உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, கணணி பல துறைகளிலும் புகுந்து விளையாடுகின்றது. கணணி என்றால் ஏதொ தொலைதொடர்பு துறையை சார்ந்துள்ள ஒரு பொரி என்றல்லாது; மருத்துவம், கணிதம், விவசாயம், கட்டமைப்பு துறை போன்று எல்லாத்துறைகளிலும் தனது பெரும் பங்கை அளித்து சாதனைப் படுத்துகின்றது.... மைக்ரோசாப்ட் நிர்வணம் கணணியின் திரண் மற்றும் எழிமை எல்லோராலும் பயன்படுத்தும்படி அமைத்திருப்பதுதான் இதன் பெரும் வெற்றி. தற்பொழுது பெருவாரியான நடுத்தர குடும்பங்களில் கணணி பயன்ப்படுத்துவது மேலும் ஒரு மகிழ்ச்சிதான்.
இப்படி வீட்டில் பயன் படுத்தும் கணணி குழந்தைகளும் தன் போக்குக்கு பயன்ப்படுத்தி வருகின்றனர். மேலும் முதல் வகுப்பு முதலாக கணணி பாடங்களும் சொல்லித் தரப்படுகின்றது. இப்படி குழந்தைகள் பயன் படுத்தும் கணணியில் சில பிரச்சனைகளை சந்திக்கின்றோம். உதாரணாமாக பல கோப்புகள் அழிக்கப்பட்டும், டிசிட்டல் புகைப்படம் பல கோடுகளும் வெட்டுகளும் மற்றும் அழிக்கப்பட்டும் காணமுடியும். இதனால் எரிச்சல் வரும் பின் அவர்களை பயன்படுத்த விடாமல் தடுப்பதும் உண்டு... நாம் எரிச்சல் படுவதால் எந்த பயனும் இல்லை மாறாக அவர்களுக்கு சில முக்கியமானவற்றை சொல்லிக் கொடுத்தால் இந்த பிரச்சனைகளிருந்து மெதுவாக சரி செய்யமுடியும் என்பது நானும் கண்டுள்ளேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். மேலும் உங்கள் அனுபவங்களையும் சொல்லலாம். ....
குழந்தைகளுக்கு புரியுமோ என்ற எண்ணம் வேண்டாம், நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்காமல் இருப்பதுபோலதான் இருக்கும் ஆனால் அதன் பயன் கொஞ்ச நாட்களிலே தெரிய ஆரம்பிக்கும்.. அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றனர் குழந்தை கருவில் 5 மாதத்திலிருந்தே காது கேட்க ஆரப்பித்து விடுகின்றது, எனவே நீங்கள் உங்கள் குழந்தையுடன் கருவிலே பேசுங்கள் என்று சொல்கின்றனர். மேலும் விவரம் இங்கே சுட்டி படிக்கவும்.
கணணிப்பற்றி குழந்தைகளுக்கு முக்கியமாக தெரியப்படுத்துவது "Delete" பொத்தானின் பயன்பாடுகள். இவற்றை பயன் படுத்தினால் கோப்புகள் அழிந்துவிடும் மேலும் உன்னுடைய அழகான புகைப்படம் காணாமல் போகும் என்பதை தெளிவுப்படுத்தவும். மேலும் தவறுதலாக "delete" யை அமுக்கிவிட்டால் yes or no என்ற செய்தி வரும் no என்ற பகுதியை அமுக்கவும் என்பதையும் சொல்லிவைக்கவும். மற்றொன்று அவர்கள் செய்யும் கோப்புகளை எப்படி சேமிப்பது என்பதை கண்டிப்பாக சொல்லவும். பின் "save " மற்றும் "save as" பற்றிய விளக்கமும், " save "என்பதை குறைந்த காலத்திற்கு பயன்ப்படுத்த வேண்டாம் என்பதும் "save as" பயன்ப்படுத்தி கோப்புகளை சேமிக்க கற்றுக்கொடுக்கவும். இப்படி நீங்கள் சொல்லி வந்தால் கண்டிப்பாக பயனை வெகுவிரைவில் காணமுடியும், பயம் வேண்டாம்........
நான் இணையத்தில் கண்ட ஒரு மின்பொருள் "mouse moveing record" இந்த மின்பொருளை பயன்படுத்தி என் குழந்தைக்கு நான் சொல்லிக்கொடுப்பதை பதிந்து பின் அவர்களே பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாகவும் பயன் உள்ளவையாகவும் இருக்கின்றது. இந்த மின் பொருள் இணையத்தில் இலவசமாக கிடைப்பதும் மற்றட்ட மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு மட்டுமில்லை நமக்கும் பெரிதும் பயன்படுகின்றது. அதன் சுட்டியை சுட்டி இறக்கி உங்கள் கணணியில் நிறுவி பயன் பெருங்கள்.... இங்கே இறக்கவும்>>
இதுபோன்று சின்ன சின்ன விடயங்களை கவணித்தாளே, நம் குழந்தைகள் முறையாக கணணியை பயன்படுத்துவார்கள் என்பது என் அனுபவ எண்ணங்கள். மிக முக்கியமான ஒன்று நாம் அவர்களை கவனித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை குழந்தைகளுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குழந்தைகள் நாட்டின் தூண்கள்,
எண்ணங்களுடன்.....
ஆ.ஞானசேகரன்
15 comments:
இது பயனுள்ள்ள யோசனை!! எதிர்காலத்தில் எனக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...
கனனி அல்ல சார். கணிணி அல்லது கணணி.. கணிப்பதால்தான் அதற்கக அப்படி ஒரு காரணப்பெயர்...
இப்போதெல்லாம் குழந்தைகள் ரொம்பவே புரிந்து கொள்கிறார்கள்...
மிகப் பயனுள்ள செய்தி!
குழந்தைகள் நிச்சயம் புரிந்துகொள்ளும்போல்தான் உள்ளது. உங்கள் பதிவைப் பார்க்கையில்.
நன்றிகள் நண்பரே! பகிர்ந்தமைக்கு!
//ஆதவா said...
இது பயனுள்ள்ள யோசனை!! எதிர்காலத்தில் எனக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...
//
நன்றி ஆதவா, எதிர்காலத்தில் பயன்படும் என்றுதான் நினைக்கின்றென்.. கண்ணியை மாற்றிவிட்டேன்.... சுட்டி காட்டியமைக்கு நன்றி
//ஆதவா said...
இப்போதெல்லாம் குழந்தைகள் ரொம்பவே புரிந்து கொள்கிறார்கள்...//
ஆம் ஆதவா, சிலசமயங்களின் நமக்கே சொல்லித்தரக்கூடிய நிலையும் ஏற்படுகின்றது...
// ஷீ-நிசி said...
மிகப் பயனுள்ள செய்தி!
குழந்தைகள் நிச்சயம் புரிந்துகொள்ளும்போல்தான் உள்ளது. உங்கள் பதிவைப் பார்க்கையில்.
நன்றிகள் நண்பரே! பகிர்ந்தமைக்கு!//
வணக்கம் ஷீ-நிசி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்...
பயனுள்ள பதிவு. குழந்தைகள் எதையும் உற்றுநோக்கக்கூடியவர்கள் என்பதும், எதையும் உடனடியாக புரிந்துகொள்ளக்கூடியவர்கள் என்பதும் உண்மைதான்.
// குடந்தைஅன்புமணி said...
பயனுள்ள பதிவு. குழந்தைகள் எதையும் உற்றுநோக்கக்கூடியவர்கள் என்பதும், எதையும் உடனடியாக புரிந்துகொள்ளக்கூடியவர்கள் என்பதும் உண்மைதான்.//
நன்றி குடந்தை அன்புமணி...
இவ்வாறான பயனுள்ள அம்சங்களை இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் !... எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்!
( உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தோழா)
பிரியமுடன்
டயானா
// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
இவ்வாறான பயனுள்ள அம்சங்களை இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் !... எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்!
( உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தோழா)
பிரியமுடன்
டயானா//
தோழி டயானா விற்கு வணக்கம் கலந்த நன்றிகள்...
உங்கள் எழுத்துப்பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்
அழகாக சொல்லியிருக்கீறீர்கள்..நானும் இதை கவனத்தில் கொள்கிறேன்!
//ராம்.CM said...
அழகாக சொல்லியிருக்கீறீர்கள்..நானும் இதை கவனத்தில் கொள்கிறேன்!//
வணக்கம் ராம், வருகைக்கு நன்றி!
நன்றி!!!!யூத்புல் விகடன் குழுவினருக்கு நன்றிகள் கோடி... "குழுந்தையும் கணணியும்" உங்கள் குட் blogs ல் வெளியிட்டு பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள்..
http://youthful.vikatan.com/youth/index.asp
நல்ல பதிவு
கற்ப்பமாக உள்ள என் சகோதரிக்கு இதை மின்னஞ்சல் செய்துள்ளேன்
நன்றி
//பிரியமுடன் பிரபு said...
நல்ல பதிவு
கற்ப்பமாக உள்ள என் சகோதரிக்கு இதை மின்னஞ்சல் செய்துள்ளேன்
நன்றி//
வாவ்வ்வ்வ்..
நன்றி பிரபு....
Post a Comment