_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, March 26, 2009

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்

வணக்கம் நண்பர்களே!.. ஏதாவது பதிவிலே எழுதலாம் என்றால் ஒன்றும் அழுத்தம் வரவில்லை.. அப்படியே நட்புகளின் பதிவை பார்வையிட்டுவிட்டு (படித்துவிட்டுதாங்க) அப்படியே கொஞ்சம் செய்திதாளிகளிலும் கவணித்தேன்... அமேரிக்கா அதிபரின் வேண்டுகோள் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று வங்கிகளுக்கு ஒபாமா கண்டிப்பு வரவேக்க வேண்டியதாக இருக்கின்றது. நம்ம பதிவின் சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்... அழுத்தமும் வேண்டுகோள்களும் தெரிகின்றது. ஒபாமாவின் வேகமும் பொறுப்பான செயல்களும் உலகசந்தை உந்துதல் பெற்றுவிடும் நம்பிக்கை தெரிய ஆரம்பிக்கின்றது. அமேரிக்காவின் செயல்பாடுகளால் இந்தியாவின் பங்கு சந்தையும் சிலநாட்களாக புத்துயிர்பெற்று வருகின்றது. வேகம் மெதுவாக இருந்தாலும் ஆரேக்கியமான உயர்வாக தெரிகின்றது என்று வல்லுனர்கள் சொல்கின்றனர்....

மன்னிக்கனும் நண்பர்களே காதலையும் காமடி அரசியலைமே சொல்லி இளஞர்களை மந்தப்படுத்த வேண்டாம் என்றுதான் எதார்தமான அலசல்களும் வேண்டும் என்று சிதறகளையும் உங்களிடம் கொண்டு வருகின்றேன்.. பங்குகள், வர்த்தகம் என்று புரியாது போல இருந்தாலும் நாம் காலந்தோசித்தால் புரிதல் வரும் என்ற நம்பிக்கையுள்ளது... வளர்ந்துவரும் வர்த்தகம் பற்றி சேதுராமன் சாத்தப்பன் கூற்றையும் கவணியுங்கள்... அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் சாத்தப்பன் - (புள்ளிகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சும்மா படித்துவிட்டு போங்கள் சமயம் வரும்போது கன்டிப்பாக நமக்கு உதவும்)

சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான். ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க, பேக்கேஜ் மேல் பேக்கேஜாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.அது, அங்கு சந்தைகளை மேலே கொண்டு சென்றன. அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 457 புள்ளிகள் மேலே சென்றது.நேற்று முன்தினம் சந்தைகள் மேலேயே தான் துவங்கின. பின்னர், மேலும், கீழுமாகத் தான் இருந்தது. முடிவாக, 47 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. டாடாவின் நானோவை பார்த்த அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டியதும் சந்தைக்கு காலையில் ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். ஆனால், அது பின்னர் நீடிக்கவில்லை.நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. பின் மேலே சென்றது. ஒபாமா விடுத்த அறிக்கையாலும் சந்தைகள் மேலே சென்றன. இருந்தாலும், சந்தைகள் நேற்றைய தினம் மேலும், கீழும் இருந்தது. இதற்கு வேறு ஒரு காரணம் என்னவென்றால், இன்று முடிவுபெற இருக்கும் டிரைவேட்டிவ் சந்தைகளின் முடிவுகள் தான்.மெட்டல், கட்டுமானத்துறை, வங்கித்துறை ஆகியவை மேலே சென்றன. டி.எல்.எப்., கட்டுமானக் கம்பெனியின் நான்கு புதிய மால்கள், தீபாவளிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. கச்சா எண்ணெய் விலை கூடிவருவதால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் மேலே சென்றன.இறுதியாக மும்பை பங்குச் சந்தை 196 புள்ளிகள் கூடி 9,667 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 2,984 புள்ளிகளுடனும் முடிந்தது. கடந்த ஒன்றரை மாதத்தின் அதிகபட்சத்திற்கு சென்றுள்ளது.டாலர் மதிப்பு: டாலர் மதிப்பு சிறிது சிறிதாக வருங்காலங்களில் குறையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பெரிய அளவு குறைவு உடனடியாக இல்லாவிடினும் சிறிது சிறிதாக இருக்கலாம். குறைவதற்கு இன்னொரு காரணம், ஏற்றுமதியாளர்கள் பயத்தில் சேமித்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் விற்று ரூபாய் ஆக்கியது தான்.டாலர் மதிப்பு கூடும் போது எல்லாவற்றையும் டாலர் அக்கவுன்டில் வைத்திருந்தனர். மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் உடனடியாக விற்றுக் காசாக்குவோம் (ரூபாயாக்குவோம்) என்ற நினைப்புத் தான் பலருக்கு.தங்கம் தங்கமாகவே உறுதியாக இருக்கிறது. 15,000 அளவிலேயே இருக்கிறது. பங்குச் சந்தை மேலே செல்வதாலும், கச்சா எண்ணெய் மேலே செல்வதாலும் தங்கத்தில் இருக்கும் முதலீடுகள் சிறிது மாறவாய்ப்புகள் உள்ளன.ஒரு காலத்தில் நிறுவனங்களுக்கு தலைவராவது என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருந்தது. ஆனால், சத்யம் விவகாரத்திற்கு பின், நிறைய நிறுவனங்களின் தலைவர்கள் விலகி வருகின்றனர். விலகுபவர்களிலும் 90 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி விலகுகின்றனர். 200 பேர் வரை சமீபத்தில் விலகி உள்ளனர்.கடந்த 9ம் தேதி அன்று சந்தை கடந்த மூன்று ஆண்டின் கீழ் நிலையை எட்டியிருந்தது. அதாவது 8,160 புள்ளிகளை. தற்போது 9,667 புள்ளிகளை எட்டியுள்ளது. 17 நாட்களில் 18 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. அது தான் பங்குச் சந்தை. சந்தையை சிறிது நாட்களாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் எல்லாம் மறுபடி பார்க்கத் துவங்கி விட்டனர், பேசத் துவங்கிவிட்டனர். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா... என்று சொல்லலாம்.



இந்த வாரத்தில் அழுத்தம் அதிகமாகவே செய்திகளில் தெரிகின்றது. இந்தியாவின் பணவீக்கம் படுவேகமாக குறைந்துள்ளது. இதனால் பலருக்கு லாபமும் சிலருக்கு படும்பாதிப்பும் உண்டாகியுள்ளதும் செய்திகளில் அழுத்தம் புரிகின்றது... பணவீக்கம் மேலும் குறைந்து 0.27 சதவீதமாகியது மேலும் பணவீக்கம் பூச்சியமாக வாய்புள்ளதாக கூறுகின்றனர். பணவீக்கம் மேலும் குறைந்திருப்பதை அடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நண்பர்களே! ரொம்ப அலுப்படைய செய்கின்றேன் மன்னிக்கவும்... நாட்டின் தூண்கள் நாம்தானே... புரிந்துகொள்ளலாமே என்றுதான்,. மற்றும் ஒரு வேடிக்கை நம்ம பதிவின் மிக பெரிய அழுத்தம் நான் வேடிக்கையாக கூறியது... இன்றைய செய்தி விலை வீழ்ச்சியால் ஆடுகளுக்கு தீவனமாகும் தக்காளி

பாலமேடு : தக்காளி விலை கடும் வீழ்ச்சியானதால் பாலமேடு பகுதியில் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி தற்போது ரூ. 2க்கு விற்கப்படுகிறது. கூலி ஆட்களுக்கு சம்பளம் தரக்கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து பாலமேடு விவசாயி ராமன் கூறியதாவது, கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ ரூ. 2க்கு விற்கிறது.மதுரை மார்க்கெட் கொண்டு சென்றால் வியாபாரிக்கு கையில் இருந்து கமிஷன் கொடுத்துவிட்டு வரும் நிலை உள்ளது. ஆனையூர், மதுரை உழவர் சந்தை சென்றால் அங்குள்ள வியாபாரிகள் விவசாயிகளுக்கு இடம் தர மறுத்து விரட்டுகின்றனர். இதனால் சந்தைக்கு வெளியில் ரோட்டு ஓரங்களில் விற்க வேண்டியுள்ளது. கூடை ஒன்றுக்கு பறிப்பு கூலி, கூடை செலவு, பஸ்சில் "லக்கேஜ்' என 20 செலவாகிறது. ஆனால் கிடைப்பதோ ரூ. 16 மட்டுமே. இதனால் செடியில் பழுத்துள்ள தக்காளி பழங்களை ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகிறோம். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் கூறினார்.
இப்படி பல சிதறல்கள் என் கண்ணில் பட்டன இதை உங்களுள் பகிர்வதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி நம்மால் ஒரு வளர்ச்சியை கொடுக்க முடியும் நம்பிக்கை உருவாகும்.... சென்ற பதிவில் நண்பர் சொல்லரசன் பின்னூட்டத்தில் கூறியவையும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. (போன முறை தக்காளி போட்ட ராமசாமிக்கு நல்ல லாபம் என்று குப்புசாமியும்,கந்தசாமியும்,முருகுசாமியும்,சிவசாமியும்,பத்து கிலோ தேவைபடும் சந்தைக்குக்கு ஜம்பது கிலோ தக்காளி கொண்டுபோன அவர்களுக்கு திண்டாட்டம்,வாங்குபவருக்கு கொண்டாட்டம்.அதற்க்கு பதில் ஆளுக்கு இரண்டு கிலோ தக்காளி கொண்டுபோனால் திண்டாட்டமும் இல்லை கொண்டாட்டமும் இல்லை.இதுதானுங்க சமச்சீர் நடக்குமா இந்தியாவில்.) நன்றி சொல்லரசன் .
கருப்பு பணத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் வந்தபொழுது சொல்லரசன் பதிவு நன்றக உள்ளது..... அதை பார்வைக்கு கொடுக்க
சரி சரி... பதிவு நீண்டுகொண்டே போகுது மன்னிக்கவும்.... அடுத்த முறை பல்சுவையாக பார்க்கலாம்.....
அன்புடன்..
ஆ.ஞானசேகரன்

23 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பங்கு வணிகம், பொருளாதாரம், ஒப்பீடு
பிச்சு ஒதருறியலே!

ஆ.ஞானசேகரன் said...

வாங்க ஜோதிபாரதி... கொஞ்சம் தெரிச்சுகொள்ளலாம் என்று....

ஆ.ஞானசேகரன் said...

ஜோதிபாரதி அரசியல் அலசல் முன்னாடி நாமெல்லாம் சுசுபிதானே

Tech Shankar said...

உங்கள் பதிவுகள் நல்லா இருக்கு..

//புள்ளிகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சும்மா படித்துவிட்டு போங்கள் சமயம் வரும்போது கன்டிப்பாக நமக்கு உதவும்

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நெஞ்சம் said...
உங்கள் பதிவுகள் நல்லா இருக்கு..///

நன்றி தமிழ்நெஞ்சம்... உங்களின் வருகை மகிழ்ச்சியடைய செய்தது....

சொல்லரசன் said...

// பங்குகள், வர்த்தகம் என்று புரியாது போல இருந்தாலும் நாம் காலந்தோசித்தால் புரிதல் வரும் என்ற நம்பிக்கையுள்ளது.//

நாட்டின் பொருளாதார காரணிகள் இவை.பாமரனுக்கும் இது புரியவேண்டும் என்ற உங்கள் முய‌ற்ச்சிக்கு பாராட்டுகள்.

ஆ.ஞானசேகரன் said...

//நாட்டின் பொருளாதார காரணிகள் இவை.பாமரனுக்கும் இது புரியவேண்டும் என்ற உங்கள் முய‌ற்ச்சிக்கு பாராட்டுகள்.//

வாங்க சொல்லரசன்...
உங்களின் புரிதலுக்கும் பாரட்டுகளுக்கும் நன்றிபா...

சொல்லரசன் said...

//மன்னிக்கனும் நண்பர்களே காதலையும் காமடி அரசியலைமே சொல்லி இளஞர்களை மந்தப்படுத்த வேண்டாம் என்றுதான் எதார்தமான அலசல்களும் வேண்டும் என்று சிதறகளையும் உங்களிடம் கொண்டு வருகின்றேன்.//

இதற்கு பல பதிவர் இருக்கிறார்கள்.உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கள் நம்ம‌ கொள்கைபடி.

சொல்லரசன் said...

/கருப்பு பணத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் வந்தபொழுது சொல்லரசன் பதிவு நன்றக உள்ளது//

ரொம்ப நன்றிங்க (நம்ம பதிவவை நல்லயிருக்குன் சொன்னதற்குங்கோ)

ஆதவா said...

நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?

சொல்லரசன் said...

ஆதவா said..
தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?

ஏன்? இல்லை இருக்கிறது.

Anonymous said...

நல்லா இருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

/// சொல்லரசன் said...
//மன்னிக்கனும் நண்பர்களே காதலையும் காமடி அரசியலைமே சொல்லி இளஞர்களை மந்தப்படுத்த வேண்டாம் என்றுதான் எதார்தமான அலசல்களும் வேண்டும் என்று சிதறகளையும் உங்களிடம் கொண்டு வருகின்றேன்.//

இதற்கு பல பதிவர் இருக்கிறார்கள்.உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கள் நம்ம‌ கொள்கைபடி.
///

நல்லது ஆதவா, நம்முடைய ஞானம் இடம் கொடுத்தால் நல்ல விடயங்களை அலசலாம் வாங்க... வருங்கால சந்னதிக்கு நல்ல விடயங்களை விட்டு செல்லலாம்...

ஆ.ஞானசேகரன் said...

///சொல்லரசன் said...
/கருப்பு பணத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் வந்தபொழுது சொல்லரசன் பதிவு நன்றக உள்ளது//

ரொம்ப நன்றிங்க (நம்ம பதிவவை நல்லயிருக்குன் சொன்னதற்குங்கோ)///

இன்னும் எழுதனுங்கோ சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...
நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?///


வாங்க ஆதவா,..
தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?

அய்யோஓஓஒ இப்படி கேள்வி எல்லாம் கேட்டீங்கனா பள்ளிகுடமே வரமாட்டேன்.... சும்மா மப்புல ஒளரனா கேள்வி எல்லாம் கேக்குறீங்க... வேண்டாம் சாமியோ!

நண்பர் சொல்லரசன் வாய்புள்ளதாக சொல்லியுள்ளார்

தங்கள் விலை ஏற்றத்திற்கான காரணம் கொரியா,சீனா பொன்ற நாடுகளின் பயன்பாடு அதிகம் மற்றும் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கதால் முதலீட்டார்கள் தங்கத்தில் முதலீடு அதிகம் பன்னியதாலும் ... பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டால் இறங்க வாய்புள்ளது. ஆனால் சொற்பமாகதான் இறங்க வாய்புள்ளதாக தெரிகின்றது. நன்றி ஆதவா, நன்றி சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

//Kaakam said...
நல்லா இருக்கு
// நன்றி நண்பரே

CorTexT (Old) said...

ஒரு பொருளின் விலை அது எந்த அளவு அவசியமானது என்பதை பொருத்தது இல்லை; அது அதன் கிராக்கியை பொருத்தது (Supply-Demand). இது தான் சிறிதே பயன்படும் தங்கத்தின் விலைக்கும், வாழ்வின் அவசிமான தண்ணீரின் விலைக்கும் உள்ள வேறுபாடு.

தங்கத்தின் கிராக்கி அதிகமானதால், அதை எடுக்க பல இயற்கை சீரழிவுகள் நடக்கின்றன. உலகின் காலநிலையை கட்டி காக்கும், அமேஸான் காடுகளின் அழிவும் அதில் ஒன்று. இதில் காமடி என்னவென்றால், இந்த உலகத்தை காக்க அந்நாட்டில் உள்ளோர், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை குறைத்து கொள்ள வேண்டுமாம்.

எனது எண்ணம், தங்கம் வைரம் போன்ற வெட்டி பொருள்களை சேர்க்காதீர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாருக்கும் புரிய வேண்டும் என்ற வகையில் நல்ல பதிவு நண்பா.. ஒரு சின்ன வேண்டுகோள்.. இதில் உள்ள மூன்று விஷயங்களுமே முக்கியமானவை.. இவற்றை தனித்தனி பதிவாக போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நண்பா..

உமா said...

பங்கு சந்தை பொருளாதாரம் பற்றிய அலசல் நன்றாகவே உள்ளது.

அமெரிக்காவில் ஒபாமாவின் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக இல்லை. பாக்கேஜ் மட்டும் பொருளாதாரத்தை திருப்பாது. குறுகிய கால எழுச்சியாகத்தான் அது இருக்கும்.இன்னும் கூட அங்கே வேலையிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.முதலில் வேலை வாய்ப்பை அதிகரித்து வாங்கும் சக்தியை பெருக்க வேண்டும்.

இந்தியாவின் சந்தையும் உலக நடப்பை பெரிதும் சார்ந்துள்ளது. போன சில நாட்களில் சராசரியாக 30 % ஏறியுள்ளது ஆனாலும் வீழும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.bse ல் 10000 பாயிண்ட் என்பதும்nse ல் 3100 என்பதும் பெரிய அளவில் தடைகளாக இருக்கும். தாண்டுவது எளிதாக இருக்காது.கூடவே பணவீக்கம் இப்படிக்குறைவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. இப்போது அதிகமாக பொருள் இருக்க வாங்குவோர் இல்லை என்பதால் வர வர உற்பத்தி குறைக்கப்படும். வேலைஇழப்பு நடக்கும். இது சக்கரமாக தொடர்ந்தால் மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் election வரை எந்த பொருளாதார நடவடிக்கையும் சாத்தியமில்லை என்பதால் recovery சற்று கடினம் தான். அரசு நேரடியாக கட்டுமானம் [infrastructure] போன்றத்துறைகளில் செலவிட்டால்தான் வீழ்ச்சியை தடுக்க முடியும்.

தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.ஆனால் சிறிதுகாலம் ஆகும். பங்குசந்தையில் இலாபமில்லாத்தால் தங்கத்தில் அதிகமாக விளையாடுகிறார்கள்.அதனால் தான் விலையேற்றம்.பங்குச்சந்தை திரும்பினால் இதிலிருந்து பணம் சந்தைக்கு போய்விடும். அப்போது வெகுவாக குறையும் சாத்தியமிருக்கு.தங்கத்தில் சேமிப்பதும் அப்போது குறையலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
ஒரு பொருளின் விலை அது எந்த அளவு அவசியமானது என்பதை பொருத்தது இல்லை; அது அதன் கிராக்கியை பொருத்தது (Supply-Demand). இது தான் சிறிதே பயன்படும் தங்கத்தின் விலைக்கும், வாழ்வின் அவசிமான தண்ணீரின் விலைக்கும் உள்ள வேறுபாடு.//

நல்லது ராஜ். உங்களின் கருத்தையும் ஏற்கின்றேன்... demand என்பதும் முக்கியமான ஒன்று. தங்கத்தின் மோகம்தான் அதனுடைய demand அதிக பயன் இல்லா பொருளுக்கு அபாரமான மோகம் மனிதகளாளே உருவாக்கிக்கொண்டதுதான்..

//எனது எண்ணம், தங்கம் வைரம் போன்ற வெட்டி பொருள்களை சேர்க்காதீர்.//
எனது எண்ணங்களும் அதில் உள்ளது, ஏன் இந்த வெட்டியான மோக பொருளை வெட்டி சேர்க்கப்படுகின்றது என்பதும் புரியவில்லை... ஆனால் ஒன்று இதை தடாலடியாக மாற்றமுடியாத ஒன்று.. உலகின் ஒரு பெரிய பேரழிவால்தான் மாற்றம் வரும்(மன்னிக்கவும் பேரழிவால்தான் மனிதனின் சுயநலம் அழியும்)

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாருக்கும் புரிய வேண்டும் என்ற வகையில் நல்ல பதிவு நண்பா.. ஒரு சின்ன வேண்டுகோள்.. இதில் உள்ள மூன்று விஷயங்களுமே முக்கியமானவை.. இவற்றை தனித்தனி பதிவாக போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நண்பா..//

நன்றி கார்த்திக் பாண்டியன் கேள்வி ஞானத்தில் ஓரளவிற்குதான் என்னால் விளக்கமுடியும்.. அதனால்தான் ஒரு கசமுச பதிவு.... முறையாக படித்து புரிந்தவர்கள் எளிய தமிழில் எளிய நடையில் புரியவைக்க வேண்டுகின்றேன்..... பல வர்த்தக சார்பு பதிவர்கள் குறியீட்டு எண்களை சொல்லி படிக்கவிடாமல் செய்துவிடுகின்றார்கள், நம்மை போன்றவர்களுக்கு புரியமாட்டெங்குது... எனினும் நாம் கலந்தோசித்தால் முடியும் என்பது இங்கு தெளிவாகின்றது.....

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...
பங்கு சந்தை பொருளாதாரம் பற்றிய அலசல் நன்றாகவே உள்ளது. //

நன்றி உமா.....


///அமெரிக்காவில் ஒபாமாவின் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக இல்லை. பாக்கேஜ் மட்டும் பொருளாதாரத்தை திருப்பாது. குறுகிய கால எழுச்சியாகத்தான் அது இருக்கும்.///

உங்கள் கூற்று 100% உண்மை இன்னும் செய்யவேண்டியது நிறைய உள்ளது.. மேலும் இதில் முக்கியமாக எல்லோருக்கும் பொருப்பு வேண்டும் என்பது முக்கியம்..

என்ன கொடுமைனா.. நம்மை போன்ற சாமானியர்களை நசுக்கி வாங்கும் திரனை இழக்க செய்ததுடன்... இப்படி இழந்த பொருளாதாரத்தை சாமானியனின் உழைப்பை கருணையாக விட்டுக்கொடுத்து பொருளியலை சமன் படுத்தவேண்டுமாம்... சுரண்டி சேர்த்தவர்கள் பாதுகாக்கப்படுமாம்...

ஆ.ஞானசேகரன் said...

//உமா said... தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.ஆனால் சிறிதுகாலம் ஆகும். பங்குசந்தையில் இலாபமில்லாத்தால் தங்கத்தில் அதிகமாக விளையாடுகிறார்கள்.அதனால் தான் விலையேற்றம்.பங்குச்சந்தை திரும்பினால் இதிலிருந்து பணம் சந்தைக்கு போய்விடும். அப்போது வெகுவாக குறையும் சாத்தியமிருக்கு.தங்கத்தில் சேமிப்பதும் அப்போது குறையலாம்.//


உங்களின் அலசல்களும் நன்றாகவே உள்ளது. உங்களின் அலசல்களை சாமானியர்களுக்கு புரியும் வகையில் எழுதுங்களேன்... நன்றி உமா