உலகமயமாக்கல் பொருளாதார மந்தநிலை, சென்ற முறையை விட இன்று உலகெங்கிலும் பெருவாரியாக பாதிப்பை உணர்கின்றனர். இந்தியாவிலும் பல இடங்களில் மக்கள் உணர்கின்றனர் என்பது வருத்தப் படக்கூடியது. இந்தியாவில் உணரப்பட வேண்டிய அவசியம் இல்லை, "என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்" இப்படி இந்தியநாட்டின் பொருளாதாரத்தை உலகமயமாக்கலில் அடகுவைத்த காரணம்தான் இந்த பொருளாதார மந்தநிலை உணரப்படுகின்றது. அதுஷ்டவசமாக இந்தியாவின் நிலை 51%, 49% என்பதால் இந்த மந்தநிலையிலிருந்து தப்பித்து கொள்கின்றோம். இதற்கு கம்னிஸ்டுகளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
சோசலிசமா? முதலாளித்துமா? என்ற போட்டியில் சோவியத் யூனியன் பிரிவுக்கு பின், சோசலிச கொள்கை சுக்குநூறானது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கையால் மட்டுமே உலகை நடத்தி செல்லமுடியும் என அமேரிக்கா கொக்கரிக்க.... நடந்த சம்பவங்கள்தான் இது. உலக சந்தையில் ஜப்பான் கலக்கி கொண்டிருந்தது. ஜப்பனியர்களின் உழைப்பு அவர்களால் பயன்படுத்தப்படும் கொள்கைகள் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணங்கள்.. தற்போழுது ஜப்பானிலும் இதுவரைக் கண்டிராத பொருளாதார நசிவு காணமுடிகின்றது.
ஜப்பானியர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கைகளில் முதன்மையானது கைசான்(Kaizen - kaizen mean continuous improvement every day, every time, every mints) ஒவ்வொருமுறையும் ஒரு முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பது. பின் Lean மற்றும் six sigma போன்ற கோட்பாடுகளும் கைசான் லிருந்து வந்தவைகள். முதலில் Toyota கார் கம்பனியில் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை பின்பற்றிய அமெரிக்கா முதலாளித்துவம் அதை சரியான பாதையில் கொண்டு செல்லாததும் ஒரு மாபெரும் பொருளியல் மந்தநிலையை சந்தித்துள்ளது என்பது இந்த சாமானியனின் எண்ணங்கள். இதில் மாற்று கருத்து இருக்கலாம் இருப்பினும் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உற்பத்திப்பொருள்கள் பெருக வேண்டும் என்பதும், அப்படி உற்பத்தி செய்த பொருள்கள் மலிவாக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்..... அப்படி விற்பனை செய்யும் பொருள்களை வாங்குபவர்கள் யார்?........ கொஞ்சமும் சிந்திங்கள்!!!!!!.. நம்மை போல உள்ள சாமானியன்...... அந்த சாமானியனை சுரண்டிய முதலாளித்துவம்தான் மலிவு விலையில் விற்பனை செய்கின்றது... வாங்குபவன் சாமானியன்..
எப்படி முதலாளித்துவம் சாமானியனை சுரண்டுகின்றது?.... சரியாக செய்யப்படாத kaizan மற்றும் lean ஐ முதலாளித்துவ அதிகாரிகள் continuous improvement என்ற பெயரில் வேலையை சுலபமாக்காமல் சாமானியனுக்கு வேலைப் பழுவை அதிகப்படுத்தி வேலை வாங்குவது.. பின் சரியோ தவறோ வெலையை மேலிருந்து கீழ் செய்ய சொல்லுவார்கள்.... இதற்காக அந்த அதிகாரிகளுக்கு green belt மற்றும் black belt கொடுப்பார்கள்... அதற்குபின் அந்த அதிகாரி பதவிஉயர்வு செய்யப்படுவார்கள். பின் அடுத்து வரும் அதிகாரி மேலிருந்து கீழ் செய்த வேலையை கீழிருந்து மேல் செய்தால்தான் நல்லது என்று சொல்லி இவர்களும் அதேபோல் green belt மற்றும் black belt வாங்கி பதவி உயர்வு அடைவார்கள்.. அதை பலநாட்களாக செய்யும் சாமானியனுக்கு தெரியும் அதை பக்கவாட்டில்தான் செய்ய வேண்டும் என்று......
இப்படியாக அடுத்தடுத்துவரும் அதிகாரிகளின் செயல்களால் மன உழச்சலை சந்திக்கும் சாமானியனுக்கு மேலும் ஒரு சிக்கல். செலவினம் குறைப்பது மற்றும் லாபத்தை அதிகப்படுத்துவது இதற்காக ஒரு அதிகாரியை நியமிப்பது. இவர்கள் நன்கு படித்தவர்கள் மேலைநாடுகளில் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள்..... இவர்கள் செய்வது கொஞ்சம் கொஞ்சமாக சாமானியனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை எடுப்பது பின் அதுவும் முடிந்தால் கூலியை அதைச்சொல்லி இதைச்சொல்லி குறைப்பது.. இதற்காகவும் green belt மற்றும் black belt கொடுப்பார்கள்.....
இப்படி வேலைப்பழுவால் மன உழைச்சலில் இருக்கும் சாமானியனுக்கு கூலியை குறைப்பது மேலும் ஒரு மன உழைச்சல், மற்றும் குடும்பத்தில் சிக்கல்..... இப்பொழுதான் நாம் சிந்திக்க வேண்டியது!!! இப்படிபட்ட சாமானியனால் எப்படி சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருளை வாங்க முடியும்????????? ஒரு சாமானியன் வாங்கினால்தான் ஒரு சாமானியனுக்கு கூலி கொடுக்க முடியும்.
சாமானியனிடம் பணம் புழக்கம் இருந்தால்தான் சாமானியன் வாங்கும் சக்தி இருக்கும். மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தால்தான் உலகசந்தை சிறக்கும் என்பதும் தெளிவாகின்றது. இதிலிருந்து ஏதொ ஒரு முறைகேடான கோளாரு உள்ளதை புரிந்திருக்கும்....
சாமானியன் என்று உழைப்பு சுரண்டலிருந்து விடுபடுகின்றானோ அன்றுதான் நிலையான உலகப் பொருளியல் காணமுடியும் என்பது என்னை போன்ற சாமானியனின் கருத்தாக இருக்கும்...... இதில் மாற்று கருத்து இருக்காலாம் என்நிலையில் இதுதான். மேலும் "கொடுமையிலும் கொடுமை உழைப்பு சுரண்டல்" என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...
என்றும் உங்களுள்
ஆ.ஞானசேகரன்.
26 comments:
ஆஹா..... அருமைங்க.... நல்ல எளிமையாக விளக்கமாக பொருளாதார நிலையைக் குறித்து எழுதியிருக்கிறீர்கள்..
ஒவ்வொரு பதிவையும் கவனித்து எழுதும் உங்களைப் பாராட்டுவது எப்படி என்றே தெரியவில்லை.
சாமானியர்கள் வாங்காவிடில் முதலாளிகளுக்கு சொகுசில்லை என்று நாசூக்கான சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது!!!
//ஆதவா said...
ஆஹா..... அருமைங்க.... நல்ல எளிமையாக விளக்கமாக பொருளாதார நிலையைக் குறித்து எழுதியிருக்கிறீர்கள்..
ஒவ்வொரு பதிவையும் கவனித்து எழுதும் உங்களைப் பாராட்டுவது எப்படி என்றே தெரியவில்லை.
சாமானியர்கள் வாங்காவிடில் முதலாளிகளுக்கு சொகுசில்லை என்று நாசூக்கான சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது!!!//
நன்றி ஆதவா, நம்மை போன்ற சாமணியனின் உணர்வை யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்று சொல்லுராங்க.... அந்த ஆதங்கம்தான் இந்த சாமாணியனின் பதிவு... உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் நன்றி ஆதவா..
கலக்கலாக இருக்கு ஞான்ஸ்
//கோவி.கண்ணன் said...
கலக்கலாக இருக்கு ஞான்ஸ்//
நன்றி கண்ணன்....
முதலாளித்தும் என்ற வார்த்தை capitalism-க்கு சரியான பொருத்தம் இல்லை என்றே நினைக்கின்றேன் (ஒரு காலத்தில் சரியாக இருந்திருக்கலாம்). socialism = சமவுடமை பொருளாதாரம் என்றால், capitalism = தனியுடமை பொருளாதாரம்.
இதில் சரியென்றோ, தவறென்றோ சொல்லுவதிற்கில்லை. இரண்டிலேயும் நன்மை தீமைகள் உள்ளன. socialism கேட்பதற்கு இனிமையாக தோன்றினாலும், அது நிலையற்ற பொருளாதாரத்தையே உருவாக்கும். capitalism நடைமுறையில் இயற்கையாக சாத்தியமாக கூடியது. உலத்தில் வருமையை ஒரளவிற்கு குறைத்த பெருமை capitalism-க்கு உண்டு. இது சைனா, இந்தியாவிற்கும் பொருந்தும்.
நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், பல காரணங்களால் சமன்நிலை பாதிக்கப்படும் போது, பொருளாதார இறக்கம் ஏற்படும் (economic cycle. இதை அரசாங்கம் மற்றும் வங்கி நடவடிக்கையின் மூலம் ஓரளவு குறைக்க முடியும்). இது சைனா, இந்தியாவிற்கு புதிய அனுபவம். இந்த முறை, இச்சமன்நிலை அபரீத முதலீட்டால் ஏற்பட்டதாக தெரிகிறது. சைனாவின் அபரித பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்ட பணத்தை USA-வில் முதலீடு செய்தது. இந்த அதிகப்படியான முதலீடை, இங்குள்ள வங்கிகள் நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும் வீடு வாங்க கடன் கொடுத்தது (உண்மையில், இதற்கு அரசாங்கத்தின் socialism-மும் ஒரு காரணம் - எல்லாருக்கும் சொந்த வீடு கிடைக்க உதவ வேண்டும்!). ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட தொடர்விளைவே இன்றைய பொருளாதார இறக்கம்!
வண்டி வேகமாக செல்லும் போது சிறிய தடை ஏற்பட்டால், அது நம்மை சற்று தடுமாறத்தான் செய்யும். அதற்காக நடந்தே சென்றால் எவ்வளவு தூரம் தான் செல்லமுடியும். இதற்காக capitalism மேலுள்ள நம்பிக்கையை இழக்க வேண்டாம். எந்த ஒரு சாமாணியனும் உயர்பதவி அடையவோ, பங்கு சந்தையில் முதலீடு செய்யவோ (நீயும் முதலாளி தான்), தனி வணிகம் செய்யவோ எந்த தடையும் இல்லை.
///RajK said...
முதலாளித்தும் என்ற வார்த்தை capitalism-க்கு சரியான பொருத்தம் இல்லை என்றே நினைக்கின்றேன் (ஒரு காலத்தில் சரியாக இருந்திருக்கலாம்). socialism = சமவுடமை பொருளாதாரம் என்றால், capitalism = தனியுடமை பொருளாதாரம்.மேலும்>>>>>///
உங்கள் கருத்தையும் வரவேற்கின்றேன்.. capitalism கொள்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு சில பாதிப்பும் உள்ளதை மறுக்க முடியாது. தனி மனிதன் வாங்கும் சக்தி உழைப்பு சுரண்டலினால் பாதிக்கப்படுகின்றது. முறையற்ற கொள்கைகளால் கூட உண்டு என்பது மறுக்க முடியாது... capitalism தால் சாமாணியன் முதலாளியாகலாம் என்பது எல்லா வகைகளிலும் பொருந்தாது. பொதுவாக இந்தியா பொன்ற நாடுகளில் முறைத் தவறி பயன் படுத்துவதால்... பாதிப்பு சாமாணியனுக்குதான். முதலாளிக்கு இல்லை. தற்பொதைக்கு 51% , 49 % சரியான விகிதம் என்றே தோன்றுகின்றது..... சாமாணியனின் வாங்கும் திறன் குறைந்துள்ளதை எல்லோராலும் உணர முடிகின்றது.... ஆனால் இதை சரிப்படுத்தாமல் மேலும் சாமாணின் சுரண்டல் செய்வது(சம்பள குறைப்பு) எந்த விதத்தில் ஞயமாக்கப்படும்..... தகவலுக்கு நன்றி ராஜ்... ஏன் இன்னும் தூங்கலியா?
Kaizen அடிப்படை தத்துவத்தில்,teamwork,personal discipline,
improved morale,quality circles, andsuggestions for improvement.
இதில் suggestions for improvement மட்டுமே எடுத்து கொண்டால் அந்த கொள்கையை தவறு ஆகிவிடுமே..
sollarasan said...
//Kaizen அடிப்படை தத்துவத்தில்,teamwork,personal discipline,
improved morale,quality circles, andsuggestions for improvement.
இதில் suggestions for improvement மட்டுமே எடுத்து கொண்டால் அந்த கொள்கையை தவறு ஆகிவிடுமே..//
வணக்கம் சொல்லரசன், நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ளவேண்டும், தற்போது உள்ள சூழ்நிலையில் Kaizen என்ற செயல்பாடு பல நிர்வணங்களில் ஒப்புக்காக சொல்லி உழைப்பை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அதைதான் சுட்டி காட்டியுள்ளேன்... சாமாணியனுக்கு வாங்கும் திரன் உருவாக்கப்படவேண்டும் என்பது முக்கியம் என்றும் என் எண்ணங்கள்... உங்கள் மேன்மையான கருத்துக்கு நன்றி சொல்லரசன்..
உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்னிடம். எங்களை போன்ற உலைக்கும் வர்க்கத்தின் மன குமுறலை மிகவும் அற்புதமாக படைத்துள்ளீர்.தலைமை பொறூப்பில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றூம் முதலாலிகள் தங்கள் உயர்வை மட்டும் கருத்தில் வைக்காமல் உலைக்கும் நம்மை போன்ற சமானியர்களை வாழ வைத்தால் உலக பொருலாதாரம் விரைவில் சிரடையும்
சபாக்ஷ் அய்யா
very good comments about economic condition.
(என்னைப்போல்)சாமானியனுக்கும் விளங்க எழுதியதற்கு நன்றி!
தயவு செய்து சாமாணியன் என்பதை சாமானியன் என உரிய இடத்தில் மாற்றிவிடவும்.
/// louis said...
உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்னிடம். எங்களை போன்ற உலைக்கும் வர்க்கத்தின் மன குமுறலை மிகவும் அற்புதமாக படைத்துள்ளீர்.தலைமை பொறூப்பில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றூம் முதலாலிகள் தங்கள் உயர்வை மட்டும் கருத்தில் வைக்காமல் உலைக்கும் நம்மை போன்ற சமானியர்களை வாழ வைத்தால் உலக பொருலாதாரம் விரைவில் சிரடையும்///
நன்றாக உள்ளது, நன்றி லூயிஸ்
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
(என்னைப்போல்)சாமானியனுக்கும் விளங்க எழுதியதற்கு நன்றி!
தயவு செய்து சாமாணியன் என்பதை சாமானியன் என உரிய இடத்தில் மாற்றிவிடவும்.//
வணக்கம் யோகன், உங்கள் கூற்று சரிதான்... நன்றி மாற்றி விடுகின்றேன்..
//sollarasan said...
Kaizen அடிப்படை தத்துவத்தில்,teamwork,personal discipline,
improved morale,quality circles, andsuggestions for improvement.
இதில் suggestions for improvement மட்டுமே எடுத்து கொண்டால் அந்த கொள்கையை தவறு ஆகிவிடுமே..//
சொல்லரசன், ஏன் உங்கள்
profile க்கு செல்லமுடிவதில்லை
ரொம்ப தெளிவா இருக்கிறது உங்கள் கருத்துக்கள்! தொழிற்சாலைகளுக்கு சென்று ஏதாகிலும் கருத்தரங்குகளில் கலந்ததுண்டா?!
பகிர்வு மிக அருமை!
நன்றி நண்பரே!
இணைத்துக்கொள்ளலாம் என்று தேடினேன்!!!
ப்ளாக் ஃபாலோயர்ஸ் விட்கெட் உங்கள் ப்ளாகில் காணவில்லையே!
(Sorry for not writing it in Tamil)
Socialism is built with an assumption that people are angels. Capitalism is built with an assumption that people are selfish. That's why Socialism is fundamentally unstable. By no means Capitalism is perfect. But it provides a stable, practical framework. It requires monitoring, control, regulation, etc. Any broader sense of social awareness (team work, etc.) would enhance the Capitalism. In fact, we are learning more and more about the importance of social awareness and that is what you guys are expressing indirectly. But remember Socialism does not offer food on table.
Few thoughts from Economist Milton Freidman...
http://www.youtube.com/watch?v=76frHHpoNFs
//ஷீ-நிசி said...
ரொம்ப தெளிவா இருக்கிறது உங்கள் கருத்துக்கள்! தொழிற்சாலைகளுக்கு சென்று ஏதாகிலும் கருத்தரங்குகளில் கலந்ததுண்டா?!
பகிர்வு மிக அருமை!
நன்றி நண்பரே!//
வாங்க ஷீ-நிசி உங்கள் பாராட்டுதலுக்கும் நன்றி.. ஒரு சாமானியனாகிய என்னால் சாமானியனின் பிரச்சனையை புரிந்துகொண்டதை எழுதினேன்...
//ஷீ-நிசி said...
இணைத்துக்கொள்ளலாம் என்று தேடினேன்!!!
ப்ளாக் ஃபாலோயர்ஸ் விட்கெட் உங்கள் ப்ளாகில் காணவில்லையே!//
ப்ளாக் ஃபாலோயர்ஸ் விட்கெட் செய்யவில்லை, என்னை இணைத்துள்ளவர்கள் குறைவாக உள்ளனர். நண்பர்கள் வட்டம் இல்லை.. வேலையின் காரணமாக தொடர்ந்து இணையத்தில் இருப்பதில்லை... நீங்கள் உங்கள் ப்ளாகில் ஆட் பன்னுங்கள்....அதில் பிரச்சனை வராது..
// RajK said...
(Sorry for not writing it in Tamil)
Socialism is built with an assumption that people are angels. Capitalism is built with an assumption that people are selfish. That's why Socialism is fundamentally unstable. By no means Capitalism is perfect. But it provides a stable, practical framework. It requires monitoring, control, regulation, etc. Any broader sense of social awareness (team work, etc.) would enhance the Capitalism. In fact, we are learning more and more about the importance of social awareness and that is what you guys are expressing indirectly. But remember Socialism does not offer food on table.//
நான் இங்கு சோசலிசமா? கேப்டலிசமா? என்ற பிரச்சனைப்பற்றி சொல்லவில்லை நீங்கள் கூறியதுபோல இரண்டிலும் குறைகள் உள்ளது... எதுவாகினும் முறைகேடாக பயன்படுத்துதல் சாமானியன் பாதிப்பை உணர்கின்றான். அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த பொருளாதார மந்தநிலையில் மேலும் உழைப்பு சுரண்டலில் தாக்கப்படுகின்றான்.... இதனால் மேலும் வாங்கும் திரன் இழக்கிறான்... இப்படியே போனால் பொருளியல் மந்தநிலை எப்படி சமன்நிலை அடையும்?...
பல இடங்களில் பொருளியல் மந்தநிலையை தனக்கு சாதமாக பயன் படுத்துவது. சாமானியனுக்கு மேலும் மேலும் மனம் உழைச்சலையும், உழைப்பு சுரண்டலையும் உருவாக்கப்படுகின்றது.... அதைதான் குறிப்பிட்டுள்ளேன்...இங்கு யார் பெரியவன் என்பதை விட யார் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும்.... நன்றி ராஜ்
என் தளத்தின் முகவரி
http://sollarasan.blogspot.com
சொல்லரசன் said...
என் தளத்தின் முகவரி
http://sollarasan.blogspot.com
நன்றி சொல்லரசன்
ஙே ;)
Excellent
Anputan
Singai Nathan
//singainathan said...
ஙே ;)
Excellent
Anputan
Singai Nathan//
வணக்கம் சிங்கைநாதன்... முதல் முறையாக வந்திள்ளீர்கள்.. உங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள் கோடி..
Post a Comment