_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, March 29, 2009

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் ஒருவர், அவர் படித்த கதை ஒன்றை என்னோடு பகிந்துக்கொண்டார். அந்த ஊரில் ஒரு மகான் யோகாவில் தேர்ந்தவர், அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பவர். பலர் அவரிடம் வந்து எனக்கு யோகா சொல்லிதாருங்கள் என்று கேட்டுப்பார்த்தனர். அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒதுங்கிவிடுவார். அந்த ஊரில் ஒருவன் எப்படியாவது அவரிடம் யோகா கற்றுகொண்டு விடலாம் என்று தீவிரமானான். அவரிடம் சென்று சில நாட்கள் உங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக் கொடுங்கள் என்று கேட்டான். அவரும் சிறிது யோசனைக்கு பிறகு சரி என்று ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்த மகான் செய்யும் யோகாவை கற்றுகொண்டு விடலாம் என்பதுதான் அவன் திட்டம். அந்த மகான் விடியற்காலையில் எழுந்தார் காலை கடன்களை எல்லாம் இனிதே முடித்தார், பின் சிறிது நீராகாரம் அறிந்திவிட்டு தன்னுடைய வயல்வெளிக்கு வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு மதியம் உணவிற்கு வீட்டுக்கு வந்தார்; நன்றாக சாப்பிட்டார் பின் சிறிது தூக்கத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சென்றார்; மலையில் சிறிது தூரம் நடை பின் சாப்பாடு அதற்கு பின் நன்றாக தூங்கினார்; இதேபோல் மறுநாளும் தொடர்ந்தது. யோகா கற்றுகொள்ள வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இவர் ஒன்றும் யோகா செய்யவில்லையே பின் எதற்காக ஊர்மக்கள் இவரை யோகாவில் சிறந்தவர் என்று கூறுகின்றனர். ஆழ்ந்த குழப்பத்திற்கு பின் அவரிடமே கேட்டான்.

அதற்கு அவர் சிறிது புன்முருவலுடன், யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும். மனம்பொருந்தி எந்த காரியம் செய்தாலும் மனமும் செய்யும் காரியமும் வெற்றியடையும். நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன். சாப்பிடுவதானாலும் சரி; வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்... (கதை பகிர்ந்த நண்பர் குப்புசாமிக்கு நன்றி).

யோகாப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழ் உள்ள சுட்டியை சுட்டவும்


29 comments:

RAMYA said...

அருமையா இருந்திச்சி ஞானசேகரன்.

ஒவ்வொரு எழுத்துக்களும் உண்மை என்ற அரிதாரம் பூசிக் கொண்டு உள்ளது

உங்கள் நண்பர் யதார்த்தத்தை அருமையா புரியவைத்திருக்கிறார்.

உண்மையும், யதார்த்தமும் போட்டி போட்டு கொண்டு ரசிக்க வைத்துள்ளது

அருமை, இது போல் பல நல்ல பதிவுகளைத்தர எனது வாழ்த்துக்கள்!!

RAMYA said...

//
வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்...
//

இந்த பதிவின் உயிரோட்டம் இந்த வரிகளில் கண்டேன் ஞானசேகரன்
அருமை அருமை!!

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...
அருமையா இருந்திச்சி ஞானசேகரன்.

ஒவ்வொரு எழுத்துக்களும் உண்மை என்ற அரிதாரம் பூசிக் கொண்டு உள்ளது//

நன்றி ரம்யா...

ஆ.ஞானசேகரன் said...

/// RAMYA said...
//
வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்...
//

இந்த பதிவின் உயிரோட்டம் இந்த வரிகளில் கண்டேன் ஞானசேகரன்
அருமை அருமை!!///

நீங்களும் மனம் பொருந்தி படித்துள்ளீர்கள்... நன்றி ரம்யா..

கார்த்திகைப் பாண்டியன் said...

யதார்த்தம் என்பதுதான் இந்த கதையின் அடிநாதம் நண்பா.. எல்லாருமே இதுபோல் நம் வேலைகளை ஒன்றி செய்து விட்டால் பிரச்சினையே இல்லை.. நல்ல பதிவு...

ஆ.ஞானசேகரன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
யதார்த்தம் என்பதுதான் இந்த கதையின் அடிநாதம் நண்பா.. எல்லாருமே இதுபோல் நம் வேலைகளை ஒன்றி செய்து விட்டால் பிரச்சினையே இல்லை.. நல்ல பதிவு...

உண்மைதான் நண்பா.... நன்றி

ஆதவா said...

இஷ்டப்ப்பட்டு செய்யற வேலை எப்பொழுதுமே இனிமையா இருக்க்கும் என்பார்கள். அதை இக்கதையில் காண்கிறேன்... நல்ல பயனுள்ள சிறுவர் கதை...

அலசல்களுக்கு மத்தியில் அமைதியாக இப்பதிவுகள் வருவதும் ஆனந்தமே!

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
இஷ்டப்ப்பட்டு செய்யற வேலை எப்பொழுதுமே இனிமையா இருக்க்கும் என்பார்கள். அதை இக்கதையில் காண்கிறேன்... நல்ல பயனுள்ள சிறுவர் கதை...

அலசல்களுக்கு மத்தியில் அமைதியாக இப்பதிவுகள் வருவதும் ஆனந்தமே!//

நன்றி ஆதவா..

ராம்.CM said...

யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்.///

அப்பட்டமான உண்மை. நல்லாயிருந்தது.

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...
யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்.///

அப்பட்டமான உண்மை. நல்லாயிருந்தது.//

நன்றி ராம்....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல சிந்தனை ஞானம்!

ஆ.ஞானசேகரன் said...

//ஜோதிபாரதி said...
நல்ல சிந்தனை ஞானம்//

வணக்கம் ஜொதிபாரதி,... பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றிங்கோ...

உமா said...

யோகா ரொம்ப நல்லவிஷயம் தான். இதனால் பல வியாதிகள் சர்க்கரை நோய் உள்பட எதுவும் நம்மை அணுகாது. சூரிய நமஸ்காரத்தை போன்று சிறந்தது எதுவுமேயில்லை. ஆனல் முறையாக ஒரு முறை ஆசானிடம் கற்ற பின்னரே நாமாக செய்யவேண்டும். சின்ன சின்ன தவறுகள் நம்மை அறியாமலே செய்வோம். you tube ல பார்த்துட்டு எல்லாம் செய்யக்கூடாது.
நல்ல கருத்துக்களை பகிர்வது வரவேற்கத்தக்கது.
வாழ்த்துக்கள்.

+Ve அந்தோணி முத்து said...

"வாவ்..! கலக்கிட்டீங்க பாஸ்..!

ரொம்ப உபயோகமான கதை.

வாழ்த்துக்கள்..!

ஆ.ஞானசேகரன் said...

//யோகா ரொம்ப நல்லவிஷயம் தான். இதனால் பல வியாதிகள் சர்க்கரை நோய் உள்பட எதுவும் நம்மை அணுகாது. சூரிய நமஸ்காரத்தை போன்று சிறந்தது எதுவுமேயில்லை. ஆனல் முறையாக ஒரு முறை ஆசானிடம் கற்ற பின்னரே நாமாக செய்யவேண்டும். சின்ன சின்ன தவறுகள் நம்மை அறியாமலே செய்வோம். you tube ல பார்த்துட்டு எல்லாம் செய்யக்கூடாது.
நல்ல கருத்துக்களை பகிர்வது வரவேற்கத்தக்கது.
வாழ்த்துக்கள்//

கருத்து பகிர்விக்கு நன்றி உமா...

ஆ.ஞானசேகரன் said...

// அந்தோணி முத்து said...
"வாவ்..! கலக்கிட்டீங்க பாஸ்..!

ரொம்ப உபயோகமான கதை.

வாழ்த்துக்கள்..!//

வணக்கம் சகோதரே, உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி....

Suresh said...

//யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்//
இத ஒரு ஒருவாரத்துக்கு முன்னாடி தெரிஞ்சு இருந்த யோகக்கு ஒரு ஆயிரம் ருபாய் செலவாச்சி இருக்க மாட்டேன் :-) ஹி ஹி

புதியவன் said...

////யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்////

அருமையான கதை...யோக பற்றிய மற்றொரு கண்ணோட்டம்...நல்ல பதிவு ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

//Suresh said...
//யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்//
இத ஒரு ஒருவாரத்துக்கு முன்னாடி தெரிஞ்சு இருந்த யோகக்கு ஒரு ஆயிரம் ருபாய் செலவாச்சி இருக்க மாட்டேன் :-) ஹி ஹி
//

முதல் முதலா வந்திருகிங்க வணக்கம் சுரேஷ் யோகா முறைப்படி கற்றுகொள்தல் நல்லதுதான் அதையும் பொருந்தி செய்யுங்கள்... வாழ்த்துகள் சுரெஷ், நீங்கள் கற்றுக்கொண்டதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.. நன்றியும் வாழ்த்துகளும் அன்புடன் ஆ.ஞானசெகரன்

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...
////யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும்////

அருமையான கதை...யோக பற்றிய மற்றொரு கண்ணோட்டம்...நல்ல பதிவு ஞானசேகரன்//

வாங்க புதியவன், உங்களின் வருகைக்கு மகிழ்ச்சி... மிக்க நன்றி

சொல்லரசன் said...

//நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன்.//

இப்படி அனைவருக்கும் மனம்பொருந்தி செயல்பட்டால் நாமும் நலம் பெற்று,
உலகத்தையம் வளம் பெற செய்யலாம்.

அருமையான பதிவு நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
//நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன்.//

இப்படி அனைவருக்கும் மனம்பொருந்தி செயல்பட்டால் நாமும் நலம் பெற்று,
உலகத்தையம் வளம் பெற செய்யலாம்.

அருமையான பதிவு நண்பரே//

சொல்லரசன் நீங்கள் மனம்பொருந்தி உலகத்தை வளம் பெற ஆசைப்படுகின்றீகள்... நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்... நன்றி சொல்லரசன்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் ஞானசேகரன்.நீங்கள் தஞ்சைப் பகுதியைச்சார்ந்தவர் என்பதைக் கண்டு
மிக்க மகிழ்ச்சியடைந்தேன் .எந்த ஊர் நீங்கள்.உங்கள் பக்கத்தை இப்பொழுதுதான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
கல்பனாசேக்கிழார்.
வாழ்க தமிழ்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் ஞானசேகரன்.நீங்கள் தஞ்சைப் பகுதியைச்சார்ந்தவர் என்பதைக் கண்டு
மிக்க மகிழ்ச்சியடைந்தேன் .எந்த ஊர் நீங்கள்.உங்கள் பக்கத்தை இப்பொழுதுதான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
அன்புடன்
கல்பனாசேக்கிழார்.
வாழ்க தமிழ்.

ஆ.ஞானசேகரன் said...

//முனைவர் சே.கல்பனா said...
வணக்கம் ஞானசேகரன்.நீங்கள் தஞ்சைப் பகுதியைச்சார்ந்தவர் என்பதைக் கண்டு
மிக்க மகிழ்ச்சியடைந்தேன் .எந்த ஊர் நீங்கள்.உங்கள் பக்கத்தை இப்பொழுதுதான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
அன்புடன்
கல்பனாசேக்கிழார்.
வாழ்க தமிழ்.//

வணக்கம் முனைவர் சே.கல்பனா அவர்களே.. உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி.... நான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி நவலூர் என்ற கிராமம்.. பணியின் காரணமாக திருச்சியில் குடியிருப்பு தற்பொழுது சிங்கையில்... உங்களின் தமிழ் பணிக்கு என் வணக்கங்கள்..

ஹேமா said...

ஞானசேகரன்,எங்களைவிட வெளிநாடுக்காரர்கள் யோகாவில் இப்போ கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.ஆயுள் வேத வைத்தியமும் கூட.

நான் நிறைய நாட்களாக யோகா செய்ய நினைக்கிறேன் முடியவில்லை.காரணம் மனம் அமைதியாய் இல்லை.நான் என்ன செய்ய..!

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...
ஞானசேகரன்,எங்களைவிட வெளிநாடுக்காரர்கள் யோகாவில் இப்போ கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.ஆயுள் வேத வைத்தியமும் கூட.

நான் நிறைய நாட்களாக யோகா செய்ய நினைக்கிறேன் முடியவில்லை.காரணம் மனம் அமைதியாய் இல்லை.நான் என்ன செய்ய..!//

வணக்கம் ஹேமா, மனசோட அமைதி எங்கேயும் இல்லைங்க நம்மகிட்டதான், நம்ம கண்ணெதிரேதான்... நாமதான் அத கண்டுக்காம இருக்கோம்.. அமைதியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து செய்யும் பயிற்ச்சில் இருக்குங்கோ எந்த கடையிலும் இல்லைங்க.. ஹிஹிஹிஹி நான் அப்படிதான் நினைக்கின்றேன் ஹேமா...

ஆயுள் வேத வைத்தியமும் கூட.
நல்ல பலனை கொடுக்கின்றது.. பலநாள் இடுப்பு வலி (slip dick) என்னை காப்பாற்றி வருகின்றது இந்த ஆயுர்வேதா வைத்தியம்...

உமா said...

இந்த பதில் தோழி ஹேமாவிற்கு.

//நான் நிறைய நாட்களாக யோகா செய்ய நினைக்கிறேன் முடியவில்லை.காரணம் மனம் அமைதியாய் இல்லை.நான் என்ன செய்ய..!//

மனம் அமைதி பெறத்தான் யோகாவே.தாங்கள் யாழ் பாணம் என்றறிகிறேன். யாழ்பாணத்தை நினைத்தால் எங்களுக்கே மனம் அமைதியிழக்கிறது. உங்கள் நிலை கடினம் தான். தளர வேண்டாம்.
யோகா செய்யுங்கள். யோகஎன்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, அதன் சாராம்சமே மனதை ஒருமுகபடுத்துவதுதான். எடுத்த எடுப்பில் எதுவும் கைக்கூடாது. தொடர்ந்த பயிற்சி முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது 12 ஆசனங்களின் தொகுப்பு. தினமும் 3 முறையோ 6முறையோ செய்ய ஆரம்பித்தால் மிகஎளிதாக இருக்கும். தினம் ஒர் மணி நேரம் அல்லது 30 நிமிடங்கள் கூட போதும். நல்ல முன்னேற்றம் நிச்சயம். யோகாவில் நாம் சுவாசத்தை சீராக்கி ஆசனங்கள் செய்யும் போது மனம் இலேசாகும்.தியானம் பிராணாயாமம் எல்லாமே தொடர்ந்த பயிற்சியில் எளிதாகும்.

மனம் அமைதியிழக்கும் போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து மிக மெதுவாக [6 நொடி உள்ளிழுக்கவும், 12 நொடிகள் வெளியேற்றவும்] வெளியிடவும். இப்படி மூச்சை கட்டுபடுத்துவதால் மனம் உடல் எல்லாம் நீங்கள் சொன்னப்பேச்சை தட்டாமல் கேட்கும்.

எல்லோர் வாழ்விலும் அமைதி நிலவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நட்புடன்
உமா.

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...
இந்த பதில் தோழி ஹேமாவிற்கு.................
.....

எல்லோர் வாழ்விலும் அமைதி நிலவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நட்புடன்
உமா.//

வணக்கம் உமா... உங்களின் நீண்ட விளக்கவுறை எல்லோருக்கும் பயன்படும்படி உள்ளது... மிக்க நன்றி...