எல்லோரையும் போல எனக்கும், எனக்குள் சில ஆசைகளில் காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்பதுதான்... அதற்காக நான் எதையும் செய்யவில்லை, அப்பறம் எப்படி பெண்ணை காதலிக்க முடியும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதற்காக நேரம் ஒதுக்கி காதல் செய்யதால் என்ன பயன்? அதுவும் அது உண்மையான காதலாக இருக்குமா என்பதுதான் என் எண்ணங்களும்.. பெண்கள் தானாக வந்து காதலிக்கும் அழகும் என்னிடம் இல்லை... அதுதான் எல்லோரையும் போல திருமணத்திற்கு பெண்பார்த்த பிறகு கிடைக்கும் கொஞ்சம் நாட்களில் அவளை காதலிப்பது. அதுதாங்க கடலைப்போடுவது, எல்லோரையும் போல நானும் அப்படித்தான். போனில்தான் பேச்சு, ஒருநாள் பேசவில்லை என்றால் தலையே வெடித்துவிடுபோல இருக்கும் (இருவருக்கும்) . அத பேசி, இத பேசி எல்லாமே இன்பமாக இருக்கும். நீங்கள் கேட்பது புரிகின்றது, திருமணத்திற்கு பின்னும் இப்படிதானா? ஹிஹிஹி சொல்லமாட்டேன் போங்க.. அப்படி பேசும்போதுதான் நான் என் அவளுக்காக எழுதிய இந்த ஆசைகள்... கர்நாடகவில் பிறந்து வளர்ந்தவள் தமிழ் சரியாக தெரியாவிட்டாலும் அவளால் ரசிக்க முடிந்தை என்னால் மறக்க முடியாது............
நான் கவிஞனாக ஆசை-உன்னை
வரிகளில் அடைத்து விடுவதற்காக...
நான் ஓவியனாக ஆசை-உன்னழகை
செதுக்கி வைப்பதற்காக...
நான் பிரம்மனாக ஆசை-உன்னை
மட்டுமே படைப்பதற்காக...
நான் குழந்தையாக ஆசை-உன்மடியில்
தூங்க வேண்டும் என்பதற்காக...
நான் அழவேண்டும் போல் ஆசை-நீ எனக்கு
ஆறுதலாக இருப்பாய் என்பதற்காக...
நான் கணவனாக ஆசை-உன்னை
எனக்கே சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக.......
-அன்புடன்
ஆ.ஞானசேகரன்
17 comments:
////பெண்கள் தானாக வந்து காதலிக்கும் அழகும் என்னிடம் இல்லை////
காதலுக்கு அழகு தேவையில்லை... அப்படி வரும் காதல் காதலில்லை...
----------------
/// நான் என் அவளுக்காக எழுதிய இந்த ஆசைகள////
பலே!!!!
கவிதை எளிமையா அழகா இருக்குங்க...
கவிதை அழகாக இருக்கிறது.! திருமணத்திற்கு முன் எழுதியதைவிட திருமணத்திற்குபின் எழுதுங்கள்..அதை பதிவாக போடுங்கள்! இன்னும் அழகாக இருக்கும்.!
ஆதவா said...
காதலுக்கு அழகு தேவையில்லை... அப்படி வரும் காதல் காதலில்லை...
உண்மைதான் ஆதவா, நடைமுறையில் அழகும் தேவைதான் என்பதும் புலப்படுகின்றது, அப்படி வரும் காதல் காதலில்லை... அதனால் தான் நான் தப்பித்துவிட்டேன்..
//ஆதவா said...
கவிதை எளிமையா அழகா இருக்குங்க...//
நன்றி!!!!!
//ராம்.CM said...
கவிதை அழகாக இருக்கிறது.! திருமணத்திற்கு முன் எழுதியதைவிட திருமணத்திற்குபின் எழுதுங்கள்..அதை பதிவாக போடுங்கள்! இன்னும் அழகாக இருக்கும்.!//
முயற்சி செய்கின்றேன்... கண்டிப்பாக என்று சொல்லமுடியவில்லை... காரணம் வேலைப் பழு மற்றும் செயலற்ற சிந்தனைகளும்
இனி தொடர்ந்து உங்கள் பக்கம் வருவேன்!
//ஜோதிபாரதி said...
இனி தொடர்ந்து உங்கள் பக்கம் வருவேன்!//
வணக்கம் ஜொதிபாரதி...
உங்களின் வருகை என்னை மகிழ்ச்சியடைய செய்கின்றது..
//நான் கவிஞனாக ஆசை-
உன்னைவரிகளில் அடைத்து விடுவதற்காக//
கவிதை நல்லா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...
யோவ்வ்வ்வ்வ்வ்வ்.......என்னாது இது மலரும் நினைவுகளா ?
:)
ஐயா உங்கள் கவிதை மிக நன்ரு
/// புதியவன் said...
//நான் கவிஞனாக ஆசை-
உன்னைவரிகளில் அடைத்து விடுவதற்காக//
கவிதை நல்லா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...
///
நன்றி புதியவன்... பணியின் காரணமாக உடன் பதிலிட முடியவில்லை.. நன்றிகள் பல
// கோவி.கண்ணன் said...
யோவ்வ்வ்வ்வ்வ்வ்.......என்னாது இது மலரும் நினைவுகளா ?
:)//
ஆமாம் கண்ணன் சார், மறக்கமுடியாத மலரும் நினைவுகள்தான். இப்படிப்பட்ட நினைவுகள் எல்லொருடைய வாழ்விலும் உண்டு.. எனது இப்படி
Anonymous said...
ஐயா உங்கள் கவிதை மிக நன்ரு
நன்றி... பெயரில் வந்தால் நன்றாக இருக்கும்.. வாழ்த்துகள் உங்களுக்கு
கவிதை எழுதியே அசத்திட்டீங்க போல.என்ன அழகு?மனம் அழகாய் இருந்தால்,அன்பு அழகாய் வெளிப்பட்டாலே போதும்.உங்கள் மன எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கீங்க.அருமை.
'கனவனாக(ண) திருத்திவிடுங்க.'
//ஹேமா said...
கவிதை எழுதியே அசத்திட்டீங்க போல.என்ன அழகு?மனம் அழகாய் இருந்தால்,அன்பு அழகாய் வெளிப்பட்டாலே போதும்.உங்கள் மன எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கீங்க.அருமை.
'கனவனாக(ண) திருத்திவிடுங்க.'//
நன்றி ஹெமா,... "ண" திருத்திவிடேன். உங்களின் பாராட்டில் மனம் குளிர்ந்தது மீண்டும் நன்றி!
நான் கவிஞனாக ஆசை-உன்னை
வரிகளில் அடைத்து விடுவதற்காக...
நான் ஓவியனாக ஆசை-உன்னழகை
செதுக்கி வைப்பதற்காக...
நான் பிரம்மனாக ஆசை-உன்னை
மட்டுமே படைப்பதற்காக...
நான் குழந்தையாக ஆசை-உன்மடியில்
தூங்க வேண்டும் என்பதற்காக...
நான் அழவேண்டும் போல் ஆசை-நீ எனக்கு
ஆறுதலாக இருப்பாய் என்பதற்காக...
நான் கணவனாக ஆசை-உன்னை
எனக்கே சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக.......///
நீங்கள் கவிதைகள் அதிகம் எழுதலான் என்பது என் கருத்து!
வார்த்தைகளில் வளமான கற்பனை!
வாழ்த்துக்கள் நண்பரே!
Post a Comment