_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, March 2, 2009

"பேண்ட்" அறிவேன்... "சர்ட்" அறிவேன்... "டை" கட்ட நானெறியேன்!...

"பேண்ட்" அறிவேன்... "சர்ட்" அறிவேன்... "டை" கட்ட நானெறியேன்!...
நான் படித்தது சீருடையணியும் பள்ளிதான் இருந்தாலும் "டை" எல்லாம் இல்லப்பா!.. அப்பறம் வேலையும் "டை" கட்டி செய்யுற வேலையும் இல்லை, "டை" யை பார்த்ததோட சரி. கல்யாணம் ஒருநாள் கூத்தாக யாரோ எனக்கு "டை" கட்டிவிட்டதாக ஞாபகம் அம்புட்டுதான் "டை"க்கும் எனக்கும் உள்ள தொடர்பு. ஒரு சமயம் நண்பர் ஒருவரால் "டை" கட்ட தெரிந்துக்கொண்டேன் அதுவும் இப்போழுது பேஏஏ தான்... மறந்துட்டேன்.

இப்படிப்பட்ட நிலையில்தான் வந்தது சிக்கல் என் மகன் பிறந்தநாளுக்கு ஆசையாக என் மனைவி என் மகனுக்காக "டை" வாங்கி வைத்திருந்தாள். அந்த நேரம் என்னிடம் கொடுத்து "டை"யை கட்டிவிட சொன்னாள் என்னால் முடிந்த அளவு முயற்சித்தும் முடியாமல் போனதும், என்செல்ல மகன் அடம்பிடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும்பொழுதுதான்... கைகொடுத்தது இந்த குறும் காணோளி (வீடியோ கிளிப்). என்னை போன்று முழிப்பவர்களுக்கு இந்த காணோளி பயன்படும் என்று இத்துடன் இணைத்துள்ளேன். "டை" கட்ட மறந்தவர்களுக்கும் பயன்படும் என்பதும், மேலும் விரைவாக "டை" கட்ட சிறந்த வழியாகவும் உள்ளது..




இது போதும் இருந்தாலும் மேலும் ஒன்று......


2 comments:

வடுவூர் குமார் said...

எனக்கும் இன்னும் தெரியாது - அவசியம் ஏற்படவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

//வடுவூர் குமார் said...
எனக்கும் இன்னும் தெரியாது - அவசியம் ஏற்படவில்லை.//
வாங்க வடுவூர் குமார்.. அவசியம் ஏற்படலாம், ஏற்படும்.... என் அனுபவத்தில் சுலபமாகதான் உள்ளது, தெரிந்துக்கொள்ளுங்கள்... "அவசியம் ஏற்படும்போது புதினம் உருவாகும்"