
ஏம்பா பங்குச் சந்தைனு சொல்லுராங்களே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேம்பா? என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி... ம்ம்ம்ம்ம்..... என்னது பங்குச் சந்தையா? என்னபா என்ன நினைக்குற நான் என்ன காரைக்குடி அண்ணாமலை செட்டியாரா? இல்லை ஹர்ஷத் மேத்தாவா? என்னைப்போய் கேட்கிறியே..... இல்லைபா நீ இணையத்தில் ஏதோதோ படிக்குர அதுதான் கேட்டேனு சொன்னதும் கொஞ்சம் தலைநிமிர்த்தி நமக்கு தெரிஞ்சத சொல்ல...
எனக்கு அதப்பத்தி அனுபவம் இல்லபா, கொஞ்ச நாளுக்கு முன் ஆணந்த விகடனுல படிச்ச கதை ஒன்னு..... ஒருவன் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவரிடம் இங்கு குரங்குகள் இருக்குனு கேள்விப்பட்டேன் எனக்கு நான்கு குரங்குகள் வேனும் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தருகின்றேன் பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அவர்களின் ஒருவன் ஒரு குரங்குக்கு 50 ரூபாயா? நான் பிடித்து தருகின்றேன் என்று பிடித்து தந்தான். இவர் சொன்னது போல நான்கு குரங்குகளுக்கு 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்தார். பின் அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அந்த குரங்குகளை அதில் வைத்து பூட்டிவிட்டு ஒரு காவல் காரனையும் வைத்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அடுத்தமுறை இன்னும் அதிக குரங்குகள் தேவை 75 ரூபாயானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 75ரூபாய் என்றதும் அந்த ஊரில் உள்ள அனைவரும் எல்லா குரங்குகளையும் பிடித்து வைத்திருந்தனர். அடுத்தமுறை வந்த வியாபாரி ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா குரங்குகளையும் ரூபாய் 75 வீதம் வாங்கி கொண்டார். அதேபோல் எல்லா குரங்குகளையும் அந்த வீட்டில் பூட்டினார். மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....
என்னபா புரியுதா? என்று கேட்டேன் நண்பரிடம். ம்ம் நீ சொல்லுரதிலிருந்து பார்த்தா குரங்கு வியாபாரம்தான் பங்குசந்தை, குரங்குதான் பங்கு. மதிப்பே இல்லாத குரங்கை மதிப்புள்ளதாக ஆக்கி செய்யும் வியாபாரம்தான் பங்குசந்தையா என்றான்? நான் அப்படி சொல்லவில்லை பங்கு என்பது ஒரு மாய தோற்றம் அதை கைதேர்ந்தவர்கள் செய்யும் விளையாட்டில் இப்படியும் ஆகலாம். சிறிதே உபயோகம் உள்ள தங்கதிற்கு மதிப்புக் கொடுக்கப் படுவதும், அவற்றின் விலை கோபுரத்தில் இருப்பதும் எதை காட்டுகின்றது; ஒரு குரங்கு விளையாட்டுப் போல தோன்றவில்லையா? பங்கு வர்த்தகம் புரியாதவர்களுக்கு ஒரு சூதாட்டம் அதை முறைப்படி கற்றுக்கொண்டால் லாபத்தில் விளையாடலாம். கொஞ்சம் தெரிந்ததுமே எல்லாம் தெரிந்துக்கொண்டேன் என்று இருமாப்பு இல்லாமல் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றுதான் எனக்குப் படுதுபா என்றேன். .......
நீ சொல்லரதும் சரிதாம்பா...... ஆமாம் சுவிஸ் வங்கில இந்தியாவிலிருந்து மட்டும் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணமா டிபாசிட் செஞ்சு இருக்காங்கலாமே, நம்ம அரசாங்கம் இதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருமா?
இங்க பாரு இப்படி எல்லாம் வம்புல மாட்டிவிடக்கூடாது.. இதெல்லாம் நடக்குறக் காரியமா? அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் இந்தியாவிற்கு இல்ல, இல்லவே இல்லை...... அவரும் தலை ஆட்டிகொண்டே சென்றுவிட்டார், நானும் எஸ்கேப்