,

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
நன்றாக உள்ளது. உனக்கு எப்படி முழு பாட்டும் தெரியும்?//

நன்றி ராஜ்...
உனக்கும் தெரியுமே... இது தாய் பாடிய தாலாட்டு

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! – என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! – என்றன்
பாசமுள்ள தாயாரே!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

தாலாட்டு பாடலில் மிக இனிமை ஒளிந்திருக்கிறது…

http://sagotharan.wordpress.com/

ஆ.ஞானசேகரன் said...

//ஜெகதீஸ்வரன். said...
(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! – என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! – என்றன்
பாசமுள்ள தாயாரே!
//
நன்றிங்க...ஜேகதீஸ்சுரன்... உங்களின் வருகைக்கு மகிழ்ச்சி

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்