_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, March 23, 2009

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

பணம் பத்தும் செய்யும்....
பணம் பாதாளம் மட்டும் பாயும்....
பணம் என்றால் பிணமும் வாய்பிளக்கும்....

இப்படிதான் என்னைபோல் சாமானியர்கள் பணத்தின் மதிப்பை கணக்கிடுகின்றோம். உண்மையில் பணத்தில் மதிப்புதான் என்ன? அதை யார் நிர்ணயம் செய்கின்றார்கள்? பணத்தின் மதிப்பு கூடுவதும் குறைவதும் எதனால்? பணமதிப்பு கூடுவதினால் என்ன லாபம்? குறைவதனால் என்ன லாபம்? இப்படிதாங்க பல கேள்விகள் என்னிடத்தில்........

பணத்தின் முக்கிய பங்கு வணிப மாற்றம். பொருள்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் அவற்றுக்காக பயன்படும் அலகு பணம். அதாவது பணத்தின் மதிப்பு. பண்டைகாலங்களில் வாணிபம் பண்ட மாற்று முறையில் நடைப்பெற்றது. இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வயல்வெளியில் வேலைச் செய்பவர்களுக்கு கூலியாக அந்த வயலில் விளையும் பயிர்மணிகள்தான் கூலியாக கொடுக்கப்படுகின்றது. கிராமங்களில் கடைகளில் இட்லி, தோசை, பயிறு வகைகள் வாங்க அதற்கு பதில் நெல்மணிகள் கொடுத்து வாங்குவார்கள். வயல்வெளிகளில் நெற்கதிர் அறுவடைச் செய்து எடுத்து செல்லும் பொழுது சில கதிர்கள் கீழே விழுந்துவிடும். அவற்றை என்னை போன்ற சிறுவர்கள் சேர்த்து எடுத்து கடையில் கொடுத்து திண்பட்டம் வாங்கிச் செல்வதும் உண்டு... இதே போலதான் வாணிபம் பண்டமாற்று முறையில் நடைப்பெற்றது....

பண்டமாற்று முறைக்கு பின் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. நாணயத்தின் மதிப்பு அவற்றை செய்யும் உலோகத்தின் மதிப்பை கொண்டு கணக்கிடப்பட்டது. அதன்படி தங்க நாணயம் வெள்ளி, செம்பு, பித்தளை, அலுமிணிய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது.

இதற்கு அடுத்ததாக கடன்நாணயமாக பணம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி தங்கத்தை உருக்கி நாணயம் செய்வதற்கு பதிலாக தங்கத்தை அரசு இருப்பில் வைத்துக்கொண்டு அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு தாளில் உத்தரவாதமாக கொடுக்கப்பட்டதுதான் இன்று நாம் பயன்படுத்தும் பணம்....

இப்பொழுது தெளிவாக புரிகின்றது... ஒரு பணத்தின் மதிப்பு அரசால் இருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பை பொருத்தது என்று. இப்படி பணத்தின் மதிப்பு உலக வங்கியின் பார்வையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தங்கத்தின் இருப்பு குறைவானால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடும். இப்படிதான் அடிப்படை பணமதிப்பு கணக்கிடப்படுகின்றது..

பொதுவான பணமதிப்பை பற்றி புரிந்துக்கொண்டோம். இன்று நாம் பார்க்கும் பணமதிப்பு ஒவ்வொரு நாளும் மேலும் ஒவ்வொரு வினாடியும் ஒரு நாட்டின் பணமதிப்பு ஏற்றம் இறக்கம் காண்பது எதனால்? ஒரு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியின் குறியிடை பொருத்து கணக்கிடப்படுகின்றது. ஒரு நாட்டின் உலக வர்த்தக மையத்தில் நடைபெரும் பாங்கு வர்த்தனையை பொருத்து அன்று மற்றும் அந்த நிமிடத்தில் அந்த நாட்டின் பணமதிப்பு கணக்கிடப்படும்.. இதுதான் ஒவ்வொரு நாளும் நடைபெரும் பணமதிப்பு கோட்பாடு... இந்தியாவின் உலகவர்த்தக மையம் மும்பையில் உள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் நூயார்கில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் எப்படி பணமதிப்பு கணக்கிடப்படுகின்றது என்பதும் புரிந்தது. பணமதிப்பு கூடுதல் குறைதல் எதனால்? ஒருநாட்டின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகமானால், ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மதிப்பும் அதிகமானால் அந்த நாட்டின் பணமதிப்பு கூடும். அதேபோல் ஒருநாட்டின் இறக்குமதி அதிகமாகவும், ஏற்றுமதி குறைவாகவும் இருந்தால் அந்த நாட்டின் பணமதிப்பு குறையும் என்பதும் புரிந்திருக்கும். இதுதான் பொதுவான காரணிகள் மேலும் உற்காரணிகள் பல உள்ளது. அவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள பொருளாதாரம் பற்றிய ஆய்வு தெரிய வேண்டும். நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த அளவு போதும் என்றே தோன்றுகின்றது.. மேலும் வல்லுனர்கள் யாரேனும் சொன்னால் நல்லது.

சிலசமயம் அந்த நாடே வேண்டுமென்றெ பணமதிப்பை குறைக்கும். இதேபோல் இந்தியாவில் நரசிம்மராவ் பிரதமராக இருக்கும் பொழுது இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த பொழுது பண மதிப்பை குறைத்துள்ளனர். நம்முடைய பணமதிப்பு குறைவானால் நாம் விற்கும் பொருளும் குறைந்த விலைக்கு கிடைக்கும் அதனால் ஏற்றுமதி அதிகமாகி அன்னிய செலவாணி அதிகமாகும். இதனால் சிறுக சிறுக நம் பணமதிப்பும் அன்னிய செலவாணியும் அதிகமாகும் என்பதாக கணக்கிடப்பட்டது.... இது எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது தெரியவில்லை. இந்த முறையை முதல்முதலாக பயன்படுத்தியது இந்தியாதான்.....

உலக பொருளாரத்தில் முன்னனியில் உள்ள நாடுகளில் முக்கியமாக அமேரிக்கா ஐரோப்பிய நாடுகள். ஒரு நாட்டின் நிலையான பொருளாதாரம் அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் விவசாயம் என்பது மறுக்க முடியாது. ஏனோ தெரியவில்லை இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தும் விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை.. இதுதான் நாம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றது.. நம் நாட்டின் வளங்களை முறையாக பயன்ப் படுத்தினால் உலகநாட்டிற்கே சோறுபோடமுடியும்.......

இந்த சாமானியனுக்கு தெரிந்தமட்டும் சொல்லியுள்ளேன். இதுவே சரி என்று சொல்லவில்லை. சரி என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரம் படிக்கவில்லை. நண்பகளே உங்களுக்கு தெரிந்தவற்றையும் தவற்றையும் பின்னுட்டதில் கூறவும்...
மீண்டும் உங்களுள்
ஆ.ஞானசேகரன்.....

13 comments:

ஆதவா said...

உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியாதுங்க. அதை லாவகமாக சொல்லும் பாங்குதான் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே!

ஆதி காலத்திலிருந்து, இன்று வரை வந்து, ஏற்ற இறக்கங்களை அழகாக சொல்லிவிட்டு, உங்களை சாமானியன் லிஸ்டில் (அறிவைப் பொறுத்தமட்டில்) சேர்த்து விட்டீர்களே!!!! எந்த ஒரு படைப்பாளி, நல்ல கருத்துக்களை நாசூக்காக சொல்லித் தருகிறாரோ, அவரே உயர்ந்தவர்.... நீங்களும்!!!

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியாதுங்க. அதை லாவகமாக சொல்லும் பாங்குதான் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே!

ஆதி காலத்திலிருந்து, இன்று வரை வந்து, ஏற்ற இறக்கங்களை அழகாக சொல்லிவிட்டு, உங்களை சாமானியன் லிஸ்டில் (அறிவைப் பொறுத்தமட்டில்) சேர்த்து விட்டீர்களே!!!! எந்த ஒரு படைப்பாளி, நல்ல கருத்துக்களை நாசூக்காக சொல்லித் தருகிறாரோ, அவரே உயர்ந்தவர்.... நீங்களும்!!!//

வணக்கம் ஆதவா, எனக்கு தெரிந்தமட்டும் பகிர்ந்து கொண்டேன். இன்னும் நமக்கு தெரியாதது எவ்வளவோ? எல்லாம் தெரிந்துகொள்ளவும் ஆசைதான் அதற்கு காலமும் அறிவும் கைகொடுக்க வேண்டும்.... நன்றி ஆதவா...
நான் தூங்கனும் நாளைப்பார்காலாம்

CorTexT (Old) said...

தங்கத்தின் இருப்பிற்கும் பணத்திற்கும் இருந்த தொடர்பெல்லாம் பண்டமாற்று காலத்திற்கு போய் விட்டது.

உள் நாட்டில், பணத்தின் மதிப்பு அது எவ்வளவு புழகத்தில் உள்ளது என்பதை பொருத்தது (including e-money, i.e, only in records). அரசு அதிகமாக அச்சடித்தாலோ, கள்ள பணத்தாலோ மதிப்பு குறையும்.

ஏற்றுமதி இறக்குமதி பொருத்து மாறுவது பணத்தின் ஒப்பீட்டு (comparative or relative) மதிப்பு. இது நாடுகளிடையே நடைபெரும் வணிகத்தை பாதிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு அதிமானால், இந்தியர்களின் வெளிநாட்டு சந்தையில் வாங்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் இந்திய தயாரிப்பாளர்களின் விற்கும் திறன் குறையும்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...
தங்கத்தின் இருப்பிற்கும் பணத்திற்கும் இருந்த தொடர்பெல்லாம் பண்டமாற்று காலத்திற்கு போய் விட்டது.

உள் நாட்டில், பணத்தின் மதிப்பு அது எவ்வளவு புழகத்தில் உள்ளது என்பதை பொருத்தது (including e-money, i.e, only in records). அரசு அதிகமாக அச்சடித்தாலோ, கள்ள பணத்தாலோ மதிப்பு குறையும்.

ஏற்றுமதி இறக்குமதி பொருத்து மாறுவது பணத்தின் ஒப்பீட்டு (comparative or relative) மதிப்பு. இது நாடுகளிடையே நடைபெரும் வணிகத்தை பாதிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு அதிமானால், இந்தியர்களின் வெளிநாட்டு சந்தையில் வாங்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் இந்திய தயாரிப்பாளர்களின் விற்கும் திறன் குறையும்.//

மேலும் கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றி ராஜ்... இந்திய ரூபாயின் மதிப்பு அதிமானால், இந்தியர்களின் வெளிநாட்டு சந்தையில் வாங்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் இந்திய தயாரிப்பாளர்களின் விற்கும் திறன் குறையும். இதுவும் உண்மைதான்

Unknown said...

நல்ல பதிவு நண்பரே,

ஆ.ஞானசேகரன் said...

//sollarasan said...
நல்ல பதிவு நண்பரே,//

வாங்க சொல்லரசன், உங்கல் வருகைக்கு நன்றி

Anonymous said...

பயன்யுள்ள பதிவு

Anonymous said...

ஆதவா said...
உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியாதுங்க. //
இதுதான் எனது நிலையும்.எப்படி இவ்வளவு பொருளாதாரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஞானசேகரன்?நீங்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவரா?

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...
ஆதவா said...
உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியாதுங்க. //
இதுதான் எனது நிலையும்.எப்படி இவ்வளவு பொருளாதாரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஞானசேகரன்?நீங்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவரா?//

வணக்கம் ஷண்முகப்ரியன்.... உங்கள் வருகையும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி.. நண்பரே! நான் பொருளாதாரம் பற்றி எதுவும் படிக்கவில்லை.. நான் பதிவிலே சொல்லி இருப்பேன்... பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவும் இல்லை... தெரிந்துகொள்ள ஆசைகள் அதனால் உள்ள கேள்வி ஞானம் மட்டுமே,.. விரும்பினால் உங்களால் முடியும்.. முயன்றுதான் பார்க்களாமே,.. உங்களின் மனம் கேள்வி கேட்க துணிந்தால் பதில் உலகில் எங்கிருந்தாலும் வந்தடையும் என்பது, என் அனுபவ கணக்கு.... நான் ஒரு MNC கம்பனியில் இயந்திரப் பணியாளாராய் வேலை செய்கின்றேன்... மேலும் உங்களுள் ஆ. ஞானசேகரன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் ஞானசேகரன் அவர்களே..

உங்களுடைய எல்லா பதிவுகளுமே அருமை.. பயன் உள்ளவையாக உள்ளன.. அத்தோடு உங்கள் தளத்தில் இருக்கும் புத்தகங்களுக்கான லிங்க்கும் நல்ல முயற்சி.. நான் ஏற்கனவே ஓரிரு முறை உங்கள் தளத்துக்கு வந்து இருக்கிறேன்.. நண்பர் சொல்லரசன் தான் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வார்.. நன்று.. தொடருங்கள்.. தொடருகிறேன்..

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அன்பின் ஞானசேகரன் அவர்களே..

உங்களுடைய எல்லா பதிவுகளுமே அருமை.. பயன் உள்ளவையாக உள்ளன.. அத்தோடு உங்கள் தளத்தில் இருக்கும் புத்தகங்களுக்கான லிங்க்கும் நல்ல முயற்சி.. நான் ஏற்கனவே ஓரிரு முறை உங்கள் தளத்துக்கு வந்து இருக்கிறேன்.. நண்பர் சொல்லரசன் தான் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வார்.. நன்று.. தொடருங்கள்.. தொடருகிறேன்..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்... உங்களின் வருகையும் பாராட்டும் என்னை மகிழ்ச்சியடைய செய்கின்றது.. மேலும் இன்னும் நல்ல செய்திகளை கொடுக்கவேண்டுமே என்ற பயமும் வருகின்றது... முடிந்தமட்டும் என வாழ்வியலில் கண்ட நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்வேன் .. உங்களின் எண்ணங்களையும் வாங்கிகொள்வேன்..... நன்றி கோடிகள்

ராம்.CM said...

நல்ல பதிவு. தகவல் அருமை . நல்லாயிருந்தது. வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
நல்ல பதிவு. தகவல் அருமை . நல்லாயிருந்தது. வாழ்த்துக்கள்.//

நன்றி ராம்... உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி...