_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, March 10, 2009

ஓ பெண்ணே! நீ........

ஓ பெண்ணே! நீ........

உலக மகளிர்தினம் வந்ததும் எனக்குள்ளே ஒரு சில எண்ணங்கள்,.. பெண்மை, தாய்மை, தாய் இப்படி நினைக்குபோதே நெஞ்சாங்குளையில் ஒரு ஈர கசிவு உணரப்படுகின்றது என்பது கொஞ்சம் ஒவரா இருந்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ள என்ன வெட்கம்..... என்னால் உணரமுடிகின்றது. ஆனால் அதற்கு முன்... பெண்ணே! நீ பெண்மையை உணரப்படுகின்றாயா? என்பதுதான் முக்கிய கேள்வி ???????? பெண்ணே! நீ உணரப்படும் வரைதான் பெண்மையை உலகம் உணரும்..

பெண்ணைப் பற்றி சொல்ல வரும்போதே பெண்ணடிமை என்ற ஒரு நினைவையும் கொண்டு செல்வதும் இயல்பான ஒன்று.
உரிமை என்பது-கேட்டு
பறிப்பதும் எடுப்பதுமில்லை;-மாறாக
பகிர்வதும் உணர்வதுமே!.....

2001ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், நான் சிங்கபூரிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தேன். இரண்டு வருட வேலைக்கு பின் சொந்த நாட்டை, வீட்டை பார்க்க வருகின்றேன் ஆயிராமயிரம் கனவுகளுடன். வரும்போது எல்லொரையும் போல ஒரு Hi 5 set வாங்கி வருகின்றேன். சுங்க இலாக்க அலுவலகம் முன் வந்துக்கொண்டுள்ளேன். அங்கு ஒரு இளம் நங்கை வெள்ளை சேலை இடுப்பில் ஒரு பேனாவை சொருகியுள்ளதை பார்த்ததுமே இவர் சுங்க இலக்கா அதிகாரி என்று புரிந்துக்கொண்டேன். என்னிடம் வந்து Hi 5 set ஐ பார்த்து என்ன இது என்று கேட்டு நான் சொல்வதற்குள் சார் வாங்க இது என்னானு பாருங்கோ என்று நால்வரை அழைத்து மாபெரும் குற்றம் செய்ததுபோல விசாரனை கேட்டனர். பின்னர் நான் ஒன்றும் புரியாததுபோல இதற்கு என்ன செய்யவேண்டும் என்றேன்.. அவர்கள் வரி கட்டவேண்டும் என்றனர், நான் சரி என்றேன்.. அந்த பெண் கொஞ்சம் தூரத்திலிருந்து என்னா சார்? என்று வினவ வரி கட்டி விடுவாராம் என்றனர் சலிப்புடன். என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது வேண்டும்மென்றே குழப்பம் செய்து லஞ்சம் வாங்க இருந்த அந்த இளம் நங்கையின் நாடகத்தை..... லஞ்சத்தை பற்றிக்கூட கவலைப்படவில்லை. இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த நினைவுகள்.. இந்திய நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு பொருப்புள்ள வேலையின் அதிகாரத்தில் உள்ள பெண்ணே நீ! ..... காசுக்காக கேவலமான நாடகம் ஏன்? ஒரு பெண்மையை என்னால் அப்போது உணரமுடிவதில்லை...

பெண்கள் எல்லாதுறைகளிலும் ஆண்களுக்கு இணையான சாதனைகள் படைத்து வருகின்றனர் என்ற பெருமைக்கு பின்னால் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்னால் மட்டுமில்லை பெண்மையே! உன்னாலும் ஏற்றுகோள்ள முடியாது என்பதும்(?).....

இதேபோல் 1982வாக்கில் எங்கள் ஊர் அஞ்சல் அலுவலகம் சென்று தபால் வாங்க ஐந்து ரூபாயை கொடுத்து கேட்டேன். அலுவகத்தில் உள்ள பெண் தபால் வாங்க வர தெரியுது சில்லரையா எடுத்து வரமுடியாதா? என்று கடிந்து கத்தினார். எனக்கு கோபம் வந்தது, சில்லரை இல்லை என்றால் சொல்லுங்கள் அதற்காக கத்துவது என்ன உங்கள் வீட்டு வியாபாரமா? உங்கள் வீட்டு வியாபாரமாக இருந்தால் இப்படி கத்திதான் செய்வீர்களா? என்று நானும் கொஞ்சம் கூச்சலிட்டேன். என் பின்னால் இருந்தவர்களும், இவர் எப்பொழுதும் இதேபோல்தான் கடிந்துக் கொண்டுதான் வேலைசெய்கின்றார் என்றனர். இங்கேயும் என்னால் பெண்மையை காணமுடியவில்லை. அஞ்சல் துறை, வங்கித் துறை என்பவை மக்கள் சேவையை கருதிதான் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது. அதனால்தான் பெண்களை பல பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். மக்கள் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு எல்லாம் தெரிந்துக் கொண்டுத்தான் வரவேண்டும் என்பது அவசியமில்லை, தெரியாதவர்களுக்கு கனிவுடன் உதவ வேண்டும் என்பதற்காகதான் உங்களுக்கு வேலையும் கூலியும்... அந்த பொருப்புணர்வு இல்லாத பெண்ணே! நீ........ என்னால் இங்கும் பெண்மையை உணரமுடிவதில்லை.




அன்னைத் தெரசா, இந்திராக் காந்தி, டாக்டர் செல்வி ஜெயலலிதா, கல்பனா சால்வ்லா, சானியா மிஸ்ரா போன்ற பெண்களைபோல் சாதனைகள் செய்தாலும். பல இடங்களில் பெண்மை காணாமல் போகின்றதை நம்மால் பார்க்கவும், கேட்கவும் முடிகின்றது.








இப்படி பலர் பெண்மையின் சிறப்பை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு முன்னால் என்னால் பெண்மையை உணரமுடிவதில்லை. பெண்மையை சொல்லிச் சொல்லி பெண்ணை அடிமைப் படுத்துகின்றனர் இந்த ஆண்வர்க்கம், என்ற நொண்டி நையாண்டியை விட்டெரிந்துவிட்டு. பெண்ணே நீ!...... உங்களின் உரிமைகளை பகிர்ந்துக்கொள்!.. உணர்ந்துக்கொள்!.. இங்கே உணர்வுகள் உரவாட வேண்டுமே ஒழிய வரதட்சணை கொடுமை சட்டம் பொய்யாக வழிமாறி பாயவேண்டாம்.

பெண்ணே! நீ....
பெண்மையை உணரும்வரை.....
பெண்ணைச் சுற்றியே உலகம் வலம் வரும்...

வாழ்த்துகளுடன்....
ஆ.ஞானசேகரன்

21 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லா எழுதியிருக்கீங்க...

ஆ.ஞானசேகரன் said...

//SUREஷ் said...
நல்லா எழுதியிருக்கீங்க...//

வணக்கம் சுரேஷ்,... உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//அப்பாவி தமிழன் said...
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///

நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு சார்.. எல்லாரும் பெண்களின் பெருமையை மட்டுமே சொல்லும் நேரத்தில் அவங்க குறைகளையும் சுட்டிக்காட்டி இருக்கீங்க.. இதெல்லாம் மாறணும்.. வாழ்த்துக்கள்..

ஆதவா said...

ஆஹா... நல்ல பத்வு... ஒரு அனுபவத்தினூடு பெண்ணை அலசியது போன்று இருந்தது!!!

தமிழ். சரவணன் said...

இதை விட கொடுமைகள் சில கெடுமதிபெண்களால் நாட்டில் நடக்குது... பொய் வரதட்சணை கேஸ் போட்டு எல்லைரையும் உள்ளே தள்ளுவதும் அல்லது ஆளையே கல்லக்காதலுட்ன சேர்ந்து போட்டுதள்ளுவதும் சகஐமாகிவிட்டது....

நம் நாட்டில் பொய்வரதட்சணை கேஸ் மூலம் கைதிசெய்யப்பட்ட பெண்கள் ஒன்னறை லட்சத்துக்கு மேல் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது மற்றும் வருசத்துக்கு 20,000 குழந்தைகள் மனமுறிவு காரணமாக தந்தையில்லாமல் வளர்கின்றது எனது குழந்தை உட்பட...

வாழ்க ஜனநாயகம்!

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருக்கு சார்.. எல்லாரும் பெண்களின் பெருமையை மட்டுமே சொல்லும் நேரத்தில் அவங்க குறைகளையும் சுட்டிக்காட்டி இருக்கீங்க.. இதெல்லாம் மாறணும்.. வாழ்த்துக்கள்..//

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.. நீங்கள் சொல்லும்படி மாறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசைகள்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
ஆஹா... நல்ல பத்வு... ஒரு அனுபவத்தினூடு பெண்ணை அலசியது போன்று இருந்தது!!!
//
நன்றி! ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ். சரவணன் said...
இதை விட கொடுமைகள் சில கெடுமதிபெண்களால் நாட்டில் நடக்குது... பொய் வரதட்சணை கேஸ் போட்டு எல்லைரையும் உள்ளே தள்ளுவதும் அல்லது ஆளையே கல்லக்காதலுட்ன சேர்ந்து போட்டுதள்ளுவதும் சகஐமாகிவிட்டது....

நம் நாட்டில் பொய்வரதட்சணை கேஸ் மூலம் கைதிசெய்யப்பட்ட பெண்கள் ஒன்னறை லட்சத்துக்கு மேல் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது மற்றும் வருசத்துக்கு 20,000 குழந்தைகள் மனமுறிவு காரணமாக தந்தையில்லாமல் வளர்கின்றது எனது குழந்தை உட்பட...

வாழ்க ஜனநாயகம்!//

நன்றி! தமிழ். சரவணன் உங்கள் ஆதங்கம் எனக்கும் தினம் செய்திதாளை பார்க்கும்போது இருக்கின்றது. பெண்ணுரிமை என்ற பெயரில் ஒரு அனியாயம் நடந்தேறி வருகின்றது... மாறவேண்டும் என்பதே ஆசைகள்...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ். சரவணன் said... 20,000 குழந்தைகள் மனமுறிவு காரணமாக தந்தையில்லாமல் வளர்கின்றது எனது குழந்தை உட்பட... //

தமிழ் சரவணன் கூறியதில் "எனது குழந்தை உட்பட" என்ற மூன்று சொல் என்னை பல மணிநேரம் உறையவைத்துவிட்டது.... என்ன வென்று சொல்ல முடியவில்லை அவருடையம் பிளாக்கில் சில ஆதாரங்களுடன் சொல்லியுள்ளார்.. http://tamizhsaran-antidowry.blogspot.com/ இதில் நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை,... கடவுள் இருந்தால் காப்பாராக... "ஓ பெண்ணே நீ............" உன் பெண்மையை எப்பொழுதாவது உணர்வதுண்டா? ....

ஹேமா said...

வணக்கம் ஞானசேகரன்.இன்றுதான் முதன்முதல் வந்தேன்.பெண்கள் மகளிர் தினத்தில் பெண்களைப் போட்டுப் பிச்சு எடுத்திருக்கீங்க.நீங்க சொன்ன அத்தனையும் பொய் இல்லை.சில பெண் பேய்கள்.
அப்பட்டமான உண்மைகள் சில.
அவர்கள் பெண் வர்க்கத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
வணக்கம் ஞானசேகரன்.இன்றுதான் முதன்முதல் வந்தேன்.பெண்கள் மகளிர் தினத்தில் பெண்களைப் போட்டுப் பிச்சு எடுத்திருக்கீங்க.நீங்க சொன்ன அத்தனையும் பொய் இல்லை.சில பெண் பேய்கள்.
அப்பட்டமான உண்மைகள் சில.
அவர்கள் பெண் வர்க்கத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள்.//

நன்றி ஹேமா, பெண்ணாகிய நீங்களே ஒப்புக்கொள்வது.. அப்படிப்பட்ட பெண்கள் திருத்தப்படலாம் என்பது தெளிவு.. தவறுகள் நடக்க கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணங்களும்.. மேலும் பெண்களிடம் கருணையும் கனிவும் எதிர்ப்பார்ப்பது உயிர்களிடத்து இயல்பு .. அதைதான் நானும் எதிர்ப்பார்க்கின்றேன்..

உமா said...

பெண்கள் தினப்பதிவுகளில் மிகவும் நேர்மையான பதிவு இது.பெண்கள் எல்லாரும் பெண்களாய் இருப்பதில்லை.தாய்மை போலவே பெண்மையும் ஒரு மெல்லிய உணார்வு அதை உணர்பவர் மட்டுமே தாயாகவோ பெண்ணாகவோ திகழமுடியும்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
பெண்கள் தினப்பதிவுகளில் மிகவும் நேர்மையான பதிவு இது.பெண்கள் எல்லாரும் பெண்களாய் இருப்பதில்லை.தாய்மை போலவே பெண்மையும் ஒரு மெல்லிய உணார்வு அதை உணர்பவர் மட்டுமே தாயாகவோ பெண்ணாகவோ திகழமுடியும்.
//
வணக்கம் உமா, உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துரைக்கும் நன்றி!!!!!

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் பெண்களை பற்றி சில் எதார்தமான குறைகளை சுட்டிகாட்டினேன், மாற்றம் தேவை என்ற நல்லெண்ணத்தில்.... ஹெமா, உமா போன்றவர்களின் பாராட்டுகளை பார்க்குபோழுது. பெண்ணே பெண்ணை அடிமையாக்கும் நில்லையை பெண்களுக்கு புரியவந்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விடயம். இனி பெண்கள் பிற்போக்கான சிந்தனைகளை விட்டு வெளிவருவார்கள் என்ற நம்பிக்கை தெரிகின்றது.... ஒர் பெண்ணால்தான் முற்போக்கு சிந்தனைகளை உலகிற்கு கொண்டுசெல்ல முடியும்ம்ம்ம்ம்...

priyamudanprabu said...

பெண்களை அடிமை படுத்துவது பெரும்தவறு
அதே சமயம் பெண்ணியம் என்ற பெயரில் சில பெண்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களாஇ வைத்து ஆண்களை வெல்வதே பெண்ணியம் என்று நினைக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் உணர்ந்து இணைந்து வாழ்வதே இருதரப்புக்கும் நல்லது

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...
பெண்களை அடிமை படுத்துவது பெரும்தவறு
அதே சமயம் பெண்ணியம் என்ற பெயரில் சில பெண்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களாஇ வைத்து ஆண்களை வெல்வதே பெண்ணியம் என்று நினைக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் உணர்ந்து இணைந்து வாழ்வதே இருதரப்புக்கும் நல்லது//

உங்கள் எண்ணங்களும் சரியே,..
பெண்கள் பெண்மையை உணராதவரை பெண்ணடிமையிலிருந்து வெளிவருவது கடினமே என்பதும் என் எண்ணங்கள்

Suresh said...

அருமை ஒரு பெண்மையை அழகா சொல்லிருக்கிங்க தலைவா

//நீ உணரப்படும் வரைதான் பெண்மையை உலகம் உணரும்..//

ஆஹா :-)

//ங்கு ஒரு இளம் நங்கை வெள்ளை சேலை இடுப்பில் ஒரு பேனாவை சொருகியுள்ளதை பார்த்ததுமே //

நீர் ஏன்யா அங்க பாக்குறிங்க இருங்க அன்னிகிட்ட சொல்றோம்


//காசுக்காக கேவலமான நாடகம் ஏன்? ஒரு பெண்மையை என்னால் அப்போது உணரமுடிவதில்லை... //

உணமை

1982 தான் நான் பிறந்தேன் தலை..
அதுவும் ஒரு நல்ல எடு.கா.

சூப்பர் பெண்மையை அருமையாய் சொல்லுறிங்க

ஆ.சுதா said...

ஞானசேகரன் சார் அட்டகாசம் பண்ணிட்டீங்க.. எப்படி இப்படி ஒரு துணிவான பதிவு, உங்கள் பார்வை சரியானதாகவே இருக்கு, (ஆனால் நிறைய பென்கள் உங்கள்=நம் ஆதங்கம் போல் உண்டு நான் செல்லும் எங்கள் வட்ட CTO ஒரு பைசா வாங்காது ரொம்ப கண்டிப்பு வேர) நல்ல விவரனையோடு எழுதியிருக்கீங்கர கலக்கல்,

//டாக்டர் செல்வி ஜெயலலிதா,//
இவங்க எதுலங்க சாதனை செஞ்சாங்க

ஆ.ஞானசேகரன் said...

//Suresh said...
அருமை ஒரு பெண்மையை அழகா சொல்லிருக்கிங்க தலைவா//

வணக்கம் சுரெஷ்... உங்களின் வருகையும் கருத்து பகிர்வும் மகிழ்ச்சியே.... நன்றிங்க சுரெஷ்

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
ஞானசேகரன் சார் அட்டகாசம் பண்ணிட்டீங்க.. எப்படி இப்படி ஒரு துணிவான பதிவு, உங்கள் பார்வை சரியானதாகவே இருக்கு, (ஆனால் நிறைய பென்கள் உங்கள்=நம் ஆதங்கம் போல் உண்டு நான் செல்லும் எங்கள் வட்ட CTO ஒரு பைசா வாங்காது ரொம்ப கண்டிப்பு வேர) நல்ல விவரனையோடு எழுதியிருக்கீங்கர கலக்கல்,

//டாக்டர் செல்வி ஜெயலலிதா,//
இவங்க எதுலங்க சாதனை செஞ்சாங்க///

வணக்கம்
ஆ.முத்துராமலிங்கம் சார்... உங்களின் பகிர்வு பெரும் மகிழ்ச்சி..

//டாக்டர் செல்வி ஜெயலலிதா,//
இவங்க எதுலங்க சாதனை செஞ்சாங்க//

அவர்கள் தமிழ முதலமைச்சரா இருந்தாங்க.. குற்றம் கண்டுபிடிக்க விசாரனைதான் செய்யனும் இருந்தாலும் பெருவாரியான மக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள்...