என்ன கொடுமைசார்..... மழைவந்தால் விவசாயிக்கு கொண்டாட்டம், துணி வெளுப்பவனுக்கு திண்டாட்டம்; அதுவே வெயில் அடித்தால் துணி வெளுப்பவனுக்கு கொண்டாட்டம், விவசாயிக்கு திண்டாட்டம்....... மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருள்களின் விலை ஏற்றம் இறக்கம் கொண்டு கணக்கிடும் பணவீக்கம் தற்பொழுது இந்தியாவில் 0.44 சதவிகிதமாக உள்ளதாம். இதனால் சாமானியனுக்கு லாபம் உள்ளதா?
சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பொருளின் விலை ஏற்றம் காணும், எற்றம் கண்டால் பணவீக்கம் அதிகமாகுமாம்... பணவீக்கம் அதிகமாகுவதும் குறைவதும் சமசீர் தன்மை வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். அதுதாங்க அரிசி விலை ஏற்றம் கண்டால் விவசாயிக்கு நல்ல லாபம் கொடுக்கும், அதுவே அரிசி வாங்கும் சாமானியனுக்கு விலை ஏற்றம் கடுமையாக்கும்... சாமனியனுக்கு வாங்கும் சக்தியும் தேவையும் அதிகமானால் விலை ஏற்றம் காணும்; அந்த விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகப்படுத்தும்..
பணவீக்கம் என்றால் என்ன? சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை இந்த ஆண்டும் 105 ரூபாய்க்கு வாங்கினால், 5 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது போல, பல பொருட்களை வைத்து ஒவ்வொரு வாரமும் அரசாங்கம் பணவீக்கத்தைக் கணக் கிட்டு அறிவித்து வருகிறது.(செய்தி தினமலர்)
சாமானியனுக்கு கார்வாங்கும் சக்தி அதிகமானால்; தேவையும் அதிகமானால் கன்டிப்பாக விலையும் ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றத்தால் பணவீக்கம் அதிகமாகும். அப்போ சாமானியனுக்கு வாங்கும் சக்தி வரக்கூடாதா?.... வாங்கும் சக்தியும் வேண்டும் விலையும் ஏற்றம் காணக்கூடாது.... எனக்கும் புரியவில்லை சார்... சாமானியனுக்கு காரின் விலை குறையவேண்டும் என்றால் கார் உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும் அதே வேலையில் செலவினமும் குறைக்கவேண்டும், அப்போ சாமானியனின் சம்பளம் குறையும் வேலை பழு அதிகமாகும்... இதனால் சாமானியன் வாங்கும் சக்தியை இழப்பான்...... ஹிஹிஹீ தலை சுற்றுகின்றது..
ஒரு முறை தக்காளி சாகுபடி அதிகமானது, அதனால் தக்காளியின் விலை சரிந்துவிட்டது... இது தக்காளி வாங்கும் சாமானியனுக்கு மகிழ்ச்சி.. ஆனால் சாகுபடி செய்த விவசாயிகோ பெரும் பாதிப்பை கொடுத்தது.... தக்காளியை நகரங்களுக்கு கொண்டு செல்லமுடியாமல் விளைநிலங்களிலேயே போட்டு அழித்தனர்... என்ன வேடிக்கை... உண்மைதான் நகரங்களுக்கு கொண்டுசெல்லும் செலவு தக்காளியின் விலையை விட அதிகமாக இருந்தது.. இதே போல் பல முறை நடந்துள்ளது...
அமேரிக்கா காடுகளில் விளையும் ஆப்பில் உலக நாட்டில் உள்ள அனைவருக்கும் போதுமானதாம் ஆனால் அதை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்லும் செலவினம் அதிகமாகின்றது... பொதுவா என்னதான் செய்ய வேண்டும்? ஆய்வாளர்கள் சொல்வது சமசீர் வேண்டும்....
ஒரு பொருளின் விலை ஏற்றமோ; அல்லது விலை இறக்கமோ சமசீராக இருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பது ஓரளவிற்கு புரிகின்றது.. இதற்காக நாட்டின் உற்பத்தியையும், தேவையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதை வருகின்ற அரசு கவனத்தில் கொண்டால் நாடும் நாமும் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை......
மேலும் இது தொடர்பான செய்தி சுட்டியை சுட்டவும்
என்று அன்புடன்
ஆ.ஞானசேகரன்....
11 comments:
நியாயமான ஆதங்கம்!
இதிலேருந்து நீங்க கார் வாங்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்!
// ஜோதிபாரதி said...
நியாயமான ஆதங்கம்!
இதிலேருந்து நீங்க கார் வாங்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்!//
நன்றி!... நான் வாங்க இன்னும் நினைக்கவில்லை.. நீங்கள் வாங்கிய வாங்க வேண்டிய காருக்குதான் இந்த ஆதங்கம்
... நன்றி ஜோதிப்பாரதி சார்..
போன முறை தக்காளி போட்ட ராமசாமிக்கு நல்ல லாபம் என்று குப்புசாமியும்,கந்தசாமியும்,
முருகுசாமியும்,சிவசாமியும்,பத்து கிலோ தேவைபடும் சந்தைக்குக்கு ஜம்பது கிலோ தக்காளி கொண்டுபோன அவர்களுக்கு திண்டாட்டம்,வாங்குபவருக்கு கொண்டாட்டம்.அதற்க்கு பதில் ஆளுக்கு இரண்டு கிலோ தக்காளி கொண்டுபோனால் திண்டாட்டமும் இல்லை கொண்டாட்டமும் இல்லை.இதுதானுங்க சமச்சீர் நடக்குமா இந்தியாவில்.
//சொல்லரசன் said...
போன முறை தக்காளி போட்ட ராமசாமிக்கு நல்ல லாபம் என்று குப்புசாமியும்,கந்தசாமியும்,
முருகுசாமியும்,சிவசாமியும்,பத்து கிலோ தேவைபடும் சந்தைக்குக்கு ஜம்பது கிலோ தக்காளி கொண்டுபோன அவர்களுக்கு திண்டாட்டம்,வாங்குபவருக்கு கொண்டாட்டம்.அதற்க்கு பதில் ஆளுக்கு இரண்டு கிலோ தக்காளி கொண்டுபோனால் திண்டாட்டமும் இல்லை கொண்டாட்டமும் இல்லை.இதுதானுங்க சமச்சீர் நடக்குமா இந்தியாவில்.//
மிக சரியா சொன்னிங்க சொல்லரசன்... ஆனால் நடக்குற காரியமா இந்தியாவில்? என்ற கேள்விதான் சிந்திக்க வைக்கின்றது.. ஒரு உதாரணத்திற்காகதான் தக்காளி சொல்லப்பட்டது. இதே போல எல்லா பொருளாதார பிரச்சனைகளும். தற்போது இருக்கும் பொருளியல் மந்த நிலையும்..... பல சமயங்களில் உலகம் தானாகவே சமசீர் பெற்றூவிடும் காலத்தின் கட்டாயமாக. அதுவரை நாம் பொருத்துகொள்ளதான் வேண்டும்..
சொல்லரசன் மிக அனுபவ ரீதியாக ராமசாமி உதாரணம் சொல்லியுள்ளீர்கள்... பாராட்டுகள்.. உங்களுக்கு இதுபோல் ஏதோ அனுபவம் உள்ளதா? இருந்தால் சொல்லுங்களேன்..
பெரிய பெரிய விஷயமெல்லாம் பேசறீங்க.... உண்மையிலேயே பணவீக்கம் குறித்த எளிய கட்டுரை.... எந்த சாதரண வாசகரும் நுகர்ந்து படிக்கக்கூடிய கட்டுரை!!!
சொல்லரசன் கலக்குறாரு!!!!
பணவீக்கம் பற்றிய கட்டுரை அருமையாக எழுதியுள்ளீர்கள். எனக்குள் இருந்த சில டவுட்களும் தீர்ந்தன. நன்றி.
// ஆதவா said...
பெரிய பெரிய விஷயமெல்லாம் பேசறீங்க.... உண்மையிலேயே பணவீக்கம் குறித்த எளிய கட்டுரை.... எந்த சாதரண வாசகரும் நுகர்ந்து படிக்கக்கூடிய கட்டுரை!!!
சொல்லரசன் கலக்குறாரு!!!!//
ஒரு சாமானியனுக்கு ஏற்படும் அனுபவம்தான் இந்த கட்டுரை... சொல்லரசனும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்... ஒவ்வொருவருடைய அனுபவம் காலத்தின் கண்ணாடிகள்... நன்றி ஆதவா....
//ராம்.CM said...
பணவீக்கம் பற்றிய கட்டுரை அருமையாக எழுதியுள்ளீர்கள். எனக்குள் இருந்த சில டவுட்களும் தீர்ந்தன. நன்றி.//
ஒரு சாமானியனின் கட்டுரையில் உங்கள் டவுட் தீர்ந்தது பெரும் மகிழ்ச்சி நண்பரே!!!! உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
:-)
MayVee said...
:-)
வணக்கம் வருகைக்கு நன்றி
Post a Comment